லிபிய தடுப்பு முகாம் காவலாளிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 குடியேறிகள் கொல்லப்பட்டதற்கு புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (ஐஓஎம்) முட்டாள்தனமான கொலைச் செயல் என கண்டனம் தெரிவித்துள்ளது.
இதனை முட்டாள்தனமான கொலைச்செயல் எனக் குறிப்பிட்டுள்ள ஐஓஎம், தடுப்பில் மோசமான நிலைமைகளுக்கு கண்டித்து போராடிய குடியேறிகளுக்கு எதிராக உண்மையான தோட்டாக்களை பயன்படுத்தியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
இத்துப்பாக்கிச் சூட்டுக்கு முன்னதாக, Mabani தடுப்பு மையத்தில் 356 பெண்கள், 144 குழந்தைகள் உள்பட 3,400 குடியேறிகள் மிக மிக நெருக்கமான சூழலில் தடுத்து வைக்கப்பட்டிருந்திருக்கின்றனர் என ஐஓஎம் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.