அதானி மீதான விசாரணை – இந்திய உயர் நீதிமன்ற குழு அமைப்பு

பங்குச்சந்தைகளில் மூறைகேடுகள் செய்து நிதி மோசடிகளில் ஈடுபட்டது தொடர்பில் அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி மீது விசாரணைகளை மேற்கொள்வதற்காக இந்திய உயர் நீதி மன்றத்தை சேர்ந்த நீதிபதிகள் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

அதானி குழுமம் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக அமெரிக்காவை சேர்ந்த ஹின்டென்பேர்க் என்ற நிறுவனம் அறிக்கை ஒன்றை கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டதை தொடர்ந்து அதானி குழுமத்தின் முறைகேடுகள் வெளிவந்ததுடன், அதன் பங்குச் சந்தையும் வீழ்ச்சி கண்டிருந்தது.

கடந்த வியாழக்கிழமை (2) இந்திய உயர் நீதிமன்றம் முன்னாள் நீதிபதி அப்கே எம் சம்ரே தலைமையில் ஐந்து பேர் கொண்ட சுயாதீன விசாரணைக் குழு ஒன்றை அமைத்துள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் நண்பரான அதானிக்கு இந்திய அரசு தொடர்ந்து ஆதரவுகளை வழங்கி வருவதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சுமத்தி வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.