முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களில் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் மகாவலி அபிவிருத்தி என்ற பெயரால் மேற்கொள்ளப்பட்டு வரும் நில ஆக்கிரமிப்பை நிறுத்துமாறு கோரி முல்லைத்தீவில் பாதிக்கப்பட்ட மக்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கொக்குத்தொடுவாய், கொக்கிளாய், கருநாட்டுகேணி பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் இன்று (28.08) காலை 10 மணியளவில் ஒன்றுகூடி ஆரம்பித்த கவனயீர்ப்புப் வேரணி முல்லைத்தீவு நகர் வழியாக முல்லைத்தீவு மாவட்ட செயலகம் வரை சென்றது.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை சென்றடைந்த பேரணியை மாவட்ட செயலகத்திற்கு செல்வதற்கு மாவட்ட செயலக வாயில் மூடப்பட்டு தடை விதிக்கப்பட்டது. குறித்த பகுதியில் பொலிசாரும் வரவழைக்கப்பட்ட நிலையில் மக்கள் தங்களுடைய பிரச்சினைகள் தொடர்பான மகஜரை கையளிப்பதற்காக மாவட்ட அரசாங்க அதிபரை குறித்த இடத்திற்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்திருந்தனர்.
இந்நிலையில் குறித்த இடத்திற்கு வருகை தந்த மாவட்ட செயலாளர் மற்றும் மேலதிக மாவட்டச் செயலாளர் ஆகியோரிடம் குறித்த பகுதி மக்கள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை வாசித்து முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரனிடம் கையளித்தனர்.
போராட்டத்தின் போது எமது பூர்வீக நிலம் எமக்கு வேண்டும். எமது மண்ணை ஆக்கிரமிப்பதை நிறுத்து. திட்டமிட்ட நில ஆக்கிரமிப்பை நிறுத்து, அரசே எமது பூர்வீக நிலத்தை எமக்குத் தா. இலங்கை அரசே எமது மண்ணில் மகாவலியை நிறுத்து. உட்பட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை தாங்கியவாறும், வேண்டும் வேண்டும் எமது நிலம் எமக்கு வேண்டும். எமது கடல் வளம் நமக்கு வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பியவாறும் சுமார் 300 மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
தமிழர் பிரதேசங்களில் நில ஆக்கிரமிப்பை மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் முக்கியமான ஒன்றாக இந்த மகாவலி அபிவிருத்தி என்னும் திட்டம் சிறிலங்கா அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இது 1977ஆம் ஆண்டு காமினி திஸநாயக்க மகாவலி அமைச்சராக இருந்த காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டம் 30 வருட காலத்திட்டமாக நடைமுறைப்படுத்தப்படவிருந்தது. ஆனால் காமினி திஸநாயக்கவோ 6 ஆண்டுகளிலேயே இதனை முடித்திருந்தார்.
அவரின் பின்னர் வந்த எந்த அரசாங்கம் என்றாலும் இந்த மகாவலி அபிவிருத்தி என்ற பிரகடனத்தை மறக்கவில்லை.
அன்று முதல் இன்று வரை இந்த திட்டத்தின் மூலம் தமிழர் தாயகப் பகுதிகள் அபகரிக்கப்படுகின்றன. முக்கியமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லையோரக் கிராமங்களிலேயே இந்த ஆக்கிரமிப்பு அதிகமாக மேற்கொள்ளப்படுகின்றது. இதற்கான காரணம் இந்த எல்லையோரக் கிராமங்களின் எல்லைப் பகுதியில் சிங்கள மக்கள் வசித்து வருகின்றனர். இதனால் முல்லைத்தீவு மாவட்டத்தையும் முழுமையாக சிங்களவர்களின் பிரதேசமாக மாற்றும் முயற்சியிலேயே சிறிலங்கா அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது.
இதை தமிழ்க் கட்சிகள், தமிழ் அரசியல்வாதிகள் தட்டிக்கேட்டு தீர்வு எடுக்கா விட்டால், இன்னும் சில ஆண்டுகளில் முல்லைத்தீவு சிங்கள மாவட்டமாக மாறும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
புளுட்டோ என்பது ஒரு கிரகம் தான் என்று நாசா அமைப்பின் தலைமை நிர்வாகியான ஜிம் பிரைடன்ஸ்டின் மீண்டும் உறுதி செய்துள்ளார்.
தனது கருத்தில் தான் உறுதியாக இருப்பதாக அவர் கூறியுள்ளார். ஒக்லஹோமாவில் நடைபெற்ற முதல் ரோபோட்டிக் நிகழ்வில் அவர் பேசிய போது இதைக் குறிப்பிட்டார்.
”எனது கருத்தின்படி பு@ட்டோ என்பது ஒரு கோள். நான் அந்தக் கருத்தில் உறுதியாக இருக்கின்றேன். ஏனெனில், எனது ஆய்விற்குட்பட்டு நான் கண்டறிந்த விடயம் இது” என்று கூறினார்.
கடந்த 1930ஆம் ஆண்டு புளுட்டோ கண்டறியப்பட்டது. இதைக் கண்டறிந்தவர் அமெரிக்க வானியல் ஆராய்ச்சியாளர் கிளைட் டோம்பக். அந்த நேரத்தில், சூரியக் குடும்பத்தில் 9ஆவது கிரகமாக புளுட்டோ கருதப்பட்டது.
சூரியக் குடும்பத்தின் வெளிவட்டப் பாதையில் குய்ப்பர் வளையத்தில் புளுட்டோ அமைந்திருந்தது. ஆனால், அதே போன்று தோற்றமுடைய வேறு அம்சங்களும் அப்பகுதியில் கண்டறியப்பட்டதால், புளுட்டோ ஒரு கோள் அல்ல என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. இந்த சர்ச்சை தொடர்ந்து நீடித்து வந்த நிலையில், தற்போது நாசா தலைவர் அது ஒரு கோள் தான் என்று மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
இலங்கை்கான கனேடிய தூதுவர் டேவிட் மெக்மிலன் மற்றும் தூதுவராலயத்தின் அரசியல் விவகாரங்களுக்கான முதன்மைச் செயலாளர் வலேரி ஒலேற் ஆகியோருடன் ஒட்டவாவிலிருந்து வருகை தந்துள்ள சமாதானத்திற்கான நீண்டகால செயற்பாடுகளுக்கான பணியகத்தின் அதிகாரிகள் நேற்று (27.08) வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி பத்மநாதன் சத்தியலிங்கத்தை வவுனியாவில் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இச்சந்திப்பின் போது போருக்குப் பின்னர் வன்னிப் பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மீள் குடியேற்றம், காணி ஆக்கிரமிப்பு மற்றும் திட்டமிடப்பட்ட குடியேற்றச் செயற்பாடுகள், அண்மையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலின் பின்னரான நிலைமைகள் கனடா மற்றும் புலம்பெயர் தமிழர்களால் தாயக பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் என்பன தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. வடக்கு மாகாண சுகாதார சேவைகள் மேம்பாடு தொடர்பாகவும் குறிப்பாக கனடா நாட்டினால் மேற்கொள்ளப்படக்கூடிய அனுசரணை தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
அண்மையில் நெதர்லாந்து நாட்டு நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட சுகாதாரத் திட்டங்கள் தொடர்பாகவும், மாங்குளத்தில் அமைக்கப்படும் விசேட தேவைக்குட்பட்டவர்களிற்கான மருத்துவப் புனர்வாழ்வு மற்றும் உளநல பிரிவுகளில் பணிக்கமர்த்தப்பட இருக்கின்ற ஊழியர்களிற்கான விசேட பயிற்சிகளில் கனடா நாட்டினால் நல்கக்கூடிய அனுசரணை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
சர்வதேச அளவில் பொதுவான பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளது. எனினும் இலங்கைக்கு 21/4 தாக்குதல்களின் பின்னர் தற்போதும் அவ்வாறான அச்சுறுத்தல் உள்ளதா என்பதை இலங்கையின் விசாரணையாளர்கள் கண்டறிந்து வெளிப்படுத்த வேண்டும்.
அவ்வாறு தமக்கு அச்சுறுத்தல் உள்ளதென அவர்கள் தெரிவித்தால் அவர்களுக்கு நாம் உதவி செய்யத் தயாராக இருக்கின்றோம். உதவி கோரினால் எம்மால் முடியுமான அளவு அச்சுறுத்தலை முறியடிக்க உதவி செய்வோம் என சர்வதேச பொலிஸ் அமைப்பின் செயலாளர் நாயகம் ஜேர்ஜன் ஸ்டொக் தெரிவித்திருக்கின்றார்.
21/4 தொடர் தற்கொலைத் தாக்குதலைத் தொடர்ந்து இன்டர்போலின் உடன் நடவடிக்கைக் குழு இலங்கையில் தங்கியிருந்து, குறித்த பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான விசாரணை உட்பட நடவடிக்கைகள் எடுப்பது பற்றி ஆராய சர்வதேச பொலிஸ் அமைப்பின் செயலாளர் இலங்கைக்கான விஜயம் ஒன்றை நேற்று (27.08)மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில் இங்கு வந்த அவர், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பாதுகாப்பு உயர் மட்ட தலைவர்களை சந்தித்த பின்னர் மாலை கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் ஊடகவியலாளர்களை சந்தித்தார்.
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் இன்று (புதன்கிழமை) காந்திபூங்கா முன்பாக முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்தில் செங்கலடி-பதுளை வீதியில் வசிக்கும் மக்கள் கலந்துகொண்டு, தமது பாரம்பரிய காணிகளை அபகரிக்கும் முயற்சிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டினர்.
குறிப்பாக அபிவிருத்தி எனும் பெயரிலும் பாதுகாப்பு என்ற போர்வையிலும் பெருமளவான காணிகள் அபகரிக்கப்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
‘வனஜீவராசிகள் திணைக்களமே எமது காணிகளை அபகரிக்காதே’, ‘அரச திணைக்களங்களே எமது காணிகளை அபரிக்காதே’, ‘இராணுவமே எமது காணிகளைவிட்டு வெளியேறு’ போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு, கல்குடா, புல்லுமலை, வாழைச்சேனை, வாகரை போன்ற இடங்களில் அரசபடையினர், அரசியல்வாதிகள், இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்ட காணிகளை மீள மக்களிடம் வழங்கவேண்டும் எனவும் போராட்டக்காரர்களால் வலியுறுத்தப்பட்டது.
படையினர் கையகப்படுத்தியுள்ள காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த பேரணி இன்று (புதன்கிழமை) காலை கிளிநொச்சி பிள்ளையார் ஆலயம் முன்பாக ஆரம்பமாகி மாவட்ட செயலகம் வரை சென்றது.இந்த பேரணியில் கலந்துகொண்ட மக்கள் பிரதிநிதிகள், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து, அவரிடம் நாடளாவிய ரீதியில் காணிகள் விடுவிப்பது தொடர்பாக பெற்றுக்கொள்ளப்பட்ட கையொப்பம் அடங்கிய மகஜரை கையளித்தனர்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கரைச்சி பிரதேச சபை உறுப்பினர், படையினர் பல ஏக்கர் காணிகளை விடுவிக்கவில்லை எனவும் அவற்றை விடுவித்து மக்களின் வாழ்வாதாரத்திற்கு வழிவிட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இதேவேளை காணி விடுவிப்பை வலியுறுத்தி, வடக்கு கிழக்கின் பல இடங்களில் இன்று போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட கள்ளியங்காட்டில் புதைக்கப்பட்டுள்ள தற்கொலைதாரியின் எச்சங்களை அங்கிருந்து அகற்றுவதற்கான சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்வது என மட்டக்களப்பு மாநகரசபையினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகரசபையின் விசேட அமர்வு இன்று மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்றது.
இந்த அமர்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன்ääமாநகரசபை உறுப்பினர்கள்ääமாநகர ஆணையாளர் க.சித்திரவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது மாநகர முதல்வரின் தலைமையுரையுடன் விசேட அமர்வு ஆரம்பமானது.குறித்த குண்டுதாரியின் எச்சங்களை மாநகரசபையின் எந்த அனுமதியும் பெறப்படாமல் மாநகரசபையின் அதிகாரத்திற்குட்பட்ட இந்து மயானத்தில் புதைத்ததற்கு கண்டனம் தெரிவித்த மாநகர முதல்வர் குறித்த மனித எச்சங்களை அங்கிருந்து அகற்றுவதற்கு பொலிஸ் நிலையத்தில் எழுத்துமூல முறைப்பாட்டினை செய்து அதன் ஊடாக நீதிமன்ற கட்டளையினைப்பெற்று குறித்த எச்சங்களை அகற்றுவது தொடர்பான பிரேரணையை நிறைவேற்றுவதற்கு உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்தார்.
இதன்பொது கள்ளியங்காட்டில் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரியின் தலையுட்பட எச்சங்கள் புதைக்கப்பட்டதற்கு மாநகரசபை உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்தனர்.
அத்துடன் மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் மீது பொலிஸார் நடாத்திய தாக்குதல்கள் குறித்தும் உறுப்பினர்கள் சிலர் உரையாற்றினர்.
இதன்போது மாநகரசபை உறுப்பினர்களில் பலர் குறித்த தற்கொலைதாரியின் எச்சங்களை இந்துமயானத்தில் புதைத்ததற்கு எதிரான கருத்துகளை முன்வைத்ததுடன் நேற்றை ஆர்ப்பாட்டம் தொடர்பிலும் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
இதேநேரம் இந்த அமர்வின்போது மாநகரசபை உறுப்பினர் வே.தவராஜா உரையாற்ற முற்பட்டபோது சுயேட்சை குழுவின் மாநகரசபை உறுப்பினர் திலிப்குமார் குறுக்கிட்டதை தொடர்ந்து மாநகரசபை உறுப்பினர்களிடையே கடுமையான வாய்தர்க்கம் ஏற்பட்டது.
அதனையடுத்து மாநகரசபை முதல்வர் மற்றும் உறுப்பினர்களின் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த ந.திலிப்குமார் ஈபிடிபி கட்சியை சேர்ந்த சிவானந்தராஜா,தமிழர் விடுதலைக்கூட்டணியை சேர்ந்த வ.குபேரன் ஆகியோர் சபையினை விட்டு வெளியேறிச்சென்றனர்.
அதனைத்தொடர்ந்து மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக மாநகரசபையின் அனுமதியில்லாது இந்து மயானத்தில் புதைக்கப்பட்ட முஸ்லிம் பயங்கரவாதியின் உடல் எச்சங்களை சட்ட நடவடிக்கை ஊடாக மீண்டும் அதனை தோண்டியெடுத்து வேறு இடங்களில் புதைப்பதற்கான சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாநகர முதல்வர் இதன்போது தீர்மானத்தினை தெரிவித்தார்.
பிரித்தானியாவின் நாடாளுமன்ற அமர்வுகளை இடைநிறுத்துமாறு பிரித்தானியா அரசு மாகாராணியிடம் இன்று (28) கோரிக்கை விடுத்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகிச் செல்வதற்கு சில வாரங்கள் உள்ளதுடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் செப்ரம்பர் மாதம் நாடாளுமன்றத்திற்கு சமூகமளிக்கவுள்ள நிலையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 14 ஆம் நாள் பிரித்தானியா மகாரணியின் உரை இடம்பெறவுள்ளதாகவும், அது மிகவும் ஆச்சரியமுள்ள நிகழ்ச்சி நிரலைக் கொண்டிருக்கும் எனவும் பிரித்தானியா பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
ஜோன்சனின் இந்த முயற்சியானது ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா பிரிந்து செல்வதை தடுப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை முறியடிக்கும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டுள்ளதாக கருதப்படுகின்றது.
இதனிடையே, அரசின் இந்த முடிவு தவறானது எனவும், இதனை நடைமுறைப்படுத்தினால் தாம் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவருவதுடன் அரசையும் பதவியில் இருந்து நீக்க முயற்சிகளை மேற்கொள்வோம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் டொமினிக் கிறீவ் தெரிவித்துள்ளார்.
ஆனால் நாட்டின் நலன்கருதியே தான் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், பிரக்சிட் இற்கு முன்னர் நாம் எமது நாட்டின் நலன் தொடர்பில் சிந்திக்க வேண்டும் எனவும் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் பொருண்மியப் போர் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்கப் போர்க்கப்பல்கள் சீனாவின் துறைமுக நகரமான கிங்டாவோ வுக்கு விஜயம் மேற்கொள்ள அமெரிக்கா விடுத்திருந்த கோரிக்கையை சீனா நிராகரித்துள்ளது.
சீனாவின் துறைமுக நகரமான கிங்டாவோ வுக்கு கடைசியாக பயணம் மேற்கொண்ட அமெரிக்க கடற்படை கப்பல் பென்ஃபோல்ட் ஆகும். இது 2016 இல் இடம்பெற்றது .
முன்னராக கொங் கொங் துறைமுகத்திற்கு அமெரிக்க போர்க் கப்பல்கால் பயணம் மேற்கொள்ள விடுத்திருந்த கோரிக்கையை
சீன நிராகரித்திருந்த்தது.
அமெரிக்காவின் கோரிக்கை மறுக்கப்பட்டதற்கான காரணத்தை அறிய பெய்ஜிங்கிற்கு உத்தியோகபூர்வ கடிதம் அனுப்பப்படும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கொழும்பு அரசியலை தொடர்ந்தும் கலக்கிக் கொண்டிருக்கும் விவகாரம் ஐ.தே.க. வின் சனாதிபதி வேட்பாளர் யார் என்பதுதான். இதில் ஒரு முக்கிய திருப்பமாக, “நான்தான் வேட்பாளர்” என அறிவித்துக்கொண்டிருக்கும் சஜித் பிரேமதாச தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களைச் சந்தித்தது கடந்த வாரம் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. நள்ளிரவையும் தாண்டி அதிகாலை 1.00 மணி வரையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு கள நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பதுதான் இந்த வாரக் கேள்வி. அதற்குப் பதிலைத் தேடுவதற்கு முன்னதாக, இந்தச் சந்திப்பின் பின்னணி குறித்து பார்ப்போம்.
ஐ.தே.க. தலைமையிலான ‘மெகா’ கூட்டணியை அமைப்பது குறித்து ராஜிதவின் இல்லத்தில் நடைபெற்ற கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் முடிவின்றி முடிந்தது குறித்து கடந்த வாரம் செய்தி வெளிவந்திருந்தது.
யாப்பு குறித்து முழுமையான உடன்பாடு ஏற்படாதததுதான் இதற்குக் காரணம். அதற்கு முன் முக்கியமான மற்றொரு சந்திப்பு இடம்பெற்றது. கட்சியில் தனக்கு ஆதரவானவர்களுடன் மட்டும் பேசிப் பலனில்லை என்பதால் தன்னை எதிர்ப்பவர்களுடனும் பேசிப் பார்ப்போம் என்ற முடிவில் காய் நகர்த்தியிருக்கிறார் சஜித். அதன் மூலம் கட்சியின் முழு ஆதரவையும் தனக்குச் சார்பாகக் கொண்டுவந்துவிட முடியும் என்பது அவரது எதிர்பார்ப்பு.
முதல் நகர்வாக ரணில் விக்கிரம சிங்கவின் தீவிர ஆதரவாளரான ராஜித சேனாரட்ணவையும், சம்பிக்க ரணவக்கவையும் சந்தித்துப் பேசியிருக்கிறார் சஜித். ‘மெகா’ கூட்டணியின் சக்திவாய்ந்த பதவியான செயலாளர் பதவிக்கு ராஜிதவையே நியமிப்பதற்குத்தான் ரணில் முயற்சிக்கிறார்.
அந்தளவுக்கு அவர் ரணிலுக்கு நம்பிக்கையானவர். ஆனால், அந்தப் பதவி தனக்குத் தரப்பட வேண்டும் என சஜித் போர்க்கொடி தூக்கியிருப்பது பழைய செய்தி. இந்தப் பின்னணியில் ராஜிதவுடனான சஜித்தின் சந்திப்பு சுவாரஸ்யமானது. சஜித்தின் அடுத்த நகர்வுக்கும் அதுதான் காரணமாக அமைந்தது என கொழும்பு அரசியல் வட்டாரங்கள் சொல்கின்றன.
இந்தச் சந்திப்பின்போது, தன்னையே சனாதிபதி வேட்பாளராக கட்சி தெரிவு செய்ய வேண்டும் என ராஜிதவிடம் வலியுறுத்தினார் சஜித். இதற்கு ராஜித மிகவும் நிதானமாகப் பதில் கொடுத்திருக்கின்றார். “உங்களுடைய தந்தை ரணசிங்க பிரேமதாச கடுமையாகப் போராடித்தான் சனாதிபதிப் பதவிக்கு வந்தவர். அப்படித்தான் நீங்களும் போராட வேண்டும். அத்துடன் உங்களுக்கு இன்னும் காலம் இருக்கின்றது. நீங்கள் இப்போது அவசரப்படத் தேவையில்லை” என அறிவுரை கூறிய ராஜித மற்றொரு விடயத்தையும் சொல்லியிருக்கின்றார்.
“சனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற ஐ.தே.க.வுக்கு சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவு அவசியம். உங்களுக்கு அந்த ஆதரவு இல்லை. உங்களுடன் இருப்பவர்களில் மங்கள சமரவீர மட்டும்தான் சிறுபான்மையினருடைய பிரச்சினைக்கு தீர்வைக் கூறுகின்றார். மற்றவர்கள் அப்படியல்ல.
நீங்களும் அவர்களுக்கான ஒரு தீர்வைக் கூறவில்லை. இதனால், சிறுபான்மையினக் கட்சிகளின் ஆதரவை உங்களால் பெறமுடியாது. அதனால், இந்தத் தேர்தலில் நீங்கள் வெற்றிபெற முடியாது” என சஜித்துக்கு நிலைமைகளை எடுத்துக்கூறிய ராஜித, “அதனால், இந்த முயற்சியிலிருந்து நீங்கள் ஒதுங்கிக்கொண்டு ரணிலுக்கு ஆதரவளியுங்கள்” என ஆலோசனையும் கூறியிருக்கின்றார்.
நிதானமாக அனைத்தையும் அவதானித்த சஜித், “சரிதான். நான் பார்க்கிறேன்” என அங்கிருந்து கிளம்பிவிட்டார். போனதுடன் சும்மா நிற்கவில்லை. உடனடியாகவே மங்கள சமரவீரவைத் தொடர்பு கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்கு ஏற்பாடு செய்தார் என உள்ளக வட்டாரங்கள் சொல்கின்றன. இது குறித்து அமைச்சர் மனோ கணேசனுடனும் மங்கள ஆலோசனை நடத்தியிருக்கின்றார். “நல்ல விஷயம். மனம் விட்டு பேசுங்கள்” என இதற்கு மனோ பதிலளித்திருக்கின்றார். ஐ.தே.க.வின் சார்பில் சஜித் களமிறங்குவதைத்தான் மனோவும் விரும்புவதாகத் தெரிகின்றது.
உடனடியாகவே சந்திப்புக்கான ஏற்பாடு மங்களவினால் செய்யப்பட்டது. சம்பந்தனை சந்தித்து “தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு ஆறு மாதத்தில் தீர்வு தருவேன்” என்றும் சொல்லிவிட்டார் சஜித். ஆனால், பிரச்சினை என்ன? தீர்வு என்ன? என்பதற்கான விளக்கத்தை அவரால் சொல்ல முடியவில்லை. மக்களின் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் சஜித் வருவதற்கு முன்னர் மங்களதான் கூட்டமைப்பின் மூவர் குழுவுடன் விரிவாகப் பேசியிருக்கின்றார். சம்பந்தனுடன், மாவை சேனாதிராஜாவும், சுமந்திரனும் இந்தப் பேச்சக்களில் கலந்துகொண்டிருந்தார்கள்.
எதிர்த் தரப்பான பொதுஜன பெரமுனையின் சார்பில் களமிறங்கும் கோத்தபாய ராஜபக்சவுக்கு சிங்கள மக்கள் மத்தியில் அதிகளவு ஆதரவிருப்பதாகச் சுட்டிக்காட்டிய மங்கள, சஜித்தை களமிறக்கினால் மட்டும்தான் தம்மால் அதனை ஈடுகொடுக்கக்கூடியதாக இருக்கும் எனவும் குறிப்பிட்டிருக்கின்றார்.
நாடு முழுவதிலும் தாம் நடத்திய துல்லியமான ஆய்வுகளின் மூலமாக இந்தத் தகவல்கள் தம்மால் பெறப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். ரணிலைக் களமிறக்கினால் தோல்வி தவிர்க்க முடியாதது என்பதால்தான், சஜித்தை களமிறக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்குத்தான் வந்திருப்பதாகவும் மங்கள விளக்கிக் கூறியிருக்கின்றார். அதனால், கூட்டமைப்பும் சஜித்தை ஆதரிக்க முன்வர வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இரவு 10.00 மணியளவில் மங்களவின் இல்லத்துக்கு வந்த சஜித், அதிகாலை 1.00 மணி வரையில் கூட்டமைப்பின் மும்மூர்த்திக ளுடனும் பேசியிருக்கின்றார்.
“தேர்தல் குறித்த அறிவிப்பு முதலில் வரட்டும், நீங்களும் உள்களுடைய வேட்பாளர் யார் என்பதை அறிவியுங்கள். உங்களிடமுள்ள தீர்வு என்ன என்பதையும் சொல்லுங்கள். நாங்களும் எங்கள் பாராளுமன்றக் குழுவையும், ஒருங்கிணைப்புக் குழுவையும் கூட்டி எங்கள் முடிவை அறிவிக்கின்றோம்” என்ற வகையில் சம்பந்தன் பதிலளித்து சந்திப்பை முடித்துக்கொண்டார்.
ஐ.தே.க. சஜித்தை களமிறக்கினால் கூட்டமைப்பு ஜே.வி.பி. வேட்பாளரை ஆதரிக்கும் என கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவர் சொல்லியிருக்கும் பின்னணியில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றிருப்பதும் கவனிக்கத்தக்கது.
2015 சனாதிபதித் தேர்தலிலும் இதேபோன்ற ஒரு பிரச்சினை உருவானது. ரணில் தான் களமிறங்க முற்பட்டபோது பொது வேட்பாளராக மைத்திரியை களமிறக்கினால்தான் மகிந்தவை தோற்கடிக்க முடியும் என சந்திரிகா முன்வந்தார். இதனை ரணில் திட்டவட்டமாக நிராகரித்தார்.
ரணிலை சமாளிக்க சம்பந்தனையே சந்திரிகா பயன்படுத்தினார். சம்பந்தனை வீடு தேடிச் சென்று சந்தித்த சந்திரிகா இது குறித்து பேசினார். அதனையடுத்தே ரணிலைச் சந்தித்த சம்பந்தன், “நீங்கள் தோல்வியடைந்து மீண்டும் ராஜபக்ச ஆட்சி வருவதற்கு வழிவகுக்கப்போகின்றீர்களா?” என கேட்டதையடுத்தே ரணில் ஒதுங்கிக்கொண்டார். இது பழைய செய்தி.
இப்போதும் அதேபாணியில் சம்பந்தனின் ஆதரவைப் பெற்று அதன் மூலமாக ரணிலை ஒதுங்கிகொள்ளச் செய்ய முடியும் என மங்கள முற்பட்டிருப்பதாகவே தெரிகின்றது. மங்களவைப் பொறுத்தவரையில், இது போன்ற நெருக்கடியன நேரங்களில் இராஜதந்திரமாக காய் நகர்த்துவதில் வல்லவர். 2015 ஆட்சி மாற்றத்திலும் அவரது பங்களிப்பு கணிசமானதாக இருந்தது.
இப்போது சஜித்துக்கு ஆதரவாக அவர் களமிறங்கிய போதே ரணீலின் முகாம் ஆட்டங்காணத் தொடங்கியது. மாத்தறையில் சஜித்துக்கு ஆதரவான கூட்டத்தை வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக நடத்தியவரும் மங்களதான். அங்கு உரையாற்றிய அவர், “ரணிலின் ஆசீர்வாதத்துடன் சஜித்தான் சனாதிபதி வேட்பாளராக களமிறங்குவார்” என பெரும் ஆரவாரத்துக்கு மத்தியில் சொல்லியிருக்கின்றார்.
ஆனால், இந்தத் தருணம் வரையில் விட்டுக்கொடுப்பதற்கு ரணில் தயாராகவில்லை. அதன்மூலம் தனது அரசியல் எதிர்காலம் சூனியமாகிவிடும் என அவர் அஞ்சுகின்றார். இதனால், ஐ.தே.க. ஆதரவாளர்கள் குழம்பிப்போயுள்ளனர். அடுத்த வாரத்துக்குள் நெருக்கடி முடிவுக்கு வந்தாக வேண்டும். ஆனால், என்ன முடிவு என்பதுதான் யாருக்கும் தெரியவில்லை!