இந்தோ- பசிபிக் பாதுகாப்பு: 5 நாள் கூட்டுப்பயிற்சியில் இந்தியா- அவுஸ்திரேலியா கடற்படைகள்

234 Views

இந்தோ- பசிபிக் பாதுகாப்பு

இந்தோ – பசிபிக் பாதுகாப்பு: இந்தோ- பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பினை உறுதி செய்யும் விதமாக இந்தியா, அவுஸ்திரேலியா கடற்படைகள் இடையேயான 5 நாள் கூட்டுப் பயிற்சி கடந்த செப்டம்பர் 6ம் திகதி தொடங்கியிருக்கிறது.

இப்பயிற்சியில் இருநாடுகளின் கப்பல்கள், நீர்மூழ்கிகள்,  உலங்குவான் ஊர்திகள், நீண்ட தூர கண்காணிப்பில் ஈடுபடும் விமானங்கள் உள்ளிட்டவை பலவிதமான பாதுகாப்பு பயிற்சிகளில் ஈடுபடும் என இந்திய கடற்படையின் பேச்சாளர் தளபதி விவேக் மத்வால் தெரிவித்திருக்கிறார்.

இந்தோ- பசிபிக் பிராந்தியத்தில் நிலையான மற்றும் பாதுகாப்பான சூழலை உறுதிச்செய்ய, இரு நாட்டு படைகளிடையேயான கூட்டுப் பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்தும் விதமாக இப்பயிற்சி நடைபெறுவதாகக் கூறப்பட்டுள்ளது.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021

Leave a Reply