184 Views
மலேசியாவின் சாபா மாநிலத்துக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 10 இந்தோனேசிய குடியேறிகளை மலேசிய படையினர் கைது செய்துள்ளனர்.
இரண்டு அதிவேக படகுகள் சந்தேகத்திற்கு இடமான வகையில் மலேசிய கரையோரம் இருந்ததாக அறிந்ததை தொடர்ந்து தேடுதல் நடவடிக்கையை மலேசிய படையினர் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
மலேசிய படையினரின் பார்வையிலிருந்து தப்புவதற்காக ஆட்டு பட்டியில் மறைந்திருந்த இந்தோனேசிய குடியேறிகளை படையினர் கண்டறிந்ததாக மலேசிய கூட்டு செயல் படையின் பிரிகேடியர் ஜெனரல் அப்துல் கரீம் அகமது தெரிவித்திருக்கிறார்.
இந்த 10 பேரில் 8 பேர் ஆண்கள், 2 பேர் பெண்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குடியேறிகள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்காக அவர்கள் Tawau மாநில காவல் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இவர்கள் மீது மலேசிய குடிவரவு சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.