பாகிஸ்தானைச் சேர்ந்த ஆவணங்களற்ற குடியேறிகளை நாடு கடத்திய ஈரான்

குடியேறிகளை நாடு கடத்திய ஈரான்

முறையான பயண ஆவணங்களின்றி ஈரானில் இருந்த 107 பாகிஸ்தான் குடியேறிகளை ஈரானிய அதிகாரிகள் Taftan எல்லையில் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் ஒப்படைத்திருக்கின்றனர்.

இந்த குடியேறிகள் ஈரான் வழியாக துருக்கி மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. இந்த குடியேறிகளில் 74 பேர் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தையும் 24 பேர் சிந் மாகாணத்தையும் 4 பேர் பலுசஸ்தான், 4 பேர் கைபர் பக்துன்க்வா மற்றும் ஒருவர் பாகிஸ்தான் காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil News