187 Views
இந்தோனேசியா: பாலி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு மீண்டும் பயணிகளை ஈர்க்க இந்தோனீசியா, சிறப்பு ஐந்தாண்டு விசாவை வழங்கத் திட்டமிட்டுள்ளது. அந்த விசா, வீட்டிலிருந்து வேலை பார்ப்பவர்களுக்காவும் வர்த்தகம் சார்ந்த பயணம் மேற்கொள்வோருக்காவும் உருவாக்கப்படுகிறது.
அத்தகையோர் சிலரைக் கொண்டு கருத்தாய்வு நடத்தப்பட்டது. அவர்களில் 95 விழுக்காட்டினர் இந்தோனீசியாவில் இருந்தபடி வீட்டிலிருந்து வேலை பார்ப்பதையே அதிகம் விரும்புவதாகவும் அதையொட்டி பயணம் மேற்கொள்ளத் தயாராய் இருப்பதாகவும் அந்நாட்டின் சுற்றுப்பயண அமைச்சர் சாண்டியாகோ உனோ கூறினார்.