பிளாஸ்டிக் உற்பத்திக்கு இந்தியா முழுவதும் தடை

ஜூலை 1ஆம் திகதி முதல் தடை

ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜூலை 1ஆம் திகதி முதல் தடை விதித்து இந்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது 

அதன்படி ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உற்பத்தி ஜூலை 1ஆம் திகதி முதல் இந்தியா முழுவதும் தடை செய்யப்படுவதாக கடந்த ஆண்டு (2021) ஓகஸ்டு 12ம் திகதி மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் அறிவித்தது.

குறைவான பயன்பாடு கொண்ட, அதிக குப்பையை ஏற்படுத்தக்கூடிய இந்த பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, இறக்குமதி, சேமிப்பு, விநியோகம், விற்பனை, பயன்பாடு ஆகிய அனைத்தும் இந்தியா முழுவதும் 1ஆம் திகதி முதல் தடை செய்யப்படும்.

அவ்வாறு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களில் செயல்படும் தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்களை வழங்க வேண்டாம் என தேசிய, மாநில மற்றும் உள்ளூர் மட்டங்களில் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

Tamil News

Leave a Reply