கொரோனா வைரஸ் தொடர்பான அச்சுறுத்தல் காரணமாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அரசாங்கம் மூடுவதாக வெளியான செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை என சிவில் விமான போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.
தற்போது யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் மட்டுமே மூடப்பட்டுள்ளது. மேலும் எதிர்காலத்தில் கட்டுநாயக்க விமான நிலையமும் மூடப்படும் என்ற அனைத்து வதந்திகளையும் அதன் தலைவர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி நிராகரித்துள்ளார்.
மேலும் நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து வசதிகளும் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
மேலும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை மூடுவது குறித்த முடிவு ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய பின்னர் எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் கரோனா வைரஸின் பரவலைத் தடுப்பில் குறைபாடு இருந்து வரும் நிலையில், இவ்வைரஸின் தோற்றம் குறித்து அமெரிக்காவின் மீது அவநம்பிக்கை ஏற்பட்டு வருகிறது.
பிப்ரவரி 21ஆம் தேதி ஜப்பானின் அசாகி தொலைக்காட்சி நிலையத்தின் ஒரு நிகழ்ச்சியில், தொற்றுக் காய்ச்சலின் அறிகுறி கொவைட்-19 நோய் காய்ச்சலுடன் ஒத்திருப்பது முதலியவற்றை மேற்கோள் காட்டப்பட்டு, அமெரிக்காவில் கொவைட்-19 நோயாளிகள் சிலர் தொற்றுக் காய்ச்சல் நோயாளிகளாகக் கருதப்பட்டுள்ளனர் என்ற சந்தேகம் கிளப்பியது.
ஆனால், அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் இதை அப்போது உறுதியாக மறுத்தது. 20 நாட்களுக்கு பிறகு, இவ்வமைப்பின் தலைமை இயக்குநர் அந்தச் சந்தேகத்தை ஏற்றுக்கொண்டது பல்வேறு கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் கடந்த செப்டம்பரில் தொற்றுக் காய்ச்சல் பரவல் துவங்கியது. அக்டோபரில் அமெரிக்க ராணுவத்தினர், உலக 7ஆவது ராணுவ வீரர் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ள வூ ஹானுக்குச் சென்றனர். போட்டியின்போது, வெளிநாட்டு வீரர்கள் சிலர், தொற்று நோய் பாதிப்புக்குள்ளாகினர் எனத் தெரிவிக்கப்பட்டது.
பிறகு டிசம்பர் திங்கள் வூஹானில் முதல் நபர் கொவைட்-19 நோய்க்கு பாதிப்படைந்தார். எனவே இவ்வைரஸின் தோற்றம் அமெரிக்காவில்தான் இருக்கும் என்ற சந்தேகம் தர்க்கத்திற்கு ஏற்றதாக உள்ளது. மேலும், கடந்த ஜுலையில் அமெரிக்க தெட்ரீக் கோட்டையில் அமைந்துள்ள ராணுவத்தின் இரகசியத் தொற்று நோய் ஆய்வகம் மூடப்பட்டதும், இந்தச் சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.
The U.S. Armed Forces Sports team marches during opening ceremonies for the 2019 CISM Military World Games in Wuhan, China Oct. 18, 2019.
அண்மையில் கனடா சிந்தனைக் கிடங்கான “உலக ஆராய்ச்சி”என்ற அமைப்பு தனது இணையத்தளத்தில், லாரி ரொமன்னோஃபின் கட்டுரையை வெளியிட்டது. அதில், ஈரான் மற்றும் இத்தாலியில் பரவி வரும் வைரஸ் தொடர்பான ஆய்வின்படி, இவ்விரு நாடுகளில் பரவிய வைரஸ் மரபணு தொகுதி, சீனாவில் பரவிய வைரஸ் மரபணு தொகுதியுடன் வெவ்வேறானது.
அதனால் இவ்விரு நாடுகளில் பரவிவரும் வைரஸ் சீனாவிலிருந்து வரவில்லை எனக் கூறபட்டது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பாம்பியோ, குடியரசு கட்சியைச் சேர்ந்த சில செனட் அவை உறுப்பினர்கள், வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் ஊடகப் பணியாளர்கள் முதலியோர், பனிப்போர் சிந்தனை மற்றும் தவறான எண்ணத்துடன் சீனா மீது பழி போட்டனர். ஆனால் அவையெல்லாம் ஆதாரமில்லாத வெறும் கட்டுக்கதை.
தற்போது அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில், அவரச நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, அறிவியல் கண்ணோட்டம் மற்றும் பொறுப்புடன் இவ்வைரஸ் தோன்றிய நேரம் மற்றும் இடம் பற்றிய தகவல்களை உலகத்திடம் வெளிப்படுத்த வேண்டும். இது, அமெரிக்க மக்களின் உடல் நலத்துக்கு மட்டுமல்ல உலக அளவில் வைரஸ் பரவாமல் தடுத்து, பொது சுகாதாரத்தைப் பேணிக்காப்பதற்கும் அவசியமானதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் வேட்பு மனு தாக்குதலின் போது மொட்டுக்கட்சியினருக்கு இடையிலே வாய்த்தர்க்கம் இடம்பெற்றுள்ளது. வவுனியா மாவட்ட செயலகத்தில் வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக பொது ஜன பெரமுனவினர் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்திருந்தனர்.
இதன் போது வவுனியா மாவட்ட செயலகத்தினுள் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக மூவரை மட்டுமே அனுமதிக்க முடியும் என பொலிஸாரினால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன் காரணமாக ஒருங்கிணைப்புக்குழு தலைவரும் பொது ஜன பெரமுனவின் அமைப்பாளருமான தர்மபால செனவிரத்தினவை வெளியில் நிற்குமாறு கூறி பொது ஜன பெரமுனவின் முதன்மை வேட்பாளர் கே.கே.மஸ்தான், கட்சியின் மற்றுமொரு வேட்பாளரான கேணல் ரட்ன பிரிய, சட்டத்தரணி மூவரும் வேட்பு மனுவினை தாக்கல் செய்வதற்காக வவுனியா மாவட்ட செயலகத்திற்குள் சென்றிருந்தனர்.
சற்று நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்யும் பகுதிக்கு வருகை தந்த தர்மபால செனவிரத்தின மஸ்தான் தொடர்பில் ஊடகவியலாளர்கள் மற்றும் அங்கிருந்தவர்களுக்கு கருத்து தெரிவித்துக்கொண்டிருந்தார்.
வேட்பு மனுவினை தாக்கல் செய்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முதன்மை வேட்பாளருமான கே.கே.மஸ்தான் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவ்விடத்திடத்திற்கு வந்திருந்த ஒருங்கிணைப்புக்குழு தலைவரும் பொது ஜன பெரமுனவின் அமைப்பாளருமான தர்மபால செனவிரத்தின மஸ்தானின் கருத்துக்களுக்கு மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
மேலும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான கே.கே.மஸ்தானுக்கு அருகில் வந்து கருத்து தெரிவிக்க முற்பட்ட போது மஸ்தான் குறித்த இடத்தில் இருந்து வெளியேறி சென்றிருந்தார். அதன் பின்னர் மஸ்தான் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுக்களை தர்மபால செனவிரத்தின முன்வைத்ததோடு வேட்பு மனுவில் இருந்து முக்கியமானவர்களை நீக்கி விட்டு தனக்கு ஆதரவானவர்களை வேட்பாளராக மஸ்தான் நியமித்திருந்ததாக குற்றம் சாட்டியிருந்தார்.
கொழும்பில் உள்ள கோள் மண்டலத்தை இன்று(17) முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கிலேயே, இந்தநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் அருணு பிரபா பெரேரா தெரிவித்துள்ளார்.
மேலும், கோள் மண்டலத்தை மீண்டும் திறப்பதற்கான திகதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். இன்று முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரை அமுலிற்கு வரும் வகையில் 88 இரயில்வே சேவைகளை இரத்துச் செய்வதாக இரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமெரிக்க உச்ச நீதிமன்றம் நூறு ஆண்டுகளில் முதன்முறையாக மூடப்படுவதாக அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் 7ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஒரு இலட்சத்து 75ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் 1000இற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்க உச்ச நீதிமன்றம் 100 ஆண்டுகளில் முதன்முறையாக மூடப்படவுள்ளது. இது தொடர்பாக நீதிமன்ற அறிவிப்பில், “கோவிட் 19 காய்ச்சல் பரவி வருவதை அடுத்து வழக்கு விசாணைகளை நீதிமன்றம் தள்ளி வைக்கிறது. மார்ச் 23 முதல் ஏப்ரல் 1 வரை இது அமுலில் இருக்கும். பொது சுகாதாரம் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்படுகின்றது” என்று தெரிவித்துள்ளது.
1918இல் உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட “பானிஷ் ப்ளு காய்ச்சல் காரணமாக பொது சுகாதாரத்தைக் கருத்திற் கொண்டு உச்ச நீதிமன்றம் மூடப்பட்டது. அதைத் தொடர்ந்து 102 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது மூடப்படுகின்றது.
எனினும் வழக்கமான அலுவல்கள் வேலைகள் தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை அன்று வழக்கமாக நடைபெறும் நீதிபதிகள் ஆலோசனைக் கூட்டம் தொலைபேசி வழியாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் உள்ள 9 நீதிபதிகளின் சராசரி வயது 67 ஆகும். இதில் இரண்டு நீதிபதிகள் 80 வயதிற்கும் மேற்பட்டோராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏனைய நாடுகளில் இருந்து விமானத்தின் ஊடாக பயணிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தருவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் இன்று முதல் மறுஅறிவித்தல் வரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கான குறித்த கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று இலங்கையில் பரவி வருவதன் காரணமாக குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, அண்மையில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று காரணமாக யாழ். சர்வதேச விமான நிலையம் 2 வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
“ இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்” என்று சொல்கின்றது திருக்குறள்.
ஒரு செயல் நடப்பதற்கு கருவி, கருத்தா இரண்டும் தேவை. மன்னர் காலத்தில் வாழ்ந்த திருவள்ளுவர், இற்றைக்கு ஈராயிரம் ஆண்டுக்கு முன்பே இது தொடர்பாக பேசியிருக்கின்றார். கருத்துக் கூறியிருக்கின்றார். திருக்குறள் எவ்வளவு காலத்துக்கு முன்பு சொல்லப்பட்ட ஒன்று. இப்பவும் அதை சொல்லிக்கொண்டு என்று சொல்லும் குரல்களும் கேட்கின்றது.
வாழும் காலத்தில், அனுபவ வாயிலாக, நிகழ்கால நிலையை சொன்னால், மக்கள் அல்லது படித்தவர்கள் என்று தம்மை சொல்பவர்கள் எத்தனை பேர் ஏற்பார்கள் என்று சொல்ல முடியாது. இதனை எழுதும் நான் உட்பட எல்லோரும் பிறரை இழித்தும், பழித்தும் எம்மை நாமே உயர்த்தியும் பெருமைப்பட பழக்கப்பட்டு விட்டோம். சரிபிழை, நன்மைதீமை என்பன இங்கு அவசியமில்லை.
எமக்கு பயன் கிட்டுமானால் எதற்கும் துணைபோவோம். தவறின் எதிர்ப்போம். இதுதான் இன்றைய நிலை. நான் வாழவேண்டும், மற்றோரை ஆளவேண்டும், என்னை எல்லோரும் அறியவேண்டும, எனக்கு புகழ் வரவேண்டும் என்பதுதான் எமது கொள்கையே என்று சொல்ல முடியும். இந்த இடத்தில் இன்னுமொன்றையும் கூற விரும்புகின்றேன்.
ஆங்கிலேயன் வந்தான், அடிமை கொண்டான் என்று நாங்கள் சொன்னாலும், அவர்களின் வருகைதான் சாதாரண மக்களையும் தமிழ் படிக்கவைத்தது. தமிழை அறியவைத்தது. எங்களையும் சிந்திக்க தூண்டியது. ஆனால் அப்போதிருந்து சிக்கல் மறுவளமாக தொடங்கிவிட்டது. தமிழர்களில் ஒரு பகுதியினர் ஆங்கிலம் படித்தார்கள். தேர்ச்சி பெற்றார்கள். தாங்கள் உயர்ந்தவர்கள் என்று தமக்குத்தாமே முடி சூடிக்கொண்டார்கள். ஆங்கிலம் படித்தவர்களை அறிவாளிகள் என்று தமிழ் மக்கள் நம்பினார்கள்.
மீண்டும் தமிழ்மக்களுக்கு தெரியாதமொழித் தமிழ்மக்களிடம் தமிழர் சிக்கிக் கொண்டார்கள். பலர் ஆங்கில அரசின் தொழிலாளர்கள் ஆகினார். அவர்கள் வழங்கிய தொழிலினை மேன்மையாக கருதினர். தன் இனத்துக்கு துணை செய்யவேண்டியவர்கள், ஆங்கிலம் படிக்கவில்லை என்பதற்காக அந்த இனத்தையே இழிந்ததாக எண்ண ஆரம்பித்தனர். இதன் விளைவு என்ன என்பது யாபேரும் அறிந்த ஒன்று. இனி படித்தவர்களை சற்று பார்ப்போம்.
படித்தவர்கள் எப்படி இருப்பார்கள். படிக்கும்போதே பக்கத்தில் இருப்பவனை முந்தவேண்டும் என்று சிந்திப்பார்கள். மற்றவனுக்கு எதுவுமே சொல்லிக்கொடுக்க கூடாதென்று எண்ணுவார்கள். நான் முதலாவதாக வரவேண்டும் என்று யோசிப்பார்கள். எனக்கே நல்ல வேலை கிடைக்கவேண்டும் என்று முயற்சி செய்வார்கள்.
கல்வி என்பது சமூக நேசம் கொண்டவனை வளர்க்காமல் தன்னை மட்டும் எண்ணும் இயல்பையே வளர்க்கின்றது. தன்னைமட்டும் எண்ணும் இயல்பும், தமது மக்களையே குறைத்து மதிப்பீடும் போக்கும் முசுலீம்கள் அல்லது சிங்கள மக்களிடம் மிகவும் குறைவு. தமிழரின் இந்த இனத்துக்கு எதிரான பண்பை சிங்கள அரசியல்தலைவர்கள் சரியாகவே பயன்படுத்துவர். அதனால்தான் முக்கிய பதவிநிலைகளில் தமிழர்களை நியமிப்பர். காரணம் பதவிக்கும் தனக்கு பதவி தந்தவனுக்கும் எப்போதும் நன்றியுள்ளவனாக இருக்கக்கூடிய நல்ல மனிதன் தமிழன். அதற்காக தன் இனத்தையே காட்டிக்கொடுப்பான். இனி மக்களாட்சி என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.
மக்களாட்சி என்று பெயர் இருந்தால் மட்டும் அது மக்களாட்சி அல்ல. அந்த ஆட்சி மக்களுக்காக நடந்தாலே அது மக்களாட்சி. இன்று எங்கெல்லாம் மக்களாட்சி நடக்கின்றது என்று எண்ணிப்பாருங்கள். அங்கெல்லாம் மக்களாட்சி நடக்கின்றதா என்று ஆய்வுசெய்து பாருங்கள்.
இன்றைய நாட்களில் பொதுவாக தேர்தல்கால பேச்சுக்களும், மக்கள் போடும் வாக்குகளும் மட்டும்தான் மக்களாட்சி என்ற பெயரை தம்வசம் தக்க வைத்திருக்கின்றன. தேர்தல்முடிவு வந்தபின்பு எதுவும் மக்கள் சார்ந்து நடப்பதாக தெரியவில்லை. நடப்பதுமில்லை.
மக்களாட்சி என்றால் ஒரு அரசு இருக்கவேண்டும். அந்த அரசினை நிர்வகிக்க ஒரு தலைவர், அந்த தலைவர் மட்டும் அனைத்து செயல்பாடுகளையும் செய்துமுடிக்க இயலாது எனவே மக்கள் தெரிவிலிருந்து அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், என்றும், இந்த ஆட்சியை இலகுபடுத்த, நடைமுறைப்படுத்த அரச ஊழியர்கள் செயல்படவேண்டும் என்றும் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன.
பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் அன்றாட வாழ்நிலை சிக்கல்களையும் அவதானித்து தீர்க்கவேண்டும். அரச ஊழியர்கள் மக்களுக்கு தேவையான அன்றாட வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்ற உதவவேண்டும். இப்படியான கட்டமைப்பினூடாக பயணிக்க வேண்டிய ஆட்சி இன்று எப்படிப் பயணிக்கின்றது என்று எத்தனைபேர் சிந்திக்கின்றார்கள் என்பது கேள்விக்குரிய ஒன்று. இந்த பொதுவான கேள்வியுடன் ஈழத்து தமிழ் அரசியல் என்னவென்று பார்ப்போம்.
ஈழத்து தமிழ்அரசியல் என்பதை இன்றைய அரசியல் செயல்பாட்டு சூழலுடன் மட்டும் ஒப்பிட்டு நோக்கமுடியாது. இதனை கடந்தகால அரசியல் சூழலுடன் இணைத்தே சிந்திக்கவேண்டும். உலகத்திலுள்ள பல நாடுகள் குறுகிய காலத்துள் சனநாயக முறையில் அல்லது வேறு ஆட்சியமைப்பு வகையில் தம்மை வலுவான நாடுகளாக கட்டியெழுப்பியுள்ளன. இதனால் ஈழத்திலிருந்து தமிழர்கள் மட்டுமல்ல, சிங்களவர், முசுலீம்கள் கூட ஏனைய முன்னேறிய நாடுகளுக்கு படையெடுக்கின்றார்கள்.
இலங்கையில் அரசியல் செய்பவர்கள் கூட தங்கள் பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டு கடைசிகாலத்தில் தொடர்ந்து தங்களது அரசியலை செய்கின்றார்கள் என்று சொல்லலாம். இதற்கு காரணம் வெளிநாடுகளில் வசதியாக வாழலாம் என்பதால் என்று மட்டும் சொல்லமுடியாது.
நிம்மதியாக வாழலாம் என்ற கருத்தும் இருக்கலாம். இந்தநிலை இலங்கை அரசியல்வாதிகளுக்கு சாதகமான நிலையை தோற்றுவிக்கின்றது என்று உறுதியாக கூறலாம். அதாவது குறித்த தொகுதியினர் மட்டுமே இன்று அரசியல் செய்கின்றார்கள். அவர்களைமீறி புதியவர்கள் அரசியலுக்குள் புகுவது முடியாத காரியம் என்ற மாயை தோற்றுவிக்கப்பட்டுவிட்டது.
அதற்கும் மேலாக அரசியல் என்பது குறிப்பிட்ட மக்களின் பிள்ளைகள், சொந்தக்காரர்கள் தவிர ஏனையோருக்கு ஆபத்தானாது என்றும் ஒருநிலை உண்டு. அத்துடன் தேர்தலில் வெற்றிபெறவேண்டும் என்பதற்காக எதனையும் துணிந்து சொல்லும் எண்ணமும் அரசியல்வாதிகளிடம் குடி கொண்டுவிட்டது. இதனை வைத்து பார்க்கும்போது தனிப்பட்ட நபரின் வெற்றியா அல்லது மக்களுக்கு வெற்றியா என்ற கேள்வி மக்களிடமும்/ அரசியல்வாதிகளிடமும் முன்னிறுத்தப்படவேண்டியது.
இன்றைய உலக அரசியல்சூழல் இன அடிப்படையில் கட்டமைப்பதாக சொல்லமுடியாது. தனித்த நாடுகள் மட்டத்திலும் சரி, உலகநாடுகள் மட்டத்திலும் சரி அரசியல் என்பது மத அடிப்படை சார்ந்ததாகவே முனைப்பு பெறுகின்றது என்று சொல்லமுடியும். இலங்கையில் பௌத்தம் வலுவாக இருப்பதால் அதுசார்ந்து அடக்குமுறை எழுகின்றது.
பௌத்த மதத்தின் இந்த வலுவான நிலை சைவத்தமிழர்களை மட்டுமே குறிவைப்பதாக தோன்றும். ஆனால் அந்த நிலை இன்று மாறிவருகின்றது. தமிழ்மக்கள் சிங்களவருடன் மோதுவது போல தெரியும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் அது உண்மை அல்ல. ஆட்டைக்கடித்து, மாட்டைக்கடித்து குழந்தைப்பிள்ளையை கடிக்கும் நிலைபோல சைவத்தமிழர்கள் தாக்கப்படும்போது அதனுடன் இணைந்த ஏனைய மதத்தினரான முசுலீம்கள், கிறித்தவர்கள் என்பவர்களும் தாக்கப்படுவர்.
உண்மையில் சைவத்தமிழர்கள் பரிதாபத்துக்குரிய மக்கள். காரணம் முசுலீம்கள், கிறித்தவர்கள் மதஅடிப்படையில் வலுவான பிணைப்புள்ளவர்கள். அவர்களுக்கென்று அமைப்புகள் கொண்டவர்கள். ஆனால் சைவர்கள் அவர்களுக்கென்று குரல் கொடுக்க வலுவான அமைப்புகள் அற்றவர்கள். காலம் முழுவதும் கோவில் கட்டுகின்றோம் என்று பணம் வசூலிப்பவர்களையும், சாமியார்கள் என்று தங்களை கடவுளின் பிரதிநிதிகள் என்று சொல்லுபவர்களையும், சாமியிடம் இவர்களின் செய்திகளை சொல்ல ஊதியமாக அருச்சனை செய்யப்பணம் வாங்குவபவர்களையும், அந்தப்பணத்தில் பங்குகேட்கும் கோயில் நிர்வாகங்களையும் நம்பி வாழ்பவர்கள்.
இறைவனை கும்பிட்டுவிட்டு உண்டியலில் காசுபோட்டு இறைவன் எங்களை வாழவைக்கிறான் என்று முழுமையாக நம்புபவர்கள். இவர்களை சுலபமாக ஏமாற்றலாம். எனவே உலகில் வலுவான மதங்கள் என்ற நிலையை கிறித்தவமும், இசுலாமுமே பிடித்துக்கொள்கின்றது. அவை இரண்டும் எதிர்த்து மோதும் வல்லமை கொண்டவை. அதேபோன்று பெளத்தம் உள்ள நாடுகளில் பெளத்த அடக்குமுறை நடந்தபடிதான் உள்ளது. எனவே தமிழ்மக்கள் ஒடுக்கப்பட்டதும் இலங்கையில் நடக்கக்கூடிய அடுத்த போர் இசுலாம், கிறித்தவம் சார்ந்ததாக இருக்கும் என்பது ஏற்கனவே காட்டப்பட்டுவிட்டது.
அதேவேளை பௌத்த சிங்களம் எந்தக் கவலையும் இல்லாது இதனை பார்த்துக்கொண்டிருக்கும் என்பதே சரியானது. காரணம் முசுலீம்கள் தமிழர்கள், அதேபோல் தமிழர்கள் வாழும் பகுதிகளை பாதிப்பு பகுதியாக தெரிவுசெய்தால் அப்போதும் தமிழர்களே பாதிக்கப்படுவர்.
தமிழர்களின் வாழ்க்கை வரலாற்றை எடுத்து நோக்கினால் அரசியல் விழிப்புணர்வு குறைந்த அல்லது விழிப்புணர்வு அற்ற மக்களாகவே வாழ்கின்றனர் என்று சொல்லமுடியும். அரசியல் என்பது தனித்து அரசியல்வாதிகளுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உரித்தானது. தமிழர்களிடம் அது இல்லை. “ஒன்று பட்டால் உண்டு வாழ்வு” என்பது வெறும் பேச்சாய் எம்முன் சொல்லப்படுகின்றது.
படிக்கும் மாணவர்கள் கூட பண்பற்றவர்களாகவே உள்ளனர். கொலை, கொள்ளை, வீதிவிபத்து, போதை, சாதி என்பன மக்களை வருத்துகிறது. சமூதாயத்தை சீர்படுத்தவேண்டிய கல்விச்சமூகம் அந்த மக்கள் சீரழிவதை வேடிக்கை பார்க்கின்றது. யாரையும் நாங்கள் பகைக்க வேண்டாம் என்று இவற்றை எல்லாம் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கின்றது அரசியல் தலைமைகள். சிங்கள அரசுதான் மக்களை கட்டுப்படுத்துகின்றது.
அரசுதானே கட்டுப்படுத்தவேண்டுமென்பது சரி. ஆனால் சட்டம் ஒழுங்குகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்து நாட்டில் நல்ல நிலையை ஏற்படுத்தவேண்டியது யார் பொறுப்பு? எமக்குள் ஒற்றுமை, புரிந்துணர்வு வேண்டாமா?. இதனை மக்களுக்கு எடுத்து சொல்லக்கூடாதா?. அரசியல் என்பது மக்களுக்கு உரிமை பெற்றுத்தருவோம் என்று சொல்வதுதானா?. என்ற கேள்விகளை நாம் கேட்கவேண்டும். இதுவும் அரசியலுடன் சேர்ந்ததுதான்.
நான் சிறுவயதாக இருக்கும் காலத்தில் நடந்த கோவில் திருவிழாக்கள் எனக்கு ஞாபகமிருக்கின்றது. திருவிழாக்காலங்களில் அங்குள்ள இடங்கள் கடைகளால் நிரம்பும். பல்வகை பொருட்களால் அந்தக் கடைகள் நிரம்பியிருக்கும். கடலை, கச்சான், சோழப்பொரி, இனிப்புபண்டங்கள், குளிர்களி இப்படி இன்னும் சொல்லலாம். அதுபோல கோவிலுக்கு தேவையான பொருட்கள் விற்கும் ஒரு சிலகடைகளும் இருக்கும். ஆனால் கோவிலுக்கான பொருட்கள் விற்கும் கடையிலும் ஏனைய கடைகளிலே கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே தேவைப்படும் காலத்தில் அவர்கள் சரியாக வியாபாரம் செய்ய தவறமாட்டார்கள். ஏனென்றால் இக்காலத்தை விட்டால் அவர்களுக்கு வருமானமும் இல்லை. வாழ்க்கையும் இல்லை. எனவே எதனை எப்போது செய்யவேண்டுமோ அதனை அப்போதே செய்யவேண்டும்.
“தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்” யாருக்கும் பழக்கம் மாறாது. இன்றைய அரசியல் தலைவர்கள் பலர் நீண்ட காலமாக அரசியலில் இருக்கிறார்கள். எங்களால் முடியாது என்றால் அடுத்தவர்களை அனுமதிக்கவேண்டும் அதுவும் நடப்பதாக தெரியவில்லை. இந்த அரசியல் தலைவர்கள் அன்றே தமிழர்களுக்கு தனிஉரிமை, தமிழருக்கு விடுதலை, தமிழருக்கு தனிநாடு என்று முழங்கியவர்கள். எனவே தலைவர்களின் வல்லமையை தமிழர்கள் அறிவார்கள். தமிழர்களின் இயல்பை அரசியல் தலைவர்கள் அறிவார்கள். இளைய சமுதாயம்கூட தமிழ்மக்களின் எதிர்காலத்தை சிந்திப்பதாக தெரியவில்லை. ஆகவே அரசியல் கூட்டுகள் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யுமா என்பது மக்களுக்கே தெரிந்த ஒன்று.
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுவில் கையோப்பமிட்டனர். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைமைப் பணிமனையில் இன்று நண்பகல் 12 மணிக்கு வேட்புமனுவில் 4 வேட்பாளர்கள் கையொப்பமிட்டனர்.
தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், ஈ.சரவணபவன், த.சித்தார்த்தன், கஜதீபன், கு.சுரேன், திருமதி சசிகலா ரவிராஜ், இம்மானுவேல் ஆனல்ட் மற்றும் தபேந்திரன் ஆகியோர் வேட்பாளர்களாக இணைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, ஈ.சரவணபவன், பா.கஜதீபன், தபேந்திரன் ஆகியோர் கையொப்பமிட்டனர்.
ஏனைய ஆறு பேரும் நாளை கையொப்பமிடுகின்றனர். இதேவேளை, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பு மனு நாளை முற்பகல் 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் மாவட்ட செயலக தேர்தல் பணிமனையில் கையளிக்கப்படவுள்ளது.
இதேவேளை யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் இம்மானுவேல் ஆனோல்ட், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் வேட்பாளராகக் களமிறக்கப்படுகிறார். யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்துக்கான வேட்பு மனு தயாரிக்கும் பணி யாழ்ப்பாணம் மார்டீன் வீதியில் உள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைமையக பணிமனையில் இன்று முற்பகல் 11 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெறுகிறது.
தலைவர் மாவை சேனாதிராசா முன்னிலையில் இடம்பெறும் இந்த நடவடிக்கையில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் இம்மானுவேல் ஆனோல்ட், வேட்பாளராக இணைக்கப்பட்டுள்ளார். தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், ஈ.சரவணபவன், த.சித்தார்த்தன், கஜதீபன், கு.சுரேன், திருமதி சசிகலா ரவிராஜ், இம்மானுவேல் ஆனல்ட் மற்றும் தபேந்திரன் ஆகியோர் வேட்பாளர்களாக வேட்புமனுவில் கையொப்பமிட்டனர்.
அத்துடன், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரான சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் தேசியப் பட்டியலில் இடமளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொடர்பாக விழிப்புணர்வில் ஈடுபட்ட ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி பரா.நந்தகுமார் தாக்கப்பட்டுள்ளார். அவருடன் சென்ற அவரது நண்பர் மீதும் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
திங்கட்கிழமை (16) பிற்பகல் நல்லூர் றியோ ஐஸ்கிறீம் விற்பனை நிலையத்திற்கு முன்பாக இச்சம்பவம் இடம்பெற்றது. றியோ பணியாளர்களும் மேலும் சிலரும் இணைந்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய றியோ பணியாளர்கள் இருவர் யாழ்ப்பாணப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் தப்பியோடிவிட்டனர் என பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வைத்திய கலாநிதி நந்தகுமார் மற்றும் அவரது நண்பரான யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தை சேர்ந்த த.சிவரூபன் ஆகியோர் இன்று பிற்பகல் கொரோனா விழிப்புணர்வில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது, வெளிநாட்டு பிரஜைகள் இருவர் றியோ ஐஸ் கிறீம் விற்பனை நிலையத்தினுள் செல்வதை அவதானித்தனர்.
அங்கு சென்ற மருத்துவரும் அவரது நண்பரும் குறித்த வெள்ளை இனத்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்கள் என்பதை றியோ விற்பனையாளர்களுக்கு எடுத்துக் கூறினர்.
இது தொடர்பாக யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரிக்கு தகவல் வழங்கிய வைத்தியர் நந்தகுமார் அவர் வரும்வரை தமது நண்பருடன் அங்கு காத்திருந்தார். இதன்போது றியோ ஐஸ்கிறீம் நிலைய பணியாளர்களும் வேறு சிலரும் திடீரென இருவர் மீதும் மோசமாக தாக்குதல் நடத்தினர். கற்களாலும் எறிந்தனர்.
இதையடுத்து, அங்கிருந்து தப்பிச்சென்ற இவர்கள் இது தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து, அங்கு சென்ற பொலிஸார் தாக்குதலாளிகள் இருவரை மட்டும் கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர்.
சம்பவம் தொடர்பாக வைத்தியரும் அவரது நண்பரும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளனர்.
உலகளாவிய ரீதியில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வைத்தியர் ஒருவர் தாக்கப்பட்டமை மருத்துவ துறையினரிடையே அதிர்ச்சியையும் கவலைகளையும் ஏற்படுத்தியுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்கத்கது.