அமெரிக்காவின் யு.எஸ்.எஸ் ஒகேன் (USS O’kane) என்ற கப்பல் கடந்தவாரம் கொழும்பு துறைமுகத்துக்கு வந்துச் சென்றதையடுத்து, இந்தியா மற்றும் சீனக்கப்பல்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடற்படை ஒத்துழைப்பைக் கட்டியெழுப்பும் நோக்கில் சீன கடற்படைக்கு சொந்தமான போலன்ஸ் (PLANS Po Lang) என்ற கப்பல் சீனாவின் வடகிழக்கில் உள்ள டேலியன் மாகாணத்தில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் இக்கப்பல் இம்மாதம் இறுதி வாரத்தில் இலங்கைக்கு வரவுள்ளது.
அதே நேரம்,இந்திய கடற்படையின் போர்க்கப்பலான ஐஎன்எஸ்- மூன்று நாள் பயணமாக ஆகஸ்ட் 26, 2024 அன்று கொழும்பு வரவுள்ளதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெற உள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் இந்திய, சீன கப்பல்கள் இலங்கையை நோக்கி வருவது தொடர்பில் சர்வதேச கவனத்தைப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.