Home Blog Page 2361

அரச, தனியார் ஊழியர்களுக்கான விசேட அறிவித்தல்.

கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை தடுப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள வேலைத்திட்டங்களை வலுப்படுத்த மார்ச் மாதம் 30 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 03 ஆம் திகதி வரை வீட்டில் இருந்து பணி புரியும் காலமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ள நிறுவனங்களை தவிர அனைத்து அரசாங்க, அரை அரசாங்க மற்றும் தனியார் பிரிவுகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த காலப்பகுதியினை அரசாங்க பொது விடுமுறையாக கருதாமல், பொது சேவையினை தொடர்ந்தும் பேண வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், பொதுமக்கள் ஒன்று கூடுவதை தடுத்து சுய தனிமைப்படுத்தலுக்கு வழிவகுத்தல் இதன் நோக்கமாகும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையான காலப்பகுதி வீட்டிலிருந்தே பணி புரியும் வாரமாக ஏற்கனவே பிரகடனப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கில் தனிமைப்படுத்தப்பட்ட ஒருதொகுதியினர் முகாமிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் புணாணை மட்டக்களப்பு பல்கலைக் கழகம் மற்றும் மியான்குளம் இராணுவ தடுப்பு முகாம் போன்ற கொரோனா தடுப்பு முகாமில் கடந்த 14 நாட்களாக தடுத்து வைக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டவர்கள் எவ்விதமான நோய்த்தொற்றும் இல்லாத நிலையில் அவர்களின் குடும்பங்களுடன் இணைக்கும் பணி இன்று இடம் பெற்றது.

இராணுவத்தினரின் பஸ் மூலமாக புணாணை மட்டக்களப்பு பல்கலைக்கழக கொரோனா தடுப்பு முகாமில் இருந்து நான்கு பஸ் மூலமாக 125 பேரும், மியான்குளம் இராணுவ தடுப்பு முகாமின் கொரோனா தடுப்பு முகாமில் இருந்து ஒரு பஸ் மூலமாக 18 பேருமாக 143 பேர் இன்று காலை 08.00 மணியளவில் நிட்டம்புவ, கொழும்பு, குருநாகல், காலி, மாத்தறை போன்ற பிரதேசங்களுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் இராணுவத்தினர் அழைத்து சென்றுள்ளனர்.

இதில் கைக்குழந்தைகள், சிறுவர்கள் உட்பட பெரியோர்கள் முதல் அனைவரையும் அவர்களின் குடும்பங்களுடன் இணைக்கும் முகமாக பொலிஸ் பாதுகாப்புடன் இராணுவத்தினரால் அழைத்து சென்றுள்ளனர்.

கொரோனா தடுப்பு முகாமில் இருந்து வீடுகளுக்கு செல்லும் மக்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

வெளிநாட்டில் இருந்து வந்த எங்களை ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வழிகாட்டலில் தடுப்பு முகாம்களில் வைத்து பாதுகாப்பான முறையில் எங்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து தந்தமைக்காக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இராணுவத்தினருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், கொரோனா வைரஸ் இருப்பதாக சந்தேகம் வரும் பட்சத்தில் நாட்டின் நன்மை கருதி தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு சென்று தங்களையும், நாட்டு மக்களையும் பாதுகாத்துக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றனர்.
2222 2 கிழக்கில் தனிமைப்படுத்தப்பட்ட ஒருதொகுதியினர் முகாமிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

2222 1 கிழக்கில் தனிமைப்படுத்தப்பட்ட ஒருதொகுதியினர் முகாமிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

தளர்த்தப்பட்ட ஊரடங்கில் மக்கள் பொருட் கொள்வனவு

கொரணா அச்சுறுத்தல் காரணமாக தொடர்ச்சியாக அமுல்படுத்தப்பட்டுவரும் ஊரடங்கு சட்டம் இன்று காலை 06.00மணி தொடக்கம் சில பகுதிகளில் தளர்த்தப்பட்டது.

பொதுமக்கள் தமக்கு தேவையான பொருட்களை கொள்வனவுசெய்யும் வகையில் இன்று காலை முதல் பிற்பகல் 2.00மணி வரையில் இந்த ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மக்கள் இன்று காலை பொருட்கொள்வனவில் ஈடுபட்டுவருவதை காணமுடிந்தது.IMG 1741 தளர்த்தப்பட்ட ஊரடங்கில் மக்கள் பொருட் கொள்வனவு

சுகாதார துறையினரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய பல பகுதிகளில் மக்கள் தமக்கான பொருட்களை கொள்வனவு செய்துவந்த அதேவேளை சில பகுதிகளில் அதனை மீறிய வகையில் மக்கள் பொருட்கொள்வனவில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு மாநகரசபையின் பொதுச்சந்தையில் மக்கள் ஒன்றுகூடும் வகையில் தடுப்பதற்காக லேடிமனிங் வீதியில் விசேட சந்தை தொடர் அமைக்கப்பட்டு மக்கள் தமக்கான இடைவெளிகளை பேணி பொருட்கொள்வனவினை மேற்கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டன.

இதேபோன்று மட்டக்களப் கள்ளியங்காட்டில் சதோச கிளையொன்று மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால் திறந்துவைக்கப்பட்டு அதன் மக்களுக்கான பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டன.IMG 1739 தளர்த்தப்பட்ட ஊரடங்கில் மக்கள் பொருட் கொள்வனவு

அத்தியாவசிய பொருட்களை பொதுமக்கள் தடையின்றி பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

கட்டுப்பாடுகளை சரியாக கடைப்பிடிக்காது விடின் 2 இலட்சம் பேர் பாதிக்கப்படுவர்;1000 பேருக்கே சிகிச்சை வசதி

மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் சுயகட்டுப்பாடுகளை மேற்கொண்டு மாவட்டத்தில் அனைவரும் சுய தனிமைப்படுத்தல் செய்யாவிட்டால் மாவட்டம் பாரிய நெருக்கடிகளை எதிர்காலத்தில் எதிர்கொள்ளலாம் என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் மதனழகன் தெரிவித்தார்.

நேற்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கொரனா தொற்று செயலணி கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

மட்டக்களப்பு மக்கள் தனிமைப்படுத்த வேண்டும் எனவும் இல்லாவிட்டால் இரண்டு இலட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படலாம் என்றும் கொரோனா தடுப்பு செயலணியிடம் வைத்திய நிபுணர் எஸ். மதனழகன் எச்சரிக்கையாகத் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று ஒரு சங்கிலித் தொடர் எனவும் மாவட்டத்தை மூடி தனிமைப்படுத்தாவிட்டால் இவ்வாறு பாரிய விளைவு ஏற்படுவதைத் தடுக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் விசேட கூட்டம் நேற்று (புதன்கிழமை) மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் அரசாங்க அதிபரும் செயலணியின் தலைவருமாகிய கலாமதி பத்மராஜா தலைமையில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட மட்டு போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணர் எஸ்.மதனழகன் இந்த முன்னெச்சரிக்கையை விடுத்துள்ளார்.

அவர் தெரிவிக்கையில், “கொரோனா தொற்று ஒரு சங்கிலித் தொடர். ஏப்ரலில் காலநிலை மாறும்போது பிரச்சினை பெரிதாகத்தான் போகும். எனவே தனிமைப்படுத்தல் இல்லாமல் நெருக்கமாக இருந்தால் ஓட்டு மொத்தமாக ஒரு நாட்டை அழிக்கும்போது 45 தொடக்கம் 75 வீதம் அதன் பாதிப்பு இருக்கும்.

குறைந்தபட்சம் 40 வீதம் கொரோனா தொற்றுக்கு இந்த மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றால் 5 இலட்சம் பொதுமக்கள் வாழுகின்ற இந்த மட்டக்களப்பு மாவட்டத்தில் 2 இலட்சம் பேர் கொரோனாவினால் பாதிக்கப்படுவார்கள்.

இதைத் தடுக்கமால் போனால் இந்த 2 இலட்சம் பேரில் 80 வீதமான 1 இலட்சத்து 60 ஆயிரம் பேர் பேசாமல் இருப்பார்கள். மிச்சம் 40 ஆயிரம் பேருக்கு வைத்தியசாலையிலை விடுதி வசதி வேண்டும். இப்போது இருக்கின்ற மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஆயிரம் கட்டில் அல்லது மிஞ்சிப் போனால் 2 ஆயிரம் கட்டில்களைத்தான் ஒழுங்குசெய்ய முடியும்.

இந்த 40 ஆயிரம் பேரில் 10 ஆயிரம் பேருக்கு நாங்கள் அவசர சிகிச்சை ஒட்சிசன் வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் வரும். ஆனால் இன்றைய நிலைவரத்தின்படி மட்டக்களப்பில் 55 பேருக்குத்தான் அவசர சிகிச்சை ஒட்சிசன் வழங்க முடியும்.

இதன் தீவிரம் எந்தளவுக்கு இருக்கப் போகின்றது என ஆராயாமல் கல்யாண வீடுää சாவு வீடு போன்ற மற்றைய விடயங்களைக் யோசித்துக்கொண்டு கதைத்துவிட்டு தனிமைப்படுத்தல் இல்லாமல் இருந்தால் இந்த தொடர் சங்கிலித் தொற்றுநோயை நிறுத்தமுடியாமல் போகும்.

இந்த 6 மணித்தியால ஊரடங்குச் சட்டத்தைத் தளர்த்தி பொதுமக்களை பொருட்கள் வாங்க விடுவது கூட இந்தப் பாதிப்பைக் கொண்டுவரப் போகின்றது. அதேவேளைää நீங்கள் முகக் கவசம் அணிவதோ கையுறை போடுவதோ எதுவுமே 100 வீதம் இந்த தொற்றை கட்டுப்படுத்தப் போவதில்லை. இது பாதிப்பை கொண்டுவரப் போகின்றது.

எனவே முடியுமாயின் வீட்டுக்கு வீடு பொருட்களைக் கொண்டு சென்று வழங்கும் நடவடிக்கையை மேற்கொள்ளவும். அதற்கு ஒரு குழுவை நியமிக்கவும் இந்த மாவட்டத்தை ஒரு 14 நாட்கள் மூட முடியுமாக இருந்தால் அது இந்த வைரஸ் பரவலைத் தடுக்கும் ஒரு நல்ல செயலாக இருக்கும். ஆனால் இந்தத் தொற்று வந்தால் நிறுத்த முடியாமல் போகும்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் 100 எனக் காட்டப்படுவது 100 அல்ல. 20 ஆயிரம் பேருக்கு இந்தத் தொற்று இருக்கின்றது எனக் கணிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் நிச்சயமாக அதைவிடக் கூடுதலாகத்தான் இருக்கும்.

கண்டபடி தைக்கின்ற எந்தவெரு முகக் கவசமும் வேலைக்காகாது. எந்த விதமான துணியைப் போட்டாலும் அதில் மூக்கில் வருகின்ற ஈரப்பதன் படிந்ததும் அதில் வைரஸ் படியும். எனவே வெளிப்பக்கம் தண்ணீரை உறுஞ்சாததும் உட்பக்கம் எமது ஈரத்தை உறுஞ்சுவதுமான பொருத்தமான தரமான முகக் கவசத்தை பாவிக்கவேண்டும். அது இல்லாது எதைக் கட்டினாலும் வைரஸ் அதனூடாக உட்செல்லத்தான் போகின்றது.

எனவே அறிவுறுத்தலாக முகக் கவசம், கையுறை போன்றவைகளை அணிந்துகொண்டு சென்றால் வைரஸ் தொற்றாது என்ற எண்ணத்தை விடுத்து தனிமைப்படுத்தலை முறையாக முன்னெடுத்தால் மட்டுமே இந்தத் தொற்றைத் தடுக்க முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சிறுவர்களுக்கு நடக்கும் கொடுமை! விடுக்கப்பட்டது எச்சரிக்கை

நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட நிலையில் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவை 33 சத வீதத்தினால் அதிகரித்திருப்பதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் முதித விதானபதிரண தெரிவித்திருக்கிறார்.

எனினும் இவற்றில் பாலியல் ரீதியான துஷ்பிரயோக முறைப்பாடுகள் பதிவாகவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊரடங்குச்சட்டம் அமுலில் உள்ள காரணத்தினால் வன்முறையைப் பிரயோகிக்கும் நபரும் பாதிக்கப்படும் சிறுவரும் ஒரே வீட்டுக்குள் முடங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருப்பதே இதற்கு காரணமாகும்.

ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதன் பின்னரான 7 நாட்களில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு 111 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

அவற்றில் 36 முறைப்பாடுகள் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகளாகும்.

எனவே ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள இக்காலப்பகுதியில் சிறார்களை, பிள்ளைகளை பொறுப்புடன் பாதுகாப்பாகவும் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு பெற்றோர்களுக்கு உள்ளது.

தற்போது சிறுவர்கள் வீடுகளுக்குள் முடங்கிப்போய் உள்ள நிலையில் அவர்களது மனநிலை குறித்த புரிதலை பெரியோர் வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் எமக்குக் கிடைக்கப் பெறும் முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து நாம் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.

யாழ் மாவட்டத்தில் மீள அறிவிக்கும் வரையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்

யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது அமுலில் இருக்கும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் மீள அறிவிக்கும் வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

புத்தளம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாளை காலை 6 மணிக்கு நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் நிலவும் நிலைமையை கருத்தில் கொண்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் மாத்திரம் மீள அறிவிக்கும் வரையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஏனைய ஐந்து மாவட்டங்களிலும் முன்னர் குறிப்பிட்டது போன்று நாளை காலை மாலை 6 மணிக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டு மீண்டும் இரண்டு மதியம் 2 மணிக்கு அமல்படுத்தப்பட உள்ளது.

இவ்வாறு மீள அமுல்படுத்தப்படும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் 30 ஆம் திகதி காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு அன்றைய தினம் மதியம் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

பொதுமக்களை பரிசோதிக்கும் வைத்தியர்கள்- முல்லைத்தீவில் நடமாடும் மருத்துவ சேவை

முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு நேற்று நடமாடும் மருத்துவ சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனூடாக பொதுமக்களின் இல்லங்களுக்கு சென்ற மருத்துவ குழுவினர் பொதுமக்களின் இல்லங்களில் நோயளர்களை சந்தித்த வைத்தியர்கள் பரிசோதித்து மருந்துகள் வழங்கியுள்ளனர்.

முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி திருமதி நிரோசினி திலீபன் தலைமையில் வைத்தியர் நிரோசா, சிரேஸ்ட தாதியர் தர்மராசா சுகிந்தராசா, மருந்தாளர், பணியாளர்கள், வாகன சாரதி உள்ளிட்ட மருத்துவக்குழுவினரால் நடமாடும் சேவை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்படி இன்று உண்ணாப்புளவு, கள்ளப்பாடு வடக்கு, கள்ளப்பாடு தெற்கு, ஆகிய கிராமங்களுக்கு சென்ற வைத்தியர்கள் மருத்துவ சேவையினை வழங்கியுள்ளனர்.

மேலும் இதன் தொடர்ச்சியாக முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலையின் எல்லைக்குட்பட்ட உண்ணாப்பிளவு, கள்ளப்பாடு வடக்கு, கள்ளப்பாடு தெற்கு, வண்ணாங்குளம், மணற்குடியிருப்பு, முல்லைத்தீவு நகரம், கரைச்சிகுடியிருப்பு, செல்வபுரம், முள்ளிவாய்க்கால் கிழக்கு ஆகிய கிராமங்களுக்கு மருத்துவ சேவைகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 36 மணித்தியாலத்தில் எந்தவொரு கொரோனா நோயாளியும் பதிவாக வில்லை

இலங்கையில் கடந்த 36 மணித்தியாலத்தில் எந்தவொரு கொரோனா நோயாளியும் பதிவாக வில்லை என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் 16 நாட்களுக்கு இலங்கை கண்ட முதல் வெற்றியாக இது கருதப்படுகின்றது.

கடந்த 10ஆம் திகதியின் பின்னர் எந்தவொரு கொரோனா நோயாளியும் பதிவாகாத நாளாக நேற்றைய தினம் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் 99 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

IDH வைத்தியசாலையில் 88 பேரும், வெலிகந்த பிரதேச வைத்தியசாலையில் 10 பேரும், முல்லேரியா வைத்தியசாலையில் ஒரு நோயாளியும் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

மூன்று வெளிநாட்டவர்கள் உட்பட 255 பேர் வைத்திய கண்கானிப்பின் கீழ் உள்ளதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றுக்கு உள்ளான நோயாளிகளில் மூன்று பேர் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் நான்கு பேர் குணமடைந்த நிலையில் விரைவில் வீடு செல்லவுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டத்தை மீறிய 3076 பேர் இதுவரையில் கைது.

பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 3076 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் மோட்டார் சைக்கிள்கள் உட்பட 771 வாகனங்களும் கைப்பற்றப்பட்டதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இவற்றுள் 3 முச்சக்கர வண்டிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஊரடங்குச் சட்டத்தை நீடிப்பதா? அமைச்சரவையில் நேற்று ஆராய்வு

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை நீடிக்க அமைச்சரவை நேற்று நீண்ட ஆலோசனைகளை நடத்தியுள்ளது. அதேசமயம் ஊரடங்குச் சட்ட நேரம் அமுலில் இருந்தாலும் அத்தியாவசிய சேவைகளை தொடர்ச்சியாக வழங்குவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதியின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுக் காலை நடந்தது. இதன்போது கொரோனா வைரஸ் தாக்கம் குறித்தும் அது பெருமளவில் கட்டுக்குள் வந்திருப்பது குறித்தும் ஜனாதிபதி அமைச்சர்களுக்கு விளக்கினார்.

இன்னும் சில வாரங்களில் இது முழு அளவில் கட்டுக்குள் கொண்டுவரப்படுமென ஜனாதிபதி இங்குநம்பிக்கை வெளியிட்டார். ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு ஒரே நேரத்தில் மக்கள் அணி திரள்வதால் வைரஸ் தொற்று பரவும் அபாயம் இருப்பதாக அமைச்சர்கள் இங்கு சுட்டிக்காட்டினார்.

அதனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி சில மாவட்டங்களில் பகுதி பகுதியாக ஊரடங்கை அமுல்படுத்துவது பற்றி பாதுகாப்பு தரப்புடன் பேசப்படுமென குறிப்பிட்டார்.

புத்தாண்டு வருவதால் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்குமென்பதால் அதற்குமுன்னர் இதனைக் கட்டுக்குள் கொண்டுவர அரசு அதிகபட்ச முயற்சிகளை எடுப்பதாக இங்கு பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இக்கட்டான காலப்பகுதியில் மீனவர்கள் பிடிக்கும் மீன்களை கொள்வனவு செய்வதற்காக இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்திற்கு 600 மில்லியன் ரூபாவை வழங்க அமைச்சரவை தீர்மானித்தது. அதேசமயம் வடக்கு கிழக்கில் இந்த நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு துரித நிவாரணம் வழங்கப்படவேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இங்கு வலியுறுத்தியுள்ளார்.

நிவாரணப்பணிகளுக்காக இந்திய கடனுதவியின்ஒரு பகுதியை பயன்படுத்தவும் அமைச்சரவை உத்தேசித்துள்ளது. தோட்டத் தொழிலாளர்களுக்கும் விசேட கொடுப்பனவு வழங்கப்படவேண்டுமென அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் இங்கு கோரியுள்ளார். ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை கம்பனிகளிடம் கோரினாலும் அவை 900 ரூபா வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் தொண்டமான் இங்கு குறிப்பிட்டுள்ளார்.

அந்த விடயம் குறித்து பேசி இறுதி முடிவை எடுக்க அமைச்சரவை தீர்மானித்தது .அத்துடன் தொழிலாளர்களுக்கு பண்டிகைக்கால முற்பணம் முற்கூட்டியே வழங்கப்பட கம்பனிகளை வலியுறுத்தவும் முடிவு செய்யப்பட்டது.