அமெரிக்காவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்க வெளிவிவகார செனட் சபை உறுப்பினர்கள், தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை முதன்முறையாக யாழ்ப்பாணத்தில் சந்தித்துப் பேசிய போதே இக் கோரிக்கை விடுத்திருந்தனர்.
மாறிவரும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் நிலை மாற்றங்கள் தொடர்பாக இந்த சந்திப்பின் போது அதிக கவனம் செலுத்தப்பட்டது.
தமிழர்களுக்கான தீர்வு முயற்சிகள் தொடர்பாக தமக்கு ஏற்பட்டிருக்கும் நம்பிக்கையீனங்கள் தொடர்பாகவும் அமெரிக்க செனட் சபையினரிடம் எடுத்துரைக்கப்பட்டது.
இந்தியாவின் தலையீடட்டினால் கொண்டு வரப்பட்ட 13ஆவது திருத்தச் சட்ட ஏற்பாட்டு நடைமுறைகள், மற்றும் தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு ஆகியன குறித்தும் பேசப்பட்டன.
அமெரிக்காவின் நலன்களுக்கு எதிராக விடுதலைப் புலிகள் ஒருபோதும் செயற்பட்டதில்லை என சுட்டிக்காட்டிய விடுதலைப் புலிகள் முன்னாள் உறுப்பினர்ககள், இந்த விடயத்தை கருத்திற் கொண்டு விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குமாறு செனட் சபையினரிடம் கோரிக்கை விடுத்தனர்.
உயர் தொழினுட்பத்துடன் கூடிய ZS-ASN ரகத்திலான The Basler BT-67 என்ற விமானமே தரையிறக்கப்பட்டுள்ளது.குறித்த விமானம் ஒரே நேரத்தில் 1000 மீற்றர் உயரத்தில் இருந்து நிலத்தை துல்லியமாகவும் மேலோட்டமாகவும் படம் பிடிக்கக்கூடியது.
3 நாட்கள் திட்டத்துக்காக குறித்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.இந்தோனேசியாவில் இருந்து இலங்கைக்கு வந்துள்ள குறித்த விமானம் எதிர்வரும் 09 ஆம் திகதி இந்தியா நோக்கி பறக்கவுள்ளது.
இந்தியாவுக்கு செல்லவுள்ள குறித்த விமானத்தின் பயணப்பாதை இலங்கை வழியாக திட்டமிடப்பட்டுள்ளமை கவனிக்கத்தக்கது.இலங்கையில் தரையிறங்கும் நோக்கிலேயே பயணப்பாதை திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
புவிசரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகத்திடம் நியூஸ்பெர்ஸ்ட் இது தொடர்பில் வினவியது.விமானத்தின் வருகை தொடர்பில் தாம் அறிந்திருக்கவில்லையெனவும், நாட்டில் எவ்வித கண்காணிப்பு நடவடிக்கைக்கும் அனுமதி வழங்கப்படவில்லையெனவும் பணியம் குறிப்பிட்டது.
“போர்க் குற்றங்கள் குறித்த பாரபட்சமற்ற விசாரணை ஒன்று நடத்தப்படுவது தமது படையினரது குற்றங்களையும், அதற்கான கட்டளைகளைப் பிறப்பித்த அதிகாரிகளினதும் தவறுகளையும் அம்பலப்படுத்திவிடும் என்பதாலேயே அரசாங்கம் கால அவகாசத்தைத் தொடர்ந்தும் பெறுகின்றது” எனக் குற்றஞ்சாட்டிய, வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்கினேஸ்வரன், “அதனால், போர்க் குற்ற விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு (ICC) கொண்டு செல்ல வேண்டியது கட்டாயமாகும்” எனவும் வலியுறுத்தி யிருக்கின்றார்.
அமெரிக்க வெளிவிவகாரத்துறையின் உயர் அதிகாரிகள் குழு ஒன்று விக்கினேஸ்வரனை நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு யாழ்ப்பாணத்தில் சந்தித்து விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தியது. அமெரிக்க செனட் வெளி விவகாரக் குழுவின் சிரேஷ்ட உறுப்பினரான டாமியன் எப் மேர்பி, செனட் வெளிவிவகாரக் குழுவின் உறுப்பினரான யெல்டா கஸிமி, அமெரிக்க தூதரக அரசியல் பிரிவு பிரதிப் பிரதம அதிகாரி மார்க்கஸ் பி. பார்ப்பென்டர் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தார்கள்.
யாழ் நகரிலுள்ள பிரபல தனியார் விடுதி ஒன்றில் சுமார் இரண்டு மணிநேரம் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில், மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டமை, வரப்போகும் சனாதிபதித் தேர்தலில் இலங்கை மக்கள் எவ்வாறான நிலைப்பாட்டை எடுப்பார்கள் என்பது குறித்தும், இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னரான நிலைமைகள் உட்பட பொதுவான அரசியல் நிலைமைகள் குறித்து விக்கினேஸ்வரனின் கருத்துக்களை அமெரிக்க அதிகாரிகள் கேட்டறிந்துகொண்டார்கள். கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் பல்வேறு அரசியல் தலைவர்களையும், முக்கி யஸ்த்தர்களையும் சந்தித்துப் பேசிய அமெரிக்க குழுவினர் இறுதியாக விக்கினேஸ்வரனைச் சந்தித்துப் பேசினார்கள்.
இந்தச் சந்திப்பு குறித்து முன்னாள் முதலமைச்சரைத் தொடர்புகொண்டு கேட்டபோது அவர் தெரிவித்தவை வருமாறு. “இலங்கை அரசாங்கம் கால அவகாசத்தை எடுத்துக்கொள்வது ஐ.நா. பிரேரணையிலுள்ள பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்காக அல்ல என்பதை நான் அமெரிக்க பிரதிநிதிகளுக்குச் சுட்டிக்காட்டினேன். சிங்கள போர்க் குற்றவாளிகளை அரசாங்கம் தம்மவர்களாகவே பார்க்கின்றார்கள். அவர்களை குற்றவாளிகளாகப் பார்ப்பதில்லை. அதேவேளையில், எமது விடுதலைப் போராளிகளை அவர்கள் தம்மவர்களாகப் பார்ப்பதில்லை. குற்றவாளிகளாகவே பார்க்கின்றார்கள். எமது அன்புக்குரியவர்களை குறிப்பிட்ட ஒரு இடத்தில் குறிப்பிட்ட திகதியில் கையளித்தோம் என யாராவது சொல்லும்போது, பொறுப்புவாய்ந்த ஒரு அரசாங்கம் அவ்வாறு சரணடைந்தவர்களுக்கு என்ன நடைபெற்றது என்பது குறித்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பையும், கடமையையும் கொண்டுள்ளது. யாருமே சரணடையவில்லை எனக் கூறும் அவர்கள், பாரபட்சமற்ற விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் மறுக்கின்றார்கள்.
பாரபட்சமற்ற விசாரணையை முன்னெடுக்க முற்படுவது தமது இராணுவத்தினரதும், கட்டளைகளைப் பிறப்பித்த சிவில் அதிகாரிகளினதும் குற்றங்களை அம்பலப்படுத்திவிடும் என்பதால்தான் அவர்கள் கால அவகாசத்தைப் பெற்றுக்கொள்கின்றார்கள். அதனால் நாம் போர்க் குற்ற விவகாரத்தையும், ஏனைய விவகாரங்களையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணைகளுக்குப் பாரப்படுத்துவது அவசியமானதாகும். இரண்டு வருட இறுதியில் மேலும் கால அவகாசத்தைப் பெற்றுக்கொள்வதற்காக அரசாங்கம் புதிய கதைகளைச் சொல்லிக்கொண்டு வரும் என்பதை நீங்கள் நிச்சயமாக எதிர்பார்க்கலாம். இந்தக் காலப்பகுதியில் அவர்கள் வடக்கு கிழக்கில் சிங்களக் குடியேற்றங்களை முன்னெடுப்பார்கள். பௌத்த விகாரைகளை அமைப்பார்கள்.
வரப்போகும் சனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரையில், வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் பேசும் மக்களில் பெரும்பான்மையினரால் ஏற்றுக்கொள்ளப் படும் வகையிலான தீர்வு யோசனையை பகிரங்கமாக வெளிப்படுத்துபவருக்கே நாம் ஆதரவளிப்போம். அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய தீர்வுத் திட்டம் குறித்து நான் ஏற்கனவே தெரிவித்திருக்கிறேன். இரண்டு அல்லது அதற்கு மேலான மாகாணங்கள் இணையத்தக்க வகையில் ஒன்பது மாகாணங்களுக்கும் சுயாட்சி வழங்கப்பட வேண்டும். 1987 ஆம் ஆண்டு இலங்கை – இந்திய உடன்படிக்கையில் ஏற்றுக்கொள்ளப்பட்டவாறு வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அநுராதபுரத்தில் சில வருடங்களின் முன்னர் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் அனைத்து மாகாண முதலமைச்சர்களும் தமது மாகாணங்களுக்கு சுயாட்சி தேவை என்பதை சனாதிபதி முன்பாகத் தெரிவித்திருந்தார்கள் என்பதையும் அமெரிக்க குழுவினருக்கு நான் சுட்டிக்காட்டினேன்.
சனாதிபதித் தேர்தலில் கோத்தாபாய ராஜபக்ச போட்டியிடுவது தொடர்பாக வெளிவரும் செய்திகளையிட்டும் அமெரிக்க குழுவினர் கேள்வி எழுப்பியிருந்தார்கள். இதற்குப் பதிலளித்த போது, கோத்தபாயவுக்கு எதிராக அமெரிக்காவில் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதனால், அவரது அமெரிக்க பிரசாவுரிமையை மீளப்பெற்றுக்கொள்வதில் சிரமமிருக்கும் என்பதைச் சுட்டிக்காட்டினேன். அதனால், அடுத்த சனாதிபதித் தேர்தலில் அவர் போட்டியிட முடியாத நிலை ஏற்படலாம் எனவும் தெரிவித்தேன். ஏப்ரல் 21 தாக்குதல் சிங்களவர்களின் கண்களைத் திறந்துவிட்டுள்ளது. யார் உண்மையான பயங்கரவாதிகள் (ஐ.எஸ்) யார் உண்மையான விடுதலைப் போராளிகள் (தமிழ்ப் போராளிகள்) என்பதை இப்போதுதான் சிங்களவர்கள் உணர்ந்துகொண்டிருக்கின்றார்கள் என்பதையும் அமெரிக்கப் பிரதிநிதிகளுக்கு தெளிவாக விளக்கிக்கூறினேன்” எனவும் விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
இலங்கையில் தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்டது ஒரு இனப்படுகொலையே என பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளரும் இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞர் அணி செயலாளரருமாகிய சுப்பிரமணியம் சுரேன் தெரிவித்துள்ளார்.
பெண்கள் மேம்பாட்டு மையத்தில் ஒழுங்கமைப்பில் அதன் தலைவி சறோசா சிவச்சந்திரன் தலைமையில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையில் நேற்று இடம்பெற்ற நிலைமாறுகால நீதி தொடர்பான கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்
இங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஈழத் தமிழர்களாகிய நாங்கள் பல்வேறு பட்ட இன்னல்களை சந்தித்து உயிர் இழப்புகளை சந்தித்து உடமை இழப்புக்களை சந்தித்து இழக்கக் கூடாத அனைத்தையும் இழந்து மீண்டும் வந்திருக்கின்றோம் இந்த நிலையில் எங்களுடைய அரசியல் தலைமைகள் எங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை தொடர்பான விடயங்களை வெளியுலகுக்கு கொண்டு செல்வதில் முனைப்பு காட்டுகின்றனர்.
ஆனாலும் அந்த முயற்சியில் ஒரு தளம்பல் நிலை காணப்படுவதாக நான் உணர்கின்றேன் ஏனென்றால் முன்பு பேசப்பட்டது போல அல்லது முன்பு இடம் பெற்றது போல இவ்விடயங்கள் தொடர்பில் யாரும் கருத்தில் எடுப்பதில்லை அல்லது கண்டுகொள்வதில்லை இவ்வாறு நாங்கள் எமது இனப்படுகொலையை சர்வதேச சமூகத்திற்கும் எமது அடுத்த தலைமுறைக்கும் கடத்த தவறுமாக இருந்தால் அல்லது வெளிப்படுத்தத் தவறுவோமாக இருந்தால் எங்கள் இனம் ஒரு நிலைமாறுகால நீதி பொறிமுறையில் எதையும் பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஒன்று தோன்றும்.
ஆகவே அனைத்து அரசியல் தலைமைகளும் தமது மக்களினுடைய எதிர்காலத்தை நினைவில் கொண்டு எமது மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையை சர்வதேச சமூகத்திற்கு உரத்துக் கூறவேண்டும். என்றார்
பௌத்த மதத்தை பாதுகாத்து அதற்கு முன்னுரிமை வழங்க கூடிய அரசியலமைப்பு அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தி தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ள இஸ்லாமிய தனிச் சட்டங்ககளை உடனடியாக நீக்க வேண்டும் என தெரிவித்துள்ள அடிப்படைவாத கல்வியை போதிக்கும் அனைத்து கல்வி நிலையங்களையும் காலதமின்று அரசு தடைச்செய்ய வேண்டும் என தெரிவித்து 9 தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.
01. சிங்கள இராச்சியம் உருவாக்க பாரிய மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.
அனைத்துலக தீவிரவாத குழுக்கள் மற்றும் உள்நாட்டு மத அடிப்படைவாத குழுக்களின் அச்சுறுத்தலை கண்காணிக்கவும் எதிர்கொள்ளவும் சிறப்புப் பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவிற்கு அமைய, பாதுகாப்பு அமைச்சின் கீழ் இந்த சிறப்பு கண்காணிப்புப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
இந்த சிறப்புப் பிரிவிற்குப் பொறுப்பாக மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெற்றியாராச்சி நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்.படைகளின் தளபதியாக இருந்த இவர், இந்தப் புதிய பதவியை பொறுப்பேற்றுக் கொள்வதற்காக கொழும்பிற்கு மாற்றப்பட்டுள்ளார்.
சிறிலங்கா முப்படையைச் சேர்ந்த சுமார் நூற்றிற்கும் அதிகமான சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள் மதிப்பீடுகளைச் செய்வதற்கும், எதிர் நடவடிக்கைகளை எடுப்பதற்கும் நியமிக்கப்படவுள்ளதாக மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.
இந்தப் பிரிவிற்கான அரச வர்த்தமானி அறிவிப்பு விரைவில் வெளியிடப்படவுள்ளது.
இதனிடையே சிறீலங்காவில் அரச தலைவர் தேர்தல் அண்மிக்கும் நிலையில் மைத்திரிபால சிறீசேன புதிய படைப் பிரிவு ஒன்றை தனது கண்காணிப்பின் கீழ் அமைத்துவருவது ஏனைய அரசியல் கட்சிகள் மற்றும் தென்னிலங்கை அரசியல்வாதிகளிடம் சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.
சிறீலங்காவில் ரணில் – மைத்திரி மோல்கள் மேலும் உக்கிரமடைந்து வரும் நிலையில் மைத்திரிபால சிறீசேன புதிய படைப்பிரிவை அமைத்து வருகின்றார். சிறீலங்கா இராணுவத்தின் கஜபா படைப்பிரிவு கோத்தபாய ராஜபக்சாவிற்கு விசுவாசமான படைப்பிரிவு என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
வில்லியம் பிளம் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய ஒ நூல்:”நம்பிக்கைக் கொலை: இரண்டாம் உலக போருக்கு பின்னர் ஐ-அமெரிக்க இராணுவ, சிஐஏ தலையீடுகள்” – (Killing Hope: US Military and CIA Interventions Since World War II) – பாகம் – 4)
அவுஸ்திரேலியா 1973-1975: இன்னுமொரு சுதந்திரமான தேர்தல் மண் கவ்வியது
அவுஸ்திரேலியாவின் தொழிற் கட்சிப் பிரதமராக விற்லம் என்பவர் 1972இல் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டார். 23 வருடங்களில் இதுவே முதல்முறையாக அவுஸ்திரேலியாவில் தொழிற் கட்சி ஒரு அரசாங்கம் அமைத்தது. பதவிக்கு வந்த உடன் விற்லம், அக்காலத்தில் ஐ-அமெரிக்காவின் கட்டளைக்கு கீழே வியட்நாமில் நின்ற, அவுஸ்திரேலிய படைகளை திரும்ப அழைத்தார். இராணுவத்திற்கான கட்டாய ஆட்சேர்ப்பை நிறுத்தினார். இராணுவத்தில் கட்டயாமாக இணைய மறுத்ததால் சிறையிடப்பட்டவர்களை விடுதலை செய்தார். வட-வியட்நாமின் அரசை அங்கீகரித்தார். அவருடைய அரசாங்கத்திலிருந்த பல அமைச்சர்கள் வட-வியட்நாமின் மேல் ஐ-அமெரிக்கா குண்டுகள் போடுவதை கடுமையாக விமர்சித்தனர்.
அக்கட்டத்தில், அவுஸ்திரேலியாவின் வெளி-புலனாய்வுப் பிரிவான ஆசிஸ், சிஐஏ உடன் சிலிநாட்டில் அந்நாட்டின் தலைவரான் அலன்டே அரசுக்கு எதிராக வேலை செய்து கொண்டிருந்தது. இதை உடனடியான நிறுத்தும்படி விற்லம் ஆசிஸ்-க்கு உத்தரவிட்டார். இருந்தாலும் சில மாதங்களுக்கு பின்னர் அலன்டே அரசை சிஐஏ வீழ்த்திய காலத்திலும் ஆசிஸ் சிஐஏ உடன் வேலை செய்வதை நிறுத்தவில்லை. பிரதமர் விற்லம் ஆசிஸ் மற்றும் அதன் சகோதர நிறுவனமான ஆசியோ-வுக்கு எதிராக நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்தார். ஆசிஸ் இடமிருந்து சிஐஏ-க்கு அதுபற்றி பல தந்திகள் பறந்தன.
கிரேக்க நாட்டினதும் சிலி நாட்டினதும் இராணுவங்களுக்கு எதிராக கருத்துத் தெரிவித்தவர்களுக்கு, அவுஸ்திரேலியாவில் பிரஜா உரிமை கொடுக்க அவுஸ்திரேலியா மறுத்து வந்தது. விற்லம் இதையும் மாற்றினார்.
பிரதமரின் இவ்வாறான நடவடிக்கைகளால் சிஐஏ கலக்கம் அடைந்தது. அவுஸ்திரேலியாவில் அமைக்கப்பட்டிருந்த அதன் இராணுவ தளங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை உணர்ந்தது. பல ஆயிரம் பேர்களை வேலைக்கு வைத்திருந்த முக்கியமான இந்த இராணுவத் தளங்களில், ஐ-அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல்கள் சார்ந்த நேவியின் தொடர்பு வசதிகளும் இருந்தன. 60களில் அமைக்கப்பட்ட இவ்வசதிகள் மிகுந்த இராகசியமாக பேணப்பட்டன. வெளிவிவகார அமைச்சில் ஆழமாக வேலை செய்பவர்களுக்குக் கூட இதுபற்றி தெரிந்திருக்கவில்லை. இவற்றிற்கும் சிஐஏ-க்கும் உள்ள சம்பந்தம் ஒருபோதும் வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
பிரபலமான அவுஸ்திரேலிய அரசியல்வாதிகள் பற்றிய பாதகமான தகவல்களை பல வருடங்களாக ஆசியோ சிஐஏ-க்கு வழங்கி வந்திருக்கிறது என்று 1976 இல் ஒரு அவுஸ்திரேலிய கமிசனின் விசாரணை தீர்ப்பு சொன்னது. இவ்வாறு பரிமாறப்பட்ட தகவல்களில் அவர்களின் கலகக்கார குணாம்சங்களும் அவர்களின் வரம்புமீறிய சொந்த வாழ்க்கை நடத்தைகளும் அடங்கியிருந்தது.
1975 இல் விற்லம் ஆசியோ மற்றும் ஆசிஸ் நிறுவனங்களின் தலைவர்களை வெவ்வேறு கட்டத்தில் அவர்களின் பதவியிலிருந்து நீக்கினார். ஆசிஸ் நிறுவனம் கிழக்கு தீமோரில் சிஐஏ இனது மறைமுக நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருந்ததுவே அதன் தலைவரை விற்லம் நீக்கியதிற்கான காரணம். சில மாதங்களின் பின்னர் சிஐஏ இல் வேலை செய்யும் ஒருவர் அவுஸ்திரேலிய எதிர்கட்சி ஒன்றிற்கு நிதி கொடுத்ததாக செய்திகள் பத்திரிகைகளில் வெளியாகின.
இவற்றை எல்லாம் தொடர்ந்து அவுஸ்திரேலியாவின் இராணுவ புலனாய்வுத்துறை பல நடவடிக்கைகளில் இறங்கியது. கவர்னர் ஜெனரலாக அப்போது இருந்த சார் ஜோன் கேர் ஐ இராணுவ அமைச்சின் தலைவர் சந்தித்தார். இச்சந்திப்பின் பின்னர் அவர் வெளியிட்ட செய்தி: ‘இப்போது நடப்பவைகள் நாட்டின் பாதுகாப்புக்கு என்றும் இல்லாத பெரும் ஆபத்தை கொண்டு வந்திருக்கிறது’. இதுவே ஒரு மூன்றாம் உலக நாடாக இருந்தால் ஏற்கனேவே சிஐஏ அந்த அரசை பதவியிலிருந்து இறக்கியிருக்கும்.
இதைத் தொடர்ந்து வாஷிங்கடனில் இருக்கும் ஆசியோ நிறுவனத்தின் ஆபிஸ், சிஐஏ இன் வேண்டுகோளின் பேரில் அவுஸ்திரேலியாலிலுள்ள தனது தலைமைச் செயலகத்திற்கு செய்தி அனுப்பியது: ‘சிஐஏ பற்றி தொடர்ச்சியாக இப்போது சொல்லப்படுபவைகள், சிஐஏ இன் தளங்கள் பற்றிய மறைமுக திரையை கிளிப்பதாகவே முடியப் போகிறது.’ இச்செய்தி பரிமாற்றங்கள் கவர்னர் கேரையும் உள்ளடக்கியிருக்கும். இச்செய்தி வந்து சில நாட்களில் அவர் விற்லம் அரசை நீக்கி ஒரு தற்காலிக அரசை நிறுவினார். முன்னர் ஒரு போதும் நடவாத இச்செயலை பலரும் அவுஸ்திரேலிய சாசனத்தின் மெய்ப்பொருளுக்கு எதிரானது என்று விமர்சித்தார்கள்.
இதற்கு கவர்னர் கேர் உடந்தையாக இருந்தார் என்பதும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கவர்னர் கேர் சிஐஏ இன் பின்புலம் கொண்ட நிறுவனங்களில் பல வருடங்கள் நெருக்கமாக பணியாற்றி இருக்கிறார். 1950 களில் ‘கலாச்சார சுதந்திரத்திற்கான ஆவுஸ்திரேலியா சங்கம்’ என்ற அமைப்பின் இயக்குனர் குழுவில் இருந்தார். இந்நிறுவனம் சிஐஏ இன் ‘கலாச்சார சுதந்திர மாமன்றம்’ என்ற நிறுவனத்திலிருந்து கிளை விட்டது. ‘குவாட்றன்ட்’ என்ற கடும் வலதுசாரி அவுஸ்திரேலிய பத்திரிகையில் இவர் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.
சிஐஏ செய்தி பரிமாற்றங்களை தொடர்ச்சியாக பார்க்கக் கூடிய வேலையிலிருந்த கிறிஸ் பொயிஸ் என்பவர் ‘கவர்னர் கேர் விற்லமை நீக்கியது பற்றி சிஐஏ இல் கொண்டாட்டங்கள் இருந்தது’ என்று அறிவித்தார். சிஐஏ அவுஸ்திரேலிய தொழிற்சங்கங்களுக்குள் ஊடுருவி இருப்பதாகவும் அதன் தலைமைகளை கையில்போட்டு வேலைநிறுத்த போராட்டங்களை தடுத்ததாகவும் இவர் மேலும் அறிவித்தார்.
பின்னர் நடைபெற்ற தேர்தலில் விற்லம் தோல்வியடைந்தார்.
இன்னுமொரு சிஐஏ வேலையையும் இங்கு குறிப்பிட வேண்டும். சிட்னியில் இயங்கிய நூகன் ஹான்ட் வணிக வங்கி ஒரு சிஐஏ வங்கிதான். இது நூகன் என்ற ஒரு அவுஸ்திரேலியராலும் ஐ-அமெரிக்காவின் கிறீன் பெரட்டில் வியட்நாமில் பணி செய்து சிஐஏ விமான சேவையான ஏயர் அமெரிக்காவிலும் பணி செய்த ஹான்ட் என்ற அமெரிக்கராலும் சேர்ந்து 1973 இல் ஆரம்பிக்கப்பட்டது. அடுத்த சில வருடங்களில் இது அதீத வளர்ச்சி அடைந்தது. இதன் கிளைகள் சவுதி அரேபியா, ஹம்பேக், மலேசியா, தாய்லாந்து, ஹொங்கொங், சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், அர்ஜன்ரீனா, சிலி, ஹவாய், வாஷிங்டன், அனபோலிஸ், மேரிலான்ட் ஆகிய இடங்களில் திறக்கப்பட்டது. இவை சிஐஏ, கிறீன் பெரட் போன்ற நிறுவனங்களில் அனுபவம் பெற்றவர்களால் நடத்தப்பட்டது. இவ்வங்கியின் செயற்பாடுகளும் விரிவடைந்தன.
இவ்வங்கியின் செயற்பாடுகளின் சில உதாரணங்கள்: போதைமருந்து கடத்தல், சர்வதேச ஆயுத வணிகம், கிறிமினல் அமைப்புக்களுடன் உறவு, இந்தனேசியாவின் தலைவராக இருந்த சுகாட்டோவுக்காக பண மோசடி, பிலிப்பைன்ஸ்ஸின் தலைவர் மார்கோசுக்கும் அவர் மனைவிக்கும் பல சேவைகள் செய்தல், இரானின் ஷா குடும்பத்திற்கு இரானிலிருந்து நிதியை வெளியே எடுக்க உதவுதல், சிஐஏ நிதியை ஐ-அமெரிக்காவுக்கு ஆதரவான ஐரோப்பிய அரசியல் கட்சிகளுக்கு கிடைக்க செய்தல், அவுஸ்திரேயா லிபரல் கட்சிக்கு 2.4 மில்லியன் பணத்தை கிடைக்க செய்தல், கிறிமினல் அமைப்புக்களை விசாரணை செய்த அலுஸ்திரேலிய அமைச்சரை பிளக் மெயில் பண்ணியது (சுவிஸ் வங்கியில் இவர் பெயரில் கணக்கு திறந்து அதை பற்றிய செய்தியை கசிய விடுவதாக வெருட்டியது), இன்னும் பல இத்தகைய சேவைகள்.
இதையும் விட பல மர்மமான கொலைகளும் இவ்வங்கியோடு தொடர்புபடுத்தப்பட்டன. அதில் மேரிலான்டிலிருந்த முன்னாள் சிஐஏ ஆபிசர் ஒருவர். 1980 ஜனவரியில் இவ்வங்கியை ஆரம்பித்த நூகன் அவர் காரில் சுட்டுக்கொல்லப்பட்டு கிடந்தார். அதே ஆண்டு ஜூன் மாதம் வங்கியை ஆரம்பித்த இரண்டாவது நபர், ஹான்ட் காணாமல் போய்விட்டார். அத்துடன் அந்த வங்கியும் 50 மில்லியன் டாலர் கடனுடன் மூடப்பட்து.
அனைத்துலக நாடுகளுடன் இணைந்து அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் சில திட்டங்களை முன்னெடுப்பதன் ஊடாக தனது இராஜதந்திர நல்லுறவுகளை பலப்படுத்தி வருகின்றது சிறீலங்கா அரசு.
அதன் ஓரங்கமாக இலங்கையில் முதல் தடவையாக மோட்டார் கார்கள் அற்ற தினம் ஒன்றை பிரகரடனம் செய்ய கொழும்பு மாநகரசபை தீர்மானித்துள்ளது. கொழும்பிலுள்ள நெதர்லாந்து தூதரகம் இதற்கு ஒத்துழைப்பை வழங்கும்.
இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் 14ஆம் திகதி காலை 6மணி முதல் நண்பகல் 12 மணிவரை கொழும்பு – 07 சுதந்திர மாவத்தையிலிருந்து கிறீன்பாத் வரை இடம்பெறவுள்ளது.
குறித்த காலப்பகுதியில் கால்நடையாகவோ சைக்கிள்கள் மூலமாகவோ பயணிக்க முடியும் என கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
பூமியை நோக்கி இராட்சத சிறுகோள் ஒன்று 2,700 மெகா தொன் அழிவு சக்தியுடன் வந்து கொண்டிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. இது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பூமியைத் தாக்கக்கூடும் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோளிற்கு அஸ்டிரொய்ட் FT 3 என்று விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். இந்த சிறுகோள் சுமார் 1,115 அடி மற்றும் 340 மீற்றர் விட்டம் கொண்ட பாறையினால் ஆனது என்று தெரிவிக்கப்படுகின்றது. நாசாவின் கணிப்பின்படி 2019ஆண்டு முதல் 2116ஆம் ஆண்டு வரை சுமார் 165 சிறுகோள்கள் தாக்குதலை பூமி சந்திக்கவுள்ளதாகவும் வெளியிட்டுள்ளது.
அஸ்டிரொய்ட் FT 3 என்றழைக்கப்படும் இந்த சிறுகோள் ஒக்டோபர் 3ஆம் திகதி பூமியை நோக்கி அல்லது பூமியைத் தாண்டிச் செல்லும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாசா விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இந்தக் கோள் பூமிக்கு அருகில் கடந்து சென்றால் பூமிக்கு ஆபத்து குறைவாகும். ஆனால் வரும் பாதை மாறி பூமிக்கு நேரே வந்தால் முடிவுகள் பேரழிவு தரும் என்பதில் சந்தேகம் இல்லை என்று நாசா அறிவித்துள்ளது.
திருகோணமலையில் 5 தமிழ் மாணவர்கள் அரச படையினராலேயே சுட்டுக்கொல்லப்பட்டனர். அதில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லை. படுகொலையை நிரூபிக்கும் தகுந்த சாட்சிகள் – ஆதாரங்கள் இல்லை என்று கூறி சந்தேகநபர்கள் அனைவரையும் எப்படி விடுவிக்க முடியும்?. என்று கேள்வியெழுப்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், இந்தப் படுகொலையுடன் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். கொலைக் குற்றவாளிகள் தப்பிக்கவே முடியாது எனவும் தெரிவித்தார்.படையினர் நீதிமன்றால் விடுவிக்கப்பட்ட நிலையில் சம்பந்தர் இவ்வாறு கூறுவது வேடிக்கையானதாக பார்க்கப்படுகிறது.
திருகோணமலையில் தமிழ் மாணவர்கள் 5 பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த அரச படையினர் மீது தகுந்த ஆதாரங்கள் இல்லை எனக் கூறி அவர்கள் அனைவரையும் திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
இந்தக் படுகொலையை அரசும், இராணுவத்தினரும், பொலிஸாரும் ஆரம்பத்தில் மறுத்திருந்தாலும், பின்னர் அவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகள் என்றும், அரச படைகள் மீது இவர்கள் கைக்குண்டு கொண்டு தாக்க முற்பட்ட வேளையில் கைக்குண்டு வெடித்து அவர்கள் உயிரிழந்தனர் என்றும் கூறினர்.
ஆனால், இறந்த மாணவர்களின் தலைகள் உட்பட உடல்களில் துப்பாக்கிச்சூடுகள் காணப்படுகின்றன எனவும், அவர்கள் மிகக் கிட்டிய தூரத்தில் இருந்து சுட்டுக் கொல்லப்பட்டனர் எனவும் சட்ட மருத்துவ பரிசோதனையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. இந்த விடயத்தைப் புகைப்பட ஆதாரத்துடன் அறிக்கையிட்ட ‘உதயன்’ – ‘சுடர் ஒளி’ திருகோணமலை செய்தியாளர் எஸ்.சுகிர்தராஜனும் சில நாட்களின் பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
வழக்கு விசாரணையை எதிர்கொண்டிருந்த 12 விசேட அதிரடிப் படையினரும், ஒரு பொலிஸ் அதிகாரியும் என அரச படையைச் சேர்ந்த 13 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி திருகோணமலையில் 5 மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் அன்றிரவு 7 மணியளவில் திருகோணமலை கடற்கரையில் – காந்தி சிலைக்கு அருகில் விளையாடிக் கொண்டிருக்கும்போது அங்கு வந்த அரச படையினரால் கைதுசெய்யப்பட்டுப் பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மாணவர்கள் அனைவரும் ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சையை முடித்துவிட்டு பல்கலைக்கழக நுழைவு அனுமதியை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களாவர். இந்தச் சம்பவத்தில் மேலும் 2 மாணவர்கள் காயமடைந்தனர்.
மனோகரன் ரஜீகர், யோகராஜா ஹேமச்சந்திரா, லோகிதராஜா ரோகன், தங்கதுரை சிவானந்தா மற்றும் சண்முகராஜா கஜேந்திரன் ஆகியோரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தனர்.
அதேவேளை, படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர் மற்றும் உறவுகள் ஆகியோருக்கும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதால் அவர்கள் நாட்டைவிட்டுத் தப்பி வெளிநாட்டில் புகலிடம் கோரினர். எனினும், மாணவர்களின் படுகொலை தொடர்பில் அவர்களின் பெற்றோர் மற்றும் உறவுகள் நீதி கோரி நீண்ட சட்டப் போராட்டம் நடத்தினர். சுட்டுக்கொல்லப்பட்ட மாணவர்களில் ஒருவரான ரஜீகரின் தந்தை மருததுவர் மனோகரன் ஐ.நா. மனித உரிமைகள் சபையிலும் சாட்சியமளித்திருந்தார்.
மாணவர்களின் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் 12 விசேட அதிரடிப் படையினரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் 2013ஆம் ஆண்டு ஜுலை 5ஆம் திகதி கைதுசெய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்ட அனைவரும் 2013ஆம் ஆண்டு ஒக்டோபர் 14ஆம் திகதி திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இலங்கையின் நீதிப்பொறிமுறை குறித்து சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்த விவகாரமாக இந்தப் படுகொலை வழக்கு விளங்கியது. சர்வதேச அமைப்புகள் இந்தப் படுகொலையைப் பகிரங்கமாகக் கண்டித்திருந்தன.
திருகோணமலை நீதிவான் நீதிமன்ற பிரதான நீதிவான் எம். எச். மொஹமட் ஹம்சா முன்னிலையில் கடந்த புதன்கிழமை இந்த வழக்கு கட்டளைக்காக வந்தது.
“வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 13 எதிரிகள் மீதான குற்றச்சாட்டுக்கள் மன்று திருப்தியடையும் வகையில் சான்றாதாரங்கள் முன்வைக்கப்படவில்லை. அதனால் குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவை 153 மற்றும் 154ஆம் பிரிவுகளின் கீழ் எதிரிகள் மீதான குற்றச்சாட்டுக்கள் சான்றாதாரங்களுடன் முன்வைக்கப்படவில்லை. அதனால் 13 எதிரிகளும் அனைத்துக் குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்கப்படுகின்றனர்” என்று பிரதான நீதிவான் எம். எச். மொஹமட் ஹம்சா கட்டளை வழங்கினார்.
படுகொலையுடன் சம்பந்தப்பட்ட அரச படையினர் 13 பேரும் விடுவிக்கப்பட்டமை நீதியை எதிர்பார்த்த மாணவர்களின் பெற்றோர் மற்றும் உறவுகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இது குறித்து அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் வினவியபோது,
“2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 02 ஆம் திகதி திருகோணமலையில் 5 தமிழ் மாணவர்கள் அரச படையினராலேயே சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் மாற்றுக்கருத்துக்களுக்கு இடமில்லை. 5 மாணவர்களும் துப்பாக்கியால் மிகக்கிட்டிய தூரத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டனர் என்ற சட்ட மருத்துவ பரிசோதனையின் அறிக்கையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த 2 மாணவர்கள் நேரடிச் சாட்சிகளாக உள்ளனர்.
இவர்கள் இருவரும் உயிர் அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். 6 சாட்சிகள் உயிர் அச்சுறுத்தல் காரணமாக நீதிமன்றில் சாட்சியமளிக்கவில்லை. இந்தநிலையில், படுகொலையை நிரூபிக்கும் தகுந்த சாட்சிகள் – ஆதாரங்கள் இல்லை என்று கூறி சந்தேகநபர்களை எப்படி விடுவிக்க முடியும்?. இந்தப் படுகொலையுடன் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். படுகொலைக் குற்றவாளிகள் தப்பிக்கவே முடியாது. நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு தொடர்பில் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மிகக்காட்டமான அறிக்கையொன்றை விரைவில் நான் வெளியிடவுள்ளேன்” – என்று அவர் தெரிவித்தார்.