தையிட்டியில் விகாரை அமைத்தல் விவகார- ஜனநாயக வழிப்போராட்டம் தொடரும்-சட்டத்தரணி சுகாஸ்

மக்களுடைய உரிமைகளை வலியுறுத்தி  சட்டவிரோத திஸ்ஸ விகார கட்டுமானத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஜனநாயக வழிப்போராட்டம் தொடரும் கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்தார்.

தையிட்டியில் சட்டவிரோதமான முறையில் மக்களின் காணிகளை அபகரித்து கட்டப்பட்டுள்ள விகாரையை அகற்றக்கோரி புதன்கிழமை மாலை ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தின் பொது காவல்துறையினர்ர் போராட்டகாரர்களை அச்சுறுத்தியும் தாக்கியும் அநாகரிகமாக நடந்துகொண்டனர் தொடர்ந்து வியாழக்கிழமை (4) காலைவேளை போராட்ட இடத்திற்குச் சென்ற  ஐந்து பேரை கைதுசெய்த  காவல்துறையினர்  அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தார்கள்.

குறித்த வழக்கு தொடர்பில் சட்டத்தரணி சுகாஸ் கருத்துத் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களின் காணிகளை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருக்கின்ற திஸ்ஸ விகாரை கட்டுமானத்திற்கு எதிராக ஜனநாயக வழியில் போராடிய மக்களையும் எங்களையும் பொலிஸார் தாக்கி பொய்யான வழக்கை தாக்கல் செய்து ஐந்து பேரை நீதிமன்றில் முற்படுத்தியிருந்தார்கள் அவர்கள் ஐவரையும் நாங்கள் பிணையில் விடுவித்திருக்கின்றோம மல்லாக நீதிபதி சம்பவ இடத்திற்கு நேரில் வருகை தந்து உண்மைகளை ஆராய்ந்து கட்டளை ஒன்றை வழங்கியுள்ளார்.

அமைதியான முறையில் ஜனநாயக ஆர்ப்பட்டத்தை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது இது ஜனநாயக ரீதியில் போராடிய மக்களுக்கும் எங்களுக்கம் கிடைத்த வெற்றியாகப் பார்க்கினறோம் நீதி மன்றின் கட்டளையைமதித்து மக்களுடைய உரிமைகளை வலியுறுத்தி  சட்டவிரோத திஸ்ஸ விகார கட்டுமானத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஜனநாயக வழிப்போராட்டம் தொடரும்  அமைக்கப்பட்ட விகாரை விவகாரம் நீதிபதி நேரில் பார்வையிட்டு கட்டளை வழங்கியுள்ளார்