இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை வழங்குவதற்கு இந்தியா கடும் நிபந்தனை

221 Views

இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை

இலங்கைக்கு இந்தியா கொள்கையளவில் உத்தரவாதமளித்த ஒரு மில்லியன் டொலர் கடன் தொகை இலங்கை அரசாங்கம் உத்தரவாதங்களை அளிக்கின்ற வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை வழங்குவதற்கு இந்தியா கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை தனது பொருளாதார நெருக்கடியை எவ்வாறு நீண்டகால அடிப்படையிலும் குறுகிய கால அடிப்படையிலும் கையாளப்போகின்றது என்பது குறித்த திட்டமொன்றை முன்வைக்குமாறு இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கையின் வடக்குகிழக்கில் இந்தியா நீண்டகாலமாக முன்னெடுக்கவிரும்பும் அபிவிருத்தி திட்டங்களிற்கான தடைகளை நீக்கவேண்டும் எனவும் இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கை இது குறித்த உறுதிமொழியை வழங்கும்வரை இந்தியா இந்த உதவியை வழங்குவது நிச்சயமற்றதாக காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply