புலனாய்வு அமைப்பை வலுப்படுத்த சவேந்திர சில்வா திட்டம் – அச்சத்தில் தமிழ் மக்கள்

சிறீலங்கா படையினரின் புலனாய்வு அமைப்பை பலப்படுத்த வேண்டும் என சிறீலங்காவின் புதிய இராணுவத்தளபதியாக பதவியேற்றுள்ள லெப். ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இராணுவப் புலானாய்வுத்துறையின் சில பிரிவுகளில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். அதன் மூலம் இராணுவத்தை பலப்படுத்த முடியும். இதுவே எனது எதிர்கால நடவடிக்கை.

புலனாய்வுத் தகவல்கள் துல்லியமாக இருந்தால் தேவைப்படும் இடத்தில் படையி-னரை விரைவாக நகர்த்த முடியும்.

நாட்டின் நலன் கருதியே அரச தலைவர் எனது நியமனத்தை மேற்கொண்டுள்ளார். இராணுவத்தை பலப்படுத்துவதும், போரில் காயமடைந்த மற்றும் இறந்த படையி-னரின் குடும்பங்களுக்கு உதவுவதுமே எனது பிரதான கடமை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சவேந்திர சில்வாவின் இராணுவத்தின் புலனாய்வுக் கட்டமைப்பை பலப்படுத்தும் செயலானது அவர் மேற்கொண்ட போர்க்குற்றங்களுக்கு எதிராக நீதி கேட்டுப் போராடும் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதுடன், மேலும் மனித உரிமை மீறல்கள் சிறீலங்காவில் இடம்பெறலாம் என்ற அச்சத்தையும் தோற்றுவித்துள்ளது.