Home Blog Page 2792

கொல்கொத்தா ஏயார் ஏஷியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

இந்தியா கொல்கொத்தா விமான நிலையத்திலுள்ள எயார் ஏஷியா விமானத்தில்  (ஐ 5 – 585) வெடிகுண்டு இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, விமானத்தினை சோதனையிடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அறிவித்தல் பெங்களுர் விமான நிலையத்திற்கே வந்தது. இந்த அறிவித்தல் கொல்கொத்தாவிற்கு அனுப்பப்பட்டது. இதேவேளை இந்த விமானத்தில் 179 பயணிகள் ஏறி, விமானம் கொல்கொத்தா நோக்கி புறப்பட்டு விட்டது.

கொல்கொத்தாவில் விமானம் தனியாக நிறுத்தப்பட்டதும், விமானத்தை சுற்றிவளைத்த CSIF  பாதுகாப்பு வீரர்கள் விமானத்தை சுற்றிவளைத்து, அதிலிருந்த 179 பயணிகளும் பாதுகாப்பாக இறக்கப்பட்டனர்.

CSIF வீரர்கள் விமானத்திற்குள் ஏறி கடுமையான சோதனையை மேற்கொண்டனர். சோதனை முடிவுகள் பற்றி இதுவரை அறிவிக்கப்படவில்லை.

 

 

 

தமிழர் தரப்புக்களிடையே ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களும் ஒருமித்த செயற்பாடுகளும் அவசியம் – மனித உரிமைச் செயற்பாட்டாளர் பொஸ்கோ

நேர்காணல் இறுதி பகுதி……

சிறீலங்கா அரசு தமிழர்கள் மீது மேற்கொண்ட திட்டமிட்ட இன அழிப்புக்கும்  போர்க்குற்றங்களுக்கும் .நாவின் ஊடாக நீதியைப் பெற்று கொள்ளலாம் என்று நினைக்கிறீர்களா

தாயகத்திலே எமக்கான நீதி கிடைக்க முடியாதென்ற நிலையில் ஐ.நாவினூடாக எமக்கான நீதியை பெற்றுக் கொள்வதற்கான முயற்சியை அநீதிக்குள்ளான ஒரு பேரினம் தன்னாலான முயற்சிகளை நிச்சயம் காத்திரமான முறையில் மேற்கொண்டே ஆக வேண்டும். திட்டமிட்ட முறையில் எமது வளங்களை ஒழுங்குபடுத்தி இடைவிடாத முயற்சியை தமிழர் தரப்பு ஒரே நிலைப்பாட்டோடு மேற் கொண்டால் கால ஓட்டத்தில் எதுவுமே சாத்தியமானதுதான். அதற்கு தமிழர் தரப்புக்களிடையே ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களும் ஒருமித்த செயற் பாடுகளுமே பிரதானமாக இருக்க வேண்டும். சுயநிர்ணய உரிமைகோரி போராடும் இனங்களின் தேசத்தினை தனிநாடாக அங்கீகரிக்க வேண்டுமெனில் ஐ.நா பொதுச்சபையில் மூன்றில் இரண்டு பெருமான்மையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த தமிழர் இனவழிப்பை ஐக்கிய நாடுகள் சபையிலோ அல்லது சர்வதேச நீதிமன்றத்திலோ நிருபிப்பதற்கு என்ன வகையான  பொறிமுறைகள் இருக்கின்றன?

நாம் முதலில் தமிழினப் படுகொலை தொடர்பில் நெதர்லாந்து நாட்டின் கெக் நகரில் அமைந்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும்  சர்வதேச கூட்டணிகளுடன் செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அத்துடன் ஜெனீவாவில் உள்ள ஐ.நா சபை பொறிமுறைகள் மட்டுமல்லாது வியன்னா மற்றும் நியூயோர்க் ஆகிய இடங்களிலும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

மேலும் பிராந்திய நிறுவனங்களான ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஆபிரிக்க ஒன்றியம் ஆகியவற்றுடனும் ஏனைய பிராந்திய அமைப்புக்களுடனும் இணைந்து செயலாற்ற வேண்டும். இறுதியாக தமிழினப் படுகொலைக்கு தீர்வு காணும் முகமாக ஒவ்வொரு நாட்டு பாராளுமன்றங்களுடனும் இணைந்து வேலைசெய்ய வேண்டிய தேவையுள்ளது. தாயகத்தில் இருந்து பாதிக்கப்பட்ட தரப்பினரும், சாட்சியாளர்களும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் ஒவ்வொரு ஐ.நா மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடருக்கும் வருகைதர வேண்டும். அத்துடன் தமிழர் அமைப்புக்கள் எம்முடன் இணைந்து செயற்பட வேண்டும். அத்தோடு ப்ரஸ்செல்ஸ் மற்றும் யெனீவாவில் வசிக்கின்ற இளம் சமுதாயத்தினர் ஆகக்குறைந்தது 25 பேராவது எம்முடன் இணைந்து செயலாற்ற வேண்டிய தேவையுள்ளது.

தற்போது தாயகத்திலே தீவிரமடைந்துள்ள கட்டமைப்புசார் இன வழிப்பை தடுப்பதற்கு .நா மன்றத்தின் மூலமாக எத்தகைய நடவடிக்கைகள் மேற் கொள்ளலாம்?

நாங்கள் ஒவ்வொரு ஐ.நா மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடரின் போதும் பக்கவறை நிகழ்வுகளின் ஊடாகவும் எழுத்து மற்றும் வாய்மூல அறிக்கைகள் ஊடாகவும் சர்வதேசத்திற்கு தமிழீழத்தில் சிறீலங்கா அரசினால் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பு தொடர்பாக தெரியப்படுத்தி வருகின்றோம். அத்துடன் ஐ.நா.சபை சார்ந்த விசேட பிரதிநிதிகளுக்கும் மனித உரிமைகள் ஆணையா ளருக்கும் அனைத்து நாடுகளுக்குமான கால மீளாய்வு பொறிமுறைக்கும் (UPR Process) ஒப்பந்த அடிப்படையிலான நாடுகளு க்கும் தாயகத்தில் இருந்து பெறப்பட்ட அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும்.

ஐ.நா. மனித உரிமைகள்  சபையின் செயற்பாடுகள் ஒரு வருடத்தில் 250 நாட்கள்  இடம்பெறுகின்றன. ஆனால் நாம் மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடர் இடம்பெறும் காலப்பகுதியில் மாத்திரமே அங்கு செல்கின்றோம். மற்றும் ஐ.நா. சபையின் பிரிவுகளான ஐ.நா. பொதுச்சபை,  ஐ.நா பாதுகாப்பு சபை, ஐ.நா  பெண்கள் அமைப்பு, ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக குழு (ECOSOC) யுனெஸ்கோ, யுனிசெப் மற்றும் ஒலிம்பிக் குழு ஆகிய அனைத்து பொறி முறைகளையும் நாம் உரிய வகையில் பயன்படுத்தி செயற்பாடுகளை முன் னெடுக்க வேண்டும்.

இனப்படுகொலை விடயத்தில் சர்வதேச நாடுகளோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையோ செய்யத்தவறிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எவை என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

பொதுமக்களின் பாதுகாப்பிற்கான கடப்பாடு என்பது  ஐ.நா பாதுகாப்புச் சபையில் புதிதாகக் கொண்டுவரப்பட்ட ஒரு சர்வதேச பாதுகாப்பு மற்றும் மனித உரிமைக்கான விழுமியம் ஆகும். இவ் விழுமியம் ஆனது சர்வதே அமைப்புக்க ளூடாக ஏற்கனவே இடம்பெற்ற இனவழிப்புக்கள் மற்றும் எதிர்காலத்தில் இனவழிப்பு ஒன்று இடம்பெறாமல் தடுப்பதற்காகவும், போர்க்குற்றம், இனச்சுத்தி கரிப்பு மற்றும் மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றை தடுப்ப தற்கே ஏற்படுத்தப்பட்டதாகும்.

இவ் விழுமியத்தின் முதல் தீர்மானமானது தமிழின அழிப்பு இடம்பெற்ற பின்னரே ஐ.நா. பொதுச்சபையில் செப்டெம்பர் 14 2009 அன்று ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த தீர்மானம் ஆனது (A/RES/63/308) கௌதமாலா நாட்டின் பிரதிகள் மற்றும் 67 உறுப்பு நாடுகளின் இணை அனுசர ணையுடன் அறிமுகப்படுத்தப்பட்டது பாதிக்கப்பட்ட தரப்பாகிய நாம் ஐ.நா பொதுச்சபையுடன் இணைந்து வேலை செய்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கயை எடுப்பதுடன் சரியான வேலைத்திட்டங்களை சர்வதேச சமூகத்தின் ஊடாக நகர்த்திச் செல்ல வேண்டும். விசேடமாக இத் தீர்மானத்தை அறிமுகப்படுத்திய கௌதமாலா நாட்டுடனும் அதனுடன் இணைந்த செயற்பட்ட உறுப்பு நாடுகளுடனும் ஆழமாக வேலை செய்ய வேண்டும்.

இலங்கை அரசு .நாவின் கோரிக்கைகளை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. இதனை தமிழர் தரப்பு எவ்வாறு கையாளவேண்டும்.

தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தீர்மானம் மற்றும் கனடா நாடளுமன்றத் தீர்மானங்கள் போன்ற தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு சர்வதேச நாடுகளின் பிராந்திய மற்றும் தேசிய நாடாளுமன்றங்களுடன் இணைந்து தமிழ் உரிமை ஆர்வலர்கள் பணியாற்றல் வேண்டும். இதனூடாகவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிலுள்ள நாடுகளிற்கு ஓர் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான வலுவான முன் முயற்சியெடுக்க அழுத்தம் கொடுக்க முடியும். ஐ.நா முகவர் மட்டத்தில் அதன் தீர்மானங்களையும் செயற்பாடு களையும் ஆதரிக்கக் கூடிய நாடுகளைக்கொண்ட ஓர் குழுவை நாம் உருவாக்க வேண்டும்.

இவ் ஆதரவைப் பெற்றுக்கொள்ள அந் நாடுகளுடனிணைந்து வேலை செய்வதுடன், அதன் பாராளுமன்றங்களில் தமிழினவழிப்பை அங்கீகரிக்கும் தீர்மானங்களை நிறைவேற்றல் வேண்டும் அவ் வகையில் நாடுகளின் ஆதரவைத் திரட்டுவதற்கான செயற்பாட்டு வரைபு எம்மிடம் இருத்தல் அவசியம். தமிழீழத்தில் இராணுவ ஆக்கிரமிப்பு குறித்த பாரிய பிரச்சாரம்:

 உயர் பாதுகாப்பு மண்டலம் மற்றும் பொது மக்கள் மீதான அதன் விளைவு

 சிறுவர்கள் மீதான இராணுவ ஆக்கிரமிப்பின்  விளைவு

 பெண்கள் மீது இராணுவ ஆக்கிரமிப்ப்பின் விளைவுகள்

 தமிழர்களின் வாழ்வாதாரங்கள் மீதான இராணுவ ஆக்கிரமிப்பின் விளைவு

30/1, 34/1 மற்றும் 40/1 தீர்மானங்களை செயல்படுத்தாமை தொடர்பான அறிக்கைகள்

தமிழர்கள் ஏன் OMP அங்கீகரிக்கவில்லை என்பது குறித்த அறிக்கை

PTA மற்றும் CTA பற்றிய அறிக்கைகள்

இதில் தமிழ் அரசியல் பிரதிநிதித்துவங்களின் வகிபாகம் மற்றும் நகர்வுகளை எவ்வாறு பார்கின்றீர்கள்?

இலங்கை தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களில் தமிழ் அரசியல் வாதிகளின் எந்தவொரு வகிபாகமும் இருக்கவில்லை. மாறாக மேற்படிதீர்மானங்கள் நிறை வேற்றப்பட்ட பின்னர் மேற்கத்தைய நாடுகளின் ஊடகப் பேச்சாளார்களாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிப்பதன் மூலம் தமிழீழத்தில் இடம்பெற்ற தமிழின அழிப்பினை மறுத்து நிற்கின்றனர்.

 

 

 

வடக்கு மாகாண சுகாதார தொண்டர் நியமனத்தில் முறைகேடு எச்சரிக்கை விடுத்த சுகாதார தொண்டர்கள்

வடக்கு மாகாணத்தில் உள்ள ஜந்து மாவட்டங்களிலும் கடந்த பல வருடகாலமாக சுகாதார தொண்டர்களாக கடையாற்றியவர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு நாளைய தினம் ஆளுனர் தலைமையில்  நடைபெற உள்ளது.

இந்நியமனம் வழங்குவதற்காக தெரிவுசெய்யபட்வர்களில் பெரும்பாலானவர்கள் ஒருநாள் கூட சுகாதார தொண்டராக கடமையாற்றாதவர்களுக்கும் ஜந்து வருடங்களில் ஓய்வூதியத்திற்கு செல்வபவர்களுக்கும் மற்றும் அரசியல்வாதிகளின் நேரடி
சிபரிசிலும் இந் நியமனப் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டு நியமனம்
வழங்கப்படவுள்ளது.

இதனால் உண்மையாக நீண்டகாலம் அர்ப்பணிப்புடன் கடமையாற்றிய மிக வறுமைக்கோட்டின் கீழ் வாழும் ஊழியர்களும் கணவனை இழந்த பெண்களும் இந் நியமனத்தில் இருந்து புறக்கணிக்கபட்டுள்ளனர்.

நியமனம் வழங்கும் பெயர்பட்டியலில் தகமை இல்லாதவர்களை முன்னிலைப்படுத்தியும் தகமையுள்ளவர்களை பெயர்பட்டியலின் இறுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளதோடு ஆட்சேர்ப்பு செய்வதிலும் பல முரன்பாடான நிலமை காணப்படுகின்றது என பாதிக்கப்பட்ட சுகாதாரதொண்டர்கள் தெரிவிக்கின்றனர் உதாரணமாக தரம்-9 கற்றிருப்பவர்களுக்கே இந் நியமனம் வழங்கப்படுவதற்கான அடிப்படை தகமை உள்ளது என தெரிவித்து  கா.பொ.த சாதாரண தரம் சித்தியெய்தியவர்களுக்கு இந் நியமனம் வழங்கப்படமுடியாது என பல தொண்டர்கள் புறக்கணிக்கப்பட்டிருந்தனர் ஆனால் அதே நேரத்தில் க.பொ.த.உயர்தரம் தேர்சிபெற்றவர்களையும் இவ் நியமனத்திற்குள் உள்வாங்கியுள்ளனர் இச்செயற்பாடானது ஆட்சேர்பு செய்வதில் உள்ள முரன்பாட்டை தெளிவாகாட்டுகின்றது.

நாளைய தினம் நியமனம் பெறவுள்ள சுகாதார தொண்டர்களின் நியமனப் பெயர் பட்டியலை மீளாய்வு செய்து குறுக்கு வழியிலும் அரசியல் செல்வாக்கினை பயன்படுத்தி நியமனம் பெறவுள்ளவர்களையும் பணத்தை கொடுத்து நியமனத்திற்குள் உள்வாங்கப்பட்டவர்களையும் பெயர்பட்டியலில் இருந்து நீக்கி உண்மையாக அரப்பணிப்புடன் பணியாற்றியவர்களிற்கு இவ் நியமனத்தை வழங்குவதற்கு வடமாகாண ஆளுனர் சுரேன்ராகவன் உரிய நடவடிக்கை எடுத்து பாதிக்கபட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்ட முன்வரவேண்டும் எனவும் தவறும்
பட்சத்தில் குறுகிய அரசியல் நோக்கங்களை இலக்காக கொண்டு தவறானவர்களுக்கு இந் நியமனம் வழங்கப்படுவதற்கு உந்து சக்தியாக இருக்கும் அரசியல்வாதிகளுக்கு எதிர்வரும் தேர்தல்களில் உரிய பதிலை வழங்கவேண்டி வரும் என பாதிக்கபட்ட சுகாதார தொண்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தொல்லியல் திணைக்களம் இனவாத திணைக்களமாக செயற்படுகிறது – அமைச்சர் மனோ கணேசன்

திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று விநாயகர் ஆலயத்தின் அத்திவாரம் பௌத்த பிக்கு ஒருவரின் தலைமையில் இடிக்கப்பட்டமை தொடர்பில் கடந்த வாரம் இடம்பெற்று சர்ச்சை நிலைவியை அடுத்து இந்த விவகாரம் குறித்து இந்து கலாச்சார அமைச்சராக உள்ள அமைச்சர் மனேகணேசன் தலைமையில் விசேட சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர், ‘இந்த நாட்டின் தொல்லிய திணைக்களம் ஒரு இனவாதத் திணைக்களமாக செயற்படுகிறது’ என தெரிவித்தார்.

தென்கைலை ஆதீனம் முன்னிலை வகிக்க இந்து கலாச்சார அமைச்சர் தலைமையில் கன்னியா வெந்நீருற்று சைவத்தமிழ் மரபுரிமைகளை பாதுகாக்கும் கலந்தாய்வில் குருமார்கள் , பணிப்பாளர், அறங்காவலர், சட்டத்தரணிகள், வரலாற்று ஆய்வாளர்கள், அமைப்பு சார் பிரதிநிதிகள் கலந்து மிகக் காத்திரமான அரசியல், சட்ட , நிர்வாக திணைக்கள ரீதியான நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டன.FB IMG 1558873550463 தொல்லியல் திணைக்களம் இனவாத திணைக்களமாக செயற்படுகிறது - அமைச்சர் மனோ கணேசன்

இந்நிலையில் தகவிலினை பெற்ற அமைச்சர் மனோகணேசன் எதிர்வரும் வாரம் திருகோணமலைக்கு சென்று இதுகுறித்து கலந்துரையாடலை நடத்தவுள்ளேன் இதன் மூலம் தமிழ் இந்து மக்களுக்கு எதிரான இந்த அநீதியை நிவர்த்தி செய்யவேண்டிய கடப்படாகும். இதன்மூலமே நாட்டில் உண்மையான தேசிய ஒருமைப்பாட்டினை கட்டியெழுப்ப முடியும். எல்லா மதங்களையும், எல்லா இனங்களையும் எல்லா மொழிகளையும் பிரதிநிதித்துப்படுத்தும் வரலாற்றினை எடுத்துக்காட்ட வேண்டும் எவ்வளவு கஸ்டமான காரியங்களானாலும் கூட இவற்றை செய்ய எனது அமைச்சு அமைச்சர் என்ற ரீதியில் நான் கடமைப்பட்டுள்ளேன் என தெரிவித்தார்.

திருகோணமலையில் தற்போது இடம்பெற்றுவரும் தொல்லியல் திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையில்,இலங்கை அரசாங்கத்தின் தொல்பொருள் அகழ்வாராய்ச்சி திணைக்களத்தால் திருமலை மாவட்ட தமிழ் மக்களின் மக்களின் பாரம்பரிய உரிமைகள் – மத,இன உரிமைகள் கபடத்தனமாக பறிக்கப்பட்டுக்கொண்டிருப்பதுநிரூபணமாகியுள்ளது. ஒரு இனத்தின், ஒரு மதத்தின் அடாத்தான எண்ணப்பாடுககளை நடைமுறைப்படுத் கூடிய ஒரு அரசாங்கம் இருக்க முடியாது. அவ்வாறு இருந்தால் அவ்வரசாங்கத்தில் நான் இருக்க முடியாது .என்னைப்போல் பலர் இருக்கமுடியாது.

வடக்கு கிழக்கில்,குறிப்பாக திருகோணமையில்,முல்லைத்தீவில், வவுனியாவில், மட்டக்களப்பில் இதுபோன்ற செயல்களை செய்யக்கூடிய திணைக்களமாக இனவாதத் திணைக்களமாக தொல்லியல் திணைக்களம் செயற்பட்டுக்கொண்டிருக்கிறது.
என்று தெரிவித்தார்.

பிரான்ஸ் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு ஈராக்கில் மரணதண்டனை.

சிரியாவில் அப்பாவி பொதுமக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இணைந்திருந்த பிரான்ஸ் நாட்டினர் 3 பேருக்கு ஈராக் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்தது.

சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி அப்பாவி பொதுமக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலர் சிறியப்படலால் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் கடந்த பிப்ரவரி மாதம் சிரியாவால் ஈராக்கிடம் ஒப்படைக்கப்பட்ட சிலரில் 12 பேர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு எதிராக பாக்தாத் நகரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கெவின் கோனோட், லியோனார்ட் லோபெஸ், சலிம் மச்சாவ் ஆகிய மூவருக்கு மரண தண்டனை விதித்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள அப்பாவி கைதிகளை விடுவிக்க மைத்திரி இணக்கம்

அவசரகாலச் சட்டத்தின் கீழ், பயங்கரவாத நடவடிக்கைகளோடு நேரடியாக சம்பந்தப்படாமல் கைது செய்யப்பட்டிருக்கும் அல்லது விளக்க மறியலில் வைக்கப்பட்டிருக்கும் அப்பாவி பொது மக்களை விடுதலை செய்யுமாறு முஸ்லிம் அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர்

இவர்களின் வேண்டுகோளை தாம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதாகவும், இதுபற்றி மூன்று வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற பாதுகாப்புப் பேரவைக் கூட்டத்திலும் தாம் கூறியிருந்ததாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். நிலமை தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஜனாதிபதிக்கு விளக்கிக் கூறினார்.

இச்சந்திப்பில் ரவூப் ஹக்கீம், றிஷாட் பதியுதீன் M.H.A.ஹலீம், இராஜாங்க அமைச்சர்களான அலிசாகிர் மௌலானா, அமீர் அலி, பிரதி அமைச்சர் அப்துல்லா, பாராளுமன்ற உறுப்பினர் A.H.M.பௌஸி. தௌபீக் M.I.M.மன்சூர் போன்றோர் கலந்து கொண்டனர்

அமெரிக்காவுடனான ஒப்பந்தத்திற்கு தடைபோட்ட சிறிலங்கா ஜனாதிபதி

சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சராக தான் பதவி வகிக்கும் போது தனது அனுமதியின்றி அமெரிக்காவுடனான எந்த பாதுகாப்பு ஒப்பந்தினையும் மேற்கொள்ள வேண்டாமென, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவிற்கு மைத்திரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சீனாவிற்கான விஜயத்தை முடித்து நாடு திரும்பிய ஜனாதிபதி, மேற்படி வேண்டுகோளை விடுத்துள்ளார்.

வாஷிங்டனில் தங்கியிருந்த திலக் மாரப்பன, அமெரிக்கா – சிறிலங்காவிற்கிடையிலான சர்ச்சைக்குரிய சோபா உடன்படிக்கை தொடர்பாக பேச்சுவாத்தையில் ஈடுபட்டிருந்தார். ஐக்கிய தேசிய முன்னணி அரசும் சில திருத்தங்களுடன் உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு ஆதரவு தெரிவித்திருந்தது. அதனை பகிரங்கப்படுத்தாமல், துரிதமாக உடன்பாட்டில் கையெழுத்திட அவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

சிறிலங்காவிற்கான பயண அனுமதி வழங்குவதற்கு அவகாசம் கோரும் வெளிநாடுகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களையடுத்து, சிறிலங்காவில் நிலவும் பதட்ட நிலை காரணமாக பல நாடுகள் தமது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தன.

இதேவேளை கொழும்பிலுள்ள ஐ.நா. மற்றும் வெளிநாடுகளின் 43 தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகளுடன் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 24.05 அன்று 2மணிநேர சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார்.

அதில் வெளிநாட்டு தூதரக அதிகாரிகள், தமது நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையை தளர்த்துவதற்கு தமக்கு இன்னும் கால அவகாசம் தேவைப்படுவதாக ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்தனர். இதனையடுத்து மேற்படி தாக்குதல் நடவடிக்கைகளை தடுப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இராணுவப் புலனாய்வு அதிகாரி ஒருவர் விளக்கமளித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் நாட்டின் சுற்றுலாத்துறை பாரிய நெருக்கடிக்குள்ளாகியிருப்பதால் அதை சரிசெய்ய சிறிலங்காவிற்கான பயண எச்சரிக்கையை வெளிநாடுகள் தளர்த்த வேண்டும் என்றும் ரணில் விக்கிரமசிங்க வெளிநாட்டு தூதரக அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இது பற்றி தாம் கவனத்தில் கொள்வதாகவும், தமக்கு இன்னும் கால அவகாசம் தேவைப்படுவதாகவும் தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இருந்தாலும், சீனா தனது நாட்டு மக்களுக்கு வழங்கியிருந்த பயண எச்சரிக்கையை சீன அரசு மீளப் பெற்றுள்ளதாக சீன தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது.

அந்தமான், பெருவில் வரிசையாக பலத்த நிலநடுக்கம்

தென் அமெரிக்க நாடான பெருவில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை மேற்கு வங்கத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இன்று காலை அந்தமான் நிக்கோபார் தீவுகளில் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவாகிய நிலநடுக்கம், மேற்கு வங்கத்தில் உள்ள பன்குரா மாவட்டத்தில் 4.8ஆக பதிவாகியுள்ளது. இதனால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

அமேசான் காடுகள் சூழ்ந்திருக்கும் தென் அமெரிக்க நாடான பெருவில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8ஆக பதிவாகியுள்ளது.

வடக்கு பெருவில் மோயாம்பா நகரில் இருந்து 180 km தூரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 109.09km ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சில கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. ஆனால் உயிரிழப்பு குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

இதைத் தொடர்ந்து கொலம்பியா, ஓகுவேடார் ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதே சமயம் இதனால் எங்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. அடுத்தடுத்து ஐந்திற்கும் மேற்பட்ட இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாம் பத்து வருடங்களாகத் தேங்கியிருப்பதற்கான முதன்மைக் காரணம் என்ன? – பரணி கிருஸ்ணரஜனி

இளைய தலைமுறையினர் தந்த பெரும் நம்பிக்கைகளுடன் தமிழின அழிப்பின் பத்தாவது ஆண்டு நினைவு நாட்கள் நம்மை கடந்து சென்று கொண்டிருக்கிறது.

தோல்வியையும், அவலத்தையும் முன்னிறுத்தும் அரசியல் எம்மை எப்போதும் நீதியை நோக்கி நகர்த்தாது. அத்தோடு அது ஒரு எதிர்ப்பு அரசியல் வடிவமாகவும் உருத் திரளாது.

நாம் பத்து வருடங்களாகத் தேங்கியிருப்பதற்கான முதன்மைக் காரணம் இதுதான்.

இந்தப் பத்தாவது ஆண்டு நினைவையொட்டி எழுதப்பட்ட ஆய்வுகள், கட்டுரைகள், பேச்சுக்கள், உரைகளில் கூட விதிவிலக்கில்லாமல் ஒரே ஒப்பாரி. தோல்வி உளவியல் அப்படியே வெளிப்பட்டது.

இதிலிருந்து பெற்றுக் கொள்ளவோ, கற்றுக் கொள்ளவோ எதுவுமில்லை.

ஆனால் இளைய தலைமுறையிடம் இறுதிப் போர் குறித்து எந்தப் புகாரும் இல்லை.

அவர்கள் முள்ளிவாய்க்காலிலிருந்து விலகி நந்திக்கடலிலேயே தமது கவனத்தைக் குவித்ததால் வந்த தெளிவு அது.

அவர்கள் நந்திக்கடலை ஒரு கோட்பாடாக, போராட்டத்தின் தொடர்ச்சியாக,  வெற்றியின் உள்ளடக்கமாகப் பார்ப்பதால் இது சாத்தியமாகியிருக்கிறது.

2009 தமிழின அழிப்பு நேரத்தில் 16 வயதே நிரம்பிய சிறுவன் மிகத் தீவிரமாக புலத்தில் அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டு இன அழிப்பை தடுத்து நிறுத்த முடியாததன் காரணமாக பலரையும் போன்று மிகவும் சோர்ந்து போயிருந்தான்.

பிறகு திடீரென்று காணாமல் ஒதுங்கிப் போய்விட்டான்.

கிட்டத்தட்ட அப்படி ஒருவன் இருப்பதையே நானும் மறந்தே போயிருந்தேன்.

திடீரென்று சில மாதங்களுக்கு முன்பு தொடர்புக்கு வந்து நந்திக்கடல் குறித்து எனக்கே வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தான்.

‘அது சரி இவ்வளவு நாள் எங்கே போயிருந்தாய் ?’ என்று நான் கேட்ட கேள்விக்கு அவன் சொன்ன பதிலில் வந்த பெருமிதம் எனக்கு இன்னும் அடங்கவில்லை.

‘அண்ணே தொடர்ந்து சிந்தித்ததில் தலைவர் காட்டிய வழியின் படி அடுத்த கட்டப் போராட்டம் என்னவென்று தெளிவாகத் தெரிந்து விட்டது. மருத்துவர் ஆக வேண்டும் என்ற அம்மாவின் கனவை தூக்கி எறிந்து விட்டு ‘ international relations’ கற்கை நெறிக்கு பதிவு செய்து படித்து தற்போது Self – determination (சுய நிர்ணய உரிமை) இல் PhD செய்கிறேன் என்றான்.

அது மட்டுமல்ல, வேறு சக நண்பர்கள் international criminal law/ National security, Peace and War conflicts, International human rights போன்ற பல துறைகளில் PhD செய்வதாகச் சொன்னபோது மிரண்டே போனேன்.

சத்தமில்லாமல் எவ்வளவு தூரம் நகர்ந்து விட்டார்கள்.

இங்கு பத்து வருடங்களாக அமைப்புக்களை உருவாக்கி வைத்து கொண்டு ‘நண்டுப் பண்பாட்டு’ அரசியல் செய்து கொண்டிருக்கிறோம்.

தமிழின அழிப்புக் குற்றவாளிகளை, அவர்களுக்கு உடந்தையாக இருந்த அனைத்துலக சதியாளர்களை ஒரு நாள் இவர்கள் அனைத்துலக போர்க்குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தி நீதி கேட்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.

ஆனால் அதற்கு முன்னையவர்கள் வழி விட வேண்டும்.

அடுத்து அண்மையில் சுவிசில் வெளியிடப்பட்ட தமிழீழ நடைமுறை அரசு குறித்த ‘Structures of Tamil Eelam: A Handbook’ என்ற ஆங்கில நூலை எழுதிய மாணவிக்கு வயது இருபது. இவரும் சட்டத்துறையில் Double degree செய்பவர்தான்.

இவர் தமிழின அழிப்பு நேரம் பத்து வயது சிறுமி. இடையில் என்னவொரு பாய்ச்சல்.!

mulli kanchi நாம் பத்து வருடங்களாகத் தேங்கியிருப்பதற்கான முதன்மைக் காரணம் என்ன? - பரணி கிருஸ்ணரஜனிநந்திக்கடல் கோட்பாடுகளை கிரமமாக உள்வாங்கியதால் எல்லோரையும் போல் ஒப்பாரி வைக்காமல் நடை முறை அரசை ஆவணப்படுத்துவதன் அரசியல் புரிந்து அதை சக நண்பர்களுடன் சேர்ந்து ஆவணப்படுத்தியுள்ளார்.

எமது நீதிக்கான பயணத்தில் இது ஒரு பாய்ச்சல் என்று துணிந்து சொல்வேன்.

பழைய பஞ்சாங்கம் பாடுபவர்கள் இளைய தலைமுறையிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு ஒதுங்க வேண்டிய காலம் நெருங்கிவிட்டது. இனியும் ஒதுங்காது முரண்டு பிடித்தால் வரலாறு உங்களை வேறு விதமாகத்தான் பதிவு செய்யும்.