இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான ஆன்மீக மற்றும் கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இலங்கைக்கு உத்தியோகபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள ‘ஸ்ரீ பஞ்ச் அக்னி அகாதாஷவின் தலைவரான சுவாமி கைலாசானந்த் கிரி ஜி மகாராஜ் இன்று செவ்வாய்க்கிழமை (24) யாழ்ப்பாணத்துக்கு சென்றார்.
உலங்குவானூர்தி மூலம் பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை சென்ற சுவாமி கைலாசானந்த் கிரி ஜி மகாராஜ் மற்றும் அவரது சிறப்புத் தூதுக்குழுவினர், அங்கு, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் ஆகியோரை சந்தித்தார்.
கைலாசானந்த் கிரி ஜி மகாராஜின் இந்தப் பயணமானது, இலங்கையின் இராமாயண மற்றும் சிவ யாத்திரைப் பாதைகளை மையப்படுத்திய ஆன்மீகச் சுற்றுலாவை உலகளாவிய ரீதியில் மேம்படுத்துவதற்கும், இந்தியாவிலிருந்து அதிகளவான பக்தர்களை இலங்கையை நோக்கி ஈர்ப்பதற்கும் பெரும் பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.



