கோட்டாவுக்கு எதிராகக் குற்றப் பிரேரணை! நாடாளுமன்றில் ஜே.வி.பி. அறிவிப்பு

கோட்டாவுக்கு எதிராகக் குற்றப் பிரேரணை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டு வருவதற்கும் நாம் தயார் என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் நேற்று சபையில் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறிய தாவது:-

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என நாட்டு மக்கள் வலி யுறுத்தி வருகின்றனர். ஆனால், அவர் பதவி விலகமாட்டார் என ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அறிவித்துள்ளார். எனவே, திமிர் பிடித்துச் செயற்படும் இந்த அரசுக்கு எதிராக முதலில் நம்பிக் கையில்லாப் பிரேரணை கொண்டுவரப் படும். அதற்கு முழு ஆதரவு வழங்கப்படும்.

அத்துடன், ஜனாதிபதிக்கு எதிராகக் குற்றப் பிரேரணையை முன்வைக்கவும் நாம் தயார். ஏனெனில் அரசியல் தலைமைத்துவத்தையும் மாற்றியாக வேண்டும். அரசமைப்பு ரீதியில் இந்த ஜனாதிபதியையும், அரசையும் தோற்கடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tamil News