ஹமாஸ்- இஸ்ரேல் மோதலால் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றமான சூழ்நிலை உரு வாகியுள்ளது. இந்த தாக்குதலின் தொடர்ச்சியாக, இஸ்ரேலில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்த ஆயிரக்கணக்கான பாலஸ்தீன தொழிலாளர்களுக்கு அந்நாட்டு அரசு தடைவிதித்தது. அவர்களுக்கு பதில் இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து பணியாளர்களை தேர்வு செய்யும் நடவடிக்கையில் இஸ்ரேல் மும்முரமாக ஈடுபட்ட நிலையில், தற் போது, இஸ்ரேல் கட்டுமான நடவடிக்கையில் இந்தியர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு இந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்கு 16,000 தொழிலாளர்கள் கட்டுமான பணிக்கு சென்றுள்ளனர். அவர்களுக்கு ஒரு மாதத்துக்கு இலவச உணவு, தங்குமிடம் தவிர ரூ.1.5 இலட்சம் சம்பளமாக வழங்கப்படுகிறது. பாதுகாப்புக்கும் முழு உத்தரவாதம் தரப்பட்டுள்ளது என்று ஏஎஃப்பி செய்தி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.