Home Blog Page 2448

யாழ் மாவட்டத்தில் 300 கிலோ கேரளத்து கஞ்சா கைப்பற்றப்பட்டது

இன்று (02) காலை யாழ் மாவட்டத்தின் புங்குடுதீவு பகுதியில் 300 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறீலங்கா கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியாவில் இருந்து மீன்பிடிப் படகு ஒன்றில் மறைத்து வைத்து கடத்தப்பட்ட போதே இது கண்டறியப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் படகில் வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்இ மேலும் இருவர் சங்குப்பிட்டி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

அழிந்துவரும் தமிழ்ப் பாரம்பரியக் கலைக்கு உயிரூட்டிய ஈழத்து கலைஞர்கள் சிறப்பு வீடியோ.

கலைநிலாக் கலாமன்றம் மற்றும் சுதந்திர ஆற்றுகை குழுவினரும் இணைந்து மண்வாசனை எனும் கலைநிகழ்வு.ஊடகவியலாளர் நவரத்தினம் கபிலநாத் அவர்களின் 22 முகங்கள் நூல் வெளியீட்டு விழாவில் அரக்கேறியது.

இலங்கைக்கு வருபவர்கள் குறித்து விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழு நியமனம்

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் மூலம் தினமும் இலங்கைக்குள் நுழையும் அனைத்து நபர்களையும் விசாரித்து அறிக்கை அளிக்க மூன்று பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் சுகாதார அமைச்சின் பேரிடர் மேலாண்மை பிரிவின் வைத்தியர், விமான நிலையம் மற்றும் விமான சேவைகளின் பிரதிநிதி மற்றும் குடிவரவு, குடியகழ்வு துறையின் பிரதிநிதி ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸின் பரவல் காரணமாக உலக சுகாதார ஸ்தானம் பிரகடனப்படுத்தியுள்ள அவசரகால நிலையை கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க தெரிவித்தார்.

இதன்மூலம் தற்போதைய நிலைமையைக் கண்காணிப்பதில் ஒரு சுமுகமான செயற்பாட்டை உறுதி செய்வதற்காக அனைத்து சேவைகளையும் ஒன்றிணைக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

வவுனியாவில் பதற்றத்தை ஏற்படுத்திய இராணுவத்தின் செயற்பாடு! அச்சத்துடன் நடமாடும் மக்கள்!

வவுனியாவில் திடீரென புதிய சோதனைச் சாவடி அமைத்து இராணுவத்தினர் சோதனை நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குருமன்காடு சந்தியில் இராணுவத்தினர் சோதனைச் சாவடி அமைத்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியா – மன்னார் பிரதான வீதியூடாக பயணிக்கும் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் நிறுத்தி சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் வாகன இலக்கங்கள், வாகன சாரதிகளின் அனுமதி பத்திரம் என்பவற்றையும் பதிவு செய்யும் நடவடிக்கையும் முன்னெடுக்கப் படுகின்றது.

திடீரென அமைக்கப்பட்ட சோதனை சாவடியால் குருமன்காட்டு சந்தியில் சற்று நேரம் பதட்டமான நிலை காணப்படுவதுடன் புதிய சோதனைச் சாவடியால் மக்கள் அச்சத்துடன் பயணத்தினை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் ஊடகவியலாளர்கள் சோதனை நடவடிக்கையினை புகைப்படம் மற்றும் காணொளி எடுப்பதற்கு இராணுவத்தினர் தடை விதித்ததுடன் எடுக்கப்பட்ட காணொளிகளை அழிக்குமாறும் உத்தரவு பிறப்பித்திருந்தனர் எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

மன்னாரில் தடம் பதித்த யாழ் காளைகள்! அனைத்து பிரிவுகளிலும் வெற்றி

மன்னார், மாந்தை இரட்டை மாட்டு வண்டி சவாரித் திடலில் இடம்பெற்ற மாபெரும் சவாரிப் போட்டியில் நான்கு பிரிவுகளிலும் யாழ். போட்டியாளர்களின் காளைகள் வெற்றிபெற்றுள்ளன.

இந்த மாட்டு வண்டி சவாரி நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

மன்னார் மாவட்ட மாட்டு வண்டி சவாரி சங்கத்தின் அனுசரணையுடன் இடம்பெற்ற குறித்த இரட்டை மாட்டு வண்டிச் சவாரிப் போட்டியில் 51 ஜோடி காளைகள் பங்குபற்றின. இந்தப் போட்டி A,B,C,D என நான்கு பிரிவுகளாக இடம்பெற்றது.

குறித்த 4 பிரிவுகளிலும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த போட்டியாளர்களின் காளைகள் வெற்றி பெற்றுள்ளன. போட்டியில் வெற்றிபெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு ஏற்பாட்டுக் குழுவினரால் பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன.

பொதுத் தேர்தலுக்கு முன்னர் ஐ.தே.கட்சியில் குடும்பிச்சண்டை!

பொதுத் தேர்தலுக்கு முன்னர் ஐ.தே.கட்சியில் குடும்பிச்சண்டை தொடங்கிவிட்டது. ஆனால் பொதுத் தேர்தலை வெற்றிபெறுவதாக அவர்கள் தெரிவிப்பது கேலிக்கையானது என ஜீவராசிகள் இராஜங்க அமைச்சர் விமல்வீர திஸ்ஸாநாயக்க தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் மாவடிப்பள்ளியில் சனிக்கிழமை (1) மதியம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போது தேர்தல் காலம் ஆரம்பித்துள்ள நிலையில் ஐக்கிய தேசிய கட்சியில் தலைமைத்துவ போட்டி ஏற்பட்டுள்ளது.

அந்த கட்சியில் தலைவர் தான் முழு அதிகாரம் படைத்தவர். ஆனால் கட்சியில் ஜனநாயகம் இல்லை. பெயருக்கு ஜனநாயகம் மட்டுமே உள்ளது. இந்த கட்சியில் தான்தோன்றித்தனமாக தலைவர் மாத்திரமே முடிவுகளை எடுக்கின்றார். இதனால் எமக்கு தேர்தலில் வெற்றி பெறுவது இலகுவாக இருக்கும் என கூறினார்.

ஊடகவியலாளர் நவரத்தினம் கபிலநாத் அவர்களின் 22 முகங்கள் நூல் வெளியீட்டு விழா.

வவுனியா மாவட்ட ஊடகவியலாளர் நவரத்தினம் கபில்நாத் அவர்களின் 22 முகங்கள் நேர்காணல் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா தேசிய கல்வியற் கல்லூரியின் ஓய்வு பெற்ற பீடாதிபதி க.சுவர்ணராஜா தலைமையில் நேற்று 1.2 வவுனியா குடியிருப்பு கலாசார மண்டபத்தில் இடம் பெற்றது.

வவுனியா மாவட்டத்தில் பல்வேறு துறைசார்ந்த 22 கலைஞர்களை பறைசாற்றும் நேர்காணல் தொகுப்புக்கள் அடங்கிய நூல் வெளியிடப்பட்டிருந்தது.
தமிழ்த் தாய் வாழ்த்துடன் ஆரம்பமாகிய குறித்த நிகழ்வில் தமிழர்களின் பாரம்பரிய கலைகளை உயிர்த்துடிப்புடன் வாழவைக்கும் கலைநிலாக் கலாமன்றம் மற்றும் சுதந்திர ஆற்றுகை குழுவினரும் இணைந்து மண்வாசனை எனும் கலைநிகழ்வும் அரங்கேற்றப்பட்டது.

நூல் வெளியீட்டின் முதல் பிரதியினை நூலாசிரியர் நவரத்தினம் கபிலநாத்தின் தந்தை செ. நவரத்தினத்திற்கு பிரதம விருந்தினர்களால் வழங்கி வெளியிடப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக ஆய்வாளரும் மூத்த ஊடகவியலாளருமான அருணா செல்லத்துரையும் சிறப்பு விருந்தினர்களாக வீரகேசரி பத்திரிகையின் ஆசிரியர் எஸ்.ஸ்ரீகஜனும் கௌரவ விருந்தினர்களாக வர்த்தகர் ச. இராசலிங்கம் மற்றும் மாவீரன் பண்டாரவன்னியன் மறுமலர்ச்சி மன்ற செயலாளர் செ.சபாநாதன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
வவுனியா வடக்கு ஆசிரிய வள நிலைய முகாமையாளர் சு.ஜெயச்சந்திரன் ஆய்வுரையினையும் வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் பத்மாவதி ஜெயச்சந்திரன் அறிமுகவுரையினையும் நிகழ்த்தியிருந்தனர்.

இந்வ நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், உள்ளிட்ட பல பலபிரமுகர்களும் கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், படைப்பாளிகள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

DSC 2426 2 ஊடகவியலாளர் நவரத்தினம் கபிலநாத் அவர்களின் 22 முகங்கள் நூல் வெளியீட்டு விழா.

DSC 2427 2 ஊடகவியலாளர் நவரத்தினம் கபிலநாத் அவர்களின் 22 முகங்கள் நூல் வெளியீட்டு விழா.

DSC 2433 2 ஊடகவியலாளர் நவரத்தினம் கபிலநாத் அவர்களின் 22 முகங்கள் நூல் வெளியீட்டு விழா.

DSC 2441 ஊடகவியலாளர் நவரத்தினம் கபிலநாத் அவர்களின் 22 முகங்கள் நூல் வெளியீட்டு விழா.

DSC 2504 1 1 ஊடகவியலாளர் நவரத்தினம் கபிலநாத் அவர்களின் 22 முகங்கள் நூல் வெளியீட்டு விழா.

DSC 2509 1 ஊடகவியலாளர் நவரத்தினம் கபிலநாத் அவர்களின் 22 முகங்கள் நூல் வெளியீட்டு விழா.

DSC 2520 1 ஊடகவியலாளர் நவரத்தினம் கபிலநாத் அவர்களின் 22 முகங்கள் நூல் வெளியீட்டு விழா.

DSC 2525 1 ஊடகவியலாளர் நவரத்தினம் கபிலநாத் அவர்களின் 22 முகங்கள் நூல் வெளியீட்டு விழா.

DSC 2529 ஊடகவியலாளர் நவரத்தினம் கபிலநாத் அவர்களின் 22 முகங்கள் நூல் வெளியீட்டு விழா.

DSC 2542 1 ஊடகவியலாளர் நவரத்தினம் கபிலநாத் அவர்களின் 22 முகங்கள் நூல் வெளியீட்டு விழா.

DSC 2553 1 ஊடகவியலாளர் நவரத்தினம் கபிலநாத் அவர்களின் 22 முகங்கள் நூல் வெளியீட்டு விழா.

DSC 2567 1 ஊடகவியலாளர் நவரத்தினம் கபிலநாத் அவர்களின் 22 முகங்கள் நூல் வெளியீட்டு விழா.

திடீர்ப் பொதுத் தேர்தல் இல்லை! ஆகஸ்ட் வரை பொறுத்திருக்க ஆலோசனை

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வரையில், எந்த வொரு தேர்தலையும் நடத்துவதில்லை என்ற தீர்மானத்துக்கு, தற்போதைய அரசு வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிறுவுனர் பஸில் ராஜபக்ஷ, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

அரசு என்ற ரீதியில், பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் உள்வீட்டுப் பிரச்சினைகள் பல உள்ளமையால், அவற்றுக்குத் தீர்வு கண்ட பின்னரே, தேர்தலை நோக்கி நகர்வது சாத்தியமானதென்றும், ரணிலிடம் பஸில் தெரிவித்திருக்கிறார் எனக் கூறப்படுகிறது.

மேலும் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு, இவ்வருடம் ஓகஸ்ட் மாதம் வரையில் கால அவகாசம் இருப்பதால், அதுவரையில் நாடாளுமன்றத்தைக் கலைத்து அவசரப்பட்டு தேர்தலை நோக்கி நகராமலிருப்பதற்கே அரசு ஆலாலோசித்து வருவதாகவும் அறிய முடிந்தது.

வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் விஷேட படிவங்கள்

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வரும் பயணிகள் அனைவருக்கும் நேற்று முன் தினம் முதல் விசேட படிவம் வழங்கப்பட்டு வருவதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவியுள்ளதைத் தொடர்ந்து உலக சுகாதார நிறுவனம் அவசரநிலையை அறிவித்துள்ளமை காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு சில தகவல்களைப் பெறும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை இந்தப் படிவம், சீனாவிலிருந்து வருவோருக்கு மாத்திரம் வழங்கப்பட்டு பூரணப்படுத்தப் பட்ட நிலையில், நேற்றுமுன்தினம் முதல் வெளிநாட்டிலிருந்து வரும் அனைத்துப் பயணிகளுக்கும் அதனை விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அனில் ஜயசிங்க தெரிவித்தார்.

சுதந்திர தின நிகழ்வுகளைப் புறக்கணிப்போம்: ஶ்ரீகாந்தா அழைப்பு

தமிழில் தேசிய கீதம் பாடப்படமாட்டாது எனும் அரசாங்கத்தின் முடிவானது இலங்கையில் வாழும் தமிழை தாய்மொழியாகக் கொண்ட மக்கள் இரண்டாம் தரப் பிரஜைகளாக நடத்தப்படுவதன் வெளிப்பாடு என தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அரசின் ஏற்பாட்டில் செய்யப்படும் சகல சுதந்திர தின நிகழ்வுகளையும் தமிழ் பேசும் மக்கள் புறக்கணிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நல்லூரில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்:

எதிர்வரும் 4ஆம் திகதி நடைபெறவுள்ள சுதந்திரதினக் கொண்டாட்டத்தில், குறிப்பாக கொழும்பிலே நடத்தப்படவிருக்கிற கொண்டாட்டத்தில் தமிழிலே தேசிய கீதம் இசைக்கப்படாது என்கிற அறிவிப்பு அரசாங்கத்தின் சார்பிலே வெளியிடப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே, இது குறித்த தகவல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியானபோது தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் தரப்பிலிருந்து அதற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்தது. அப்பாடியான சந்தர்ப்பத்திலே இது தொடர்பாக எந்த வொரு முடிவும் எடுக்கப்படவில்லை என்றே அரசாங்கத்தின் பொறுப்புவாய்ந்த அமைச்சர்கள் சிலர் பேசினார்கள்.

ஆனால், இப்பொழுது அரசாங்கத்தின் சார்பிலே திட்டவட்டமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பின் ஊடாக இலங்கையிலே தமிழை தாய் மொழியாகக் கொண்ட தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் இரண்டாம் தரப் பிரஜைகள் என்கிற தோரணையிலே அரசு நடந்து கொள்கிறது என்ற தவிர்க்க முடியாத முடிவுக்கு நாம் வந்திருக்கிறோம்.

இந்த முறை இந்த அறிவிப்பு நன்கு ஆராயப்பட்ட பின்னர்தான் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதிலே சந்தேகம் இல்லை. இது இந்த நாட்டில் வாழ்கிற தமிழர்களையும் தமிழை தாய்மொழியாகக் கொண்டுள்ள முஸ்லிம் சகோதரர்களையும் உணர்ச்சிபூர்வமாக காயப்படுத்துகிற ஒரு நடவடிக்கை என்று நாங்கள் பகிரங்கமாக தெரிவிக்க நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறோம்.

இந்த நிலையில், சுய மரியாதை கொண்ட தமிழ் பேசும் மக்களைப் பொறுத்தமட்டில் நாம் ஒரேயோரு விதத்தில் தான் எமது உணர்வுகளை வெளிப்படுத்தமுடியும். அந்தவகையில், எதிர்வரும் 4ஆம் திகதி கொழும்பில் அர சாங்கம் ஏற்பாடு செய்துள்ள சுதந்திர தின நிகழ்வுகள் மட்டுமல் லாது, இலங்கையின் அனைத்து மாகாணங்களிலும் செய்யப்பட்டுள்ள நிகழ்வுகளையும் தமிழ் பேசும் மக்கள் புறக்கணிக்க வேண்டுமென நாம்கேட்டுக்கொள்கின்றோம்” என்றார்.