Home Blog Page 2690

மட்டக்களப்பில் பதட்டம்; இந்து மயானத்தில் இஸ்லாமிய பயங்கரவாதியின் உடலைப் கள்ளத்தனமாக புதைத்ததால் விபரீதம்

மட்டக்களப்பு சீயோன்தேவாலயத்தில் மனித வெடிகுண்டுதாக்குதல் நடத்திய காத்தான்குடியை சேர்ந்த முகம துநாசர் முகமது ஆசாத் என்பவரின் தலை உள்ளிட்ட உடல்பாகங்களை புதைக்கும்படி நீதிமன்றம்உத்தரவிட்டிருந்தது.

எனினும், குறிப்பிட்ட இடமெதையும் நீதிமன்றம்தெரிவிக்கவில்லை. இந்தநிலையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சில தரப்புக்கள் இணைந்து கள்வியம்காடு இந்துமயானத்தில் மனிதஎச்சங்கள் புதைக்கப்பட்டுள்ளது. இதையடுத்துபொதுமக்கள்கொந்தளித்துஎதிர்ப்புபோராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள்.

இந்தநிலையில், சற்றுமுன்னர்செய்தியாளர்களிடம்பேசியமாநகரசபைமுதல்வர், தம்மிடம்புதைப்பதற்கானஅனுமதியை கோரியபோதிலும்,  நீதிமன்றஉத்தரவு இணைக்கப்படாததால் அந்தகோரிக்கையை நிராகரித்ததாக தெரிவித்தார்.

எனினும், தமதுசபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில்மனிதஎச்சம் புதைக்கப்பட்டதைதான் இன்றுதான்அறிந்ததாகவும்குறிப்பிட்டுள்ளார்.இதுதொடர்பில் சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடிய பின்னரே அடுத்தகட்டத்தை தீர்மானிக்கமுடியும் என்றும்தெரிவித்துள்ளார்.மாநகரசபை ஆளுமைக்குட்பட்ட கள்ளியங்காடு இந்துமயாணத்தில் மாநகரசபை முதல்வரின் அனுமதி இன்றி அத்துமீறி இஷ்லாமிய பயங்கரவாதியின் உடல்பாகம் புதைக்கப்பட்டது மாநகரசபையை அவமதிக்கும் செயலாகும்.

சர்வதேசம் பற்றி கவலையில்லை; தமிழர் பகுதியில் படைமுகாம்கள் அகற்றப்படாது – சிறி.படைத்துறை தளபதி

இராணுவத் தளபதியாக எனது நியமனம் குறித்து சர்வதேச நாடுகளின் கருத்துக்களை கவனத்தில் கொள்ளவில்லை எனத் தெரிவித்த இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனெரல் சவேந்திர சில்வா, வடக்கு கிழக்கில் இருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்படாது. இப்போதுவரை முகாம்களை அகற்றும் எந்த தேவையும் வரவில்லை எனவும் அவர் கூறினார்.

இலங்கையில் இம்மாத இறுதியில் இடம்பெறவுள்ள பாதுகாப்பு கருத்தரங்கு குறித்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனெரல் சவேந்திர சில்வாவிடம்  ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் தெரிவிக்கையில் இவற்றைக் கூறினார்.

அதேபோல் வடக்கின் அரசியல்வாதிகள் என்னைப்பற்றி முன்வைக்கும் கருத்துக்கள் அவர்களின் தனிப்பட்ட அரசியல் நிலைப்பாடாகும். அது குறித்து எனக்கு எந்த கருத்துக்களையும் முன்வைக்க முடியாது. நான் ஒரு இனத்துக்கு மட்டுமே இராணுவத் தளபதி அல்ல.

இந்த நாட்டின் சிங்கள மக்களை  போல தமிழர் முஸ்லிம்கள் என அனைவரும் வாழ்கின்றனர். அவர்கள் அனைவரும் இலங்கை மக்கள். நான் இந்த நாட்டையும், நட்டு மக்களையும் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். எனது கடமையும் அதுவேயாகும். அத்துடன் நான் மாத்தளையில் பிறந்து வளந்தவன்.

அங்கு சிங்கள மக்கள் மட்டுமல்ல, மூவின மக்களும் வசிக்கின்றனர். நான் அவர்களுடன் வளர்ந்த காரணத்தினால் எனக்கு அனைத்து மக்களின் மனங்களையும் அறிந்துகொள்ள முடியும். நான் தமிழ் மக்களின் பாதுகாப்பையும் கட்டாய கடமையாக கருதியே செயற்படுகின்றேன்.

என்மீதான யுத்த குற்றச்சாட்டு என்பது நிருபணமாகாத கூற்றுக்கள் என்றே நினைகின்றேன். போர்க் குற்றச்சாட்டுக்கள் குறித்து எந்த ஆதாரங்களும் இல்லை. மன்னார் மனித புதைகுழியையும் போர்க்குற்றம் என்றே கூறினார்கள். ஆனால் ஆய்வுகளின் பின்னர் அது வேறு ஒரு காரணி என்பது உறுதியாகியது. அதேபோல் தான் இந்த போர்க்குற்றச்சாட்டுக்களும் மாற்று வடிவம் பெறலாம் என்றும் இதன்போது கூறினார்.

அடாத்தான விகாரை அமைப்புக்கு எதிரான வழக்கு விசாரணை

முல்லைத்தீவு மாவட்டத்தின் பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தை சுவீகரித்து அங்கு பௌத்த விகாரை அமைத்தமை தொடர்பான இரண்டாவது வழக்கு விசாரணைகள் இன்று வவுனியா மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகிறது.

மேதானந்த தேரர் என்ற பௌத்த துறவியால் பாரிய புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டு பிள்ளையார் ஆலயத்தில் கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் திகதி வழிபாடுகளுக்கு சென்ற மக்களோடு முரண்பட்ட நிலையில் குறித்த இடத்திலேயே அமைதிக்கு பங்கம் ஏற்பட்டதாக தெரிவித்து முல்லைத்தீவு பொலிசாரால் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந் நிலையில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில்  குறித்த பிரதேசம் தொல்பொருள் திணைக்களத்துக்கு இன்னமும் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்படவில்லை எனவும் இந்நிலையில் ஆறாம் மாதம் ஆறாம் திகதி இரு தரப்பினரும் எந்தவித மத வழிபாடுகளுக்கும் இடையூறு இல்லாமல் வழிபாடுகளை மேற்கொள்ளுமாறு அதை மீறுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் இந்த தீர்ப்புக்கு எதிராக பௌத்த துறவி மற்றும் பௌத்த துறவி சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணிகள் உள்ளிட்டோரால் வவுனியா மேல் நீதிமன்றில் குறித்த விடயம் தொடர்பாக மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் (10.06.2019) அன்று வவுனியா மேல் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

அந்தவகையில் இன்றைய தினம் (26.08.2019) இரண்டாவது வழக்கு விசாரணைகள் வவுனியா மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகிறது.

செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் சார்பில் சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் ,ஆலய நிர்வாக சபையினர் கலந்துகொண்டுள்ளனர்.

‘சித்திரவதை – ஜம்மு-காஷ்மீரில் இந்திய அரசின் கட்டுப்பாட்டு கருவி’ – வெளிவரும் கொடூரங்கள்

“இந்த சித்திரவதை காரணமாக நாய்கூவு வுக்கு ஏற்பட்ட காயங்களை குணப்படுத்த  ஐந்து அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டியிருந்தது.
நாய்கூவின் ஆண்குறியைச் சுற்றி ஒரு துணி போர்த்தப்பட்டு தீ வைக்கப்பட்டது.”

இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் கைதிகள் துஷ்பிரயோகம் மற்றும் சித்திரவதைக்கு உள்படுத்தப்படுகின்றனர் என மனிதவுரிமை அமைப்புகள் கூறுகின்றன.

இதில் நீரில் அமுக்கி மூச்சுத்திணறச் செய்தல், தூங்கவிடாது தடுத்தல் மற்றும் பாலியல் ரீதியான சித்திரவதைகள் போன்றவை அடங்கும் என்று இரண்டு உரிமை அமைப்புகளின் தமது அறிக்கைகளில் சுட்டிக்காட்டியுள்ளன.

திங்களன்று வெளியிடப்பட்ட 560 பக்க அறிக்கையில், காஷ்மீரிகளுக்கு எதிரான சித்திரவதை நுட்பங்களாகப் பயன்படுத்தப்படும் தனிமைச் சிறைவாசம், தூங்கவிடாது தடுத்தல், மற்றும் பாலியல் பலாத்காரம் மற்றும் உள்ளிட்ட பாலியல் ரீதியான சித்திரவதைகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

இவற்றுடன் மின்சாரம் பாய்ச்சுதல் , கட்டித் தொங்கவிட்டல் , கைதிகளின் தலையை நீரில் மூழ்கடிப்பது (இது சில நேரங்களில் மிளகாய் தூளுடன் கலக்கப்படுகிறது) போன்ற மற்ற சித்திரவதை முறைகளும் அங்கு இடம்பெறுவதாக காணாமல் போனோரின் பெற்றோர் சங்கம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் சிவில் சமூகத்தின் கூட்டணி போன்ற அமைப்புகள் தெரிவிக்கின்றன.

‘சித்திரவதை போது கைதிகள் நிர்வாணமாக நிர்வாணமாக்கப்பட்டு , மரக் குச்சிகளால் தாக்கப்பட்டனர். உடற்பகுதிகள் சூடாக்கப்பட்ட இரும்பு கம்பிகள், ஹீட்டர்கள் அல்லது சிகரெட் துண்டுகளால் சுடப்பட் டன.’

“டிராலைச் சேர்ந்த முசாஃபர் அகமது மிர்சா மற்றும் மன்சூர் அஹ்மத் நாய்கூ ஆகியோரின் மலக்குடல் வழியாக ஒரு தடியைச் செருகி சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டனர். இது அவர்களின் உள் உறுப்புகளுக்கு பல சிதைவுகளை ஏற்படுத்தியது”
என்று அறிக்கையில் ஆவணப்படுத்தப்பட்ட 432 சாட்சியங்களில் ஒன்று கூறுகிறது.

“நுரையீரல் சிதைக்கப்பட்டதால் சில நாட்களுக்குப் பிறகு மிர்சா மருத்துவமனையில் இறந்துவிட்டார்.’

.”இந்த சித்திரவதை காரணமாக நாய்கூவு வுக்கு ஏற்பட்ட காயங்களை குணப்படுத்த க்கு ஐந்து அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டியிருந்தது.
நாய்கூவின் ஆண்குறியைச் சுற்றி ஒரு துணி போர்த்தப்பட்டு தீ வைக்கப்பட்டது.”

“சித்திரவதை – இந்திய மாநிலமான ஜம்மு-காஷ்மீரில் இந்திய அரசின் கட்டுப்பாட்டு கருவி”

என பெயரிடப்பட்ட இந்த அறிக்கையில்,
சித்திரவதைக்கு ஆளானவர்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் அப்பாவி பொதுமக்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதிக்கான பயணத்தில் பேதமின்றி அணிதிரளுங்கள் -யாழ், கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள் கூட்டாகக் அறைகூவல்

தமிழர் தாயகத்தின் இருவேறு இடங்களில் எதிர்வரும் 30ஆம் திகதி வலிந்து காணா மலாக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்படவுள்ள பாரிய கவனயீர்ப்பு போராட்டத்திற்கு முழுமையான ஆதரவினை வழங்கவுள்ளதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும், கிழக்கு பல்கலைக்கழக மாணவர் கலைப்பீட மாணவர் ஒன்றியமும் அறிவித்துள்ளன.

அத்துடன் வலிந்து காணாம லாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் நீதிக்கான போராட்டத்திற்கு பல்கலைக்கழக மாணவர்கள் முழுமையாக பங்கேற்கவுள்ள தைப்போன்ற ஏனைய அனைத்து தரப்பினரும் பேதங்களை மறந்து அணிதிரளுமாறும் அறைகூவல் விடுத்துள்ளன. எதிர்வரும் 30ஆம் திகதி சர்வதேச காணாமலாக்கப்பட்ட தினம் தாயகத்தில் உணர்வெழிச்சியுடன் நினைவு கூரப்படவுள்ளது. இதன்போது, வடக்கிலும் கிழக்கிலும் இறுதிப்போரின்போது படைகளிடத்தில் சரணடைந்தும், ஒப்படைத்தும், காணாமலாக்கப்பட்டவர்கள், மற்றும் அசாதா ரண சூழலில் பல்வேறு தருணங்களில் காணாமலாக்கப்பட்டவர்கள் என அனைவருக்கும் என்ன நடந்தது என்பதற்கான பதிலை சிறீலங்கா அரசாங்கம் கூறவேண்டும். இதிலிருந்து விலகி நிற்கவே முடியாது.

பொறுப்புக்கூறலிலிருந்து தான் தப்பித்துக்கொள்வதற்காக சிங்களப்பேரினவாத சிறிலங்கா அரசு தொடர்ந்தும் தனது ஏமாற்று வித்தைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் சர்வதேசம் உடனடியாக இவ்விடயத்தில் தலையீடு செய்து காணாமலாக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை விரைந்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவதற்கு வலிந்து காணாமலாக்கப் பட்டவர்களின் உறவினர்கள் தீர்மானித்துள்ளனர். இதற்காக, தாயகத்தில் வட புலத்தில் வவுனியா பன்றிக்கெய்தகுளத்தில் இருந்து உறவுகளை படையினரிடத்தில் கையளித்த ஓமந்தை சோதனைச்சாவடி இருந்த இடம்வரையும் பேரணியாக செல்லவுள்ளனர். அதேபோன்று கிழக்கில் கல்முனையில் தரவைப்பிள்ளார் ஆலயத்திலிருந்து போராட்ட பேரணியை ஆரம்பித்து கல்முனை வடக்கு தமிழ்ப்பிரிவு பிரதேச செயலாளர் செயலகம் வரையில் செல்லவுள்ளனர்.

இந்நிலையில்,யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் வவுனியாவில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்று தமது ஒத்துழைப்பினை வழங்கவுள்ளதோடு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் கல்முனை போராட்டத்தில் பங்கேற்கவுள்ளனர். இதுகுறித்த உத்தியோகப்பூர்வ அறிவிப்பினை அடுத்துவரும் சில தினங்களில் வெளியிடவுள்ளதாகவும் இரு மாணவர் ஒன்றியங் களும் அறிவித்துள்ளன.

மேலும் நீதிகோரும் சமூகத்தின் நியாயங்களை புரிந்து அனைவரும் பாகுபாடின்றியும் இடையூறுகளை ஏற்படுத்தாதும் ஒன்றிணைந்து சர்வதேசத்தின் கவனத்தினை ஈர்த்து காணாமலாக் கப்பட்டோருக்கான விடயத்தில் உரிய தீர்வுக்காக முன்னகர்த்தலை இத்தருணத்தில் முன்னெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகவுள்ளதாகவும் அம்மாணவர் ஒன்றியங்கள் சுட்டிக் காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கோத்தபாயவை ஜனாதிபதியாக்குவதை தமிழ்மக்கள் விரும்பவில்லை – துரைராஜசிங்கம்

நாட்டு மக்கள் குற்றஞ்சாட்டும் ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக வருகின்றார் என்பது மிகவும் வியப்புக்குரிய விடயமாகும். கோத்தபாய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவதை தமிழ்மக்கள் ஏற்க மறுக்கின்றார்கள் என தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் சம்பந்தமாக அவரிடம்  கேட்டபோதே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதித் தேர்தல் இன்னும் அறிவிக்கப்படவில்லை. பொதுஜனப் பெரமுன தன்னுடைய வேட்பாளரை அறிவித்திருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் முதலில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் எமது கட்சி சார்ந்து உத்தியோகபூர்வமான பேச்சுவார்த்தைகள் என எதுவும் இடம்பெறவில்லை.

சாதாரண சந்திப்புக்கள் இடம்பெறுகின்ற போது இது தொடர்பாக அவ்வப்போது உத்தியோகபூர்வமற்ற விதத்தில் பேச்சுக்கள் இடம்பெறுகின்றன.

அவற்றை ஊடகங்கள் பேச்சுக்களாகக் கருதுகின்றனவே தவிர கட்சியின் நிலைப்பாட்டில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இன்னும் எவ்வித பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை.

கோத்தபாய ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதன் பின்னர் வடக்கு, கிழக்கு பகுதிகளில் பட்டாசு கொளுத்தப்பட்டது என்கின்ற விடயம்  அவர்களால் திட்டமிடப்பட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.

தமிழ்மக்கள் பட்டாசு கொளுத்த விரும்பவில்லை. தமிழர்களை வைத்து பட்டாசு கொளுத்தினார்கள். கோத்தபாய ராஜபக்ஷ என்றாளே தமிழ்மக்கள் ஏற்க மறுக்கின்றார்கள்.

இது தொடர்பில் தமிழ்ப் பகுதிகளில் இருந்து வந்த அபிப்பிராயங்களைப் பார்க்கின்ற போது தமிழ் மக்கள் விமர்சனத்தோடு வைத்திருக்கின்ற சில அரசியல்வாதிகள் தவிர ஏனைய அரசியல்வாதிகள் எல்லோரும் இதற்கு எதிரான நிலைப்பாட்டிலேயே இருக்கின்றார்கள் எனத் தெரிவித்தார்.

சூடானில் இனக் குழுக்களிடையே மோதல்; 37 பேர் பலி 200 பேருக்கு மேல் காயம்

சூடானின் கிழக்கு பிராந்தியத்தில் பழங்குடியின மக்களிடையே ஏற்பட்ட கடும் மோதலில் 37 பேர் உயிரிழந்துள்ளதாகச் சர்வதேச ஊடங்களுக்கு தகவல்களை வெளியிட்டுள்ளது.

சூடானின் கிழக்கு பிராந்தியமான ரெட் சீ மாநிலத்தில் பானி அமீர் மற்றும் நூபா ஆகிய பழங்குடியின மக்களிடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த மோதல் கடந்த புதன்கிழமையில் இருந்து மேலும் அதிகரித்தது

போர்ட் சூடான் பகுதியில் பயங்கர ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதில் 35 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 200 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த அனைவரும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சம்பவ இடத்தில் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மோதல் சம்பவத்தை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக நிறுவப்பட்ட இறையாண்மை சபை இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது. மோதலுக்கான காரணம் தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாநில ஆளுநர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

கிழக்கு மாகாணக் கடலில் எண்ணை ஆய்வு – பிரான்ஸ், நோர்வே நிறுவனங்களுக்கு அனுமதி

சிறீலங்காவில் தமிழர் தாயகப் பிரதேசமான கிழக்கு மாகாணக் கடலில் எண்ணை மற்றும் எரிவாயு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக பிரான்ஸ் மற்றும் நோர்வே நிறுவனங்களுக்கு சிறீலங்கா அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பான உடன்படிக்கை ஒன்று நேற்று (27) கைச்சாத்திடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரான்ஸ் நாட்டின் டோட்டல் மற்றும் நோர்வே நாட்டின் ஈகுய்னோர் ஆகிய நி-றுவங்களுடனேயே இந்த உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், இது இரண்டு வருட உடன்படிக்கை எனவும் சிறீலங்காவின் எரிபொருள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

டோட்டல் நிறுவனம் ஏற்கனவே 50,000 சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாகவும், நோர்வே நிறுவனம் புதிதாக இணைந்துள்ளதாகவும் அது 30 விகிதமான பங்குகளைக் கொண்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட பெல் ஜியோஸ்பேஸ் நிறுவனம் மன்னர் கடற்பகுதியில் காந்த மற்றும் புவியீர்ப்பு தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டுவருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

புலனாய்வு அமைப்பை வலுப்படுத்த சவேந்திர சில்வா திட்டம் – அச்சத்தில் தமிழ் மக்கள்

சிறீலங்கா படையினரின் புலனாய்வு அமைப்பை பலப்படுத்த வேண்டும் என சிறீலங்காவின் புதிய இராணுவத்தளபதியாக பதவியேற்றுள்ள லெப். ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இராணுவப் புலானாய்வுத்துறையின் சில பிரிவுகளில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். அதன் மூலம் இராணுவத்தை பலப்படுத்த முடியும். இதுவே எனது எதிர்கால நடவடிக்கை.

புலனாய்வுத் தகவல்கள் துல்லியமாக இருந்தால் தேவைப்படும் இடத்தில் படையி-னரை விரைவாக நகர்த்த முடியும்.

நாட்டின் நலன் கருதியே அரச தலைவர் எனது நியமனத்தை மேற்கொண்டுள்ளார். இராணுவத்தை பலப்படுத்துவதும், போரில் காயமடைந்த மற்றும் இறந்த படையி-னரின் குடும்பங்களுக்கு உதவுவதுமே எனது பிரதான கடமை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சவேந்திர சில்வாவின் இராணுவத்தின் புலனாய்வுக் கட்டமைப்பை பலப்படுத்தும் செயலானது அவர் மேற்கொண்ட போர்க்குற்றங்களுக்கு எதிராக நீதி கேட்டுப் போராடும் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதுடன், மேலும் மனித உரிமை மீறல்கள் சிறீலங்காவில் இடம்பெறலாம் என்ற அச்சத்தையும் தோற்றுவித்துள்ளது.

அமேசான் மழைக்காடுகளை பாதுகாப்பதற்காக பிரபல ஹாலிவுட் நடிகர் நிதி உதவி

அமேசான் மழைக்காடுகளை பாதுகாப்பதற்காக பிரபல ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ 50 லட்சம் டாலர்களை உதவியாக வழங்கியுள்ளார்.

ஹாலிவுட் நடிகர்களான லியோனார்டோ டிகாப்ரியோ, லாரன் பவல் ஜாப்ஸ், பிரையன் ஷெத் இணைந்து ‘எர்த் அலையன்ஸ்’ என்ற பெயரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பை கடந்த மாதம் தொடங்கினர். இந்த அமைப்பு அமேசானை பாதுகாக்கும் வகையில் உதவிகளை செய்ய அமேசான் வன நிதியம் என்ற பெயரில் நிதி திரட்டி வருகிறது. இதன் மூலம் திரட்டப்படும் நிதி உதவி தொகை அமேசான் காடுகளைப் பாதுகாக்க தீவிரமாக பணியாற்றிவரும் 5 உள்ளூர் அமைப்புகளுக்கு போய் சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முதல்கட்டமாக 50 லட்சம் டாலரை நன்கொடையாக அளித்து நிதி திரட்டும் பணியை டிகாப்பிரியோ தொடங்கி வைத்துள்ளார்.

இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், சர்வதேச அளவில் காணப்படும் பருவநிலை மாற்றங்களுக்கான தீர்வாக அமேசான் மழைக்காடுகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அமேசான் இல்லாமல் நாம், புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்த முடியாது என்று குறிப்பிட்டுள்ள அவர், அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

rainforests amazan அமேசான் மழைக்காடுகளை பாதுகாப்பதற்காக பிரபல ஹாலிவுட் நடிகர் நிதி உதவிபூமியின் நுரையீரல் என்று அழைக்கப்படும் அமேசான் காடுகளில் முன் எப்போதும் இல்லாத வகையில் ஏராளமான இடங்களில் தீப்பற்றி எரிகின்றன. தீயை அணைக்கும் பணியில் பிரேசில் படைகளுடன் பிற உலகநாடுகளும் உதவி செய்து வருகின்றன.