இலங்கையின்  பாதுகாப்பு தேவைகளுக்காக  நிதி வழங்கும் இந்தியா  

இலங்கையின் பாதுகாப்புதுறைக்கு 50மில்லியன் கடனை வழங்குவதற்கு இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில்,

இந்து சமுத்திரபிராந்தியத்திலும் வங்களாவிரிகுடாவிலும் சீனாவின் அபிலாசைகள் அதிகரித்துள்ள நிலையில், இந்த பகுதியில் ஸ்திரதன்மையை ஏற்படுத்துவதற்காக இரு நாடுகளும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வருப்படுத்துவதற்கு சனிக்கிழமை உச்சிமாநாட்டில் தீர்மானித்துள்ள நிலையிலேயே இந்தியாவின் இலங்கை பாதுகாப்பு துறையை நோக்கி இந்த சைகை அமைந்துள்ளது.

கடனடிப்படையில் இலங்கைக்கு ஆயுததளபாடங்களை வழங்குவதற்கான திட்டம் புதுடில்லியிடம் உள்ளது. இலங்கையின் பாதுகாப்பு தரப்பிற்கான பயிற்சிகளை வழங்குவதற்கான திட்டமும் காணப்படுகின்றது.

காணொளி மூலமாக இடம்பெற்ற உச்சிமாநாட்டின் பின்னர் இரு பிரதமர்களும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில்,  இருநாடுகளினதும் பாதுகாப்பு தரப்பினர் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கும், பரஸ்பர தனிப்பட்ட விஜயங்களை முன்னெடுப்பதற்கும் ,கடல்சார் பாதுகாப்பினை அதிகரிப்பதற்கும், இலங்கையின் பாதுகாப்பு துறைக்கு ஆதரவளிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இலங்கையின் ஜனாதிபதியாக 2019 இல் தெரிவு செய்யப்பட்டது முதல் கோட்டபாய ராஜபக்ச இந்தியாவுடன் இணைந்து இந்து சமுத்திரம் மற்றும் வங்காளவிரிகுடாவில் இலங்கையின் கடல்சார்கொள்கையை முன்னெடுப்பது குறித்து கவனம் செலுத்திவருகின்றார் .

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக முக்கிய தீர்மானங்களை எடுக்கும் பொறுப்புகளுக்கு இராணுவ பின்னணி கொண்டவர்களை கோட்டபாயராஜபக்ச நியமித்துள்ளார்.

இந்தியாவின் நியாயபூர்வமான பாதுகாப்பு நலன்களுக்குபாதிப்பு ஏற்படாது என்ற உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது, கொழும்பு கடல்பயண சுதந்திரத்தை பின்பற்றும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிடமிருந்து பாதுகாப்பு தொடர்பான கடனை பெறும் இரண்டாவது நாடாக இலங்கை மாறலாம் சில வருடங்களுக்கு முன்னர் பங்களாதேசிற்கு வழங்கிய 500 மில்லியன் பாதுகாப்பு கடன் குறித்து இந்தியா நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளது.

இந்தியாவின் வெளிநாட்டு பாதுகாப்பு தரப்பினருக்கான பயிற்சியில் 50 வீதம் இலங்கை படையினருக்கே ஒதுக்கப்பட்டுள்ளமை இரு நாடுகளுக்கும்இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பில் முக்கிய அம்சம்.

இதுதவிர தொடர்ச்சியாக உயர்மட்ட சந்திப்புகளும்,விஜயங்களும்,கூட்டு ஒத்திகைகளும், கப்பல் விஜயங்களும் இடம்பெறுகின்றன. 2019 உயிர்த்தஞாயிறு தாக்குதலின் பின்னணியில் தீவிரவாதமயப்படுத்தலுக்கு எதிரான நடவடிக்கைகள் உட்பட வலுவான பயங்கரவாத எதிர்ப்பு கட்டமைப்பை உருவாக்கும் திட்டங்களும் இரு நாடுகளுக்கும் உள்ளன.

கோட்டபாய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட பின்னர் நடுக்கடல் தொடர்பான புலனாய்வு தகவல்களை இருநாடுகளும் அதிகரித்துள்ளன. இதன்காரணமாக இலங்கையில் பயங்கரவாதத்துக்கு நிதி வழங்கும் போதைப்பொருள் மாபியாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடிந்துள்ளது. ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.