சர்வதே சிறுவர் நாள்-திருகோணமலையில் 1550 மரக்கன்றுகளை நட்ட சிறுவர்கள்

288 Views

திருகோணமலையில் 1550 மரக்கன்றுகளை நட்ட சிறுவர்கள்

சர்வதே சிறுவர் நாள்-திருகோணமலையில் 1550 மரக்கன்றுகளை நட்ட சிறுவர்கள்: சர்வதே சிறுவர் நாளை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் ஒரு இலட்சம் மரக் கன்றுகளை நடும் தேசிய வேலைத் திட்டத்திற்கு அமைய திருகோணமலை மாவட்டத்தில் மரக்கன்றுகள் நடும் செயற்பாடு நடைபெற்றன.

அதனடிப்படையில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 11 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் சிறுவர்கள் மூலமாக 1550 மரக்கன்றுகள்  இன்று நடப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ், மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஆர் .கே .எஸ் .குருகுலசூரிய சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி பிரிவு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

ilakku.org/ilakku-weekly-epaper-149-september-26-2021

Leave a Reply