முள்ளிவாய்க்கால் பிரதேசத்திற்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட BBC செய்தியாளர் தனது அனுபவத்தை இங்கு தெரிவித்துள்ளார் 2009 இறுதிக்கட்ட போர் நடந்த சமயம் முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.
இப்போரின் போது இப்பிரதேசத்தில் பல்லாயிரக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்த பிரதேசங்களில் மக்கள் கூடாரங்கள் அமைத்து தங்கியிருந்தனர். இவ்வாறு தங்கியிருந்த மக்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதாக கடந்த 10 ஆண்டுகளாக பலர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் முள்ளிவாய்க்காலின் தற்போதைய நிலையை அறிந்து கொள்ள BBC தமிழ் பயணம் மேற்கொண்டது. முள்ளிவாய்க்கால் இறுதிக்கட்ட யுத்தத்தில் மரணமடைந்த மக்கள் நினைவாக அமைக்கப்பட்ட தூபி ஒன்றை அங்கே பார்க்க முடிந்தது. இந்த நினைவு தூபியை தவிர்த்து வேறு எதையும் அங்கு பார்க்க முடியவில்லை.
வரண்ட நிலம், இலையுதிர்ந்த மரங்கள் என மிகவும் வெப்பம் மிகுந்த பகுதியாக முள்ளிவாய்க்கால் காணப்படுகின்றது. எனினும் இந்த நினைவு தூபிக்கு அருகில் புதிய வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. வீடுகள் கட்டி அங்கு மக்கள் குடியேறிய போதிலும் அங்குள்ள மக்கள், சிறிலங்கா படையினரின் ஒருவித அச்சுறுத்தலுடனே இருப்பதாக கூறுகின்றனர்.
அங்கு சென்ற நாம் தற்போதைய வாழ்க்கை முறை பற்றி அறிவதற்காக அங்குள்ள மக்களிடம் பேச முயற்சித்தோம். இருந்தும் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என்ற அச்சம் காரணமாக அங்கிருப்பவர்கள் ஊடகங்களுடன் பேச அச்சப்படுகின்றனர். இச்சூழ்நிலையில் மே 18ஆம் திகதி இந்த நினைவு தூபியிலேயே நினைவஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.
இந்த ஆண்டும் ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. என்று BBC யின் செய்தியாளர் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் பத்தாம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் இன்று இடம்பெற்றன. அகவணக்கத்தோடு ஆரம்பித்து. தொடர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. முள்ளிவாய்க்காலில் தனது தாய் உள்ளிட்ட உறவுகளை பறிகொடுத்ததோடு தனது ஒரு கையை இழந்த சிறுமி ஒருவரால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. இந்நிகழ்வு பார்ப்போர் மனங்களை உருகச் செய்வதாகவிருந்தது.
தமிழினப் படுகொலை நினைவேந்தல்10 ம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் இன்று காலை பத்து முப்பது மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வளாகத்தில் இடம்பெற்றன. இதில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு (வடக்கு-கிழக்கு) அமைப்பினரால் பிரகடனம் ஒன்றும் வெளியிடப்பட்டது. இனப்படுகொலையாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் எனவும் , சுயநிர்ணய உரிமை அடிப்படையிலும் தமிழர்களின் சுயாட்சியை அங்கீகரிக்கபடவேண்டும் எனவும் இந்த பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளது.
குறித்த பிரகடனத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
பேரன்பிற்குரிய உறவுகளே வரலாற்றின் வழிகளில் தமிழ் இனப்படுகொலை உச்சம் தொட்ட நாட்களின் தசாப்தத்தின் நிறைவில் எம் உறவுகள் துடிதுடிக்க கொல்லப்பட்ட மண்ணில் கனத்த இதயத்துடன் அவர் நினைவுகளை சுமந்து நிற்கின்றோம்.
தமிழர்களுக்கு எதிராக சிங்கள-பௌத்த சிறீலங்கா பேரினவாத அரசு வரலாற்றில் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து, கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை கட்டம் கட்டமாக அரங்கேற்றி வந்துள்ளது. இவ் இனப்படுகொலை முள்ளிவாய்க்காலில் அதி உச்சத்தை அடைந்து இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. முள்ளிவாய்க்காலில் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட எமது இரத்த உறவுகளை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துகின்றோம். கொல்லப்பட்ட எமது உறவுகளின் கனவுகளை நினைக்கின்றோம்.
முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலத்தின் ஒரு தசாப்தத்தை நினைவுகூரும் ஒட்டுமொத்த தமிழினம் அவலங்களை மட்டும் நினைவு கூரவில்லை. சிங்கள–பௌத்த சிறிலங்கா பேரினவாத அரசின் அடக்கு முறைக்கெதிராக தமிழினம் வெகுண்டெழுந்த வரலாற்றையும் அவற்றின் வெவ்வேறு வடிவங்களையும், கூட்டு உரிமைக்கான தியாகத்தையும் நினைவு கூருவது எம் ஒவ்வொருவரதும் வரலாற்றுக்கடமை.
தமிழர் உரிமைக்கான போராட்டத்தை சிறிலங்கா அரசு பயங்கரவாத முத்திரை குத்தி அதன் நியாயத்தன்மையை கேள்விக்குட்படுத்தி வந்துள்ளது. சர்வதேச மயப்படுத்தப்பட்ட பயங்கரவாத பிரச்சாரத்தினூடு ஆயுதப்போராட்ட வடிவம் மௌனிக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் ஆயுத மௌனிப்பின் பின் தமிழர் போராட்ட வடிவங்கள் வெவ்வேறு வழிகளில் முன்னெடுக்கப்பட்டன. பின் முள்ளிவாய்க்கால் தசாப்தத்தில் வரலாற்றில் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான நீதி வேண்டிய கோரிக்கை வலுப்பெற்றது. தமிழர்கள் ஓர் இன அடையாளத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக கொல்லப்பட்டார்கள், சித்திரவதை செய்யப்பட்டார்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டார்கள், வன்புணரப்பட்டார்கள். பூர்வீக வாழ்விடங்களிலிருந்து விரட்டி அடிக்கப்பட்டார்கள். தமிழர்கள் வந்தேறு குடிகளாக சித்தரிக்கப்பட்டு சிறிலங்கா சிங்கள-பௌத்த தேசம் அது சிங்கள-பௌத்தர்களுக்கு மட்டும் சொந்தமானது என காலணித்துவத்தில் கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் சிறிலங்கா அரசு நவ காலணித்துவத்தை கட்டமைத்தது. இது தமிழினத்தின் ஒட்டுமொத்த இருப்பை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
தமிழினத்தின் மீது நடந்தேறும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை ஐ.நாவும் சர்வதேச சமூகமும் வெறுமனே அவதானித்துக் கொண்டிருப்பது கவலைக்குரியதானது. பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான நீதிவேண்டி தமிழர்கள் ஒரு தசாப்த காலமாக ஐ.நாவின், சர்வதேச சமூகத்தின் உதவியை நாடியுள்ளார்கள். நடந்தேறிய அநீதிகளையும், உரிமை மீறல்களையும் விசாரிப்பதற்கான சர்வதேச நீதி விசாரணை இன்னும் ஆரம்பித்தாகத் தெரியவில்லை.
சிறிலங்கா அரசு பின் முள்ளிவாய்க்கால் வரலாற்றுத் தளத்தில் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் சிங்கள-பௌத்த மயமாக்கத்தையும், இராணுவ மயமாக்கத்தையும் விஸ்தரித்து இராணுவ இருப்பை நியாயப்படுத்தி தமிழ் மக்கள் மீதான அடக்குமுறையை தொடர்ந்து கொண்டிருக்கின்றது. தமிழர்களின் பூர்வீக நிலங்கள் படைத்தரப்பாலும், மகாவலி அபிவிருத்தி திட்டத்தாலும், தொல்லியல், வனவளத் திணைக்களங்களாலும் அபகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தமிழர் மத்தியில் சிறிலங்கா அரசு பயத்தை தக்க வைத்துக் கொண்டு உளவியல் யுத்தம் செய்து கொண்டிருக்கின்றது. ஆயுதம் மௌனிக்கப்பட்டு ஒரு தசாப்தமாகியும் கைதுகளும், எச்சரிக்கைகளும், மிரட்டல்களும் தொடர்ந்த வண்ணமுள்ளன. பேச்சுரிமைக்கான வெளி நசுக்கப்பட்டுள்ளது.
ஒரு தேசத்தின் கலை-கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை பேணிப்பாதுகாப்பதற்கு அடிப்படையான பூரண அரசியல் சுதந்திரத்தை அனுபவிப்பதென்பது எல்லா தேசங்களினதும் விட்டுக்கொடுக்கவே முடியாத அடிப்படை உரிமையாகும். சமூக கட்டுமானத்தின் அனைத்து அடிப்படை அம்சங்களிலும் சிங்கள தேசத்தில் இருந்தும் தனித்துவமாக வேறுபடுத்திப்பார்க்கக் கூடிய தனி சிறப்பியல்பான அம்சங்களைக் கொண்டிருப்பதன் மூலம் இலங்கைத்தீவில் தமிழர்கள் ஒரு தேசமாக அடையாளப்படுத்தப்படுகிறார்கள்.
சிங்களவருக்கு இருப்பது போன்று அதைவிட தொன்மையானதும் செழிப்பானதுமான வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்டிருப்பதினாலும், சிங்கள மொழியிலிருந்து முற்றிலும் வேறுபட்ட மிகத்தொன்மையான மொழிப்பாரம்பரியத்தைக் கொண்டிருப்பதோடு காலத்திற்கேற்ற நவீன மாற்றங்களை தன்னகத்தே உள்ளீர்த்து தனித்துவமான மொழியைக் கொண்டிருப்பதாலும், இலங்கைத்தீவில் வடகிழக்கு பகுதியை தமிழ் தாயகமாகக் கொண்டு வரலாற்றுப்பூர்வ குடிகளாக வாழ்வதாலும், சிங்கள அரசானது திட்டமிட்ட கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு மூலம் இலங்கைத்தீவில் தமிழர்களின் இருப்பை அழிப்பதற்கான எத்தனங்களில் தொடர்ந்தும் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது.
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் ஒரு தசாப்தம் நிறைவடைந்தும் நினைவு கூருவதற்கான உரிமை மறுக்கப்பட்டுள்ளது. நினைவு கூருவது பாதிக்கப்பட்ட மக்களின் உரிமை. நினைவு கூருவதற்கான உரிமை மறுக்கப்படுவது உண்மையை மறுப்பதும் மறைப்பதுமாகும். சிறிலங்கா அரசு மறுப்புவாதத்தை நிறுவனமயப்படுத்தி உண்மைகளை வரலாற்றில் மறுத்து வந்துள்ளது. சாட்சியங்களை பொய்யர்களாக்கி அவர்களின் நம்பகத்தன்மையை கேள்விக்குட்படுத்துகின்றது.காணாமல் ஆக்கப்பட்டவர்களின், கையளிக்கப்பட்டவர்களின் விசாரணை கிடப்பில் போடப்பட்டுள்ளது. குற்றவாளிகள் தொடர்ந்தும் வெற்றி வீரர்களாக உலா வருகின்றனர்.
முள்ளிவாய்க்கால் வரலாற்றுத் தசாப்தத்தில் ஒன்று கூடியுள்ள தமிழ் மக்களாகிய நாங்கள் நினைவுகூரலை அணி திரட்டலாக மாற்ற வேண்டிய வரலாற்றுக் கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளோம். அந்திய மீட்பர்களை விடுத்து மக்கள் சக்தியில் நம்பிக்கை வைத்து, நினைவு கூரலை சமூக இயக்கமாக மாற்றி சபதம் செய்வோம். எங்கள் உறவுகளின் கல்லறைகளின் மீது சத்தியம் செய்வோம்.
முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி வேண்டி இனப்படுகொலையாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்து
தமிழர்கள் ஒரு தேச அங்கீகாரத்திற்குரியவர்கள் என்பதையும் தமிழர்களின் தனித்துவமான இறையாண்மையினதும் ஒரு போதும் பாரதீனப்படுத்தப்பட முடியாத சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலும் தமிழர்களின் சுயாட்சியை அங்கீகரிக்க கோருகிறோம்.
தமிழர் இன அடையாள இருப்பின் மீது கட்டவிழ்க்கப்பட்டுள்ள இனப்படுகொலையைத் தடுக்க, தமிழர் சமூக அமைப்புக்களை பலப்படுத்தி விடுதலைக்காக முனைப்புடன் உழைக்க, மக்கள் பலத்தை நம்பி நினைவுகூரலை போராட்ட வடிவமாக, சமூக இயக்கமாக மாற்ற வேண்டிய சூழலுக்குள் தமிழினம் தள்ளப்பட்டுள்ளது. அடக்குமுறைக்குள் வாழும் சமூகத்திற்கு நினைவுகூரல் ஒரு போராட்ட வடிவமே. தமிழ்த் தேசிய நினைவுத்திறம் அடக்குமுறைக்கெதிரான ஊடகம் என்பதை நினைவிற் கொண்டு உறுதிபூணுவோம் தமிழர் உரிமையை வென்றெடுப்பதற்கான பயணிப்பில் இணைவோம்.
மே 18 இன்றைய நாளை இன அழிப்புக்கு எதிரான தமிழ் தேச எழிச்சி நாளாகவும் 2019ம் ஆண்டை இன அழிப்புக்கு எதிரானதும் அரசியல் நீதிக்கான சர்வதேச வலுச்சேர்க்கும் ஆண்டாகவும் பிரகடனம் செய்கிறோம்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு (வடக்கு-கிழக்கு) என தெரிவிக்கப்பட்டுள்ளது
முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சியின் பத்தாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையம் முகநூல் ஊடாக விழிப்பூட்டும் செயற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றது.
தமிழ் ஆங்கிலம், ஜேர்மன் மொழிகளில் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தினரின் செயற்பாடுகளுக்கு பல்லின மக்களிடமும் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஐந்து நாட்களில் மூன்று மொழிகளிலும் மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வுப் போராட்டம் 40,000 மக்களை சென்றடைந்துள்ளது. அதுமட்டுமல்லாது 1000 இற்கு மேற்பட்ட நபர்களில் விருப்புத்தளத்தில் உருவாங்கப்பட்டுள்ளது.
இது இந்த பரப்புரைக்கு கிடைத்த ஒரு வெற்றியாகும். எனினும் இந்த அமைப்பினரால் தயாரிக்கப்பட்ட பல காணொளிகளை முகப்புத்தக நிறுவனம் அனுமதிக்கவில்லை. அதுமட்டுமல்லாது நிறுத்தியும் வைத்துள்ளனர்.எனினும் ஈழத்தமிழ் மக்களின் துயரம் அனைத்துலக சமூகத்தை சென்றடைய வேண்டும் என்ற இலட்சியத்துடன், அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையம் அதிக சிரமங்களுடன் இயங்கி வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று உணர்வு பூர்வமாக முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற போது, வெளிநாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரும் நிகழ்வில் பங்கேற்று தனது வணக்கத்தைச் செலுத்தியுள்ளார்.
முள்ளிவாய்க்காலில் மக்கள் படுகொலை செய்யப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவையொட்டி நிகழ்வுகள் நடைபெற்றன.
தமிழீழதேசம் முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் நினைவுகளைத் தன்னுள் இருத்திஇ சிங்கள அரசின் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் என்பது காலத்தின் நியதி என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை முள்ளிவாய்க்கால் தமிழினவழிப்பு நினைவு நிலையங்களை உலகெங்கும் அமைப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.
பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது அறிக்கையின் முழுவிபரம் :
இன்று தமிழீழத் தேசிய துக்க நாள்.
சிறிலங்கா அரசின் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் நினைவு நாள்.
நாகரீக உலகம் வெட்கித் தலைகுனியும் வகையில் தமிழ் மக்கள் மீது சிங்கள அரச படைகள் நிகழ்த்திய கொடுமைகளை உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் நினைவுகூரும் நாள்.
சிங்கள அரசின் முள்ளிவாயக்கால் தமிழன அழிப்புத் தற்செயலாக நிகழ்ந்ததொரு நிகழ்வல்ல. எதிரப்பாராமல் நிகழ்ந்ததொன்றுமல்ல. அது சிறிலங்கா இராணுவத்தின் அத்துமீறலின் விளைவும் அல்ல.
மாறாக இது தமிழ் மக்களின் சுதந்திர வேட்கையினைக் கருவறுக்க சிறிலங்கா அரசு திட்டமிட்டுப் புரிந்தவொரு வெறியாட்டே முள்ளிவாய்க்கால் இனவுழிப்பு.
முள்ளிவாய்க்கால் என்றதொரு சிறு கிராமத்தின் பெயர் தமிழ் மக்களின் மீதான இனவழிப்பின் குறியீடாக இப்போது வரலாற்றில் பதிவாகியிருக்கிறது.
இம் முள்ளிவாய்க்கால் தமிழனவழிப்பின் 10வது ஆண்டு நினைவை நாம் தற்போது நினைவு கூருகிறோம்.
இப் பத்தாண்டுகளில் நாம் எவற்றைச் சாதித்திருக்கிறோம் என்ற கேள்வி எம்மில் பலருக்கும் எழுவதனையும் காண முடிகிறது.
பத்தாண்டுகள் கடந்தும் நாம் எமது உரிமைளை வென்றெடுக்கும் போராட்டத்தில் பெரிதும் முன்னேறவில்லையே என்ற ஏக்கக் குரல் பலர் மத்தியில் எழுவதையும் நாம் அவதானிக்க முடிகிறது.
நாம் இந்த இடத்தில்; சிறிலங்கா அரசு மேற்கொண்ட முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் உள்நோக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழினவழிப்பின் ஊடாக சிங்கள அரசு அடைந்து கொள்ள முயன்ற விடயங்களை அடைந்து கொள்ள முடிந்ததா என்பதனையும் நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்.
முள்ளிவாய்க்கால் தமிழினவுழிப்பு மூலம் தமிழ் மக்களின் சுதந்திர வேட்கையினை நசுக்கி விட சிறிலங்கா அரசு முயன்றது.
சிறிலங்கா அரசின் கொள்கையான ‘ஒரு நாடு ஒரு மக்கள்’ என்ற நிலைப்பாட்டை நடைமுறையில் அமுல்;படுத்தலாம் என்று எண்ணியது.
சிங்கள அரசின் நிலைப்பாடுகளையும் விருப்பங்களையும் இயல்பாக ஏற்று அதற்கு அடிபணிந்து தமிழ் மக்கள் வாழும் நிலையை ஏற்படுத்த முடியும் என்று எண்ணியது. இவ்வாறான நிலையை உருவாக்குவதன் மூலம் தமிழ் மக்களை நிரந்திரமாகத் தோற்கடித்து விடலாம் என்று சிந்தித்தது.
தமிழீழழ் என்ற தனியரசு என்ற எண்ணக்கருவை அழித்துச் சிதைத்து விடலாம் என்று எண்ணியது.
ஆனால் பத்தாண்டுகள் கழிந்தும் தான் விரும்பியவற்ழற சிறிலங்கா அரசால் அடைந்து கொள்ள முடியவில்ல. தமிழ் மக்களைத் தோற்கடிக்கப்பட மக்களாக மாற்ற முடியவில்லை.
தமிழ் மக்களின் சுதந்தர உணர்வை சிறிலங்கா அரசால் நசுக்கி விட முடியவில்லை. தமிழ் மக்கள் தமது உரிமைக்காக தாயகத்திலும் அனைத்துலகிலும் குரல் கொடுப்பதைத் தடுத்து விட முடியவில்லை.
சிறிலங்கா அரசின் தமிழின அழிப்புக்கு விடுதலைப்புலிகளை அழித்தல் என்ற தமது நலன் சார்ந்த நோக்கத்துடன் பலமிக்க அனைத்துலக அரசுகள் பல அங்கீகாரம்; வழங்கின. புலிகள் அமைப்பு உருவாக்கிய புதிய வலுச்சமநிலை தமது நலன்களை அடைந்து கொள்வதற்கு இடையூறானது என்று இந்த அரசுகள் சிந்தித்தமையே இதற்குக் காரணம். தமது நலன்களை அடைந்து கொள்வதற்கு பெரும் இனவழிப்பை சிறிலங்கா அரசு நடத்த சம்மதம் வழங்கிய அரசுகள் யாவும் வரலாற்றின் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவையே.
காலம் எல்லாவிதக் காயங்களையும் ஆற்றவதுபோல தமிழ் மக்களின் துயரையும் கோபத்தையும் ஆற்றி அவர்களை நீதிகோரும் முயற்சியில் இருந்து பின்வாங்க வைத்து விடும் என தமிழின அழிப்பைப் புரிந்தவர்களும் அவர்களுக்குத் துணைபோனவர்களும் எண்ணியிருக்கக்கூடும். ஆனால் முள்ளவாயக்கால் தமிழினவழிப்பு நிகழ்நது 10 ஆண்டுகளாகியும் தமிழ் மக்கள் தமது நீதி கோரும் இலக்கினைக் கைவிட்டு விடவில்லை.
தமிழின அழிப்புக்காக சிறிலங்கா அரசினைக் குற்றிவாளிக்கூண்டில் ஏற்றும் தமிழ் மக்களின் முயற்சி அனைத்துலகக் கவனத்தை ஈரத்திருந்தாலும் அனைத்துலக அரசுகளின் அங்கீகாரத்தை இதுவரை பெறவில்லை. இனவழிப்பு நிகழ்ந்தது என்பததனை அரசுகளை ஏற்றுக் கொள்ள வைப்பது இலகுவானதொரு விடயமல்ல. இவ் அங்கீகாரம் தரக்கூடிய அரசியல் விளைவுகளே இதற்குப் பிரதான காரணம். தமிழ் மக்கள் இவ் விடயத்தில் எந்தவிதமான விட்டுக் கொடுப்புமின்றிப் போராடுதல் மிக அடிப்படையானது.
முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்புக்கு நீதி கோரும் போராட்டத்தை தமிழ் மக்கள் ஏற்கனவே இருக்கும் அனைத்துலக அரங்குகளில் கடந்த 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். அவ்வரங்குகள் பலவற்றில் முடிவுகளை எடுக்கும் அதிகாரங்கள் நாடுகளின் வசமே இருப்பதால்இ அரசற்ற தமிழ்மக்கள் அங்கு நீதியினைப் பெறுவது இலகுவானதொரு விடயமாக இருக்கப்போவதில்லை என்பது புரிகின்றது. எனவே நீதிக்கான எமது போராட்டத்திற்காக புதிய போர்க்களங்களை உருவாக்குவது அத்தியாவசியமானதாகும்.
முள்ளிவாய்க்கால் தமிழனவழிப்பின் நெருப்பு அணையாது தலைமுறை தலைமுiறாயாகப் பேணிப் பாதுகாக்கப்படவேண்டும். இனவழிப்பு நினைவுகளைச் சுமந்திருக்கும் மக்களே தமது விடுதலையையும் அவாவி நிற்பாhர்கள். இதனால் முள்ளிவாய்கால் நினைவுகளுடன் அறிவுத்தளத்தில் செயற்படக்கூடிய முள்ளிவாயக்கால் தமிழினவழிப்பு நினைவு நிலையங்களை பல்வேறு நாடுகளிலும் அமைக்கும் திட்டத்தை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
முள்ளிவாய்க்கால் தமிழினவழிப்பில் கொல்லப்பட்ட அனைவருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தலைதாழ்த்தி வணக்கம் செலுத்துகிறது. தமிழீழதேசம் என்றும் இந்நினைவுகளைத் தன்னுள் இருத்தித் சிங்கள அரசின் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் என்பது காலத்தின் நியதி என பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தனது தமிழீழத் தேசிய துக்க நாள் செய்தியில் தெரிவித்துள்ளார்.
சுவிற்சலாந்து நாட்டில் இயங்கியரும் ‘அக்கினிப் பறவைகள்’ அமைப்பினரால் “தமிழீழ தேச கட்டமைப்புகள்” ( “Structures of Tamil Eelam : A Handbook” ) என்ற நூல் நாளை (19) பேர்ண் நகரில் வெளியிடப்படுகிறது. ஆங்கில மொழியில் வெளிவரும் இந்த தொகுப்பாய்வு நூல்பற்றி மேலும் விடயங்களை அறிந்துகொள்ள அக்கினிப்பறவைகள் அமைப்பினர் இலக்கு இணையத்திற்கு வழங்கிய நேர்காணலை நாம் எமது வாசகர்களுக்கு தருகின்றோம்.
கேள்வி – “தமிழீழ தேச கட்டமைப்புகள்” என்ற நூலை அக்கினிப்பறவைகள் அமைப்பினராகிய நீங்கள் இன்று வெளியிடுகிறீர்கள். புலம்பெயர் தேசமொன்றில் பிறந்து வளர்ந்த உங்களைப் போன்ற இளையோருக்கு தேசவிடுதலை சார்ந்த அமைப்பொன்றை நிறுவி செயற்படும் சிந்தனை எவ்வாறு தோற்றம் பெற்றது?
பதில் – நாம் 2009ம் ஆண்டில் நிகழ்ந்த அழிவுகளை புலம்பெயர்ந்த தேசத்திலிருந்து பார்த்துக்கொண்டு இருந்தோம். எமக்கு அப்பொழுது இளைய வயது. அக்காலப் பகுதியில் புலம்பெயர்ந்த தேசங்களில் பல போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அவற்றில் கலந்துகொண்ட போதிலும் எம்மால் தாயகத்தில் ஏற்பட்ட அழிவினை தடுக்க முடியவில்லை.
இருப்பினும் மே 18னைத் தொடர்ந்து நாம் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குள் எம்மை இணைத்துக் கொண்டோம். ஆனால் புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்கும் அமைப்புகள் செயலற்று இருந்தன (இருக்கின்றன). இவர்களுக்காக காத்திருக்க இது தருணம் இல்லை என்பதினால், நாம் இளையோராக ஒரு அமைப்பினை உருவாக்கினோம்.
கேள்வி – இந்த அமைப்பின் மூலம் நீங்கள் வேறு எந்தவகையான செயற்திட்டங்களை முன்னெடுக்கிறீர்கள்?
பதில் – ஆம். நாம் புலம்பெயர்ந்த தேசங்களில் பிறந்த இளந் தலைமுறையினருக்கு எமது போராட்டத்தின் தேவையினையும் மற்றும் அதன் வரலாற்றினையும் எடுத்து விளக்கிவருகிறோம். அத்தோடு புலம்பெயர்ந்த தேசங்களில் வலுவிழந்திருக்கும் தமிழீழ அரசியற்தளங்களை ஒரு புறத்தில் பலப்படுத்திக் கொண்டு வருகிற வேளையில், மறுபுறத்தில் புதிய அரசியல் தளங்களை உருவாக்கி, விரிவாக்குகின்றோம். அதற்கு எம்மால் மீள்வெளியீடு செய்யப்பட்ட தமிழீழத் தேசிய அடையாள அட்டை இதற்கொரு உதாரணமாகும்.
கேள்வி: இந்த நூலை இன்றைய சூழ்நிலையில் வெளியிடுவதில் உள்ள முக்கியத்துவம் என்ன?
பதில் – முதலாவது விடயம்: இந்நூலில் எடுத்துக்காட்டப்படும் தமிழீழ நடைமுறை அரசானது, சரியாக ஒரு தசாப்தத்துக்கு முன் சர்வதேச வல்லாதிக்க சக்திகளின் துணையுடன் அழிக்கப்பட்டது. அத்துடன் இவ்வரசின் அடையாளங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கையை முறியடிக்க வேண்டியதேவை எமக்குள்ளது.
இரண்டாவது விடயம்: ஆயுதப் போராட்டமானது எமது விடுதலைப் போராட்டத்தின் ஒரு தொடர்ச்சியாகும். அதாவது இலங்கைக்குள் தீர்வினைக் காண முற்பட்டவர்கள், வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நிறைவுசெய்து, அடுத்த கட்டப் போராட்டத்துக்கான அத்திவாரத்தை இட்டுச்சென்றார்கள். அதற்குப் பின் ஆயுதங்கள் ஏந்தி எமக்கான இறைமையுள்ள நாட்டினை தமிழீழ விடுதலைப் புலிகள் கட்டி எழுப்பினார்கள். 2009ம் ஆண்டு அவ்வரசு நடைமுறை ரீதியாக அழிக்கப்பட்டாலும், அவ்வரசு எமது நினைவுகளில் நிலைத்து நிற்குறது. ஆகையால் எமது போராட்டத்தின் தொடர்ச்சி அவ்வரசினூடாக தொடரவேண்டும்.
சர்வதேசத்தினதோ அல்லது பிராந்தியத்தினதோ நலன்களுக்கு இசைவாக செல்லத் தேவையில்லை. அது போன்று நிலைமாறுகால நீதியினூடாகவோ இலங்கை அரசினூடாகவோ செல்லத் தேவையில்லை. ஆனால் இப்போதுள்ள நிலைமையில் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வாதாகக் கூறும் பல தரப்பினர் இதனையே செய்கின்றனர். இதனை முறியடிக்க வேண்டும் என்பதற்காக அடுத்த தலைமுறைக்கு எமது அரசின் வரலாற்றினைச் சொல்லியாக வேண்டும்.
கேள்வி – இந்த நூல் உள்ளடக்கியிருக்கும் முக்கியமான விடயங்களாக நீங்கள் எவற்றைப் பார்க்கிறீர்கள் ?
பதில் – நாம் இங்கும் ஒளிப்படச் சான்றுகளை முக்கியமானவையாகக் கருதுகிறோம். ஏனெனில் ஒரு விடயத்தை நாம் எந்தளவுக்கு நன்றாக எழுத்தில் கொண்டு வந்தாலும், அதனைக் காட்சிப் படுத்தாவிடின், அது முழுமையானதாக இருக்காது. அது போல இவை முக்கியமானதாக எமனுக்குப் படுகின்றன. அத்துடன் தமிழீம் தொடர்பான ஒளிப்படங்கள், மற்றும் ஆவணங்கள் திட்டமிட்ட வகையில் இல்லாமல் செய்யப்படும் இந்த வேளையில் இவ்விடயத்தை நாம் முக்கியமானதாகக் கருதுகிறோம்.
கேள்வி- இந்த எமது நூலின் மூலம் அனைத்துலக சமுகத்திற்கு என்ன செய்தியை கொண்டு செல்கிறீர்கள்? உலகத் தமிழர்களுக்கு இந்த நூல் எந்த வகையில் முக்கியமானது?
பதில் – 2009ம் ஆண்டு சர்வதேசத்தின் வல்லாதிக்க சக்திகளும் மற்றும் பிராந்திய வல்லரசும் எமக்கு ஒரு தெளிவான விடயத்தினை சொல்லியிருக்கின்றன. அவர்களின் நலன்களுக்கு பாதகம் என்று கருதினால் அவர்கள் எந்த விளிம்புவரை செல்வார்கள் என்பதினை அவர்கள் உணர்த்தியுள்ளார்கள். ஒரு தசாப்தத்துக்குப்பின், போராட்டத்தின் அடுத்த தலைமுறையினராகிய நாம் இந்நூல் மூலம் சொல்ல விரும்பும் செய்தி என்னவெனில், “இவர்கள் என்ன செய்தாலும் தமிழிறைமை என்னும் கோட்பாடு அழிக்கப்பட முடியாத ஒரு விடயமாகும்” என்பதாகும்.
உலகத் தமிழர்களுக்கு நாம் சொல்ல விரும்பும் செய்தி என்னவெனில், சேரர், சோழர், பாண்டியர், தஞ்சாவூர் கோயில் என்று நாம் பெருமைகொள்வது தவறல்ல. ஆனால் எம்முடைய வாழ்நாளிலே எமது கண்ணுக்கு முன்னால் மலர்ந்து பின்பு அழிந்த இந்நடைமுறை அரசு, தமிழர்களின் வரலாற்றில் அழியாத இடம்பிடிக்க வேண்டும். ஏனெனில் இவ்வரசை நிறுவு வதற்காகவும், இறுதியில் இவ்வரசை பாதுகாப்பதற்காகவும் முழு அகிலத்தையே எதிர் கொண்ட தமிழர்களின் வரலாறு மறக்கப்பட முடியாத ஒன்றாகும்.
கேள்வி: தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை எமது அடுத்த தலை முறைக்கு கடத்தும் ஓரு உந்து சக்தியாக இந்த நூல் விளங்குமா?
பதில் – நிச்சயமாக. தமிழர் இறைமையை, தமிழீழ ஆட்புல ஒருமைப்பாட்டை கருத்தியலாக மட்டும் காவாமல் நடைமுறை ரீதியாகவும் நிகழ்த்திக்காட்டிய நீண்ட வரலாறு இந்த நூலில் ஒவ்வொரு அத்தியாயமாக ஆவணப் படுத்தப்பட்டுள்ளது. இவற்றை எமது இளைய தலைமுறை விளங்கிக் கொள்ளும் போது தேசம் தொடர்பான பற்றும் விடுதலைக்காக உழைக்க வேண்டும் என்ற எண்ணமும் இயல்பாகவே ஏற்படும்.
கேள்வி – புலம்பெயர் இளைய தலைமுறை பல்வேறுபட்ட நாடுகளில் பல்வேறு மொழிகளைப் பேசும் ஒரு சமூகமாகக் காணப்படுகிறது. இந்தநிலையில் ஆங்கிலம் தவிர்ந்த ஏனைய மொழிகளிலும் இந்த நூலின் தேவை உள்ளதாக நீங்கள் உணரவில்லையா?
பதில் – நாம் அதனை நன்கு உணர்ந்தே உள்ளோம். இதுதொடர்பாக அக்கறையெடுத்துச் செயற்படுவோம்.
கேள்வி – இந்த நூல் தொடர்பான வரவேற்பு மற்றும் இது பற்றிய கருத்துக்கள் எவ்வாறு உள்ளன?
பதில் – இந்நூலுக்குக் கிடைக்கும் வரவேற்பினை நாம் எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக இளந்தலைமுறையினரிடம் இருந்து பலமான வரவேற்புகள் கிடைக்கின்றன. ஏனெனில் அவர்கள் இந் நடைமுறை அரசு தொடர்பாக கேள்விப்பட்டு இருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கான போதுமான தகவல்கள் இதுவரை எவராலும் கொடுக்கப்படவில்லை. அத்தருணத்தில் இந்நூல் அவ் வெற்றிடத்தை நிறப்பியுள்ளது. தவிர வெளிநாட்டவர்கள் கூட இந்நூல் பற்றிய தமது நேரியல் கருத்துக்களை பதிவுசெய்துள்ளார்.
கேள்வி – எவ்வாறு இந்த நூலை எவ்வாறு பெற்றுக்கொள்ள முடியும்?
பதில் – இன்று (19.05.19) சுவிஸ் நாட்டில் இந்நூல் வெளியிடப்பபடுகிறது. அதுபோன்று வேறு நாடுகளிலும் வெளியிடுவதற்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அக்கினிப் பறவைகள் அமைப்பின் இணையத்தளத்தின் மூலம், அந்நிகழ்வுகளின் விபரங்களை, வெளிவந்தவுடன் அறிந்து கொள்ளலாம்.
கேள்வி – இளைய தலைமுறையினராகிய நீங்கள் புலம்பெயர் ஈழத் தமிழர் சமூகத்திற்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?
– எமது போராட்டம் ஒரு தேசிய விடுதலைப் போராட்டமாகும். நாம் எமது தேசிய அடையாளத்தினை மறைப்பதன் மூலம் அல்லது வேறு நாட்டவர்களுக்காக இலங்கையின் அடையாளத்தினைத் தழுவதின் மூலம், எமது போராட்டத்தின் ஆன்மாவினை நாமே சிதைக்கிறோம். இதனை நாம் தவிர்த்து, நாம் ஈழத்தமிழர்கள் மற்றும் எம்முடைய தாயகமானது தமிழீழம் என்பதினை தெளிவாக சொல்ல வேண்டும். அதுவே எமது விடுதலைப் போராட்டத்தின் அடுத்த பரிமாணத்துக்கான முதல் அடியாகும்.
ஈழத்தமிழர் இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்டார்கள், இன்றும் படுகிறார்கள் என்பதை உலகு அங்கீகரிக்க வேண்டும் என்று உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் கூக்குரலிட்டபடி உள்ளார்கள். இன்றுவரை இதற்கு செவிசாய்க்கும் தமிழரல்லாதவர்கள் மிகவும் குறைவாகவே உள்ளார்கள். விதிவிலக்காக இருப்பது நிரந்த மக்கள் தீர்பாயம் (நிமதீ). நிமதீயை பற்றி உங்களுக்கு தெரியுமா?
பிரித்தானியாவை சேர்ந்த பெட்ரான்ட் ரசல், பிரெஞ்சு நாட்டை சேர்ந்த ஜீன் போல் சாட்டே போன்ற பல மேதைகள், வியட்நாம் போரில் இழைக்கப்பட்ட கொடுமைகளை 1966-67களிலும், லத்தீன் அமெரிக்காவில் இழைக்கப்பட்ட கொடுமைகளை 1973-76களிலும், தீர்ப்பாயம் அமைத்து விசாரணை செய்தார்கள். ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக, சர்வதேசத்தால் புறக்கணிக்கப்பட்ட மக்களின் குரலாக, இதுவே பின்னர் ஒரு நிரந்தரமான அமைப்பாக 1979ம் ஆண்டு இத்தாலியிலுள்ள ரோம் நகரில் நிரந்தர மக்கள் தீர்ப்பாயமாக (நிமதீ) நிறுவப்பட்டது. இன்றுவரை 45 அமர்வுகளில் சர்வதேசத்தால் புறக்கணிக்கப்பட்ட பல கொடுமைகளை விசாரணை செய்துள்ளது.
நிமதீயின்இலங்கைஅமர்வுஆரம்பம்
2002 போர்நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்து இடம்பெற்ற பேச்சு வார்த்தைகள் நல்ல விளைவை கொண்டு வரவேண்டுமென்று, தமிழர் போராட்டத்தின் நியாயத்தை புரிந்துகொண்ட ஐரோப்பாவிலிருந்த சில நாடுடத்தப்பட்ட சிங்களவர்களும், ஐரோப்பியர்களும் கடினமாக உழைத்தார்கள். 2006இல், போர் உக்கிரமடைந்த போது, முன்னர் பேச்சு வார்த்தைகளுக்கு ஆதரவு வழங்கிய ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்தும் பேச்சு வார்த்தைக்கு ஆதரவு வழங்கும்படி இவர்கள் வேண்டினார்கள். ஆனால் பிரித்தானிய-ஐ‑அமெரிக்க அழுத்தங்களால் ஐரோப்பிய நாடுகளும் போரை ஆதரிக்க ஆரம்பித்தன. தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டுக்கொணடிருந்த 2009ம் ஆண்டு காலத்தில், சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும், ஏனைய அரசசார்பற்ற அமைப்புக்களும் கூட, போருக்கு பின்னரான காலத்தைப் பற்றியே பேசின.
வலிமையுள்ள சர்வதேச அமைப்புக்கள் தமிழருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை விசாரிக்க போவதில்லை என்று உணர்ந்தே மேற்குறிப்பிட்ட சிங்கள், ஐரோப்பிய ஆர்வலர்கள் நிமதீயை நாடினார்கள். ஈழத்தமிழர்களின் போராட்டத்தை ஆதரிக்கும் சிங்களவர்களும், ஐரோப்பியர்களும் சிலரேயானாலும், இருக்கிறார்கள் என்று ஈழத்தமிழருக்கு நிரூபிக்கவும் இவர்கள் விரும்பினார்கள்.
நிமதீயின் முதலாவது இலங்கை அமர்வு
முள்ளிவாய்க்கால் அழிவு நடந்து ஒரு ஆண்டு முடிவதற்குள்ளேயே, 2010 சனவரி மாதத்தில் முதலாவது அமர்வு அயர்லாந்திலுள்ள டப்ளின் நகரத்தில் நடந்தது. அயர்லாந்து நாட்டு ஆர்வலர்களே இதற்கான ஒழுங்குகளை செய்தார்கள். ஜெர்மனியிலுள்ள ”சர்வதேச மனித உரிமை அமைப்பு” விசாரணை செய்ய வேண்டிய குற்றப்பத்திரிகையை தாயார் செய்தது. விசாரிக்க வேண்டிய குற்றங்களில் ”போர் குற்றங்களும்”, ”சமாதானத்திற்கு எதிரான குற்றமும்” உள்ளடங்கியிருந்தன.
இதற்கான சாட்சியங்களாக முள்ளிவாய்கால் அழிவுகளை நேரில் கண்ட பல ஈழத்தமிழர்கள் இரகசியமாக வரவழைக்கப்பட்டார்கள். மேலும் பல நிபுணர்கள், சிங்களவர்களும், தமிழர்களும், ஐரோப்பியர்களும், இந்தியர்களும் சாட்சிகள் வழங்கினார்கள். ஈழத்தமிழரின் பல சாட்சியங்கள், அவர்களின் பாதுகாப்பு கருதி இரகசியமாகவே விசாரிக்கப்பட்டன.
இந்த அமர்வில் குற்றங்களை விசாரித்த குழுவில் பத்து சர்வதேச நிபுணர்கள் இருந்தார்கள். இவர்களைப் பற்றி. டானியல்ஃபியர்ஸ்டீன்ஆர்ஜன்டீனாவின்புவனஸ்ஆய்ரஸ்பல்கலைக்கழகத்தில்இனவழிப்புபிரிவில்பேராசிரியர்.டெனிஸ்ஹலிடே ஐநாவின் உதவி செயலாளராக இருந்து பின்னர் அது இராக்கின் மேல் போட்ட பொருளாதார தடைகளை எதிர்த்து ஐநா பதவியிலிருந்து விலகினார். ஃபிரான்சுவாஹுற்றாட் கத்தோலிக்க பல்கலைகழகத்தில் பேராசிரியராக இருந்தார். 2017இல் இகுவடோரில் பல்கலைகழகத்தில் பணிசெய்து கொண்டிருந்த போது காலமானார்.
டப்ளின் அமர்வுக்கு நான்கு ஆண்டுகளுக்கு பின்னர், டப்ளின் அமர்வில் இருந்த நீதிபதிகளில் நால்வருடன் (டானியல்ஃபியர்ஸ்டீன், டெனிஸ்ஹலிடே,ஜீயானிரொன்யோனி,ஓய்ஸ்ரைன்ரிவேற்றர்),மேலும்எட்டுநிபுணர்கள்கொண்ட, 12 நிபுணர்கள்குழு, ஜெர்மனியிலுள்ளபிரேமன்என்னும்நகரில்அமர்ந்துசாட்சிகளைகேட்டது. இம்முறைஇனவழிப்புகுற்றச்சாட்டையும்அத்துடன்பிரித்தானியா, ஐ–அமெரிக்கா, இந்தியாஆகியமூன்றுநாடுகளும்இனவழிப்புக்குதுணைபோனதுஎன்றகுற்றச்சாட்டிற்கானசாட்சியங்களையும்நிபுணர்கள்கேட்டார்கள்.
கப்ரியலேடெலமோர்த்தே,மிலான் கத்தோலிக்க பல்கலைகழகத்தில், சர்வதேச சட்டங்களின் பேராசியராக உள்ளார். ஜெனீவாவின், சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபின சட்டங்களுக்கான அகடமியிலும் (2007-2008) பேராசிரியராக இருந்தார். ருவாண்டாவுக்கான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக (2003-2004) பணியாற்றினார். பழைய யூகோசுலாவியாவிற்கான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அலுவலகத்தில் (2000) பணியாற்றினார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (1998) அமைப்பதற்கு அமர்த்தப்பட்ட அரச குழுவிலும் இருந்தார்.
ஹுசேஎலியேஸ்எஸ்றவேமொல்ற்றோ,
இஸ்பெயினிலுள்ள வலன்சியா பல்கலைகழகத்தில் சர்வதே சட்ட பேராசிரியராக பணியாற்றுகிறார். திபெத் பற்றிய சட்ட நிபுணர். திபெத்திலும், பர்மாவிலும் இழைக்கப்பட்ட குற்றங்களை ஆய்வு செய்து இவற்றிற்கான குற்றப்பத்திரிகையை தாயாரித்தார்
டானியல்ஃபியர்ஸ்டீன், ஆர்ஜன்டீனாவின், ற்ரேஸ் டி ஃபெப்ரேரோ பல்கலைகழகத்தின், இனவழிப்பு கற்கை மையத்தின் பணிப்பாளராகவும், புவனஸ் ஆய்ரஸ் பலகலைகழகத்தின் இனப்படுகொலை பீடத்தின் பேராசிரியராகவும், ஆர்ஜன்டீனாவின் தேசிய ஆய்வாளர் மையத்தின் உறுப்பினராகவும் உள்ளார். சர்வதேச இனவழிப்பு கற்கை நிபுணர்களின் மையத்தின் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டார்.
செவனேகர்பியன், சர்வதேச இனவழிப்பு சட்ட நிபுணர். ஜெனீவா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராகவும், சுவீடனின் நியுசெடெல் பல்கலைக்கழகத்தில் சட்ட தத்துவத்திலும், சர்வதேச குற்ற சட்டங்களிலும் விரிவுரையாளராகவும் பணியாற்றுகிறார். சட்டங்கள் அரசுகள் இழைக்கும் குற்றங்களை கையாளுவது பற்றி கவனம் செலுத்துகிறார்.
ஹேகர் கலுக், மத்திய கிழக்கு பற்றி ஆய்வு செய்யும் கல்விமான். இவரது அரசியல் வேலைகளுக்காக துருக்கியால் சிறையிலடப்பட்டவர். குர்திஸ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரிப்பவர்.
ஜாவியர்கிரல்டோமொரீனோ, கொலம்பியாவின் பொகொட்டாவில் வாழும் ஒரு இறையியல்வாதி, மனித உரிமைகள் ஆர்வலர். இனவழிப்பால் பாதிக்கப்பட்ட சமூகங்களை ஆய்வு செய்தவர். நிமதீயின் உதவி தலைவராகவும் உள்ளார்.
ஜீயானிரொன்யோனிநிமதீயின்செயலாளர்நாயகம்
டெனிஸ்ஹலிடே, ஐநாவின் உதவி செயலாளராக இருந்து பின்னர் அது இராக்கின் மேல் போட்ட பொருளாதார தடைகளை எதிர்த்து ஐநாவில் 34 வருடஙங்கள் வகித்த பதவியிலிருந்து விலகினார். சர்வதேச காந்தி சமாதான பரிசு பெற்றவர்.
மன்ஃபிரட்ஓஉறின்ஸ்,ஜெர்மனியின், பிரேமன் பல்கலைக்கழகத்தில், பொது சட்டம், அரசியல் சமூகவியல், சட்டத்தின் சமூகவியல் ஆகிய துறைகளில் பேராசியராக உள்ளார். ஆபிரிக்காவில், முக்கியமான நம்பிபியாவிலும், மேற்கு சகாராவிலும் இடம்பெற்ற விடுதலைப்போராட்டங்களுடன் நெருங்கிய உறவுகளை பேணினார். நம்பிபியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியாக பணியாற்றிய போது, அதன் மனித உரிமை மற்றும் சனநாயகத்திற்கான யுனேஸ்கோ பேரரசிரியர் பதவியையும் வகித்தார்.
ஹெலன்ஜாவிஸ்,கம்போடியா தீர்பாயத்தின், பொதுமக்கள் பிரிவின் தலைவராக பணியாற்றியவர்.
ஓய்ஸ்ரைன்ரிவேற்றர் ,
சர்வதேசசட்டநிபுணர். நிமதீயின் பிலிப்பைன்ஸ் பற்றிய அமர்வின் உறுப்பினராகவும் இருந்தார்
மோங்ஸார்ணி, பர்மாவில் சனநாயகம் சார்ந்த செயற்பாட்டாளர். 1995இல் சுதந்திர பர்மா கூட்டணியை நிறுவினார். ரோகிங்யா முசுலீம்களுக்கு எதிரான வன்முறைகளை வெளிப்படையாக எதிர்க்கும் ஒருசில பர்மா அறிவுசீவிகளில் ஒருவர். இதுவிடயமாக ஆன் சங் ஸுசியை பகிரங்கமாக கண்டித்தவர்.