அமெரிக்க டொலரில் இருந்து வெளியேறும் இந்தியா!

அமெரிக்க டொலர் போன்ற மூன்றாவது நாணயத்தை நம்பியிருக்காது, நீண்ட காலத்திற்கு தேசிய நாணயத்தை ஆதரிக்கும் முயற்சியில், இந்தியாவின் மத்திய வங்கியான இந்திய ரிசர்வ் வங்கி (RBI), அதன் சுதந்திர வர்த்தக கூட்டாளிகள் ரூபாயில் பரிவர்த்த னைகளை எளிதாகச் செய்ய பாடு படுகிறது என்று இந்திய வட்டா ரங்கள் புதன்கிழமை(22) தெரிவித் துள்ளன.
இந்தியா பல நாடுகள் மற் றும் வர்த்தக குழுக்களுடன் தடை யற்ற வர்த்தக ஒப்பந்தங்களை நிறு வியுள்ளது, இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேற்ஸ் உடனான சமீபத்திய ஒப்பந்தங்கள் அடங்கும். புதுதில்லி தற்போது அமெரிக்கா உட்பட பல நாடுகளுடன் இதே போன்ற ஒப் பந்தங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்த மாத தொடக்கத்தில், ஐக்கிய அரபு எமிரேற்ஸ் திர்ஹாம் மற்றும் இந்தோனேசிய ரூபியாவிற்கான குறிப்பு விகிதங்களை அறி முகப்படுத்தும் திட்டங்களை இந்தியா அறி வித்தது, மேலும் இதுபோன்ற அனைத்து பேச்சு வார்த்தைகளிலும் ரூபாய் குறித்து இந்தியா தீவிரமாக விவாதித்து வருகிறது.
இந்தியாவில் உள்ள சில சுத்திகரிப்பு நிறுவனங்கள் டொலரைத்  தவிர்த்து, சீன யுவானில் ரஷ்ய எண்ணெய்க்கு பணம் செலுத்துகின்றன. இந்த மாத தொடக்கத்தில், உள்ளூர் வங்கிகள் அண்டை நாடுகளில் உள்ள வணிகங்களுக்கு ரூபாயில் கடன் வழங்க அனுமதிப்பது மற்றும் முக்கிய வர்த்தக கூட்டாளிகளின் நாணயங் களுக்கு அதிகாரப்பூர்வ குறிப்பு மாற்று விகிதங் களை நிர்ணயிப்பது குறித்து ரிசர்வ் வங்கி முன் மொழிந்திருந்தது.
அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்கள், மேற்கத்திய நாடுகளின் தொடர்ச் சியான பொருளாதார மற்றும் நிதித் தடைகள் மற்றும் அமெரிக்க பணவியல் கொள்கைகள் போன்றன பல நாடுகள் அமெரிக்க டொலரை நம்பியிருப்பதைக் குறைக்க கட்டாயப் படுத்தி யுள்ளன.