திருகோணமலை: 24 மணி நேரத்தில் 137 பேருக்கு கொரோனா தொற்று- 8 பேர் பலி

397 Views

24 மணி நேரத்தில் 137 பேருக்கு கொரோனா தொற்று

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 137 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதுடன், 8 பேர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளனர்.   

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 8 பேர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ள நிலையில் 137 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தினால் இன்று (10) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 72 ஆண்களும், 65 பெண்களும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், செப்டம்பர் முதலாம் திகதி தொடக்கம் 9ஆம் திகதி வரைக்கும் திருகோணமலை மாவட்டத்தில் 1253 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் வெளியிட்டுள்ள நாளாந்தம் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த 9 நாட்களுக்குள் 51 பேர் மரணித்துள்ளதாகவும் இதுவரை மாவட்டத்தில் 11067 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் 299 பேர் இதுவரை மரணித்துள்ளதாகவும் 159 கற்பிணி தாய்மார்களும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021

Leave a Reply