இலங்கைக்கு உத்தியோபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய விமானப்படை தளபதி ஏயார் சீப் மார்ஷல் விவேக் ராம் சௌத்ரி, இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஏ என் 32 ரக விமானங்களுக்கு தேவையான உபகரணங்களை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
இது தொடர்பான நிகழ்வு கட்டுநாயக்க விமானப்படை தளத்திலுள்ள இலக்கம் இரண்டு என்று அழைக்கப்படும் விமானப்படைக்கு சொந்தமான கனரக வாகன பிரிவில் இடம்பெற்றது. இந்நிகழ்விலேயே,மேற்படி உபகரணங்கள் கையளிக்கப்பட்டன.