சீரற்ற காலநிலையால் 12 மாவட்டங்களில் 51,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை மற்றும் பலத்த காற்றினால் 12 மாவட்டங்களில் 13,176 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அம்பாந்தோட்டை, காலி, திருகோணமலை, அம்பாறை, கிளிநொச்சி, களுத்துறை, கொழும்பு, கம்பஹா, புத்தளம், கேகாலை, இரத்தினபுரி மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களில் வசிப்பவர்கள் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக நிலையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களில் மூன்று பேரழிவு தொடர்பான இறப்புகள் பதிவாகியுள்ளன, மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். மோசமான வானிலை காரணமாக 331 வீடுகள் சேதமடைந்துள்ளன. இதேவேளை, 548 குடும்பங்கள் தற்காலிக தங்குமிடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.