தலிபான்களுக்கு சர்வதேச செலாவணி நிதியம் தடை

471 Views

IMF Stopped Funding Afghanistan 696x411 1 தலிபான்களுக்கு சர்வதேச செலாவணி நிதியம் தடை

தங்கள் வசம் இருக்கும் நிதி ஆதாரத்தை ஆப்கானிஸ்தானின் ஆட்சியாளர்கள் இனி பெற முடியாது என சர்வதேச செலாவணி நிதியம் அறிவித்திருக்கிறது.

தலிபான்கள் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலைக் கைப்பற்றிய நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

ஆப்கானிஸ்தானில் புதிய அரசை அங்கீகரிப்பது தொடர்பாக சர்வதேச சமூகத்தில் தெளிவு இல்லாததால் இந்த முடிவை எடுத்திருப்பதாக சர்வதேச செலாவணி நிதியம் தெரிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக ஆப்கானிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்ட நிதி சர்வதேச செலாவணி நிதியத்திடம் இருக்கிறது.

சர்வதேச செலாவணி நிதியத்தால் ஓகஸ்டு 23 அன்று 370 மில்லியன் அமெரிக்க டாலர் பணம் ஆப்கானிஸ்தானுக்கு தரப்பட இருந்தது.

ஏற்கெனவே ஆப்கானிஸ்தான் மத்திய வங்கிக்கு அமெரிக்காவில் இருக்கும் நிதி ஆதாரங்களை அமெரிக்கா முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ilakku-weekly-epaper-143-august-15-2021

Leave a Reply