Home Blog Page 95

திருச்சி சிறப்பு முகாமில் உண்ணாவிரதப்போராட்டம் – விரைந்து நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசிடம் வேல்முருகன் கோரிக்கை

சிங்களப் பேரினவாத அரசால் நிகழ்த்தப்பட்ட ஈழத்தமிழர்கள் படுகொலைக்கு நீதிக் கேட்டு திருச்சி சிறப்பு முகாமில் போராட்டத்தை முன்னெடுத்துள்ள தோழர் யோகராசா நவநாதன் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்!என தமிழக வாழ்வுரிமை கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் கட்சியின் தலைவர் தி வேல்முருகன் தெரிவித்துள்ளதாவது.

07.09.1996 அன்று சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிரிஷாந்தி தேர்வெழுதிவிட்டு வீடு திரும்பும் வழியில்இ 11 சிங்கள  ராணுவத்தினரால் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார். அவரைத் தேடிச்சென்ற தாய் ராசம்மா தம்பி பிரணவன் குடும்ப நண்பர் சிதம்பரம் கிருபாமூர்த்தி ஆகியோரும் கொல்லப்பட்டு நால்வரின் உடலும் வயல்வெளியில் புதையுண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இக்கொடூர நிகழ்வால் பெரும் கவலையுற்ற ஈழத்தமிழ் சொந்தங்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளும் மகளிர் அமைப்புகளும் சிங்களப் பேரினவாத அரசுக்குக் கொடுத்த அழுத்தம் காரணமாக 7 இராணுவ வீரர்களும்இ 2 காவலர்களும் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டனர்.

கிருஷாந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மரண தண்டனையை எதிர்கொண்ட இராணுவ வீரர்களில் ஒருவரான சோமரத்ன ராஜபக்சே இலங்கை நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தின் மூலமாகவேஇ செம்மணி மனித புதைகுழிகள் வெளிச்சத்திற்கு வந்தன.

குறிப்பாக 1995–-96 ஆம் ஆண்டுகளில் இலங்கை ராணுவத்தினரால் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்து புதைக்கப்பட்டது தெரியவந்தது.

ஐ.நா சபையின் தலையீடு காரணமாக சோமரத்ன ராஜபக்சே  அடையாளம் காட்டிய இடங்கள் சிலவற்றில் கொல்லப்பட்ட தமிழர்களின் எலும்புக் கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டன. ஆனால் வழக்கம்போல் சிங்களப் பேரினவாத அரசு புதைகுழிகள் அனைத்தையும் முழுமையாகத் தோண்டி விசாரணை நடத்தாமல் கிடப்பில் போட்டது.

அதுமட்டுமின்றி 2009 ஆம் ஆண்டு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் துணைக்கொண்டு 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை கொத்துக்கொத்தாக இனப்படுகொலை செய்யப்பட்டதற்கான முறையான விசாரணையையோ உரிய நீதியையோ இதுவரை பெற முடியாமல் உலகத்தமிழர்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.

இந்நிலையில் யாழ்ப்பாணம் நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ்சோமதேவா குழுவின் பங்கேற்போடு தமிழீழத்தில் பல்வேறு இடங்களில் அகழ்வுப் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்றது.

அந்த அகழாய்வில் அரியாலை – சிந்துப்பாத்தி பகுதியிலிருந்த புதைகுழியிலிருந்து சிறு குழந்தை உட்படக் கொல்லப்பட்ட 5 தமிழர் உடல்களின் எச்சங்கள் தோண்டி எடுக்கப்பட்டது. செம்மணி மனித புதைகுழிகள் என்பது சிங்களப் பேரினவாத அரசு மேற்கொண்ட தமிழ் இனப்படுகொலைகளில் ஒரு சிறு துளி மட்டுமே. இதுபோன்ற ஏராளமான மனித புதைகுழிகள் ஈழத்தாயகம் முழுவதும் பரவிக்கிடக்கின்றன.

இந்நிலையில் சிங்களப் பேரினவாத அரசால் கொன்றுக் குவிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் மறைவுக்கு நீதி விசாரணைக் கேட்டும் ஈழத்தமிழர்களுக்கான சம உரிமைக் கேட்டும் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர் யோகராசா நவநாதன் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

கடந்த 4 நாட்களாக அவர் மேற்கொண்ட போராட்டத்தில் நீருக் கூட அருந்தாமல் இருப்பதால் யோகராசா நவநாதன் உடல்நிலை மிகவும் மோசமாகி இருப்பது வேதனை அளிக்கிறது.

எனவே தோழர் யோகராசா நவநாதனின் கோரிக்கையை ஏற்று சிங்களப் பேரினவாத அரசால் கொன்றொழிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் மறைவுக்கு உரிய நீதி விசாரணை நடத்தவும் ஈழத்தமிழர்களுக்கான சம உரிமை கிடைக்கவும் தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் திருச்சி சிறப்பு முகாம் என்கிற கொடூர முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை விடுதலை செய்து அவர்கள் விரும்பும் நாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும் மேலும் அவர்கள் தமிழ்நாட்டிலேயே வாழ விரும்பினால் அதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு செய்து தர வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.

அதே நேரத்தில் தமிழ்நாட்டில் இருக்கிற ஈழத்தமிழர்களுக்கோ அல்லது ஈழத்தில் வாழுகின்ற தமிழர்களுக்கோ சம உரிமை கிடைக்கவும்இ சிங்களப் பேரிவாத அரசால் வேட்டையாப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு உரிய நீதி கிடைக்கவும்இ தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது.

எனவே உடல்நிலை மிகவும் மோசமடைந்து வரும் நிலையில் தோழர் யோகராசா நவநாதன் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.

இலங்கைக்கான ஆதரவு தொடரும் – பாகிஸ்தான்

இரு நாடுகளுக்கும் இடையிலான நல் உறவை மேலும் மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இரு தரப்பினரும் கவனம் செலுத்தினர்.

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஃபஹீம் உல் அஜீஸ் எச்.ஐ (எம்) (Major General (Retd) Faheem Ul Aziz HI (M)) நேற்று (07) சுகாதார அமைச்சில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவை சந்தித்தார்.

நீண்டகால சமூக, பொருளாதார, கல்வி, விளையாட்டு மற்றும் அரசியல் உறவுகள், சுகாதாரம், சுதேச மருத்துவம் அத்துடன் சுற்றுலா மற்றும் மருத்துவ சுற்றுலா தொடர்பான நடவடிக்கைகளின் எதிர்கால வளர்ச்சி குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. இரு நாடுகளின் கலாச்சார விடயங்களை உள்ளடக்கிய ஊடக நிகழ்ச்சிகளின் பரிமாற்றம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் தொலைக்காட்சி நாடகங்களை பரிமாறிக் கொள்ளும் சாத்தியக்கூறுகள் குறித்தும் இந்தக் கலந்துரையாடலில் கலந்துரையாடப்பட்டது.

பாகிஸ்தான் அரசாங்கம் இலங்கைக்கு உறுதியான ஆதரவை வழங்கும் என்று பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் உறுதியளித்தார். கல்வித் துறையில் இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் ஒத்துழைப்பு குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது, மேலும் தற்போது பாகிஸ்தானில் உள்ள இலங்கை மாணவர்களுக்கு மருத்துவக் கல்விக்காக உதவித்தொகை வழங்கப்படுகிறது, மேலும் உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வித் துறைகளுக்கு இடையே தற்போதுள்ள ஒத்துழைப்பை மேம்படுத்துவது மற்றும் தொழிற்கல்வித் துறையில் மாணவர்களுக்கு சிறந்த தொழிற்கல்வி பயிற்சியை வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. மேலும் விவசாயம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இந்தச் சந்திப்பின் போது இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வலுவான உறவு மேலும் உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத் துறை துணை அமைச்சர் டாக்டர் ஹன்சகா விஜேமுனி, சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத் துறை அமைச்சின் செயலாளர் டாக்டர் அனில் ஜாசிங்க மற்றும் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் தன்னிச்சையாக வேறொரு தரப்பினரிடம் ஒப்படைப்பு

எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் தன்னிச்சையாக வேறொரு தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த முடிவை மாற்றாவிட்டால், எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் பாதிக்கப்படும் என்று சங்கத்தின் பொருளாளர் ஜகத் பராக்கிரம தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், எரிபொருள் போக்குவரத்தை ஏகபோகத்தின் கீழ் கொண்டுவரும் முயற்சி நடப்பதாகக் கூறினார்.

பவுசர்களின் உரிமையாளர்களுக்கு இது மிகவும் கடுமையான பிரச்சினையாக மாறியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் முக்கிய போக்குவரத்து சேவையாக செயல்படுவதால், பவுசர் வாகன உரிமையாளர்களால் மொத்த சேமிப்பு கிடங்குகளுக்கு எரிபொருள் கொண்டு செல்லப்படுகிறது என்று ஜகத் பராக்கிரம குறிப்பிட்டார்.

“நாங்கள் எரிபொருளை கொண்டு செல்லவில்லை என்றால், வேறு யாராலும் அதைச் செய்ய முடியாது. இருப்பினும், கடந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில், இந்த வணிகம் ஒரு சில பெரிய அளவிலான வணிகர்களிடம் ஒப்படைக்கப்படவிருந்தது.

ஒரு சங்கமாக, நாங்கள் தலையிட்டு அதை நீண்ட காலமாக நிறுத்த முடிந்தது. ஆனால் இப்போது, ​​அவர்கள் இந்த போக்குவரத்து சேவையை தங்கள் நெருங்கிய கூட்டாளிகளிடம் ஒப்படைக்க முயற்சிக்கின்றனர்” என்று அவர் மேலும் கூறினார்.

சங்கத்தில் சுமார் 400-500 பேர் கொண்ட பவுசர் உரிமையாளர்கள் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என்றும், ஆனால் தற்போது, ​​கொழும்பு மற்றும் முத்துராஜவெலவிலிருந்து குருநாகலுக்கு எரிபொருள் கொண்டு செல்வதை டெண்டர் மூலம் ஒரு தொழிலதிபரிடம் ஒப்படைக்க அதிகாரிகள் முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“இது தொடர்ந்தால், மற்ற போக்குவரத்து சேவைகளைப் போலவே இதுவும் ஏற்படும். எனவே, இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

எரிபொருள் போக்குவரத்து சேவைகளை ஏகபோகத்தின் கீழ் கொண்டு வரக்கூடாது. மக்களின் நலனுக்காக இது ஒரு பொது சேவையாக தொடர வேண்டும்” என்று ஜகத் பராக்கிரம மேலும் கூறினார்.

செம்மணி மனிதப் புதை குழி: இது வரையில் 56 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

செம்மணி மனிதப் புதை குழி அகழ்வின் இரணடாவது கட்டத்தின் 13வது நாள் அகழ்வுப் பணிகள் 8ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்ட நிலையில் இதுவரை 56 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவற்றில் 50 முழுமையாக அகழ் எடுக்கப்பட்டு நீதிமன்ற காவலுக்கு கையளிக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி ரணித்தா ஞானராஜா தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை (8) செம்மணி பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஏற்கனவே சந்தேகத்திற்கிடமான பகுதி என தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதுவாவினால் அடையாளமிடப்பட்ட பகுதி அகழ்வு ஆராய்ச்சி பணிகளுக்கான இரண்டாவது பிரதேசமாக நீதிமன்றத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் ஏற்கனவே முதலில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது அகழ்வாராய்ச்சி பகுதியானது அகழ்வு ஆராய்ச்சி பணிகளுக்கான முதலாவது பகுதியாகவும் அடையாளப்படுத்துப்பட்டுள்ளது.

அடையாளப்படுத்தப்பட்ட இரண்டாவது பகுதியில் 3 மனித என்பு எச்சங்கள் துப்புரவாக்கப்பட்டிருக்கிறது. 09ஆம் திகதி புதன்கிழமையிலிருந்து இலக்கமிடல் பணிகள் ஆரம்பமாகும்.

மனித எலும்புகளுடன் சேர்ந்த துணிகள் மற்றும் சப்பாத்து போன்ற பொருட்கள் அடையாளப்படுத்தப்பட்டு வைத்திருக்கப்பட்டுள்ளன. அவை இன்னமும் நிலத்திலிருந்து பிரித்தெடுக்கப்படவில்லை. அது பிரித்தெடுக்கப்பட்ட பின்னர் மேலதிக தகவல்கள் நாளையதினம் வழங்கப்படும் என்றார்.

பழங்குடி மக்களின் காணிகளை வனத்துறை அபகரிக்க திட்டம்: வன பாதுகாப்புத் திணைக்களம் மீது குற்றச்சாட்டு

கிழக்கு மாகாணத்தில் வசிக்கும் பழங்குடியின தமிழ் மக்கள் குழுவை இடம்பெயர்த்து அவர்களின் காணியை அபகரிக்க முயற்சிப்பதாக வன பாதுகாப்புத் திணைக்களம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் பாரம்பரிய காணிகளை வன பாதுகாப்புத் திணைக்களம் சூறையாடியுள்ளதாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒப்புக்கொண்ட சில நாட்களுக்குப் பின்னர், இந்தத் திணைக்களம் மீதான குற்றச்சாட்டு வந்துள்ளது.

மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலகப் பிரதேசத்திற்குட்பட்ட தேக்கஞ்சேனை, நாவற்குளம் மற்றும் சம்பக்கலப்பை ஆகிய கிராமங்களில் சுமார் 70 ஆண்டுகளாக வசிக்கும் சுமார் 150 தமிழ் பேசும் பழங்குடி குடும்பங்களை தங்கள் காணியை விட்டு வெளியேறுமாறு வன பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் தொடர்ந்து அச்சுறுத்தி வருவதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.

தேக்கஞ்சேனையில் வசிக்கும் பழங்குடியின மக்கள் குழு வன பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளின் அச்சுறுத்தல் குறித்து நேற்றைய தினம் (ஜூலை 7) வாகரை பிரதேச செயலாளருக்கு எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்க நடவடிக்கை எடுத்ததாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடிதத்தை ஏற்றுக்கொண்ட வாகரை பிரதேச செயலாளர், இந்த விடயத்தை ஆராய்ந்து உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதேச கிராம அலுவலருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தேக்கஞ்சேனை, நாவற்குளம் மற்றும் சம்பக்கலப்பை ஆகிய கிராமங்களில் வசிக்கும் பழங்குடி மக்கள், காட்டில் தேன் சேகரித்தல், நன்னீர் மீன்பிடி மற்றும் நெல், நிலக்கடலை மற்றும் மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட பயிர்ச்செய்கை ஊடாக வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

இந்த வருடத்தில் கடந்த ஆறு மாதங்களாக வன பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் பல சந்தர்ப்பங்களில் தங்களை காணியைவிட்டு வெளியேறுமாறு அச்சுறுத்தியுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தேன் எடுக்க காட்டுக்குள் நுழைய விசேட அதிரடிப்படையினர் அனுமதிக்காமையால், தாங்கள் ஏற்கனவே வாழ்வாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக அவர்கள் மேலும் கூறுகின்றனர்.

இதேபோன்ற பழங்குடி மக்கள் வசிக்கும் கல்லரிப்புச் சேனை நான்காம் கட்டை, மூன்றாம் கட்டை  கிராமங்களில் பெப்ரவரி 2025 இல், சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட வன பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள், பழங்குடி மக்கள் வாழ்ந்த 13 குடிசைகளை தீயிட்டு கொளுத்தியதோடு, அவர்கள் உணவுக்காக சேகரித்த பாசிப்பயறு, நிலக்கடலை மற்றும் நெல் ஆகியவற்றை எடுத்துச் சென்றதாகவும் பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக வாகரை பொலிஸில் முறைப்பாடு செய்து நான்கு மாதங்கள் கடந்துள்ள போதிலும், எந்த பலனும் கிடைக்கவில்லை எனவும் அவர்கள் மேலும் கூறுகின்றனர்.

2012 முதல் வனப் பாதுகாப்பு மற்றும் வனச் சட்டங்களின் கீழ் கூகள் வரைபடங்களைப் பயன்படுத்தி மக்களால் பயன்படுத்தப்பட்ட ஏராளமான காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க அண்மையில் யாழ்ப்பாணத்தில், கூறியிருந்தார்.

கையகப்படுத்தப்பட்ட காணிகளை வன பாதுகாப்புத் திணைக்களம் ஆய்வு செய்து, காடுகளுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் மக்களுக்கு வழங்கும் எனவும் அமைச்சர் உறுதியளித்திருந்தார்.

வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் காணிகளை வலுக்கட்டாயமாக கையகப்படுத்துவது தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 1985ஆம் ஆண்டில் வனப் பாதுகாப்புத் திணைக்களம் தன்வசம் உள்ள வரைபடத்தின்படி செயல்பட வேண்டும் என்ற கருத்தை வெளியிட்டிருந்தார்.

முப்படைகள், மகாவலி அபிவிருத்தி அதிகார சபை, சுற்றுலா அபிவிருத்தி அதிகாரச் சபை, தொல்லியல் திணைக்களம்  மற்றும் வன பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியவை வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் காணிகளை வலுக்கட்டாயமாக கையகப்படுத்துவதாக தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்ப் தகுதியானவர்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தகுதியானவர் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா சென்றுள்ள பெஞ்சமின் நெதன்யாகு, நேற்றிரவு (திங்கள்கிழமை) டொனால்டு ட்ரம்ப்பின் இரவு விருந்தில் பங்கேற்றார். முன்னதாக, ட்ரம்ப்பிடம் நெதன்யாகு ஒரு கடிதம் வழங்கினார். அப்போது பேசிய அவர், “அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஒன்றன் பின் ஒன்றாக நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் அமைதியை ஏற்படுத்துகிறார். எனவே, நோபல் பரிசு கமிட்டிக்கு அனுப்பிய பரிந்துரை கடிதத்தை நான் தற்போது தங்களுக்கு வழங்குகிறேன். அமைதிக்கான நோபல் பரிசு பெற நீங்கள் தகுதியானவர். நீங்கள் அதைப் பெற வேண்டும்” என கூறினார்.

நெதன்யாகுவின் உரைக்கு நன்றி தெரிவித்துப் பேசிய டொனால்டு ட்ரம்ப், “மிக்க நன்றி. நீங்கள் பரிந்துரை கடிதம் அனுப்பி இருப்பது எனக்குத் தெரியாது. குறிப்பாக, நீங்கள் என்னை பரிந்துரைத்திருப்பது உண்மையில் அர்த்தம் நிறைந்தது. மிக்க நன்றி. நான் போர்களை நிறுத்துகிறேன். மக்கள் கொல்லப்படுவதை நான் வெறுக்கிறேன்.” என தெரிவித்தார்.

மத்திய கிழக்கில் இஸ்ரேல், காசா மீது நடத்தி வரும் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்றும் போர் நிறுத்தத்துக்கு முன்வர வேண்டும் என்றும் ட்ரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். போர் நிறுத்தத்துக்கு ஹமாஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. எனினும், ஹமாஸ் ஆயுதங்களை கீழே போடும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் கூறி வருகிறது. தங்கள் வசம் உள்ள பிணைக்கைதிகளை ஹமாஸ் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அமெரிக்கா கூறி வருகிறது. எனினும், இந்த விவகாரத்தில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.

முன்னதாக, ஈரான் அணு ஆயுத உற்பத்தியில் ஈடுபடுவதாகக் கூறி அந்நாட்டின் மீது இஸ்ரேல் ராணுவ நடவடிக்கைகளை எடுத்தது. பின்னர், அமெரிக்காவும் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியது. அதன் பின்னர் அமெரிக்கா விடுத்த அழைப்பை ஏற்று ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகள் தங்கள் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.

செம்மணி புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை: உமாச்சந்திர பிரகாஸ் எம்.பி. கருத்து

செம்மணி புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை என  ஐக்கிய மக்கள் சக்தியின் வடக்கு மாகாண அமைப்பாளரும் கொழும்பு மாநகர சபையின் உறுப்பினருமான உமாச்சந்திர பிரகாஸ் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (8) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

செம்மணி புதைகுழி தொடர்பான தகவல்களை சேகரித்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இது தொடர்பில் மிக விரைவில் எமது கட்சித் தலைவர் நாடாளுமன்றத்தில் காத்திரமான விடயங்களை எடுத்துக் கூறுவார்.

அதேவேளை செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தமிழ் மக்களின் உணர்வுகளுடன் ஒன்றிணைந்த ஒரு விடயம். இவ்விடயத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. அதற்கான சர்வதேச விசாரணைகள் அவசியம்.

செம்மணி விவகாரத்தில் நான் கூறும் அல்லது வெளிப்படுத்தும் கருத்தை எனது தலைமை ஏற்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. எனது கருத்தை நிராகரிக்கும் நிலை உருவானால் கட்சியை விட்டு வெளியேறவும் தயங்கமாட்டேன் என தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி வழங்கப்படும்: ஜனாதிபதி உறுதி

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உரிய நீதியை, காலம் தாழ்த்தாது தாம் பெற்றுக்கொடுப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.

கர்தினால் மெல்கம் ரஞ்சித்தின், 50ஆவது ஆண்டு குருத்துவ பணி நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்துக்கொண்ட போதே, ஜனாதிபதி இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். நாட்டில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு, கர்தினால் மெல்கம் ரஞ்சித், பல தசாப்தங்களாக தம்மை அர்ப்பணித்துள்ளதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய நீதியை பெற்றுக் கொடுப்பதற்கு, தம்மீதான அச்சுறுத்தல்களையும் பொருட்படுத்தாது, அவர் அனைத்து சந்தர்ப்பங்களிலும் பாடுவடுவதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

இந்தநிலையில் அரசாங்கத்தினால், அரசாங்கத்திற்கு எதிராக விசாரணை செய்ய வேண்டிய நேரம் ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அதற்கமைய, உரிய பொறிமுறையினூடாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு விரைவில் நீதி நிலைநாட்டப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

செம்மணியில் தோண்ட தோண்ட வெளிவரும் எலும்புக்கூடுகள்!

IMG 20250708 WA0140 செம்மணியில் தோண்ட தோண்ட வெளிவரும் எலும்புக்கூடுகள்!

யாழ்ப்பாணம் செம்மணி சித்தப்பாத்தி இந்து மயானத்தில் தொடர்ச்சியாக அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அங்கு அடையாளம் காணப்படும் மற்றும் மீட்கப்படும் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் காணப்படுகின்றமை மக்கள் மத்தியில் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அந்தவகையில் இரண்டாவது கட்டத்தின் 13வது நாள் அகழ்வுப் பணிகள் செவ்வாய்க்கிழமை (8) முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் 56 எலும்புக்கூடுகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன் 50 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

IMG 20250708 WA0131 செம்மணியில் தோண்ட தோண்ட வெளிவரும் எலும்புக்கூடுகள்!

யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில், தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ்சோமதேவா அவர்களின் குழுவின் பங்கேற்போடு இந்த அகழ்வுப் பணிகள் இன்றும் முன்னெடுக்கப்பட்டது.

தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ்சோமதேவாவினால் அடையாளப்படுத்தப்பட்ட பகுதியிலும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. அந்த எலும்புக்கூடுகளானது சிக்கலான நிலையில் காணப்படுகிறது.

மேலும் முறைப்பாட்டாளரான குறித்த மயானத்தின் நிர்வாகத்தில் உள்ள திரு.கிருபாகரன், சட்டத்தரணி க.சுகாஷ், சட்டத்தரணி ரணித்தா ஆகியோர் இன்றையதினம் புதைகுழியை பார்வையிட்டனர்.

குறித்த புதைகுழி விவகாரமானது சர்வதேச ரீதியில் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதற்கு நீதி வேண்டி பல்வேறு நாடுகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

காணி அபகரிப்பு செயல்கள் மக்களின் நம்பிக்கையை சிதைக்கும் – செல்வம் அடைக்கலநாதன்

வடக்கு மற்றும் கிழக்கில் காணிகள் விடுவிக்கப்படும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டாலும் முப்படையினர் பல்வேறு வழிகளில் காணி அபகரிப்பு செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள். அரசாங்கம் ஒரு கொள்கையில் இருக்கையில் வடக்கு மற்றும் கிழக்கில் முப்படையினரும், பொலிஸாரும் பிறிதொரு கொள்கையில் செயற்படுகிறார்கள். மாறுப்பட்ட கொள்கைகளினால் அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை சிதைவடையும் என்று ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  செல்வம்  அடைக்கலநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (8) நடைபெற்ற  இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச் ) சட்டத்தின் கீழ் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானியின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது

எமது மக்களின் இருப்பதை தக்கவைத்துக் கொள்வதற்காக நில அபகரிப்புக்கு எதிரான போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முப்படைகளிலும் பல்வேறு வழிகளில்  நில அபகரிப்பில் ஈடுபடுகின்றன.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொது காணிகளில் உள்ள மர கிளையை தமிழர் ஒருவர் வெட்டினால் அவர் கைது செய்யப்பட்டு, அவர் சிறைக்கு செல்ல நேரிடும் ஆனால் வடக்கில் மகாவலி வலயத்துக்குட்பட்ட 600 ஏக்கர் காணியை பெரும்பான்மை இனத்தை சேர்ந்த  ஒருவர்  சட்டவிரோதமான முறையில் வெற்றிடமாக்கியுள்ளார்.

வவுனியா ஓமந்தை பொலிஸ் நிலையத்துக்கு முன்னாள் உள்ள தனியார் காணி ஒன்றை பொலிஸார் துப்பரவு செய்துள்ளனர். காணி அபகரிப்பு நிறுத்தப்படும்.காணி விடுவிக்கப்படும் என்று ஜனாதிபதி குறிப்பிடுகிறார். ஆனால் பொலிஸார், முப்படையினர் காணி அபகரிப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள்.

இதன்போது எழுந்து கருத்துரைத்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, ஓமந்தை பொலிஸ் நிலையம் தொடர்பில் இன்று காலையில் அறிந்தேன். இவ்விடயம் தொடர்பில்  பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்தேன். அந்த காணி துப்பரவு செய்தல் இடைநிறுத்தப்பட்டுள்ளது என்றார்.

தொடர்ந்து உரையாற்றிய செல்வம் அடைக்கலநாதன், மிக்க நன்றி அரசாங்கம் ஒரு கொள்கையில் செயற்பட்டாலும், வடக்கு மற்றும் கிழக்கில் முப்படையினரும், பொலிஸாரும் பிறிதொரு கொள்கையில் செயற்படுகிறார்கள். இவ்வாறான மாறுப்பட்ட கொள்கையினால்  அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை சிதைவடையும் என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறேன்.

மகாவலி வலயத்துக்குட்பட்ட காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒருவர் தான் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என்றார்.

இதன்போது எழுந்து கருத்துரைத்த சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, 600 ஏக்கர் அல்ல 46 ஏக்கர், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவர் தான் மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான காணியை அழித்துள்ளார். மகாவலி அபிவிருத்தி அதிகார சபை அந்த நபருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளது. அந்த வழக்கு செவ்வாய்க்கிழமை (8) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. ஆகவே இந்த சம்பவத்துக்கும் எமக்கும் எவ்வித  தொடர்பும் இல்லை என்றார்.

தொடர்ந்து உரையாற்றிய செல்வம் அடைக்கலநாதன், மன்னார் மாவட்டத்தில் பல்வேறு வழிகளில் மக்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. அண்மையில் மன்னாரில் பொது காணிகள் துளையிட்டு சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன.இவ்வாறான செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் என்றார்.

இதற்கு சபை முதல்வரும்  அமைச்சருமான பைம் ரத்னாயக்க பதிலளிக்கையில் இந்த விடயமும் எமது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அது தொடர்பான வழக்கு விசாரணை செவ்வாய்க்கிழமை (8) எடுக்கப்பட்டுள்ளது. 600 ஏக்கர் அல்ல அது 40 ஏக்கர். எமது உறுப்பினர்கள் 6 கிலோமீற்றர் காட்டுக்குள் சென்று பார்த்துள்ளார்கள் .அது தொடர்பிலும் நான்ம் நடவடிக்கை எடுப்போம்  என்றார்.