132 Views
இந்தோனேசியாவில் வடக்கு சுமத்ரா தீவின் புகிதிங்கி பகுதியில் கடந்த வெள்ளிக் கிழமை காலை 7 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் ரிக்டரில் 6.2 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
இதனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் கட்டிடங்கள் லேசாக குலுங்கியுள்ளன. தொடக்கத்தில், நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் அச்சமடைந்த குடியிருப்புவாசிகள், வீடுகளில் இருந்து தங்களுடைய குடும்ப உறுப்பினர்களை வேறு இடங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பலர் தெருக்களில் ஓடி சென்று தஞ்சமடைந்தனர். இந்த நிலையில், இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் 2 பேர் உயிரிழந்து உள்ளனர் என முதற்கட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வந்ததில், ஞாயிற்று கிழமை வரையில் 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.