நடந்தது பகிடிவதை அல்ல ; சித்திரவதை ; வடக்கு ஆளுநர் சொல்கின்றார்

யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் நடந்தது பகிடிவதை அல்ல. பகிடிவதை என்ற பெயரில் செய்யப்பட்ட அச்சுறுத்தல், சித்திரவதை என்று மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

பகிடிவதையை அரசாங்கம் தடை செய்திருக்கின்றது. ஆனால், தற்போது நடந்தது பகிடிவதை அல்ல. பகிடிவதை என்று சொல்கின்ற பெயரில் செய்யப்பட்ட அச்சுறுத்தல், துன்புறுத்தல், சித்திரவதை போன்ற விடயங்களும், மனித உரிமை மீறல்களும்தான். எனவே, நிச்சயமாக இவற்றுக்கு எதிராக சட்டம் தன்னுடைய கடமையைச் செய்யும்.

எனக்கு வழங்கப்பட்டுள்ள இந்த பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு எந்த தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளோ, தனிப்பட்ட இலாப நட்டங்களையோ கணக்கில் கொள்ளாமல் அனைவரும் இந்தப் பொதுப்பணிக்காக ஒன்றிணைய வேண்டும் என்று வட மாகாண மக்கள் மற்றும் வட மாகாண அரசியல் பிரதிநிதிகள் என அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டார்.