Home Blog Page 3093

கைது செய்யப்படுவோர் சித்திரவதைகளை அனுபவிக்கின்றனர் – சறோஜினி சிவச்சந்தரன்

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வரும் போது கூறிய எதையும் நிறைவேற்றவில்லை என தேசிய சமாதானப் பேரவையின் பணிப்பாளர் சறோஜினி சிவச்சந்திரன் தெரிவித்தார். யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு நடத்தப்பட்ட மனித உரிமைகள் தொடர்பான கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வரும் போது, நல்லாட்சியை ஏற்படுத்துவோம், மனித உரிமைகளை  மதித்து நடப்போம் என குறிப்பிட்டனர். ஆனால் இவை எதுவுமே நடக்கவில்லை. காணாமல் போனோர் அலுவலகம் சரியாக இயங்கவில்லை. நல்லிணக்கம் ஏற்படவில்லை. அத்துடன் பொலிஸ் நிலையங்களும், சிறைச்சாலைகளிலும் அதிகளவான சித்திரவதைகள் நடைபெறுகின்றன என்றார்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் ர.கனகராஜ் பேசும் போது, சட்டத்திற்கு முரணான கைதுகள் நடைபெறுகின்றன. சித்திரவதைகளும் இடம்பெறுகின்றன. இது தொடர்பாக பொலிசாருக்கு எதிராக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்றார்.

அதேபோல பல்கலைக்கழக மாணவர்களினால் மேற்கொள்ளப்படும் பகிடிவதைகளும் சித்திரவதைகளாகவே அமைகின்றன. மாணவர்கள் இவற்றை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

நிகழ்வில் ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத்தின் தலைவி சூரியகுமாரி மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள் என பலரும் பங்குபற்றியிருந்தனர். இதன் போது சித்திரவதைகள் தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்தன.

இந்திய உளவு அமைப்புகளுக்கு புதிய தலைவர்கள்

இந்திய உளவு அமைப்பான றோ  அமைப்பிற்கு சுமந்தகுமார் கோயல் என்பவரையும் IB அமைப்பிற்கு அரவிந்த்குமார் என்பவரையும் தலைவராக அமைச்சரவையின் நியமனக்குழு, நியமித்துள்ளது.

தற்போது றோ அமைப்பின் தலைவராக உள்ள அனில்குமார் தஸ்தானா மற்றும்  IB அமைப்பின் இயக்குநராக உள்ள ராஜீவ் ஜெயின் ஆகியோரின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. அதாவது  ஜுன் 29 அன்று ஓய்வு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய அமைச்சரவையின் தலைவராக இருக்கும் மோடி, இந்திய உளவுத்துறையில் ஒன்றான றோ அமைப்பிற்கும், IB புலனாய்வு அமைப்பிற்கும் புதிய தலைவர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.

சமந்த் கோயல் 1984ஆம் ஆண்டு பஞ்சாப் பிரிவைச் சேர்ந்த IPS அதிகாரி ஆவார். கடந்த பெப்ரவரி மாதம் பாகிஸ்தானில் நடந்த இந்திய விமானப்படை தாக்குதல் மற்றும் 2016ஆம் ஆண்டில் நடைபெற்ற சேஜிக்கல் ஸ்ரைக் ஆகியவற்றைத் திட்டமிட்ட குழுவில் முக்கிய பங்கு வகித்தவர்களில் சமந்த் கோயலும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அரவிந்த் குமார் 1984ஆம் ஆண்டு அசாம், மேகாலயா பிரிவைச் சேர்ந்த IPS அதிகாரி ஆவார். பீகார் பிரிவு உளவுத்துறை தலைவராக இருந்தவர். நக்ஸல் விவகாரங்கள் மற்றும் காஷ்மீர் விவகாரங்களை கவனித்துள்ளார். பயங்கரவாதிகளை அடக்கும் பணியில் கைதேர்ந்தவராக திகழ்ந்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் மும்பை மேற்கு பகுதி கடலோர காவல்படை கூடுதல் DGP யாக இருந்தவர்.

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவிற்கு பதவி-சிறீலங்கா ஆதரவு

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவிற்கு 2 ஆண்டுகள் உறுப்பினர் பதவி வழங்க ஆசிய பசுபிக் பிராந்திய நாடுகள் ஆதரவு வழங்கியுள்ளன.

ஐ.நா பாதுகாப்பு சபை மொத்தம் 15 உறுப்பினர்களைக் கொண்டது. இதில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன. மீதமுள்ள 10 உறுப்பினர்கள் மற்ற நாடுகளிலிருந்து சுழற்சி முறையில் தேர்வு செய்யப்படுவர்.

ஐ.நாவில் 5 தற்காலிக உறுப்பினர் இடங்களுக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் இந்தியாவிற்கு உறுப்பினர் பதவியை வழங்க வேண்டும் என ஆசிய பசுபிக் பிராந்திய நாடுகள் முன்மொழிந்துள்ளன. இதன்படி 2021 மற்றும் 22 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கு இந்தியாவுக்கு உறுப்பினர் பதவி கிடைக்கும்.

ஆதரவு தெரிவித்ததற்காக சீனா, இலங்கை, பாகிஸ்தான் உட்பட 55 நாடுகளுக்கு ஐ.நா விற்கான இந்திய தூதர் சையது அக்பரூதீன் நன்றி தெரிவித்தார்.

இந்தியாவில் விடுதலைப் புலிகள் தடைச்சட்டம் மேலதிக விளக்கம் கோரும் டெல்லி

இந்தியாவில் சட்டவிரோத நடவடிக்கைச் சட்டத்தின் கீழ் 1987 ஆம் ஆண்டு முதல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இந்த தடைச்சட்டத்தை தொடர்ந்தும் நீடித்து வருகின்றது.

இதேவேளை இந்த இயக்கத்தை சட்டவிரோத இயக்கமாக அறிவிக்க போதிய காரணம் உள்ளதா என்பது பற்றி விசாரணை செய்வதற்காக டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சங்கீதா திங்ரா சேகல் தலைமையில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. இந்த நடுவர் மன்றம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை சட்டவிரோத இயக்கமாக அறிவிக்கக் கூடாது என்று கோரியுள்ளனர்.

இது தொடர்பாக விளக்கம் அளிக்க ஜுலை 26ஆம் திகதி வரை அவர்களுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆந்தை வடிவிலான ஆளில்லா விமானம் ரஷ்யா அறிமுகம்

ரஷ்யாவில் நடந்த இராணுவத் தளபாட கண்காட்சியில் ஆந்தை வடிவிலான உளவு விமானத்தை அறிமுகம் செய்துள்ளனர். ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் நடந்த இந்த நிகழ்ச்சியில் 27ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆயுதங்கள், வாகனங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன. இதில் பங்கேற்ற டாங்குகள் மற்றும் ஏவுகணைகள் குண்டுகளை வெடிக்கச் செய்தும், சுட்டும் செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டன.

வேகம், துல்லியம் போன்றவை ஆளில்லா விமானத்தின் முக்கியமாக இருக்கும் என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி சோய்கு தெரிவித்தார். இதேபோல் கண்காட்சியில் பங்கேற்ற போர் விமானங்களும், தாக்குதல் ஹெலிகொப்டர்களும் குறி தவறாமல் குண்டு மழை பொழிந்தன. இந்தக் கண்காட்சியில் ஆந்தை வடிவிலான ஆளில்லா உளவு விமானம் அறிமுகம் செய்யப்பட்டது.

தென்சூடானில், சிறிலங்கா பொலிசாருக்கு சேவை நீடிப்பு வழங்க ஐ.நா. மறுப்பு

தென்சூடானில் அமைதி காக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 11 பொலிஸ் அதிகாரிகளுக்கு சேவையை நீடிக்க அங்குள்ள ஐ.நா. அலுவலகம் மறுத்துள்ளது.

குறித்த அதிகாரிகளின் பதவிக் காலம் இந்த மாதம் 30ஆம் திகதியுடன் முடிவடையவிருந்த நிலையில் அவர்களுக்கு 3மாத கால சேவை நீடிப்பு வழங்க சிறிலங்கா அரசு தயாராக இருந்தது.  நியுயோர்க்கிலுள்ள ஐ.நா. நிரந்தர பிரதிநிதிகள் அலுவலகத்தில், அவர்கள் தொடர்பான மனித உரிமைகள் செயற்பாட்டு அறிக்கை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக பொலிசாருக்கு சேவை நீடிப்பு மறுக்கப்பட்டுள்ளது.

கல்முனை விவகாரத்திற்கு ஒரு மாதத்திற்குள் தீர்வு: சிறீலங்கா அரசு

கல்முனை பிரதேசசபையை தரமுயர்த்துவது தொடர்பிலான பிரச்சனைக்கான தீர்வை சிறீலங்கா அரசு ஒரு மாதத்திற்குள் முன்வைக்கும் என சிறீலங்கா அமைச்சரவை நேற்று (25) தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விவாகாரம் நீண்ட நாள் பிரச்சனையாகும், 1989 ஆம் ஆண்டில் இருந்து இந்த விவகாரம் உள்ளது என சிறீலங்காவின் உள்த்துறை அமைச்சர் வஜிரா அபயவர்த்தனா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள பல கோரிக்கைகளை ஆராய்ந்த பின்னரே இதற்கான முடிவு மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தமிழரின் பிரச்சனைகளை பின்தள்ளிவிட்டு செயற்படுகிறது- அமைச்சரவையில் மனோ

இன்று எங்கள் பிரச்சினைகளை நீங்கள் பின்வரிசையில் போட்டுள்ளீர்கள். இனியும் தமிழர்களாகிய எங்களது பொறுமையை சோதிக்க வேண்டாம் எனஅமைச்சர்   மனோ கணேசன் அமைச்சரவையில் குறிப்பிட்டார் அத்துடன் .தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பிலும் அவர் அங்கு பேசினார். இதனைத்தொடர்ந்து பல அமைச்சர்கள் இதுதொடர்பில் தமது கருத்துக்களை கூறினார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தால், இந்த அரசாங்கத்தை தொடர்ந்து நல்லெண்ண நோக்கில் பாதுகாத்து வரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பீக்களை இந்த அரசாங்கம் ஏமாற்றி அந்தரத்தில் போட்டுள்ளது.

தமிழ் மக்கள் பிரச்சினைகளையும் இந்த அரசாங்கம் பின்வரிசையில் போட்டு விட்டது. இதையிட்டு நான் வெட்கமடைகிறேன்.

இன்று இந்நாட்டில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் அமைச்சரவை அமைச்சர்களாக நானும், அமைச்சர் திகாம்பரமும்தான் இருக்கிறோம்.

எனவே இந்நாட்டில் வாழும் ஒட்டுமொத்த தமிழர் தொடர்பில் எனக்கு கடப்பாடு இருக்கிறது. வடக்கு, கிழக்கு, மலையகம், மேற்கு, தெற்கு திசைகளில் இந்நாட்டில் வாழும் அனைத்து தமிழ் மக்களும் தமது பிரச்சினைகள் தொடர்பில் நான் குரல் கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.

ஆகவே நான் இவைபற்றி இந்நாட்டின் அதியுயர் சபையான இந்த அமைச்சவையில் பேசுகிறேன்.

இன்று காலை இந்த அமைச்சரவை கூட்டத்தில் கலந்துக்கொள்ள நான் வரமுன் நானும், கூட்டமைப்பு பேச்சாளர் சுமந்திரனும் கலந்துரையாடினோம்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் ஒரு முழுநேர கணக்காளர் ஒருவரை நியமிப்பதாக அரசாங்கத்தின் துறைசார் அமைச்சர் வஜிர அபேவர்தன எழுத்து மூலமாக கூட்டமைப்புக்கு உறுதி கூறியுள்ளார் என அவர் எனக்கு கூறினார். அந்த கடிதத்தை நானும் நேரடியாக வாசித்தேன்.

இந்த நியமனம் நேற்று திங்கட்கிழமையே வழங்கப்பட உள்ளதாகவும், அது இன்னமும் வழங்கப்படவில்லை எனவும் சுமந்திரன் குற்றம் சாட்டுகிறார். இதற்கு, துறைசார் அமைச்சர் வஜிர அபேவர்தனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் என்ன பதில் கூறுகிறீர்கள் என நான் இங்கே தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.

இன்று ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட அமைச்சர்கள் கலந்துக்கொண்டபோது, இவ்விவகாரம் தொடர்பில் பிரதமருடனும், துறைசார் அமைச்சருடனும், கடுமையாக வாக்குவாதப்பட்ட அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

இன, மத அடிப்படைகளில் கல்வி வலய, பிரதேச செயலக, உள்ளூராட்சி மன்ற எல்லைகளை நிர்ணயிப்பது தொடர்பில் மாறுபட்ட கருத்துகள் எனக்கும் இருக்கின்றன.

இருந்தாலும் இன்று நாடு முழுக்க இப்படியான இன மத அடிப்படையில் பிரதேச செயலகங்கள் உள்ளன. வவுனியா தெற்கில் நிலத்தொடர்பற்ற சிங்கள பிரதேச செயலகம் உள்ளது. முஸ்லிம் மக்களை மையமாக வைத்தும் பிரதேச செயலகங்கள் உள்ளன.

இந்நிலையில் தமிழ் மக்கள் தமது பிரதேச செயலகங்களை தரமுயர்த்த முயலும் போதும், அமைக்கும் போது மட்டும் ஏன் தடை போடுகிறீர்கள்? ஏன் இதை மாத்திரம் அரசாங்கம் இழுத்தடிக்கின்றது?

ஏற்கனவே இயங்கி வரும் ஒரு உப-பிரதேச செயலகத்தையே, முழு-பிரதேச செயலகமாக தரமுயர்த்தும்படி தமிழர்களின் இக்கோரிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

உண்மையில் முஸ்லிம் மக்களுக்கு இந்த கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக எல்லைகள் தொடர்பில் பிரச்சினை இருக்கிறது. அது எனக்கு தெரியும். ஆகவே அதையும் தொடர்ந்து இழுத்தடிக்காமல் பேசி தீர்க்க வேண்டும்.

அதற்கு முன் அரசாங்கம் உறுதியளித்தது போல் முதலில் முழுநேர கணக்காளர் ஒருவரை இந்த கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நியமிக்க வேண்டும்.

வடக்கு கிழக்கின் ஏனைய பிரதேசங்களிலும் இந்த பிரச்சினை காரணமாக ஆரப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. வட கிழக்கில் தமிழ், முஸ்லிம் இனத்தவர் மத்தியில் இந்த பிரச்சினை மூலம் இன உறவு சீர்கெடுகிறது. அதை இனியும் அனுமதிக்க முடியாது.

வடக்கு, கிழக்கு, மலையகம், மேற்கு, தெற்கு திசைகளில் வாழும் தமிழர்கள் மிக அதிகமான சிறுபான்மை இன வாக்குகளை வழங்கி இந்த நல்லாட்சி ஜனாதிபதியை உருவாக்கினோம்.

அதேபோல் அரசாங்கத்துக்குள் இருந்து தமிழ் முற்போக்கு கூட்டணி உங்களை பாதுகாக்கிறது. வெளியே இருந்தபடி தமிழ் தேசிய கூட்டமைப்பு உங்களை பாதுகாக்கின்றது.

இந்த உண்மைகளை ஜனாதிபதியும், பிரதமரும் மறந்து விடக்கூடாது.

உண்மையில் தமிழ் மக்கள் பிரச்சினைகளை இந்த அரசாங்கம் பின்வரிசையில் போட்டு விட்டது. எங்கே நீங்கள் தருவதாக சொன்ன புதிய அரசியலமைப்பு? எங்கே அரசியல் தீர்வு?

எங்கே அரசியல் கைதிகள் விடுதலை? நேற்று ஒரு தமிழ் கைதி பதினைந்து வருடங்கள் சிறையில் இருந்து இறந்து போயுள்ளார் என்பது உங்களுக்கு தெரியுமா?

இன்று புலிகளின் ஆயுத போராட்ட யுகம் முடிந்து, சஹரானின் ஆயுத போராட்ட யுகம் ஆரம்பித்துள்ளது. எனினும் இன்னமும் புலிகளின் காலத்தில் கைது செய்யப்பட்ட தமிழர்கள் பத்து, பதினைந்து, இருபது வருடங்கள் என நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

எதிர்வரும் வாரத்தில் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் ஒரு அமைச்சரவை பத்திரம் ஒன்றை நான் கொண்டு வர உள்ளேன். இங்கே உள்ள அமைச்சர்கள் எவரும் அது தொடர்பில் தமது கருத்துகளை தெரிவியுங்கள். தமிழ் மக்கள் உங்களை அடையாளம் கண்டு கொள்வார்கள்.

அமைச்சர் வஜிர அபேவர்தன
இதன்போது அமைச்சர் மனோ கணேசனுக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் வஜிர அபேவர்தன, அடுத்த ஒரு வாரத்துக்குள் பிரதமர் தலைமையில் நடைபெறும் கலந்துரையாடலில், தானும், அமைச்சர்கள் மனோ கணேசன், தயா கமகே , தமிழ் தேசிய கூட்டமைப்பு, முஸ்லிம் கட்சிகள் பிரதிநிதிகள் கலந்துக்கொண்டு கல்முனை வடக்கு பிரதேச செயலக கணக்காளர் நியமனம் தொடர்பிலும், உப செயலகம் தரமுயர்த்தப்படுவது தொடர்பிலும் தீர்மானிக்கப்படும் என கூறினார்.

அமைச்சர் சம்பிக்க ரணவக்க
இதன்போது கருத்து கூறிய அமைச்சர் சம்பிக்க ரணவக்க அமைச்சர் மனோ கணேசனுடன் தான் முழுமையாக உடன்படுவதாகவும், இந்த விடயத்தை இனியும் இழுத்தடிக்க கூடாது என கூறினார்.

அமைச்சர் ராஜித சேனாரத்ன
இதன்போது கருத்து கூறிய அமைச்சர் ராஜித சேனாரத்ன அமைச்சர் மனோ கணேசன் கூறிய தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் கூடிய விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என கூறினார்.

ஆனந்தசங்கரி தமிழின துரோகி; பதவிவிலக்கியபின் கண்டுபிடிப்பு

5 இலட்சம் பணம் கேட்டு கொடுக்காததால் எம்மை நீக்கினார்கள் என  ஆனந்தசங்கரி உட்பட அவரது   சகாக்கள்  மீது அடுக்கடுக்காக தமிழர் விடுதலை கூட்டணியின்  நீக்கப்பட்ட உறுப்பினர்களான   கல்முனை பிரதி மேயர் காத்தமுத்து கணேஸ் மற்றும் சுமித்ரா ஜெகதீசன் ஆகியோர் குற்றம்சுமத்தினர்.

இன்று(25) கல்முனை மாநகர சபையின் பிரதிமேயர் அலுவலகத்தில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.

அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில்

தமிழர் விடுதலைக்கூட்டணியின் கொள்கை பரப்பு செயலாளர் சங்கையா மற்றும் கட்சி உறுப்பினர் வெள்ளிமலை எங்களை  சில மாதங்களுக்கு முன்னர் தொடர்பு கொண்டு  5 இலட்சம் ரூபா பணத்தை வங்கியில் வைப்பிலிடுமாறு கோரினார். நாம் அதற்கு எம்மிடம் இல்லை.ஏழை என்றோம்.வீட்டிற்கு வந்து பார்த்தால் தெரியும் என்றோம்.கேட்ட பணம் எம்மிடம்  இல்லையென்றோம். அதனால்தான் எங்களை கட்சியை விட்டு நீக்கியுள்ளனர் இவ்வாறு  பரபரப்பு குற்றச்சாட்டுக்களை சுமத்திய இவ்விருவரும் தமிழர் விடுதலை கூட்டணி தலைவர் ஆனந்த சங்கரியை  தமிழின துரோகி என வர்ணித்தனர்.

இதில்  பிரதி மேயர் தனது கருத்தில்

கல்முனையில் 41 வருடங்களின் பின்னர் நான்தான் பிரதி மேயராக தெரிவாகினேன். இது எனக்கல்லஇ தமிழ் மக்களின் வெற்றியாகும்.கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலிற்கு முன்பு எனது சொந்தப்பணத்தில் கட்சி செயலாளரை இங்கு வரவழைத்துஇ சொந்த பணத்தில் மேடையமைத்துஇ அவரை பேச வைத்தேன்.

எனக்கும் கட்சிக்குமிடையில் எந்த பிரச்சனையுமில்லை. இப்பொழுது சிலரது கதையை கேட்டு எங்களை கட்சியை விட்டு நீக்கியிருக்கிறார்கள் என்பதை அறிந்தோம்.அதிர்ச்சியடைந்தோம். கல்முனை பிரதேச செயலக பிரச்சனை வந்ததன் பின்னர்இ நாங்கள் முஸ்லிம்களுடன் நெருக்கமாக இருக்கிறோம் என சொல்லியுள்ளனர்.

கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சங்கையாஇ என்னிடமும், பதவி நீக்கப்பட்ட மற்ற உறுப்பினரிடமும் தலா 5 இலட்சம் ரூபா பணம் கேட்டார். அப்படி தர என்னிடம் பணம் இல்லை என்றேன். மீண்டும் தொலைபேசியில் கேட்டார். இல்லையென்றேன்.
கடந்தமாதம் மட்டக்களப்பில் தங்கியிருந்த ஆனந்தசங்கரிஇ எங்களை அங்கு வரச்சொன்னார். எங்களை மாகாணசபை தேர்தலில் போட்டியிட கேட்டார். நாம் மறுத்தோம்.
பின்னர் துக்கமான செய்தியொன்றை சொல்லப் போவதாக கூறிஇ உள்ளூராட்சி உறுப்புரிமையிலிருந்து தானாக விலகும் கடிதத்தில் கையொப்பமிட கேட்டார். நான் மறுத்தேன். கைப்பையை எங்களை நோக்கி எறிந்தார். நாம் எழுந்து வந்து விட்டோம்.
இப்பொழுது எங்களை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிக்கை விட்டுள்ளார்கள்.
இதில் ஆனந்த சங்கரியை  அவர் ஒரு பெரிய தலைவர் என  இதுவரை நினைத்திருந்தேன். அவர் தமிழர்களிற்காக உழைக்கிறார் என நம்பி இருந்தேன்.ஆனால்  அவர் துரோகம் செய்கிறார் .தமிழர் விடுதலை கூட்டணி தலைவர் ஆனந்த சங்கரி என்பவர்  தமிழின துரோகி என்பது இப்பொழுதுதான் எனக்கு  தெரிந்தது  என்றார்.
மாநகர சபை உறுப்பினர் சுமித்ரா ஜெகதீசன் தனது கருத்தில்நான் தேர்தலில்  போனஸ் முறையில் தெரிவானேன்.கட்சிக்கு இன்று வரை  எதிராக செயற்பட்டது கிடையாது.ஊடகங்கள் வாயிலாகவே எனது பதவி நீக்கிய அதிர்ச்சி  செய்தியை அறிந்தேன்.எம்மிருவரையும் கட்சி செயற்பாட்டில் இருந்து விலக்கியுள்ளதாக அதில் அநியாயமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து  அறிவித்துள்ளார்கள்.

எமது  மக்கள் எமக்காக வாக்களித்தவர்கள் ஆனந்த சங்கரியின் கட்சிக்காகவோ அவருக்காகவோ  எமது மக்கள் வாக்களிக்கவில்லை.பிரதி மேயர் பதவி என்பது  எமது கட்சி தலைவரின் ஆலோசனையின் பிரகாரம் பெறப்பட்டது இதே நேரம்  கூட்டமைபிபினரிடம் எவ்வித தொடர்புகளையும் பேண வேண்டாம் என தலைவர் எம்மிடம்  கூறியுள்ளார்கள்.

நாங்கள் எந்த பிழையும் செய்யவில்லை.எனவே என்னை கட்சியில் இருந்து நீக்கினால்  கிழக்கு தமிழ் ஒன்றியத்தில் எதிர்கால  அரசியலை நான் மேற்கொள்ள இருக்கின்றேன்.கட்சியின்  கொள்கைபரப்பு செயலாளர் சங்கையா என்கின்ற நபரும்  வெள்ளிமலை என்பவரும் 5 இலட்சம் பணத்தை என்னிடம் சில மாதங்களுக்கு முன்னர்  கேட்டார்கள்.வங்கி இலக்கமும் அனுப்பி வைத்தார்கள்.நீங்கள் கேட்கும் பணம் என்னிடம் இல்லை என்று கூறினேன்.ஆனால் பாசிக்குடாவில் நான் பணம் பெற்றதாகவே நினைத்து தான் இவ்வாறு கேட்டார்கள்.ஆயினும் எனது நிலைமையை அவர்களிடம் கூறி அவர்கள் கேட்ட பணத்தை கொடுக்காததினால் தான் எம்மை கட்சியில் இருந்து விலக்கியுள்ளார்கள் என புரிகின்றது  என்றார்.

720x90 ad ஆனந்தசங்கரி தமிழின துரோகி; பதவிவிலக்கியபின் கண்டுபிடிப்பு

வெளிநாட்டு சக்திகளே 19 ஆவது திருத்தத்தை கொண்டுவந்தன – உண்மையை கூறிய மைத்திரி

சிறிலங்காவில் தற்போது நடைமுறையில் உள்ள 19 ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்வதற்கு வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களே அழுத்தங்களை கொடுத்ததாக சிறீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறீசேன தெரிவித்துள்ளார்.

இன்று (26) ஊடகங்களிடம் பேசியபோது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

தற்போது நடைமுறையில் உள்ள 19 ஆவது திருத்தச்சட்டமே நாட்டின் தற்போதைய அனர்த்த நிலைக்கு காரணம். எனவே எதிர்வரும் அரச தலைவர் தேர்தலுக்கு முன்னர் அதனை நீக்கவேண்டும்.

அரசியல் சட்டவாளர்களின் உதவியுடன் இந்த திருத்தம் எழுதப்பட்டபோதும், அதனை கொண்டுவருவதற்கு அரச சார்பற்ற நிறுவனங்களின் அழுத்தமே காரணம். ஆனால் இந்த திருத்தமே தற்போதைய அரசியல் குழப்பங்களுக்கு காரணம்.

தெரிவுக்குழுவின் முன் சமூகமளிக்குமாறு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்படும் செய்திகளில் உண்மையில்லை. அவ்வாறான அமைப்பு எனக்கு அனுப்பப்படவில்லை.

நாடாளுமன்றத் தெரிவுக்குழு என்பது ஒரு நாடகம், அதற்கான கதைவசனம் அலரிமாளிகையில் இருந்து எழுதப்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.