Home Blog Page 2427

மியான்மாரில் சிறுவர் பாடசாலை மீது எறிகணை வீச்சு – சிறுவர்கள் காயம்

மியான்மாரில் உள்ள றக்கீன் பகுதியில் உள்ள பாடசாலை மீது கடந்த வியாழக்கிமை  மேற்கொள்ளப்பட்ட எறிகணை வீச்சில் 19 சிறுவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரச படையினருக்கும் சுயாட்சி கோரி போராடி வரும் ஆயுதக் குழுவினருக்குமிடையில் இடம் பெற்ற மோதல்களின் போதே சிறுவர்கள் காயமடைந்துள்ளனர்.

2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடக்கம் இடம் பெற்று வரும் மோதல்களால் பல பத்தாயிரம் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். 2017 ஆம் ஆண்டு இடம் பெற்ற மோதல்களினால் 730,000 முஸ்லீம் மக்கள் றொகின்யா பகுதியில் இருந்து இடம் பெயர்ந்துள்ளனர்.

அரகன் எனப்படும் ஆயுதக் குழுவினரே சுயாட்சி கோரிக்கையை முன்வைத்து ஆயுதப் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். பாடசாலை மீதான எறிகணைத் தாக்குதலை ஆயுதக் குழுவினரே மேற்கொண்டனர் என இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஆனால் தம்மிடம் அவ்வாறான பீரங்கிகள் இல்லை என ஆயுதக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

வியாழக்கிழமை காலை பாடசாலை மீது எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததாக அந்த பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர் றொய்ட்டர் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

இரு தரப்பினரும் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என மியான்மாருக்கான பிரித்தானிய தூதுவர் தெரிவித்துள்ளார். இந்த மோதல்களில் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருவதாகவும், இரு தரப்பினரும் பொது மக்களை பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

சவீந்திர சில்வா அமெரிக்காவுக்குள் நுழைய தகுதியற்றவர்– பொம்பியோ

சிறீலங்கா இராணுவத் தளபதி லெப் ஜெனரல் சவீந்திர சில்வா அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தகுதியற்றவர். அவர் மேற்கொண்ட நீதிக்குப் புறம்பான படுகொலைகளே இந்த நிலையை ஏற்படுத்தியுள்ளது என அமெரிக்காவின் வெளிவிவகாரச் செயலாளர் மைக் பொம்பியோ தனது ருவிட்டர் சமூகவலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் நீதிக்கு முன் நிறுத்தப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சீனா நிற்கும்- சீன வெளிவிவகார அமைச்சர்

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக சீனா என்றும் நிற்கும் என சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாங் ஜி அவர்கள் தெரிவித்துள்ளார்.யேர்மனிக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

சீனாவின் மனித உரிமை செயற்பாடுகள் குறித்து அனைத்துலக சமூகம் தெரிவித்து வரும் கருத்துக்களை நாம் மறுக்கின்றோம், சில நாடுகள் கொரோனா வைரஸ் குறித்து அளவுக்கு அதிகமான பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றன.

வைரஸ் எமக்கு சவாலாக இருந்த போதும், அதனை தற்போது நாம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம். எமக்கு உதவிய நாடுகளுக்கு நாம் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

நாம் பாலஸ்தீன மக்களுக்கும், உலகில் ஒடுக்கப்படும் ஏனைய மக்களுக்கும் ஆதரவாக எப்போதும் நிற்போம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்காக பெருந்தொகை வழங்கிய குடும்பம்

கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள ஒரு தாயும் அவரது மகனும் ஒரு உள்ளூர் தொண்டு நிறுவனத்திற்கு 10 மில்லியன் யுவான் ( 1.43 மில்லியன் டொலர் ) நன்கொடை அளித்துள்ளனர். கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்துக்காகவே அவர் இந்த உதவியை வழங்கியுள்ளார்.

தன்னை அடையாளம் காட்டமறுத்த அந்த தாய்,தான் பொருதாதர ரீதியில் வளம்பெற்று உள்ளதாகவும் அதனால் நாட்டின் நெருக்கடிநிலைமைக்கு உதவ விரும்புவதாகவும் தெரிவித்தார்.

நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரம்! நாளை வழக்கு.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக தமிழத் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்த வழக்கு மீதான விசாரணைகள் நாளை திங்கட்கிழமை எடுத்துகொள்ளப்படவுள்ளது.

நீராவியடி பிள்ளையார் கோவில் வளாகத்தில் தேரரின் பூதவுடலை நல்லடக்கம் செய்யும் போது ஞனசார தேரர் நீதிமன்ற தீர்ப்பை மீறிச் செயற்பட்டதாக கூறியே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு மேன் முறையிட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நடந்தது பகிடிவதை அல்ல ; சித்திரவதை ; வடக்கு ஆளுநர் சொல்கின்றார்

யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் நடந்தது பகிடிவதை அல்ல. பகிடிவதை என்ற பெயரில் செய்யப்பட்ட அச்சுறுத்தல், சித்திரவதை என்று மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

பகிடிவதையை அரசாங்கம் தடை செய்திருக்கின்றது. ஆனால், தற்போது நடந்தது பகிடிவதை அல்ல. பகிடிவதை என்று சொல்கின்ற பெயரில் செய்யப்பட்ட அச்சுறுத்தல், துன்புறுத்தல், சித்திரவதை போன்ற விடயங்களும், மனித உரிமை மீறல்களும்தான். எனவே, நிச்சயமாக இவற்றுக்கு எதிராக சட்டம் தன்னுடைய கடமையைச் செய்யும்.

எனக்கு வழங்கப்பட்டுள்ள இந்த பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு எந்த தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளோ, தனிப்பட்ட இலாப நட்டங்களையோ கணக்கில் கொள்ளாமல் அனைவரும் இந்தப் பொதுப்பணிக்காக ஒன்றிணைய வேண்டும் என்று வட மாகாண மக்கள் மற்றும் வட மாகாண அரசியல் பிரதிநிதிகள் என அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டார்.

பயங்கரவாதத்தை வேரறுத்த வீரத் தளபதி சவேந்திர சில்வா; சஜித் பிரேமதாஸ புகழாரம்

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மற்றும் அவரது உடனடி குடும்பத்துக்குப் பயணத் தடை விதிக்கப்பட்டமை வருந்தத்தக்கது மற்றும் துரதிர்ஷ்டவசமானது. பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான தேசிய முயற்சியை முன்னெடுத்த வீர களத் தளபதிகளில் இவரும் ஒருவர்.

இவ்வாறு புகழாரம் சூட்டியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ. இராணுவத் தளபதி மீதான அமெரிக்க பயணத்தடை குறித்து டுவிட்டரில் கருத்து வெளியிட்டபோதே அவர் இப்படிக் கூறியுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவிக்கையில்-

தேவைப்படும் இந்த நேரத்தில் நாம் அனைவரும் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாக நிற்கிறோம். ஒரு நாடு என்ற வகையில் 30 ஆண்டுகால பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த போர்வீரர்களுடன் நாம் எப்போதும் நிற்போம்” என்று கூறியுள்ளார்.

மலையகத் தாய்க்கு இடம் கொடுத்த தொண்டமான்.

ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியிலிருந்து அகற்றப்பட்ட ‘மலையக தாய்’ சிலையை கொட்டகலை நகரத்தில் வைப்பதற்கு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதன்படி கொட்டகலை முத்து விநாயகர் ஆலயத்துக்கு முன்பாகவுள்ள ‘பிரஜா சக்தி’ நிலையத்தின் மேல் மாடியில் சிலையை வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மலையகத் தமிழர்களின் வாழ்வியல் மற்றும் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களை பிரதிபலிக்கும் வகையிலான மாபெரும் சித்திரக் கண்காட்சி, பத்தனை ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரியில் கடந்த 12 ஆம் திகதி ஆரம்பமானது.

இதனை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் மலையக தாயின் சிலை வடிவமைக்கப்பட்டது. இதனை உடன் அகற்றுமாறு கல்லூரியின் பீடாதிபதியால் அன்று மாலையே உத்தரவிடப்பட்டது.

இதனையடுத்து கடும் எதிர்ப்புகள் வலுத்ததால் கண்காட்சி முடிவடையும் வரையில் சிலையை வைத்திருப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்றைய தினம் குறித்த சிலை அங்கிருந்து அங்கற்றப்பட்டிருந்த நிலையில் அமைச்சர் தொண்டமானும் அங்கு சென்றிருந்தார்.

இந்நிலையிலேயே குறித்த சிலையை கொட்டகலை நகரில் வைப்பதற்கு நடவடிக்கை

இலங்கை போக்குவரத்து சபையின் பேரூந்து மோட்டார் வண்டியுடன் மோதி விபத்து- பெண்னொருவர் படுகாயம்

வவுனியாவில் பேரூந்து – மோட்டார் சைக்கில் விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

வவுனியா ஏ9 வீதி தாண்டிக்குளம் பகுதியில் நேற்று மாலை 6.00 மணியளவில் இடம்பெற்ற பேரூந்து – மோட்டார் சைக்கில் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பருத்திதுறையில் இருந்து வவுனியா நோக்கி சென்ற இ.போ.ச பேருந்து தாண்டிக்குளம் சந்திக்கு அண்மித்த போது முன்பாக சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிலில் பயணித்த மதிவண்ணன் சிவகுமாரி (40) என்ற பெண் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்டபொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

viber image 2020 02 15 04 22 55 இலங்கை போக்குவரத்து சபையின் பேரூந்து மோட்டார் வண்டியுடன் மோதி விபத்து- பெண்னொருவர் படுகாயம் viber image 2020 02 15 04 22 58 1 இலங்கை போக்குவரத்து சபையின் பேரூந்து மோட்டார் வண்டியுடன் மோதி விபத்து- பெண்னொருவர் படுகாயம் viber image 2020 02 15 05 31 15 இலங்கை போக்குவரத்து சபையின் பேரூந்து மோட்டார் வண்டியுடன் மோதி விபத்து- பெண்னொருவர் படுகாயம் viber image 2020 02 15 05 31 18 இலங்கை போக்குவரத்து சபையின் பேரூந்து மோட்டார் வண்டியுடன் மோதி விபத்து- பெண்னொருவர் படுகாயம்

தாயகத்தில் சிறுமிகள் மீது வண்புனர்வு- சீர்கெட்டு போகும் சமுதாயம்

வவுனியாவின் வெவ்வேறு பகுதிகள் மற்றும் மாங்குளம் ஆகிய இடங்களில் இரு சிறுமிகள் உள்ளிட்ட மூவரை கடந்த பல நாட்களாக வன்புணர்வு செய்துவந்த குற்றச்சாட்டில் பொலிஸாரால் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவங்கள் தொடர்பில் தெரியவருகையில்,

வவுனியா வாரிக்குட்டியூர் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவரை கடந்த சில நாள்களாக வீட்டில் இருந்த உறவினர் ஒருவர் பாலியல் வன்புணர்வு மேற்கொண்டுவந்துள்ளார்.

இந்நிலையில் சிறுமியின் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டதை அவதானித்த பெற்றோர் சிறுமியை விசாரித்தபோது தனக்கு நடந்த சம்பவங்களை சிறுமி தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பெற்றோரால் பூவரசங்குளம் பொலிஸில் நேற்று மாலை செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கமைய வன்புணர்வு குற்றச்சாட்டின்கீழ் உறவினரான 30 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல் செட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவரை கடந்த சில நாட்களாக வீட்டில் இருந்து அவரது தந்தை பாலியல் வன்புணர்வு மேற்கொண்டுவந்துள்ளார்.

இந்நிலையில் சிறுமியின் தாயார் பொலிஸில் செய்த முறைப்பாட்டிற்கமைய சிறுமியின் தந்தையான 41 வயது நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் மாங்குளம் பகுதியில் 17 வயது யுவதி ஒருவர் கர்ப்பம் தரித்துள்ள நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான விசாரணையையடுத்து அந்த யுவதியின் தந்தையான 39 வயது நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யுவதி மற்றும் இரு சிறுமிகள் உள்ளிட்ட மூவரும் மருத்துவப்பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் கைது செய்யப்பட்ட மூவரிடமும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.