போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி மத்திய கிழக்கிற்கு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்த ஐந்து இலங்கையர்கள் பெங்களூரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலி கடவுச்சீட்டிற்காக 50,000 முதல் 150,000 வரை செலுத்த தயாராகயிருந்த ஐந்து இலங்கையர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செல்வி எஸ் ரவிகுமார், மணிவேலு சிஜூ நிரோசா விசால் நாரணயணன் என்ற ஐந்து இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பெங்களூர் மற்றும் மங்களுரை சேர்ந்த இருவரே போலி கடவுச்சீட்டை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.