சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பு

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான வழக்குகளை இந்த வருடத்திற்குள் முடிவிற்குக் கொண்டு வரவேண்டும் என்று முல்லைத்தீவு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் போனோர் தொடர்பான வழக்குகள் ஒவ்வொரு திகதியிலும் விசாரிக்கப்பட்டு, இந்த வருடத்திற்குள் முடிவிற்குக் கொண்டு வரவேண்டும் என்று முல்லைத்தீவு நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.இரத்னவேல் தெரிவித்துள்ளார்.

2009 முள்ளிவாய்க்காலில் யுத்தம் மௌனிக்கப்பட்டதன் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போன 7பேரின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணைகள் இன்று முல்லைத்தீவு நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 12பேர் தொடர்பான விசாரணையில் எழிலன் உட்பட ஐந்து பேர் தொடர்பான வழக்கு விசாரணைகளை வவுனியா மேல் நீதிமன்றிற்கு மாற்றப்பட்டு வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றது.

மிகுதி 7பேரின் வழக்குகள் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றது. இந்த வழக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 29ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இவர்கள் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.இரத்னவேல் முன்னிலையாகி வாதாடினார்.

625.0.560.350.390.830.053.800.670.160.91 1 1 சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பு

இந்த வழக்கு தொடர்பாக இராணுவம் சார்பான சட்டத்தரணிகள் வருகை தந்த போது நீதிமன்றத்திற்கு பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது.

இந்த வழக்குகள் யாவும் இந்த வருடத்திற்குள் முடிவிற்குள் கொண்டு வரப்பட வேண்டும் என்றும், இவை வெவ்வேறான திகதிகள் இடப்பட்டு ஒவ்வொரு வழக்கும் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்திருக்கின்றது.