காஷ்மீர் தொடர்பான பாகிஸ்தான் தீர்மானத்தை நிராகரித்த இந்தியா

ஜம்மு காஷ்மீர் எல்லை நிர்ணயம் தொடர்பாக பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இந்தியா நிராகரித்துள்ளது.

பாகிஸ்தான் தேசிய சபையில், வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி முன்வைத்த தீர்மானத்தில், ஜம்மு-காஷ்மீர் சட்டமன்ற, பாராளுமன்ற தொகுதிகள் எல்லை மறுவரையறை முடிவு, அங்குள்ள பெரும்பான்மை முஸ்லிம் மக்களின் அதிகாரம் குறித்தும் கூறப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் தலையிட பாகிஸ்தானுக்கு உரிமை இல்லை என்று இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

இது இந்தியாவின் உள்விவகாரம் என்றும், பாகிஸ்தானால் சட்டவிரோதமாகவும் வலுக்கட்டாயமாகவும் ஆக்கிரமித்துள்ள பகுதிகளும் இதில் அடங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசம் முழுவதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், அது தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tamil News