20ஆம் திகதி இலங்கை வருகின்றது சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் குழு

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இம்மாதம் 20 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளனர் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையிலுள்ள ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கும் பிரதமருக்கும் இடையில் கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இடம் பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற் கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெறப்படவுள்ள கடன் தொடர்பான கலந்துரையாடல்களை முன்னெடுத்துச் செல்லும் நோக்கிலேயே குறித்த குழு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.

அவர்கள் ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சின் அதிகாரிகள் மற்றும் மத்திய வங்கி அதிகாரிகளை சந்திக்கவுள்ளதாக நிதியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Tamil News