03. நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் 481 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன் 2025ஆம் ஆண்டில் மாத்திரம் 102 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும் 598 கொலை சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இந்த தகவலை வெளியிட்டுள்ளார். அதன்படி, கடந்த 10 ஆண்டுகளில் மாத்திரம் 481 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், 2015 ஆம் ஆண்டு 43 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், 476 கொலை சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக தெரிவித்தார். எனினும், இந்த பத்து ஆண்டுகளில் 2023 ஆம் ஆண்டில் அதிக துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும் கொலை சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
அதன்படி, 2023 ஆம் ஆண்டு 81 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும் 601 கொலை சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். அதேபோன்று, 2024 ஆம் ஆண்டு 74 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும் 515 கொலை சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
2025 ஆம் ஆண்டு 102 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும் 598 கொலை சம்பவங்களும் பதிவாகியுள்ளதாகவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.



