Home Blog Page 2342

எழுவர் விடுதலை தொடர்பாக 57பேர் வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் காரணத்தினால், ராஜீவ் கொலைத் தண்டனைக் கைதிகளை பரோலில் அல்லது பிணையில் விடுதலை செய்ய வேண்டும் என்று 57பேர் இணைந்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

கி. வீரமணி, பழ.நெடுமாறன், கொளத்தூர் மணி, கு.இராமகிருஸ்ணன், வேல்முருகன் உட்பட 57பேர் இணைந்து விடுத்திருக்கும் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழக அரசே கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக உலக நாடுகள் கடுமையான பொருளாதார, சுகாதார நெருக்கடிகளை சந்தித்து வருகின்றன. இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் மிக விரைவாக கொரோனா பாதிப்பு பரவிக் கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தனி நபரும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்திக் கொண்டிருக்கின்றது. இல்லையென்றால் கொரோனா தொற்று எளிதில் பரவும் என அறிவித்துள்ளது. மேலும் உடல் பலவீனமாக உள்ளவர்களை இந்த வைரஸ் விரைவாக தொற்றி உயிரிழப்பில் கொண்டு போய் விடும் என்பதைப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். இது இடநெருக்கடியில் வாடும் சிறையாளர்களைக் கடுமையான நெருக்கடிக்கு தள்ளிக் கொண்டிருக்கின்றது. சில நாடுகளில் சிறையாளர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் கைதிகள் கூட்டமாக இருப்பதால், அங்கும் கொரோனா பரவும் அபாயம் இருப்பதாகத் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் சிறைக் கைதிகளுக்கு கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க, நாடு முழுவதும் உள்ள சிறைகளில் உள்ள விசாரணைக் கைதிகளாக உள்ளவர்களை பரோலிலோ அல்லது பிணையிலோ விடுவிக்கலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதேவேளை ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்கள் 29 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். கடந்த ஆண்டே உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியதன் அடிப்படையில் தமிழக அரசு ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தும் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருக்கின்றது. இறுதி முடிவு எடுக்கப்படும் வரை அவர்களுக்கு நீண்ட நாள் பரோல் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீண்ட காலமாக சிறையில் வாடும் கைதிகளுக்கு சிறுநீரகப் பாதிப்பு உள்ளிட்ட கடுமையான தொற்று நோய் இருப்பதால் அவர்களுக்கு எளிதில் பரவும் வாய்ப்பு உள்ளது. இது அவர்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் தமிழக சிறைகளில் கைதிகள் மிகவும் இடநெருக்கடியில் தான் இருந்து வருகின்றனர். சுகாதாரம் இல்லாமலும் மருத்துவமனை வசதிகளும் இல்லாமல் தான் இருந்து வருகின்றனர்.

எனவே தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் 7தமிழர் உள்ளிட்ட அரசியல் கைதிகளையும் இஸ்லாமிய சிறைக் கைதிகள் மற்றும் அரசியல் சிறைக் கைதிகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம். என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

இப்படிக்கு

கி.வீரமணி, பழ.நெடுமாறன் உட்பட 57 பேர் கையொப்பமிட்டுள்ளனர்.

கொரோனா வைரஸிற்கு எதிரான சுதேச வைத்திய முறைகள் குறித்து ஆராய்வு இராணுவத் தளபதி

கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்காக சுதேச வைத்திய முறைகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக தேசிய மருத்துவ வைத்தியர்களுக்கும், சுகாதாரத் துறை அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சிக்கும் இடையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ராஜகிரியவில் நடைபெற்ற கொரோனா வைரஸ் தடுப்பு தேசிய மையத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் தேசிய மருத்துவத்துறை மருந்துகளும், சுதேச மரு்துவத்துறை மருந்துகளும் கொரோனாவை கட்டுப்படுத்தும் என்பது குறித்து ஆராயப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தக் கலந்துரையாடலில் சுமார் 50 சுதேச வைத்தியத்துறை வைத்தியர்கள் கலந்து கொண்டதாகவும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.

ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி.

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனை பெறுமதி 200.46 ரூபாவாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 5194 பேர் மட்டுமே பாதிப்பு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5194ஆக அதிகரித்துள்ளது என்று இந்திய சுகாதார மற்றும் குடும்பநலத் துறை தெரிவித்துள்ளது.இவர்களில் 401 பேர் குணமடைந்துள்ளனர், 149 பேர் மரணமடைந்துள்ளார் மற்றும் 4643 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணிநேரங்களில் மட்டும் 773 பேருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளது மற்றும் 35 பேர் மரணமடைந்துள்ளார் என்று இன்று காலை சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரி
கொரோனா பரவல் இந்தியாவில் தொடங்கியபின் ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கையில் ஏற்பட்ட அதிகரிப்பு மற்றும் அதிகபட்ச மரணங்கள் நிகழ்ந்தது இதுதான்.

இந்தியாவிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 1018ஆக உள்ளது. 690 மற்றும் 576 எனும் எண்ணிக்கையுடன் தமிழகம் மற்றும் டெல்லி ஆகியவை இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில் உள்ளன.

முல்லைத்தீவில் படையினருக்கான தனிமைப்படுத்தல் மையங்கள்-மக்கள் எதிர்ப்பு

விடுமுறைக்கு சென்று வருகின்ற இராணுவத்தினரை தனிமைப் படுத்துவதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்புலவு மாதிரி கிராமத்தில் அமைந்திருக்கின்ற பாடசாலை வளாகத்தில் ஒரு முகாமும் அதேபோன்று பிலவுக்குடியிருப்பு பகுதியில் விடுவிக்கப்பட்ட மக்களுடைய காணிகளில் இருக்கின்ற பொது கட்டடத்தில் இன்னொரு முகாமும் தெரிவுசெய்து விடுமுறையில் சென்ற இராணுவத்தினர் அங்கு 14 நாட்கள் தனிமைப்படுத்துவதற்கு மக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுமுறையில் சென்று வருகின்ற இராணுவத்தினரை 14 நாட்கள் தனிமை படுத்துகின்ற நடவடிக்கை நேற்று முந்தினம் (05-04-2020) முதல் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

குறிப்பாக மாதிரி கிராமத்தைப் பொறுத்த அளவில் மிக நெருக்கமாக மக்கள் வாழ்ந்து வருகின்ற நிலையில் அந்த இடத்தில் இவ்வாறாக நோய்த்தொற்று ஏற்பட்டு இருக்கலாம் அல்லது ஏற்பட வாய்ப்புள்ளது என்ற அடிப்படையில் விடுமுறையில் சென்று வருகின்ற இராணுவத்தினரை தனிமைப்படுத்த அந்த முகாமை அந்த பகுதியில் அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

குறித்த பாடசாலையில் நேற்று முந்தினம் (05-04-2020) இராணுவத்தினர் கொண்டுவரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட மக்கள் குறித்த நடவடிக்கை மிகவும் அவசியமானது எமது மாவட்டத்தில் இதுவரை யாருக்கும் தொற்று ஏற்படவில்லை இருப்பினும் எவ்வளவே இராணுவ முகாம்கள் உள்ளன அதனைவிட கேப்பாபுலவு விமானப்படை முகாமில் காட்டு பகுதியில் அண்மையில் இந்தியாவில் இருந்து வந்த 203 பேர் தனிமைப்படுத்தப்பட்டு நேற்று(06-04-2020) விடுவிக்கப்பட்டனர் அவ்வாறான இடங்கள் இருக்கும் போது ஏன் மக்கள் செறிந்துவாழும் பகுதியில் இவற்றை அமைக்க வேண்டும் என கேள்வி எழுப்பியதோடு குறித்த செயலுக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

மக்களின் பட்டினி நிலைமை பற்றி கண்டுகொள்ளாத அரசாங்கம்-யோகேஸ்வரன்

அரசாங்கம் தேர்தலை மையப்படுத்திய செயற்பாடுகளை முன்னெடுக்கின்றதே தவிர கொரனா அச்சுறுத்தலினால் ஏற்படும் பட்டினை சாவை தடுப்பதற்கான திட்டங்களை முன்னெடுப்பதாகயில்லையென மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

அரசாங்கம் அனைத்து மக்களுக்கும் விசேட நிவாரண திட்டத்தினை அமுல்படுத்திவிட்டே ஊரடங்கு சட்டத்தினை அமுல்படுத்தவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

மட்டு.ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,

கொரனா அச்சுறுத்தல் காரணமாக ஜனாதிபதியினால் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.இந்தவேளையில் அன்றாடம் கூலித்தொழில் செய்வோர் தமது தொழிலை இழந்துள்ளனர்.ஊரடங்கினை அமுல்படுத்தியுள்ள அரசாங்கம் பெருமளவான மக்களுக்கான நிவாரணங்கள் வழங்கப்படவில்லை.சமுர்த்த உள்ளவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணமானது சமுர்த்தி பயனாளிகளின் கணக்கில் உள்ள நிதியிலேயே வழங்கப்படுகின்றது.

இந்த கொரனா காலத்தில் விசேட நிகழ்வாரண உதவிகளை வழங்கியதா என்பது மிகவும் குறைவானதாகவே இருக்கின்றது.சதொச மூலமாக மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை வழங்குவதாக கூறுகின்றது,ஆனால் களுவாஞ்சிகுடி,கொக்கட்டிச்சோலை பகுதிகளில் இருந்த சதோசவினை மூடிவிட்டார்கள்.இருக்கும் சதோசவில் குறைந்த விலையில் பொருட்களை கொள்வனவுசெய்யமுடியாதயுள்ளது.

அரசாங்கம் குறைந்த விலையில் பலநோக்கு சங்க வர்த்தக நிறுவனங்கள் மூலம் குறைந்த விலையில் பொருட்களை வழங்குவதற்கு நடவடிக்கையெடுக்கவேண்டும்.அரசாங்கம் சொல்வதை செய்வதாக இல்லை.

இந்த அரசாங்கம் தேர்தலை மையப்படுத்தியதாக செயற்படுகின்றதே தவிர கொரனாவினால் தொழில் இழந்த மக்களுக்கான நிவாரணங்கள் தொடர்பில் திட்டமிடுவதாக இல்லை.அவ்வாறானால் அரசாங்கம் அனைத்து மக்களுக்கும் விசேடமான நிவாரணத்தினை வழங்கிவிட்டு ஊரடங்கு சட்டத்தினை அமுல்படுத்தவேண்டும்.ஊரடங்கு சட்டமானது கட்டாயம் அமுல்படுத்தவேண்டும்.அதற்காக மக்களின் அன்றாட தேவையினை உதாசீனம் செய்யமுடியாது.

சாதாரண கூலித்தொழில் செய்வோர்,பெண் தலைமை தாங்கும் குடும்பத்தினர்,விசேட தேவையுடையவர்கள் கிராம புறங்களில் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.தொண்டர் அமைப்புகள் வழங்கும் நிவாரணங்களையே பிரதேச செயலகங்கள் மக்களுக்கு வழங்குகின்றன.

அரச நிவாரணங்கள் மக்களுக்கு சென்றடையவில்லை.ஜனாதிபதியும் பிரதமரும் எதிர்கால மக்களின் பட்டினி சாவுக்கு வழிவகுக்காமல் அவர்களுக்கான நிவாரணங்களை வழங்கமுன்வரவேண்டும்

முல்லைத்தீவு-நாயாறு விகாரையில் வேலைசெய்த நபர் திடீர் மரணம்.

முல்லைத்தீவு-நாயாறு குருகந்த ரஜமஹா விகாரையில் தங்கியிருந்த நபரொருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்த நபர் 47 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த இளைஞரின் திடீர் மரணம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இவர் நீண்ட காலமாக குறித்த விகாரையில் தங்கியிருந்ததாகவும், இவர் அங்குள்ள பிக்குகளுக்கு சேவை செய்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் விசித்திரமான காலநிலை.

சப்ரகமுவ, ஊவா, மத்திய, மேல், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

சூரியனின் தொடர்பான வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக இவ் வருடம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 14ஆம் திகதி வரை இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. வத்தளை, ஹுனுப்பிட்டிய, புட்டுபாகல, கினிகத்தேனை, ரம்புக்பொத்த, மெதவெல, கிரிவெல்கொட, நெவுகல மற்றும் கோமாரி ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.12 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

மழை நிலைமை: மன்னாரிலிருந்து புத்தளம், கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் சிறிதளவான மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்று : மன்னாரிலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் காற்றானது தென்கிழக்கு அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் நாட்டைச் சூழவுள்ளஏனைய கடற்பரப்புகளில் கிழக்கு முதல் தென்கிழக்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

கடல் நிலை: நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் அவ்வப்போது சாதாரண முதல் மிதமான கொந்தளிப்பாகக் காணப்படும்.

அனுமதி பத்திரம் ஏப்ரல் 30 வரையில்.

ஊரடங்குச் சட்ட அனுமதி பத்திரம் வழங்கும் புதிய முறையை ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதியுடன் நிறைவு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோவிட்-19 – இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு – உலகில் 81,887 பேர் பலி

கொரோனா வைரசின் தாக்கத்தினால் மேற்குலக நாடுகள் அதிக பாதிப்புக்களை சந்தித்து வருவதுடன், இதுவரையில் 81,887 பேர் பலியாகியுள்ளதுடன், 1,423,995 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 301,707 பேர் குணமடைந்துள்ளனர்.

அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இறந்தவர்களின் விபரம்:

இந்தாலி – 17,127

ஸ்பெயின் – 14,045

அமெரிக்கா – 12,746

பிரான்ஸ் – 10,328

பிரித்தானியா – 6,159

ஈரான் – 3,872

சீனா – 3,331

நெதர்லாந்து – 2,101

ஜேர்மனி – 2,016

பெல்ஜியம் – 2,035

சுவிற்சலாந்து – 821

கனடா – 377

இந்தியா – 150