Home Blog Page 2417

சிறீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன

ஜெனீவா பிரேரணையிலிருந்து அரசாங்கம் விலகும் தீர்மானத்தைத் தொடர்ந்து, சிறீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தும் நடவடிக்கைகளை புலம்பெயர் அமைப்புகள் மிகத் தீவிரமாக முன்னெடுத்து வருவதாக இராணுவத்தினரது உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் அட்மிரல் சரத் வீரசேகர கூறியுள்ளார். சிறீலங்காவின் உள்ளக விவகாரத்தினை நல்லாட்சி அரசாங்கம் தங்களின் அரசியல் தேவைகளுக்காக சர்வதேச மட்டத்தில் கொண்டு சென்றது.

இந்நடவடிக்கைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கிய பங்களிப்பினை வழங்கியது. கூட்டமைப்பினர் வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு கடந்த அரசாங்கத்தில் எதிர்க் கட்சியாக இருந்து செயற்படவில்லை. மாறாக புலம்பெயர் விடுதலைப் புலிகளின் அமைப்புக்களின் நோக்கங்களை சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன் நிறைவேற்றிக் கொள்ளவே முயற்சித்தார்கள். காணாமல் போனோர் அலுவலகத்தில் செயற்பாடுகள் அனைத்தும் ஆரம்பத்திலிருந்து ஒரு தரப்பினருக்கு சாதகமானது என்பதைக் குறிப்பிட்டோம். எனவே சிறீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தும் நடவடிக்கைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டெல்லியில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை

டெல்லியில் மாஜ்புர் பகுதியில் இன்று நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் போராட்டக்காரர்கள் வீசிய கல்லால் காயமடைந்த தலைமைக் காவலர் ஒருவர் உயிரிழந்தள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கெதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அமைதியான முறையில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இன்று டெல்லியில் மாஜ்புர் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது. இதில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலர் ரத்தன் லால் போராட்டக்காரர்கள் வீசிய கல்வீச்சில் காயமடைந்து உயிரிழந்துள்ளார். போராட்டக்காரர் ஒருவரும் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சஜித் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ள கருத்து

இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்கா விதித்த பயணத் தடை குறித்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்த கருத்துக்களால் ஏமாற்றமடைந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கில் 85% வாக்குகளைப் பெற்ற பின்னரும், பாரபட்சமின்றி நீதியை மட்டுமே எதிர்பார்க்கும் தமிழ் மக்களின் அடிப்படை நிலைப்பாட்டை பிரேமதாச பாராட்டவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பு

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான வழக்குகளை இந்த வருடத்திற்குள் முடிவிற்குக் கொண்டு வரவேண்டும் என்று முல்லைத்தீவு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் போனோர் தொடர்பான வழக்குகள் ஒவ்வொரு திகதியிலும் விசாரிக்கப்பட்டு, இந்த வருடத்திற்குள் முடிவிற்குக் கொண்டு வரவேண்டும் என்று முல்லைத்தீவு நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.இரத்னவேல் தெரிவித்துள்ளார்.

2009 முள்ளிவாய்க்காலில் யுத்தம் மௌனிக்கப்பட்டதன் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போன 7பேரின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணைகள் இன்று முல்லைத்தீவு நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 12பேர் தொடர்பான விசாரணையில் எழிலன் உட்பட ஐந்து பேர் தொடர்பான வழக்கு விசாரணைகளை வவுனியா மேல் நீதிமன்றிற்கு மாற்றப்பட்டு வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றது.

மிகுதி 7பேரின் வழக்குகள் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றது. இந்த வழக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 29ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இவர்கள் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.இரத்னவேல் முன்னிலையாகி வாதாடினார்.

625.0.560.350.390.830.053.800.670.160.91 1 1 சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பு

இந்த வழக்கு தொடர்பாக இராணுவம் சார்பான சட்டத்தரணிகள் வருகை தந்த போது நீதிமன்றத்திற்கு பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது.

இந்த வழக்குகள் யாவும் இந்த வருடத்திற்குள் முடிவிற்குள் கொண்டு வரப்பட வேண்டும் என்றும், இவை வெவ்வேறான திகதிகள் இடப்பட்டு ஒவ்வொரு வழக்கும் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்திருக்கின்றது.

இந்திய பயணத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அவர்களும், அவரின் மனைவியும் 3 நாட்கள் விஜயமாக இன்று இந்தியா வந்தடைந்தனர்.

இன்று காலை 11.40 மணிக்கு மனைவியுடன் அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த ட்ரம்ப் தம்பதிகளை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேரில் வரவேற்றார்.

விமான நிலையத்திலிருந்து வந்து சபர்மதி ஆசிரமத்திற்கு வருகை தந்த ட்ரம்ப் இற்கு அங்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு மகாத்மா காந்தியின் உருவப்படத்திற்கு அவர் அஞ்சலி செலுத்தினார். அங்கு ட்ரம்ப் மற்றும் மனைவி இருவரும் ராட்டையில் நூல் நூற்றனர்.

பின்னர் மதியம் அகமதாபாத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் கிரிக்கெட் மைதானத்தில் அவருக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் தாஜ்மகாலிற்கு விஜயம் மேற்கொண்ட ட்ரம்ப் தம்பதிகளை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் வரவேற்றனர். அங்கு இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் 3ஆயிரம் கலைஞர்கள் திரண்டு வரவேற்றனர்.

பின்னர் ட்ரம்பும் மனைவி மெலானியாவும் தாஜ்மகால் வரவேற்பு புத்தகத்தில் தங்களின் வருகையை பதிவு செய்தனர்.

ட்ரம்ப் கருத்துக் கூறுகையில், “நாங்கள் தொடர்ந்து எங்கள் பாதுகாப்பு ஒத்துழைப்பைக் கட்டியெழுப்புகையில், இந்தியாவிற்கு இந்த கிரகத்தின் மிகச் சிறந்த மற்றும் மிகவும் அஞ்சப்படும் சில இராணுவ உபகரணங்களை வழங்க அமெரிக்கா எதிர்நோக்குகின்றது. இதுவரை தயாரிக்கப்பட்ட மிகப் பெரிய ஆயுதங்களை நாங்கள் உருவாக்கியுள்ளோம். அதனை இப்போது நாங்கள் இந்தியாவுடன் கையாள்கின்றோம்“ என்றார்.  

வவுனியாவில் பாரிய விபத்து ஐவர் பலி 25 காயம்

வவுனியா பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பேருந்தும் வானும் நேருக்கு நேர் மோதியதில் வான் சாரதி உட்பட ஐவர் பலியாகியதுடன் 25 பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் ஒருவர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பில் இருந்து பருத்தித்துறை நோக்கி சென்ற பேருந்தும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்க்p சென்ற வானும் மோதி இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது அங்கிருந்தவர்களால் பேருந்துக்கு தீ வைக்கப்பட்ட நிலையில் விபத்துக்குள்ளாகிய வானும் அத்தீயில் எரிந்துள்ளது.

இதன்போது வானுக்குள் இருந்த சாரதியும் தீயில் எரிந்தமை குறிப்பிடத்தக்கது.

தீப்பற்றிய வாகனங்களை தீயணைப்பு படையினரால் அணைக்கப்பட்டு தீயினுள் எரிந்த நிலையில் வாகன சாரதியின் சடலம் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் ஆறுமுகம் தேவராஜா வயது 62, தேவராஜா சுகந்தினி வயது 51, தேவராஜா சுதர்சன் வயது 30, ராமலிங்கம் சேமசுந்தரம் வயது 83 ஆகிய ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலியாகியதுடன் வாகன சாரதியான விஜயகுமார் ரொசாந்தன் வயது 24 என்ற இளைஞனும் பலியாகியுள்ளார்,

இதேவேளை வானில் பயணித்த சோமசுந்தரம் லக்சனா வயது 29 என்பவர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இசசம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை ஓமந்தை பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை ஒமந்தை பொலிஸார் மற்றும் புளியங்குளம் விசேட அதிரடிப்படையினர் இணைந்து பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு மேலதிக அசம்பாவிதங்களை நடைபெறாதவாறு தவிர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் – வீடியோ இணைப்பு

வவுனியாவில் 1101 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று மதியம் 12 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரிய போராட்டம் ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி இக் கவனயீர்ப்பு போராட்டத்தினை அவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

DSC08580 காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் - வீடியோ இணைப்பு DSC08622 காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் - வீடியோ இணைப்பு DSC08665 காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் - வீடியோ இணைப்பு DSC08686 காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் - வீடியோ இணைப்பு

வவுனியா கந்தசாமி கோவிலில் தேங்காய் அடித்து வழிபாடுகளில் ஈடுபட்டதையடுத்து ஊர்வலமாக மணிக்கூட்டு கோபுரத்தை செனற்டைந்து அங்கிருந்து அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடும் பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் கோசங்களை எழுப்பியவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

இதன்போது தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை இன அழிப்பே, தமிழ் தேசியவாதம் மற்றும் நிரந்தர பாதுகாக்கப்பட்ட தமிழ் தாயகத்தினை நம்பும் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் சுமந்திரனையும் அவரது செவிட்டு ஊமை எம்பிக்களையும் தோற்கடிக்க ஒன்றுபட வேண்டும் என்ற பதாதைகளையும் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா பாடசாலையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்.! வீடியோ இணைப்பு

வவுனியா, வீரபுரம் மணிவாசகர் மகா வித்தியாலயத்தில் ஆசிரியர்களை நியமிக்க கோரி ஆர்ப்பாட்டம்

வவுனியா மாவட்டம் வீரபுரம் மணிவாசகர் மகா வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்குமாறு கோரி பெற்றோர்களும், மாணவர்களும் இணைந்து திங்கட்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த பாடசாலையில் கணக்கீடு, வர்த்தகம், இந்துநாகரீகம், கணிதம், தமிழ் மற்றும் கலை பாடங்களாக சித்திரம், சங்கீதம் இரண்டாம் மொழி பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது.

இதேவேளை 342மாணவர்கள் கல்விகற்கும் பாடசாலையில் 20ஆசிரியர்களும் பகுதி நேரமாக இரண்டு ஆசிரியர்களுமே கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.
குறிப்பாக ஆரம்ப பிரிவில் 105 மாணவர்கள் கல்வி கற்றுக்கொண்டிருக்கும் நிலையில் 3 ஆசிரியர்களே கல்வி கற்பித்து கொண்டிருக்கின்றனர். இப்பாடசாலையில் ஆரம்ப பிரிவு மற்றும் உயர்தர மாணவர்களுக்கு போதுமான ஆசிரியர்கள் இன்றி இப்பாடசாலை இயங்கி வருகின்றது.
இந்நிலையில், பாடசாலை வாயிலைமூடி பாடசாலையின் முன்னால் மாணவர்களும், பெற்றோர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் கிராமத்திற்கு ஒரு நீதி நகரத்திற்கு ஒரு நீதியா?, எமது பாடசாலை எமக்கு வேண்டும் ஆசிரியர்களை உடன் நியமி, கிராமத்தின் கல்வி வளம் கல்வியே, சமமான கல்வியை வழங்கு, ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய், கிராமப்புற பாடசாலைகளுக்கும் உங்கள் கண்களை திருப்புங்கள், மாணவர்களின் கல்வியை நாசமாக்காதீர் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோஷங்களையும் எழுப்பினர்.

இதன்போது, செட்டிகுளம் கோட்டகல்விப்பணிப்பாளருக்கு பாடசாலையின் ஆசிரியர்கள் பற்றாக்குறை தொடர்பாக எடுத்துக்கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையிலேயே தாம் இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற செட்டிகுளம் பிரதேச செயலாளர் சி.சிவகரன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடியதுடன் ஆர்ப்பாட்டக்காரர்களால் கூறப்பட்ட விடயம் தொடர்பாக கல்வி அதிகாரிகளுடன் கலந்துரையாடி ஒரு வாரத்தில் தீர்வை பெற்றுத்தருவதாக தெரிவித்ததாக தெரிவித்தார்.

இந்நிலையில் செட்டிகுளம் கோட்ட கல்விப்பணிப்பாளர் எஸ்.எம்.பரீட் சம்பவ இடத்திற்கு வருகை தந்து நிலைமைகளை ஆராய்ந்ததுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கலந்துரையாடியிருந்தார்

இதன்போது இவ் ஆர்ப்பாட்டம் தொடர்பாக ஊடகவியலாளர்கள் வினவியபோது நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை 14நாட்களுக்குள் கடமையில் அமர்த்துவதாகவும் அவர்கள் கடமைக்கு சமூகம் தராத சந்தர்ப்பத்தில் உடனடியாக வேறு ஆசிரியர்களை நியமிப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதன் போது குறித்த ஆர்ப்பாட்டம் தேவையற்றது என கூறியபோது ஆர்ப்பாட்டக்காரர்கள் கோட்டக்கல்வி பணிப்பாளருடம் முரண்பட்டிருந்தனர்.

ஒருவார காலத்தில் ஆசிரியரை நியமித்து மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை சீராக கொண்டுசெல்ல கல்வி திணைக்களம் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தாம் தமது போராட்டத்தை தொடர்ந்தம் நடத்துவோம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் தெரிவித்தனர்.
பின்னர் பாடசாலையின் வளாகத்தில் கோட்டக்கல்வி பணிப்பாளரை பாடசாலைக்குள் நுழையவிடாது பெற்றோர் வாயில்கதவை மூடியிருந்தனர். கோட்டக்கல்வி அதிகாரியை சரமாரியாக கேள்விக்கணைகளை பெற்றோர்கள் தொடுத்ததையடுத்து பதில் கூறமுடியாதவாறு கோட்டக்கல்வியதிகாரி அவ்விடத்திலிருந்து நழுவி சென்றிருந்தார்.

மாணவர்களும்,பெற்றோர்களும் மேற்கொண்ட இவ் ஆர்ப்பாட்டம் காலை 8 மணியிலிருந்து இடம்பெற்று பின்னர் பிள்ளைகளை பெற்றோர்கள் வீட்டிற்கு அழைத்து சென்றிருந்தனர்.

கல்வி நடவடிக்கைகள் யாவும் இன்று ஸ்தம்பிதம் அடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜேவிபி உடன் கூட்டுக்குப் போகும் கூட்டமைப்பு

ஜேவிபி மட்டும் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஆகியவற்றுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட்டணி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறு வருவதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக கொழும்பை தளமாக கொண்டு செயற்படும் ஊடகமொன்று கூட்டமைப்பு பேச்சாளர் சுமேந்திரனை தொடர்புகொண்டு கேட்டதாகவும் இதனை அவர் உறுதி செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொது அமைப்புகள் மற்றும் சிறிய கட்சிகளுடனும் கூட்டணி குறித்து
பேச்சுவார்த்தைகள் இடம்பெறு வருவதாகவும் சுமேந்திரன் கூறியதாகவும் இதனை இலங்கை தமிழரசுக் கட்சி தலைவர் திரு.மாவை சேனாதிராஜாவும் உறுதிப்படுத்தியதாகவும் செய்திகள் கூறுகின்றன.

தகுதியான ஆசிரியரை நியமிக்கக்கோரி பெற்றோர் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு – ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலய பாடசாலையில் தரம் 05 மாணவர்களுக்கு கற்பிக்க தகுதியான ஆசிரியரை நியமிக்ககோரி பெற்றோர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று (24) திங்கட்கிழமை காலை 08.00 மணியவில் பாடசாலை வளாகத்தில் முன் பெற்றோர் இவ் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர். சுமார் 03 மணி நேரம் இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

மட்டக்களப்பு வலயக்கல்விப்பணிப்பாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையிலும் வலயக்கல்விப் பணிப்பாளர் எமது ஆர்பாட்ட இடத்திற்கு வருகை தந்து எமக்கான தீர்வை கூறவேண்டும் என பெற்றோர் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஏறாவூர் நகரசபை உறுப்பினர் நடேசபதி சுதாகரன் அவர்களும் இவ் ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தார்.14 தகுதியான ஆசிரியரை நியமிக்கக்கோரி பெற்றோர் ஆர்ப்பாட்டம்

எங்கள் பாடசாலையை பழிவாங்காதீர்கள்,வேண்டும் வேண்டும் ஆசிரியர் வேண்டும்இ எமது மாணவச் செல்வங்களை பறக்கணிக்காதே! இ தரம்05 மாணவர்களுக்கு ஆசிரியர் தேவை என எழுதப்பட்ட பல வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் தாங்கியிருந்தனர்.

ஆர்ப்பாட்ட இடத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் வருகை தந்து ஆர்பாட்டடக்ககாரர்களுடன் தங்கள் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடினார் ஆர்பாட்டக்காரர்களினால் பாராளுமன்ற உறுப்பினருக்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

இதே வேளை வலயக்கல்வி அலுவகத்திருந்து அதிகாரிகள் வருகை தந்திருந்திருந்ததுடன் அதிகாரிகளுடன் ஆர்பாட்டக்காரர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் பாடசாலை அதிபர் அலுவகத்தில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் அடுத்த வாரம் இப்பாடசாலைக்கான தரம் 05 மாணவர்களுக்கான தகுதிவாய்ந்த ஆசிரியர் நியமிக்ப்படுவார் என வலயக்கல்வி அலுகலக அதிகாரிகளினால் வாக்குறுதியளித்துள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர். இதேவேளையே ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.