வேலையில்லா பிரச்சனையில் சிக்கியுள்ள இந்தியா

வேலையில்லா பிரச்சனையில் சிக்கியுள்ள இந்தியா

வேலையில்லா பிரச்சனையில் சிக்கியுள்ள இந்தியா: இந்தியாவில் வேலையில்லாதோர் எண்ணிக்கை 7.9 விகிதமாக அதிகரித்துள்ளது. 2018 – 2019 ஆம் ஆண்டுகளில் 6.3 ஆகவும், 2017-2018 ஆம் ஆண்டுகளில் 4.3 ஆகவும் இருந்த விகிதம் தற்போது சடுதியாக அதிகரித்துள்ளது.

1.4 பில்லியன் சனத்தொகையில் நான்கில் ஒரு பிரிவினர் இளைய சமூகமாகும். அவர்களில் கணிசமானோர் வேலையை இழந்துள்ளனர். 20 வயதுக்கும் 29 வயதுக்கும் இடைப்பட்ட 30 மில்லியன் பேர் வேலையிழந்துள்ளனர்.

கோவிட்-19 இந்தியாவின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளதுடன், வேலையிழப்புக்களையும் ஏற்படுத்தியுள்ளது. எனினும் கோவிட் இற்கு முன்னரும் இந்தியாவில் வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகமாகவே இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

2020 ஆம் ஆண்டு இந்தியாவில் தொழிலாளர்கள் 46 விகிதமாகவும், சீனாவில் 67 விகிதமாகவும், இந்தோனேசியாவில் 66 விகிதமாகவும், மலேசியாவில் 64 விகிதமாகவும் இருந்ததாக உலக வங்கி தெரிவித்துள்ளது.