மலையக மக்கள் முன்னணிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பங்களையடுத்து, கூட்டத்தை புறக்கணித்து, வெளியேறினார் அனுஷா சந்திரசேகரன். மலையக மக்கள் முன்னணியில் அதிருப்தியில் இருக்கும் அதன் செயலாளர் அனுஷா சந்திரசேகரன் நேற்று நடைபெற்ற கட்சிப் பொதுக்குழுக் கூட்டத்தப் புறக்கணித்து வெளியேறியதாகக் கூறப்படுகின்றது.
இவர் மலையக மக்கள் முன்னணியில் பிரதியமைச்சராக கடமையாற்றிய பி.சந்திரசேகரன் அவர்களின் மகள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
கண்டியில் உண்ணா நோன்பிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்னதேரருக்கு ஆதரவாக பெருமளவு சிங்கள மக்கள் கண்டியில் அணிதிரண்டுள்ளதாக அறிய முடிகின்றது.
ஆண்கள், பெண்கள் என பலரும் அவரைச் சந்தித்து, அவரின் போராட்டத்திற்கு ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லா, மேற்கு ஆளுநர் அசாத் சாலி ஆகியோரை ஜனாதிபதி தலையிட்டு பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி ரத்ன தேரர் உண்ணாவிரதத்தில் குதித்துள்ள நிலையில் அவருக்கு சிங்களத் தரப்பினர் பலர் தமது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை காலையில் பொதுபலசேனாவின் தலைவர் ஞானசார தேரர், அத்துரலியே ரத்னதேரரை சந்தித்து நிலைமைகளைக் கேட்டறிந்ததோடு, அரசாங்கத்திற்கு 24 மணி நேர காலக்கெடு விதித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
ரத்ன தேரரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத விடத்து, நாடு தழுவிய அளவில் எங்கள் ”திருவிழாவை” சந்திக்க நேரும் என ஞானசார தேரர் மிரட்டியுள்ளார்.
நாளை ஒரு பெரும் கலவரத்தை சந்திக்க வேண்டி வரலாம். இந்த பகிரங்க எச்சரிக்கை தொடர்பில் அரசோ, பாதுகாப்பு பிரிவினரோ எந்த தகவல்களையும் இதுவரை வெளியிடவில்லை.
நாடு தழுவியரீதியில் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அரசின் கடமை. இன்னும் மூன்று நாட்களில் முஸ்லிம்களின் பெருநாள் வர இருக்கிறது. சில வேளை அவர்களுக்கான பெருநாள் பரிசாகக்கூட ஞானசார தேரர் பகிரங்கமாக சொல்லும் ”திருவிழா” என்பது இருக்கலாம் என கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சங்கிலிய மன்னனின் 400வது ஆண்டு விழாவின் வாயிலாக ஈழத் தமிழர்களை மத ரீதியாக பிளவுபடுத்தும் சதியில் இந்தியாவைச் சேர்ந்த இந்துத்துவ அமைப்புகள் ஈடுபட்டுள்ளன. போர் முடிந்து விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு பின்னரான காலக்கட்டத்தில், ஈழத்தமிழர்களின் ஒற்றுமையை சீர்குலைக்க இந்தியாவிலிருந்து விஷ்வ ஹிந்து பரிஷத், சிவசேனா போன்ற அமைப்புகள் ஈழத்தில் களமிறங்க ஆரம்பித்தன.
இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த அர்ஜூன் சம்பத் சிவசேனாவின் வழியாக ஈழத்தில் இந்துத்துவ மதவெறிக் கோட்பாடுகளை பரப்பும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்த பலரும், இந்திய தூதரக அதிகாரிகளும் இணைந்து இந்த சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தினூடாக தமிழர்கள் மத்தியில் களைந்தெறியப்பட்ட சாதி, மத வேறுபாடுகளை மீள் உருவாக்கம் செய்யும் பணிகளில் இந்துத்துவ அமைப்புகள் ஈடுபட்டுள்ளன.
70 ஆண்டுகாலமாக நீண்ட நெடிய விடுதலைப் போராட்டத்தினை நடத்தி வரும் தேசிய இனமாகிய (Ethnic Nationalities) தமிழர்களை மதச் சிறுபான்மையினர்களாக (Religious Minorities) சுருக்கி அடையாளப்படுத்தும் வேலையினை இந்த கும்பல் செய்து வருகிறது.
தமிழர்கள் ஒரு தேசிய இனமல்ல என்று சொல்வதும், அதன் மூலமாக அங்கு நடைபெற்றது இனப்படுகொலை அல்ல என்று சொல்வதும் அமெரிக்கா-இந்தியா கூட்டணியின் திட்டமாக இருக்கிறது.
இதன் காரணமாகத் தான் ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்கத் தீர்மானங்கள் தொடர்ச்சியாக தமிழர்களை மதச் சிறுபான்மையினர் என்று குறிப்பிட்டது.
அதனை எதிர்த்து உலகத் தமிழர்கள் பலரும் குரல் எழுப்பி வரும் நிலையில், அமெரிக்கா-இந்தியக் கூட்டணியின் இனப்படுகொலையை மறைக்கும் சதி வேலையினைத் தான் அர்ஜூன் சம்பத் போன்றவர்கள் செய்து வருகிறார்கள். தமிழர்களின் இனப்படுகொலைக்கு நீதி பெறுவதினை தடுப்பது இவர்களின் நோக்கமாக இருக்கிறது. இந்துத்துவ கும்பல்கள், அடிப்படையிலேயே தமிழின விரோத சக்திகளாகவே இருக்கின்றன.
தமிழீழ போராளிகள் இருந்தவரை அம்மண்ணில் நிலைபெற முடியாத மதவெறிக் கருத்துக்களை இப்போது இந்தியாவின் துணையுடன் இந்துத்துவ கும்பல்கள் அம்மண்ணில் விதைக்க நினைக்கின்றன. மாலதி படையணியும், சூசை கடற்படையும், இம்ரான் படையணியும் இணைந்து களமாடிய தேசமது. அங்கே தமிழின விரோத இந்துத்துவ கும்பல்களை அனுமதிப்பது சீரழிவையே கொடுக்கும். தமிழீழ விடுதலைக் கோரிக்கையை அழிப்பதே இவர்களின் நோக்கம்.
ஈழத் தமிழர்களே! எச்சரிக்கை கொள்ளுங்கள். தமிழின விரோத இந்துத்துவ மதவெறி கும்பல்களை தமிழீழ மண்ணிலிருந்து அப்புறப்படுத்துங்கள்.
இலங்கையின் ஜனாதிபதியாக தமிழர் ஒருவர் பதவியேற்றாலும் தமக்கான தீர்வு கிடைக்கப்போவதில்லையென காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
காணாமலாக்கப்பட்ட உறவினர்களின் 8 மாவட்டங்களுக்கான தலைவர், செயலாளர் கூட்டம் இன்று (02) வவுனியாவில் இடம்பெற்றது.
இந்த கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே கிளிநொச்சி மாவட்ட செயலாளர் லீலாதேவி ஆனந்த நடராஜா இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், இலங்கையின் ஜனாதிபதியாக யார் வந்தாலும் தமக்கு நீதி கிடைக்கப்போவதில்லை என தெரிவித்தார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன தமது உறவுகளை கண்டறிந்து தருவாரென தமிழ் தலைமைகள் கூறியதாலும் தமக்கிருந்த நப்பாசையினாலுமே அவருக்கு வாக்களித்ததாக தெரிவித்தார்.
எனினும் ஆட்சிக்கு வந்தததன் பின்னர் அவரும் தம்மை ஏமாற்றிவிட்டதாக தெரிவித்தார்.
அதேபோலவே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இந்த விடயத்தை மறப்போம் மன்னிப்போமென தெரிவித்து விட்டதாகவும் இதனால் இனிமேல் சிங்கள தலைவர்கள் மாத்திரமல்ல தமிழர்கள் ஜனாதிபதியாக வந்தாலும் அவர்களை நம்ப தாம் தயாராக இல்லையெனவும் தெரிவித்துள்ளார்.
தமிழீழ தேச விடுதலைப் போராட்டம் என்பது சிங்கள பேரினவாதத்திடமிருந்து எமது தேசத்தின் இறைமையை மீட்டெடுத்தல் என்ற ஒரு குறுகிய கோட்பாட்டை இலக்காகக் கொண்டு மட்டுமே முன்னெடுக்கப்படவில்லை. அது சமுதாயத்தில் காணப்படும் அனைத்து ஒடுக்குமுறைகளையும் தகர்த்தெறிந்து ஒரு உன்னத தேசத்தை கட்டியெழுப்பும் ஒரு உயரிய நோக்கையும் கொண்டே பயணித்தது. இந்த உன்னத குறிக்கோளுக்காகவே ஆயிரம் ஆயிரம் உயிர்கள் அர்ப்பணிக்கப்பட்டன.
இத்தகைய ஒரு தேசத்தைக் கட்டியெழுப்பும் முன்னோடிச் செயற்பாடாக அன்று தமிழீழ நடைமுறை அரசொன்று கட்டியமைக்கப்பட்டு செயற்பட்டு வந்தது. அங்கு தேச விடுதலையை முன்னெடுத்துச் செல்லும் அதேவேளை சமுதாய ஒடுக்குமுறைகளை இல்லாதொழிப்பதற்கான உறுதியான செயற்பாடுகளும் சமாந்தரமாக மேற்கொள்ளப்பட்டுவந்தன. இதனை வேறெந்த தேசவிடுதலைப் போராட்டத்திலும் காணமுடியாத ஒரு சிறப்பியல்பென்றே கூறவேண்டும்.
சாதிய ஒடுக்குமுறை தமிழர் தாயகத்தில் பரவலாக காணப்பட்ட ஒரு கொடிய ஒடுக்குமுறை வடிவமாகும். குறிப்பாக யாழ்ப்பாணப் பிரதேசத்தில் அது மிகவும் இறுக்கமானதொன்றாக காணப்பட்டது. ‘மேல்சாதியினர்’ என்றுதம்மைத் தாமே அழைத்துக் கொள்பவர்களால் அங்கு மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறைகளும் இழைக்கப்பட்ட கொடுமைகளும் எண்ணிப்பார்க்க முடியாதவை. தற்போதைய இளையதலைமுறை அறியாதவை. இத்தகைய செயற்பாடுகள் பலருக்கு நம்ப முடியாதவையாய் கூட இருக்கலாம்.
பொதுக் கிணறுகளில் தண்ணீர் பாவணையத் தடுத்தல், தேநீர் கடைகளில் தனியான குவளைகளைப் பயன்படுத்தல், அவர்களின் கல்விகற்கும் உரிமையைத் தடுத்தல், ஆடை அணிவதில் கட்டுப்பாடுகளை விதித்தல், ஆலயங்களுக்குச் செல்வத்தைத் தடுத்தல் போன்றவை அங்கு சாதாரணமாக காணப்பட்டன.
ஒடுக்கப்பட்ட மக்கள் தமது உரிமைக்கான குரல்களை எழுப்பமுயன்ற போதெல்லாம் அவை மிக கொடுமையாக ஒடுக்கப்பட்டன. குடிசைகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. மக்கள் கொல்லப்பட்டனர். குடிநீர் கிணற்றில் நஞ்சு கலந்து கூட மக்கள் கொல்லப்பட்ட கேவலமான கொடூரங்களும் நடந்தேறின. சிறிலங்கா காவல்துறையின் உதவியுடன் துப்பாக்கிச் சூடு நடத்தியும் மக்களும் செயற்பாட்டாளர்களும் கொல்லப்பட்டனர். முற்போக்கு சக்திகளால் இந்த ஒடுக்குமுறைகளுக்கு எதிராக அவ்வப்போது போராட்டங்கள் நடத்தப்பட்டபோதும் அவை பெரியளவில் பயன்விளைவுகளைத் தரவில்லை.
1980களில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் பிரதேசங்கள் வரஆரம்பித்த போது இத்தகைய கொடுமைகளுக்கு எதிரான செயற்பாடுகள் ஆரம்பிக்கப் பட்டன. தமிழீழ விடுதலைப்புலிககள் தமது ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங் களில் இத்தகைய சாதிய ஒடுக்குமுறைகளை தடைசெய்தனர். தமிழீழ நடைமுறை அரசு தாக்கமாகச் செயற்பட ஆரம்பித்த நாட்களில் சாதி ஒடுக்குமுறைகளுக்கு எதிரான சட்டம் தமிழீழ சட்டக்கோவையில் ஒரு அங்கமாகியது. (The Tamil Eelam Penal Code and the Tamil Eelam civil code 1994 ) இதன் மூலம் சாதி ஒடுக்குமுறை சட்டரீதியாக குற்றமாக்கப்பட்டது.
தமிழீழ நடைமுறை அரசில் சாதியத்தால் சமூகத்தில் எந்த வித செல்வாக்கையும் செலுத்தமுடியவில்லை. இங்கு சாதியம் முற்றாக ஒழிக்கப்பட்டது என்று கூறிவிட முடியாவிடினும் சாதியம் அங்கு நாளுக்குநாள் வலுவிழந்து சென்றுகொண்டிருந்தது. சமதத்துவ சமூதாயம் நோக்கி எமது சமூகம் நடைபோட்டுக்கொண்டிருந்தது.
சட்டத்தால் மட்டுமன்றி, சிந்தனை ரீதியிலும் மாற்றங்களுக்கான நிகழ்ச்சி நிரல்கள் முன்னெடுக்கப்பட்டன. இளந்தலைமுறையில் குறிப்பாக போராளிகள் மட்டத்தில் குறிப்பிடத்தக்க விழிப்புணர்வு ஏற்பட்டது. இது பின்னர் அவர்கள் சார்ந்த குடும்பங்கிளிலும் பரவலானது. தேசத்திற்காக உழைப்பவர்கள் அதற்காக தம்முயிரை ஈகம் செய்தவர்கள் உயர்வானவர்களாக மதிக்கப்படும் உன்னத மாற்றம் நிகழத் தொடங்கியது. குறுகிய சிந்தனைகள் புறந்தள்ளப்பட்டு நாம் அனைவரும் தமிழர்கள் என்ற தமிழ் தேசிய உணர்வு வலுப்பெற்றது.
இப்படித்தான் எங்கள் தேசம் அன்று இருந்தது. அப்படி இருந்த எமது தியாக பூமியில் இன்று நச்சுவிதைகள் மீண்டும் வேர்விட முனைந்து நிற்கும் காட்சிகள் எம்மைக் கவலை கொள்ளச் செய்கின்றன. இன்றைய பத்திரிக்கைச் செய்தியில் நூற்றுக்கு மேற்பட்ட ஆலயங்களில் ஆலய பிரவேசத்தடை நிலவுவதாக புள்ளிவிபரங்களுடன் செய்திகள் வெளிவருகின்றன.
கடந்த வருடம் யாழ்ப்பாணம் தென்மராட்சி வரணி பகுதியில் அமைந்துள்ள சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் கடந்த வருடம் திருவிழா இடம் பெற்றிருந்தது. அங்கு தேர் திருவிழாவின்போது, தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் எனக் குறிப்பிட்டு பக்தர்களை, வடம் பிடிக்க அனுமதிக்காது ஜே.சி.பி இயந்திரம் கொண்டு தேர் இழுத்த வெட்கக்கேடான சம்பவம் நிகழ்ந்தேறியது. இந்தப் பின்னணியில் இவ்வருட திருவிழா நடத்தப்படாமல் ஆலய நிர்வாகத்தினர் நிறுத்தி வைத்துள்ளதாக குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது. சேடமிழுத்துக் கிடந்த சாதியப்பேய் இன்று எமது தேசத்தில் மீண்டும் எழுந்து தாண்டவமாடத் துடிக்கிறது.
சாதியம் மட்டுமன்றி மதவாதமும் அந்நிய தேசத்தில் இருந்து இங்கு ஆரவாரத்துடன் கால் பதிக்கிறது. தமிழீழ தேசிய அரசு என்றும் மதச் சார்பற்ற கொள்கையைப் கடைப்பிடிக்கும் ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. தமிழ் தேசிய இனம் எந்த வகையிலும் பிளவுபட்டு நிற்கலாகாது என்ற விடையத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பு மிக அவதானத்துடன் செயட்பட்டு வந்துள்ளது.
“தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மதசார்பற்ற நிலைப்பாட்டைக் கடைப்பிடிக்கும் அதேவேளை சகல மதங்களையும் சார்ந்த மக்களினதும் அடிப்படை உரிமையான வழிபாட்டுச் சுதந்திரத்திற்கு, எமது இயக்கம் உத்தரவாதமளிக்கும். சகல மதத்தவர்களும் தமது ஆன்மீக அபிலைசைகளைப் பூர்த்தி செய்யவும், மத-கலாசாரப் பண்புகளைப் பேணி வளர்க்கவும் எமது இயக்கம் ஊக்கமளிக்கும்.
தமிழ் இன ஒருமைப்பாட்டையும், தேசிய சுதந்திரத்தையும் இலட்சியமாக வரித்துக் கொண்ட ஒரு விடுதலை இயக்கம், மதசார்பான கொள்கையை கடைபிடிப்பது தவறானதாகும். இந்த குறுகிய மதவாதப்போக்கு தமிழ் இன ஒற்றுமைக்கும் தமிழ்த்தேசிய ஒருமைப்பாட்டிற்கும் பெரும் முட்டுக்கட்டையாக அமையும்.“ – (விடுதலைப் புலிகள் ஆடி – ஆவணி 1992இதழ்)
தமிழீழ நடைமுறையரசு சமய சார்பின்மைக்கு எடுத்துக்கு காட்டாய் விளங்கியது. மதங்கள் சமமாக மதிக்கப்பட்டன. எந்த மதத்திற்கும் முன்னுரிமை கொடுக்கப்படவில்லை. மக்களின் மனங்களிலும் மதநல்லிணக்கம் ஆழப் பதிந்திருந்தது. அங்கு புதுக்குடியிருப்பு சிவன் கோவிலுக்குச் செல்லும் கிறிஸ்தவர்களையும், குழந்தை யேசுவில் குவியும் இந்துக்களையும் காணமுடியும்.
ஆனால் இன்று அந்த நிலைமையை கெடுக்க, தமிழீழ தேசியத்தைச் சிதைக்க இந்தியாவின் இந்துத்துவா ஆசியுடன் களமிறங்குகிறது ஒரு கயவர் கூட்டம். மறவன்புலவு சச்சிதானந்தம் , மட்டக்களப்பு கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் போன்றோர் இன்று இந்து மதவாதம் பேசி தமிழர்களை பிரிக்கும் செயல்களில் ஈடுபாட்டு வருகின்றனர்.
இதன் அண்மைய நிகழ்வுதான் இந்திய இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் மற்றும் அவரது குழுவினரின் ஈழவருகை. தமிழீழத்தில் இனவழிப்பு இடம்பெற்றபோது வாய்திறவாது இருந்தவர்கள், இந்துக் கோவில்களில் தஞ்சமடைந்த மக்களை சிறிலங்கா படைகள் கொன்று குவித்தபோது ஏனென்று கேட்காதவர்கள் இன்று முள்ளிவாய்க்காலில் எந்த முகத்தோடு நிற்கிறார்கள். மதவாதத்தை கக்கும் தமிழ் தேசியத்திற்கு என்றும் எதிராக செயற்படும் இந்த கும்பல், இங்கு காலூன்ற முயல்வது பெருத்த சந்தேகத்தை தோற்றுவிக்கிறது.
வீரமும், ஈகமும் விதைக்கப்பட்டிருக்கும் எமது ஈழமண்ணில் இத்தகைய சாதித்துவ, மதவாத செயற்பாடுகள் இடம்பெறுவதை அனுமதிப்பது வெட்கக்கேடானது. இத்தகைய செயற்பாடுகளை முளையிலேயே கிள்ளி எறியவேண்டியது தேசத்தை நேசிக்கும் அனைவரினதும் கடமையாகும். குறிப்பாக எமது இளைய தலைமுறை காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும்.
ஒப்பற்ற உயிர் விலைகொடுத்து நாம் இன்று உயர்த்திப் பிடித்திருக்கும் தமிழீழ தேசியம், இந்த அறிவியலுக்கு அப்பாற்பட்ட சாதியத்தாலோ அல்லது மனநிலை பிறழ்வு மதவாதத்தினாலோ சிதைந்து போவதற்கு அனுமதிக்கமாட்டோம் என உறுதிகொள்வோம்.
யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டு 38 ஆண்டுகள் நிறைவு நாள் (சனிக்கிழமை) நினைவு கூரப்பட்டது. இந் நினைவு நாள் யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் யாழ் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் தலைமையில் இடம்பெற்றது.
.
இந் நிகழ்வில் கௌரவ யாழ் மாநகரசபை உறுப்பினர்கள், யாழ் மாநகர ஆணையாளர், யாழ் பொதுநூலக பிரதம நூலகர், நூல்நிலைய உத்தியோகத்தர்கள், வாசகர்கள், பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
தமிழரின் வரலாற்றுச் சான்றாக, தனிப்பெரும் அடையாளமாக இருந்த யாழ்.நூலகம் 1981ஆம் ஆண்டு ஜூன் முதலாம் திகதி பேரினவாதிகளால் எரியூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது என யாழ் மாநகர முதல்வரின் ஊடகப்பிரிவு அதன் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
அரசாங்கமானது 2015 ஆம் ஆண்டில் இருந்து 2019 மார்ச் மாதம் வரையில் 12.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையை பெற்றுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
எதிர் கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் 2007 தொடக்கம் 2015 வரையான 08 வருட காலப்பகுதிகளில் மொத்தமாக 5.5 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் மாத்திரமே பெற்றுக்கொள்ளப்பட்டது. இந்த அரசாங்கம் நாட்டை பொறுப்பேற்றதில் இருந்து 2015, 2016, 2017, 2018 போன்ற 04 ஆண்டு காலப்பகுதிக்குள் மாத்திரம் 10 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகை பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன் மே மாதம் பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்ட்டுள்ள கடன் தொகையுடன் சேர்த்து இந்த அரசாங்கம் இது வரையில் 12.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையை பெற்றுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் முறையற்ற செயற்பாடுகள் எதிர்காலத்தில் பாரிய எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாநயக்க குறிப்பிட்டார்
கடந்த அரசாங்கத்தில் மஹிந்த ராஜபக்ஷ எவ்வாறு நெருக்கடி நேரங்களில் தேசிய வளங்களை பிற நாடுகளுக்கு விற்றாரோ, அதன் தொடர்ச்சியையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் முன்னெடுக்கின்றார்கள். இரண்டு ஆட்சியாளர்களிடமும் எவ்வித வேறுப்பாடும் கிடையாது.
கடந்த மாதம் இந்தியாவில் மக்களவை தேர்தல் இடம்பெற்றது தேர்தல் பெறுபேறு வெளியாகும் மட்டும் இந்தியாவில் அரசாங்கம் ஒன்று கிடையாது. ஆனால் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு மேடை அபிவிருத்தி தொடர்பிலான ஒப்பந்தம் மே 28 ஆம் திகதி இரு நாடுகளுக்கிடையில் கைசாத்திடப்பட்டுள்ளது.
ஒரு நாட்டில் அரசாங்கம் ஒன்று இல்லாத பட்சத்தில் பிறிதொரு நாடு முக்கிய ஒப்பந்தம் செய்துக் கொள்வது சட்டத்திற்கு முரணானதாகவும், ஜனநாயக கொள்கைகளுக்கு முரனானதாகவும் காணப்படும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் முறையற்ற செயற்பாடுகள் எதிர்காலத்தில் பாரிய எதிர் விளைவுகளைநாட்டுக்கு ஏற்படுத்தும் என்பதை உறுதியாக குறிப்பிட முடியும் எனவும் தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் உண்ணாவிரதமிருந்துவரும் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்னதேரருக்கு ஆதரவாக பெருமளவு சிங்கள மக்கள் கண்டியில் அணிதிரண்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.
ஆண்கள் பெண்கள் என பலரும் தேரரைச் சந்தித்தவண்ணமுள்ளதுடன் தேரரின் போராட்டத்திற்கு தமது ஒத்தாசைகளையும் நல்கிவருகின்றனர்.
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாஹ், மேற்கு ஆளுநர் அசாத் சாலி ஆகியோரை ஜனாதிபதி தலையிட்டு பதவி நீக்கம் செய்யவேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி ரத்ன தேரர் உண்ணாவிரதத்தில் குதித்துள்ளார். இந்த நிலையிலேயே பல்வேறு சிங்களத் தரப்பினரும் அவரது போராட்டத்திற்கு தமது ஆதரவினைத் தெரிவித்துவருகின்றனர்.
இதேவேளை காலையில் பொதுபலசேனாவின் தலைவர் ஞானசார தேரர் அத்துரலிய ரத்னதேரரைச் சந்தித்து நிலைமைகளைக் கேட்டறிந்ததுடன் அரசாங்கத்துக்கு 24 மணி நேர காலக்கெடுவும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.