இந்தியாவில் கடந்த 21 மணிநேரத்தில் 13,086 பேருக்கு கொரோனா தொற்று

104 Views

இந்தியாவில் கடந்த 21 மணிநேரத்தில் 13,086 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 19 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் தற்போது வரை 1,14,475 பேர் மருத்துவமனைகளிலும் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொண்டும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவருகின்றனர். தினசரி தொற்று விகிதம் 2.90 சதவீதமாக உள்ளது.

அதேபோன்று, தமிழ்நாட்டில் ஒரு நாள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,654 என பதிவாகியுள்ளதாக ஜுலை 4 அன்று மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டில் நேற்று ஒரு நாளில் மொத்தம் 30 ஆயிரத்து 31 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 2, 654 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மொத்தம் 2, 672 பேருக்கு தொற்று பதிவானது.

நேற்று அதிகபட்சமாக சென்னையில் 1,066 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தொடர்ந்து 4வது நாளாக சென்னையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது.

செங்கல்பட்டில் நேற்று 375 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாளில் 1, 542 பேர் குணமடைந்துள்ளனர். மாநிலம் முழுக்க தற்போது 15, 616 சிகிச்சையில் உள்ளனர் என்று மருத்துவத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply