மலேசியாவில் 110 சட்டவிரோத குடியேறிகள் கைது 

மலேசியாவின் Raub பகுதியில் அந்நாட்டு குடிவரவுத்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 110 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தேடுதல் வேட்டை 3 தொழிற்சாலைகள் மற்றும் துரியன் பழத் தோட்டங்களில் நடந்திருக்கிறது. 

கடந்த ஆகஸ்ட் 13 முதல் இதுவரை நடத்தப்பட்ட இத்தேடுதல் நடவடிக்கையில், மொத்தம் கைதான 110 குடியேறிகளில் இந்தோனேசியாவை சேர்ந்தவர்கள் 94 பேர், மியான்மரை சேர்ந்தவர்கல் 8 பேர், வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் 4 பேர், மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த பேர் கைதாகியுள்ளனர்.

“இதில் பெரும்பாலானோரிடம் முறையான பயண ஆவணங்கள் இல்லை, சுற்றுலாவாசிகள் பயன்படுத்தும் பார்வையாளர் பாஸை பயன்படுத்தியுள்ளனர்,” எனக் கூறியுள்ளார் குடிவரவுத்துறை இயக்குனர் ஜெனரல் கைரூல் டஸ்மி. இத்தேடுதல் நடவடிக்கை Ops Durian எனும் அடையாளப் பெயரில் நடத்தப்பட்டுள்ளது.