வவுனியாவில் நேற்று பிற்பகல் வேளையில் காற்றுடன் கூடிய மழை பொழிந்து கொண்டிருந்த நேரத்தில் மினி சூறாவளி காரணமாக பத்துக்கு மேற்பட்ட வீடுகளின் கூரைகள் மற்றும் பயன்தரும் மரங்கள், பப்பாசித் தோட்டங்கள் மற்றும் பாடசாலை கட்டடம் என்பன பாரியளவிலசேதமடைந்துள்ளது.
வவுனியாவில் கடந்த சில நாட்களாக வெப்பமான காலநிலை நிலவிவந்திருந்ததுடன் இருநாட்களாக இடிமின்னலுடன் கூடியமழை பெய்துவருகின்றது.
இந்நிலையில் வவுனியா, சுந்தரபுரம் மற்றும் மணிபுரம் பகுதியில் இன்றயதினம் வீசிய மினி சூறாவளியில் பத்து வீடுகளின் கூரைகள் பாரிய சேதமடைந்துள்ளதுடன் சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலத்தின் பிரதான கட்டடங்களின் கூரைத்தகடுகளும் தூக்கிவீசப்பட்டடுள்து அதேவைளை விவசாயிகளின் பப்பாசித்தோடம் மற்றும் வீடுகளில் இருந்த பயன்தரும் மரங்கலான மா, பலா, தென்னை, வாழை, ஈரப்பலா ஆகிய மரங்களும் சேதமடைந்துள்ளது.
இதேவளை வவுனியா வைரவப்புளியங்குளம் வைரவர் கோவில் வீதியில் காணப்பட்ட பழமை வாய்ந்த மரமொன்றும்முறிந்து விழ்ந்தமையினால் குறித்த வீதியுடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருந்தது.
வவுனியா நாகர் இலுப்பைக்குளம் பகுதியில்மின்னல் தாக்கத்துக்குள்ளாகி குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
குறித்த நபர் இன்று மாலை தனது அயல் வீட்டு முற்றத்தில் நின்றிருந்த சமயம் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளார். இந்நிலையில் உடனடியாக அவர் அவரச அமலபுலன்ஸ் மூலம் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் முன்னமே அவர் மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த எஸ். மங்களேஸ்வரன் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே சாவடைந்துள்ளார்.
நாட்டில் நிலவும் ஊரடங்குச் சட்டம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கிராமத்து மக்கள் இயற்கையில் சீற்றத்துக்கும் முகம்கொடுத்து வருவது துன்பியல் சம்பவமாக பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரசின் தாக்கத்தினால் மேற்குலக நாடுகள் அதிக பாதிப்புக்களை சந்தித்து வருவதுடன், இதுவரையில் 88,279 பேர் பலியாகியுள்ளதுடன், 1,508,224 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 329,542 பேர் குணமடைந்துள்ளனர்.
அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இறந்தவர்களின் விபரம்:
அம்பாறை மாவட்டத்தின் முதலாவது கொரனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர் அக்கரைப்பற்றில் இனங்காணப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் டாக்டர் கு.சுகுணன் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று 19ஆம் வட்டாரம் காசிமாதி வீதியில் உள்ள வீட்டிலேயே இவர் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
கடந்த மார்ச் 16ஆம் திகதி கட்டாரில் இருந்து குறித்த நபர் உட்பட ஏழு பேர் அக்கரைப்பற்றுக்கு வருகைதந்துள்ளனர்.குறித்த ஏழு பேரும் தனிமைப்படுத்தப்பட்டு 14நாட்கள் பூர்த்தியானதன் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த நபர்களுடன் தனிப்படுத்தலில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர்களில் ஒருவருக்கு சோதனையின் பின்னர் கொரனா தொற்று உள்ளது இனங்காணப்பட்டுள்ள நிலையில் இப்பகுதியை சேர்ந்த ஏழு பேருக்கும் நேற்று முன்தினம் கொரனா தொற்று தொடர்பான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் ஒருவருக்கு கொரனா தொற்று உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஏனைய ஆறு பேருக்கும் தொற்று இல்லையென்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.அதனை தொடர்ந்து தொற்றுக்குள்ளான நபர் சிகிச்சைகளுக்காக வெலிக்கந்தை வைத்தியசாலையில் உள்ள கொரனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து குறித்த நபரின் குடும்பத்தினர்ääஅவரின் வான்சாரதி மற்றும் அவருடன் நெருங்கி பழகிய 09பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள தாராபுரம் கிராமம் இன்று புதன் கிழமை அதிகாலை முதல் எதிர் வரும் ஒரு வாரத்திற்கு முழுமையாக முடக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.
இவ்விடையம் தொடர்பாக அவர் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்;
கடந்த மாதம் 18 ஆம் திகதி மன்னார் தாரபுரம் கிராமத்தில் இடம் பெற்ற மரணச்சடங்கு ஒன்றில் கலந்து கொண்டு விட்டு புத்தளத்திற்குச் சென்ற ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த நபர் நோய் ஏற்பட்டு வைத்தியசாலைக்குச் செல்லவில்லை. குறித்த நபர் கடந்த 15 ஆம் திகதி இந்தோனேசியாவில் இருந்து இலங்கைக்கு வந்திருந்தார். அதற்கு பின் 18 ஆம் திகதி மன்னார் தாரபுரம் கிராமத்திற்கு வந்து மரணச்சடங்கில் கலந்து கொண்டு பின் மீண்டும் புத்தளத்திற்குச் சென்றுள்ளார்.
இந்த நிலையில் குறித்த நபர் புத்தளத்தில் இரண்டு வராங்கள் தனிமைப் படுத்தப்பட்டிருந்தார். பின்னர் சமூக ரீதியில் அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது அவர் நோய் தொற்றிற்கு உள்ளாகியுள்ளமை தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் அவர்கள் உடனடியாக மன்னாரில் உள்ள உறவினர்களுக்கு அறிவித்துள்ளதோடு, பொலிஸாருக்கும் அறிவித்துள்ளனர். உடனடியாக மன்னார் பொலிஸார் மற்றும் சுகாதார துறையினரும் குறித்த கிராமத்திற்குச் சென்று தாராபுரம் கிராமத்தில் உள்ள இரண்டு கிராம அலுவலகர் பிரிவுகளையும் எதிர் வரும் ஒரு வாரத்திற்கு முடக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த நபர் கடந்த 18 ஆம் திகதி மன்னாரிற்கு வருகை தந்திருந்தார். அவர் மன்னாரிற்கு வந்து மூன்று வாரங்களில் கழிந்துள்ள நிலையில் மேலும் ஒரு வாரம் தாராபுரம் கிராம மக்களை முடக்கி வைத்துள்ளோம்.
ஆவர்களுக்கு எதுவும் நோய் அறிகுறிகள் தென்படுகின்றதா? என்பதனை அவதானிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.குறித்த நபர் இங்கு வந்து நின்ற இரண்டு நாள் காலப்பகுதிக்குள் அவருடன் நெருங்கி பழகிய இரண்டு குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சமூக நோய் பரிசோதனையை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எங்களடைய நடவடிக்கைகளுக்கு தாராபுரம் கிராம மக்களும், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பூரண ஒத்துழைப்பை வழங்கி உள்ளனர். முழுமையாக முடக்கப்பட்ட தாராபுரம் கிராமத்தில் உள்ள மக்களுக்கு தேவையான உலர் உணவு பொருட்களை வினியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நாங்கள் பிரதேச செயலக அதிகாரிகளுக்கும் மாவட்டச் செயலக அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் அச்சமடைய தேவையில்லை. நோய் தொற்றிற்கு அடையாளம் காணப்பட்ட நபர் கடந்த 18 ஆம் திகதி இங்கு வந்துள்ளார். 19 ஆம் திகதி மீண்டும் புத்தளத்திற்கு சென்றுள்ளார். அவர் தாராபுரம் பகுதியை விட்டு எங்கும் செல்லவில்லை.
மரணச்சடங்கில் குறித்த கிராமத்தைச் சேர்ந்த அதிகலவானவர்ககள் கலந்து கொண்டுள்ளனர். இதன் காரணத்தினால் குறித்த கிராமம் முடக்கப்பட்டுள்ளது. இது வரை எந்த ஒரு நோயாளியும் கொரோனா வைரஸிற்கு உள்ளாகவில்லை.
இந்த நிலையில் தாராபுரம் கிராமத்தில் உள்ள இரண்டு கிராம அலுவலகர் பிரிவுகளையும் முடக்கியுள்ளோம். குறிப்பாக மன்னார் மாவட்டத்தின் ஏனைய பகுதி மக்களின் இயல்பு நிலையை தொடர்ந்தும் சிறந்த முறையில் பேனுவதற்காக குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மக்கள் பயப்படவோ அல்லது பதற்றப்படவோ தேவை இல்லை என என அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தாராபுரம் கிராமத்தைச் சுற்றி இராணுவம் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். குறித்த கிராமத்தில் இருந்து வெளியே செல்லவும், உள் நுழையவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சுமார் 500 குடும்பங்கள் வரை இவ்வாறு முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா நாகர் இலுப்பைக்குளம் பகுதியில்மின்னல் தாக்கத்துக்குள்ளாகி குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
குறித்த நபர் இன்று மாலை தனது அயல் வீட்டு முற்றத்தில் நின்றிருந்த சமயம் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளார். இந்நிலையில் உடனடியாக அவர் அவரச அமலபுலன்ஸ் மூலம் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் முன்னமே அவர் மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த எஸ். மங்களேஸ்வரன் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே சாவடைந்துள்ளமை குறிப்பிடதக்கது
வவுனியாவில் கடந்த சில நாட்களாக வெப்பமான காலநிலை நிலவிவந்திருந்ததுடன் இருநாட்களாக இடிமின்னலுடன் மிதமான மழை பெய்துவருகின்றமை குறிப்பிடதக்கது.
ஊரடங்கு தளர்த்தப்படும் நேரங்களில் எடுக்கப்பட்ட சில மாற்று நடவடிக்கைகளில் இன்னும் சில மாற்று நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளhttp://www.ilakku.org/wp-admin/admin.php?page=pvcp-listதாக வவுனியா நகரசபை தவிசாளர் கௌதமன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
கொரோனோ வைரஸ் தாக்கத்தினால் முன்னெடுக்கபட்டுவரும் ஊரடங்கு சட்டம் நாளை தளர்த்தப்படுகின்றது. எனவே அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக பொதுமக்கள் நகரை நோக்கி அதிகளவில் வரும் நிலை காணப்படுகின்றது. கடந்த திங்கட் கிழமை ஊரடங்குசட்டம் தளர்தப்பட்டபோது அதிகமான பொதுமக்கள் நகரை நோக்கி வருகை தந்தமையால் திட்டமிட்ட வகையில் சன நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் போயிருந்தது. இதனால் வைரஸ் தாக்கம் இலகுவாக பரவகூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.
எனவே நாளையும் அந்த நிலை ஏற்படுவதற்கு அதிகமான வாய்ப்புள்ளது. அதனை தடுக்கும் நோக்கில் பல்வேறு மாற்று நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்துள்ளோம் . அந்தவகையில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும்போது விவசாயிகள் தங்களது உற்பத்தி பொருட்களை தாங்களே எடுத்துவந்து விற்பனை செய்துகொள்ள முடியும். அதற்காக சில பகுதிகளை நாம் ஒதுக்கியுள்ளோம்.
காமினி மகாவித்தியாலய விளையாட்டு மைதானம் , ஹொறவபொத்தான வீதியில் ரோயல் உணவகத்திற்கு முன்பாகவும், தமிழ்மத்திய மகாவித்தியாலத்திற்கு முன்பான பகுதி மற்றும் புதியபேருந்து நிலையத்திற்கு முன்பான பகுதிகளில் அவற்றை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.
அத்துடன் சன நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கிலும், சமூக இடைவெளியினை பேணும் வகையிலும் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் காமினி மகாவித்தியாலய மைதானத்திற்குள் மரக்கறி வகைகள் மற்றும் விவசாய உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யவும், மீன், இறைச்சி, தேங்காய் ஆகிய பொருட்களை காமினி மகாவித்தியாலய மைதானத்திற்கு வெளியிலும், வாகன தரிப்பிடத்தினை காமினி மகாவித்தியாலயத்திற்கு முன்பாகவுள்ள பிரதான வீதியோரத்திலும் நிறுத்துவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அதிகமான சனநெரிசலை கட்டுப்படுத்தும் நோக்குடன் சில வீதிகளை ஏற்கனவே மூடியுள்ளோம். அவ்வாறாக மூடப்பட்ட வீதிகள் தொடர்ந்து அமுலில் இருக்குமெனவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு ஊரடங்கு தளர்த்தப்படும் நிலையில் மக்கள் நலன் கருதி சமூக இடைவெளியினை பேணவே இவ்வாறான சில மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும்,
தற்போது வெயில் அதிகமாக காணப்படுவதனால் காமினி மகாவித்தியாலய மைதானத்திற்குள் வியாபார நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் தற்காலிக பந்தலினை கொண்டுவந்து தாங்களே அமைத்து வியாபார நடவடிக்கையில் ஈடுபடுமாறும்
தற்போது நாட்டில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தை எதிர்கொள்வதற்காக இந்தியா 10 தொன் உயிர் காக்கும் மருந்துகளை இலங்கைக்கு இலவசமாக அனுப்பி வைத்துள்ளது.
இந்த மருந்துகளை இலங்கை அரசு கேட்டுக் கொண்டதற்கமையவே எயார் இந்தியா சிறப்பு விமானத்தின் மூலம் இவற்றை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது.
இந்தியத் தூதரகம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையுடன் மழையிலும் வெயிலிலும் இணைந்து நிற்கும் இந்தியா. இந்தியாவின் உறுதிப்பாட்டின் மற்றொரு வெளிப்பாடு இது.
சொந்த உள்நாட்டு சவால்கள் மற்றும் தடைகள் இருந்த போதிலும் இந்தியா தனது வளங்களையும், நிபுணத்துவத்தையும் தனது நண்பர்கள் மற்றும் கூட்டாளர்களுடன் பகிர்ந்து கொள்வதில் எப்போதும் நம்பிக்கை கொண்டுள்ளது என்று இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நாட்டில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தை எதிர்கொள்வதற்காக இந்தியா 10 தொன் உயிர் காக்கும் மருந்துகளை இலங்கைக்கு இலவசமாக அனுப்பி வைத்துள்ளது.
இந்த மருந்துகளை இலங்கை அரசு கேட்டுக் கொண்டதற்கமையவே எயார் இந்தியா சிறப்பு விமானத்தின் மூலம் இவற்றை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது.
இந்தியத் தூதரகம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையுடன் மழையிலும் வெயிலிலும் இணைந்து நிற்கும் இந்தியா. இந்தியாவின் உறுதிப்பாட்டின் மற்றொரு வெளிப்பாடு இது.
சொந்த உள்நாட்டு சவால்கள் மற்றும் தடைகள் இருந்த போதிலும் இந்தியா தனது வளங்களையும், நிபுணத்துவத்தையும் தனது நண்பர்கள் மற்றும் கூட்டாளர்களுடன் பகிர்ந்து கொள்வதில் எப்போதும் நம்பிக்கை கொண்டுள்ளது என்று இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி அனுப்பப்பட்ட மருந்துகள் நேற்று மாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தன.
இந்த நெருக்கடி மிக்க சூழலில் இலங்கை மக்களைக் காப்பாற்றுவதற்காக மருந்துகளை இலவசமாக கொடுத்து உதவிய இந்தியப் பிரதமர் மோடிக்கும் இந்திய மக்களுக்கும் கோத்தபயா ராஜபக்ஸ நன்றி தெரிவித்து தனது ருவிற்றர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ஆங்கில மருத்துவத்தின் வளர்ச்சியானது உலகலாவிய ரீதியில் பெரும் வளர்ச்சியினை எட்டி சென்ற போதும் இன்று உள்ளூர் மருத்துவம் கை மருத்துவம், பாட்டி வைத்தியம் மற்றும் மூலிகை மருத்துவத்தின் தேவையினையும் மனிதர்கள் நாடி நிற்கின்றனர்.
நவீன அறிவியலாளர் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் மருத்துவ முறையினை தரமானது, நம்பகத்தன்மையானது என கட்டமைத்தனர். காலனித்துவ கல்வி முறையின் ஊடாக மேற்கத்தய மருத்துவமான ஆங்கில மருத்துவ முறை கொண்டு வரப்பட்டது. “மிசனரி கல்வி” என்ற முறையின் ஊடாக அறிவாற்றல், விழிப்புணர்வு, சிந்தனை வளர்ச்சி எனும் காலனிய கொள்கையினை உள்ளூர் மக்கள் இடத்தில் பரப்பவும் மருத்துவத்தின் மூலம் தம் இலக்கினை நிறைவேற்றவும் வகையிலான சமூகத்தினை உருவாக்கினார்கள்.
இன்று மனிதரின் ஆரோக்கிய வாழ்க்கையினை கூட நுகரும் பொருளாக மாற்றியுள்ளனர்.ஆனால் உள்ளூர் மருத்துவமானது உள்ளூர் அறிவு திறனுடன் காலம் காலமாக பயின்றும் பயன்பாட்டிலும் பரிசோதனையிலும் இருந்து வந்துள்ளது.
அந்நிய காலனித்துவ சிந்தனையானது, எமது பாரம்பரியம், பண்பாடு, பண்பாடு,வாழ்வியலுடனான உள்ளூர் மருத்துவம்,கை மருத்துவம்,பாட்டி வைத்தியம் மற்றும் மூலிகை மருத்துவம் ஆகியவற்றினை தரமற்றவை, தரமற்ற மருத்துவம், சாதி சமூக நிலை சார் மருத்துவம் என பாகுப்படுத்தி தரமிழக்கச் செய்துள்ளதோடு உள்ளூர் மருத்துவத்தினை வணிக நோக்காகவும் நுகர்வு பொருளாகவும் மாற்றியமைத்தது.
இருந்தும் உள்ளூர் மருத்துவமானது மரபு ரீயாக ஒரு சந்ததியினரிடம் இருந்து கற்று அடுத்த சந்ததியினர் பார்த்து செயல்முறையாக கற்றுக் கொண்டு காலம் காலமாக வளர்ந்து வந்ததுடன் இன்று அனைவரையும் உள்ளூர் மருத்துவம், கை வைத்தியம், பாட்டி வைத்தியம் மற்றும் மூலிகை மருத்துவத்தின் முக்கியத்துவத்தினை திரும்பி பார்க்கவும் வைத்துள்ளது.
உலகில் எங்கே தொற்று நோயினால் இறந்துவிடுவோமோ? என்ற பயத்தில் உள்ளூர் மருத்துவத்தினை தேடி ஓடுகின்றோம். சிறிய காயத்திற்கு கூட ஆங்கில மருத்துவத்தில் தஞ்சமடைந்து கிடந்த மனிதர் தற்போது பெருங்காயம், மஞ்சல்,கொத்தமல்லி, வேப்பம் இலை என மூலிகைகளைத் தேடி அலைகின்றனர்.
காலனிய ஆதிக்கத்தின் பின் மேற்கத்தய நாடுகள் அறிமுகப்படுத்திய உணவே நாகரீகம் ஆடம்பரம் என எண்ணி இருந்தனர் ஆனால் இப்பொழுது நோய் எதிர்ப்பு சக்தியினை வளர்த்துக்கொள்ள உள்ளூர் மருத்துவம் சார் உணவுகளையும் மூலிகை இலை வகையினையும் தேடி திரிந்து வாங்கி உண்ணுகின்றனர்.
உள்ளூர் மருத்துவம், கை மருத்துவம்,பாட்டி வைத்தியம் மற்றும் மூலிகை மருத்துவத்தின் தேவையினையும் உணவு, உபசரிப்பு மற்றும் பழக்க வழக்கத்துடனான நோயற்ற ஆரோக்கிய வாழ்க்கையினையும் நோய் எதிர்ப்பு சக்தியினையும் வளர்த்துக்கொள்ள வேண்டுமென்று வீட்டில் நிற்க நேரம் இல்லாத மனிதர் நின்று யோசிக்கின்றனர்.
நவீன மருத்துவத் துறையானது உலகினை மிஞ்சி வேற்று கிரகம் வரை சென்று கொண்டுருக்கின்ற போதும் இன்றும் எம் பெரியோர்கள் உள்ளூர் மருத்துவத்தினையும் இயற்கை மூலிகையின் அவசியத்தினையும் ஆரோக்கியமானது என அழியாது காலம் காலமாக பயின்றும் பயன்பாட்டிலும் வளர்த்து வந்துள்ளனர்.
உள்ளுர் மருத்துவம் இருந்ததினாலும் இப்பொழுது இருப்பதாலும் தேடி திரிகின்றோம் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரித்துக் கொள்வதற்கு. முற்காலத்தில் கூட்டாக வாழ்வதே ஆரோக்கிய வாழ்வு என்ற நிலை மாறி இன்று தனித்தும்,தம்மை தாமே தனிமைப்படுத்தி கொண்டு தொற்றுக்களில் இருந்து தப்பித்துக் கொள்ள வீடுகளில் முடங்கி வாழ வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
உள்ளூர் மருத்துவத்தினையும் இயற்கை மூலிகையினையும் கையாண்டு வந்த சமூகத்திடம் எந்த விதமான கொடிய வகையான நோய்களோ தொற்றுக்களோ தாக்கவில்லை. தாண்டி தாக்கிய போதும் எமது முன்னோர்கள் தாக்கத்திற்கு முகம் கொடுக்க உள்ளூர் மருத்துவ முறையினை கையாண்டுள்ளதோடு நோய்களினையும் குணப்படுத்தியுள்ளனர்.
பாரம்பரியமாக பின்பற்றி வரும் உள்ளூர் மருத்துவமானது இயற்கையுடனும் வாழ்வியலுடனும் இணைந்து காணப்பட்டதுடன் உணவு உபசரிப்பு மற்றும் பழக்கவழக்கத்துடன் உள்ளூர் மருத்துவ முறையானது அதிகம் அதிகமாக பயன்பாட்டில் இருந்தது.
எனவே இன்று உள்ளூர் அறிவு திறன், உள்ளூர் மருத்துவம் என்பன ஆய்வுகளுக்கும் கற்கை முறைக்கும் மாத்திரமின்றி பிரயோகித்தல்,கற்றல் நடைமுறையில் மீள் உருவாக்கப்பட்டு உள்ளூர் மருத்துவத்தில் பயன் அடைய வேண்டும்.
காலனிய நீக்க சிந்தனையுடன் கேள்விக்கு உட்படுத்தல் மற்றும் அறிவு பூர்வமான சிந்தனை செயல்பாடுகளுக்கு ஏற்ப உள்ளூர் மருத்துவம், மூலிகை மருத்துவம் மற்றும் கை வைத்தியத்தினை கற்றல் கற்பித்தல் செயற்படுத்தல் என மேற்கொள்ளப்பட வேண்டிய தேவை அதிகம் உருவாகி வருகின்றது.
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் நோய் தொற்று ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களை பாதித்துள்ளது. இந்த நோயை முற்றிலும் ஒழிக்க உலகம் முழுவதும் சுகாதாரப் பணியாளர்கள் போராடி வருகின்றனர்.
ஆனால் இதே காலகட்டத்தில் கோவிட்-19 வைரஸ் தொற்று குறித்துப் பேசும் உலகத் தலைவர்கள் சிலர் சில நேரங்களில் பொருத்தமற்ற கருத்துகளைப் பேசுகின்றனர், பொருத்தமற்ற நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
மேலும் வைரஸ் குறித்து சில தவறான தகவல்களையும் அவர்கள் கூறுகின்றனர்.
கடந்த சில வாரங்களில் சில தலைவர்கள் இந்த உலகளாவிய தொற்றை அணுகும் முறை மாறியுள்ளது. எடுத்துக்காட்டாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மேற்கொள்ளும் அணுகுமுறையைக் கூறலாம். ஆனால் இன்னும் சிலர் தங்கள் எதிர்மறையான, ஆபத்தான நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்ளவே இல்லை.
இப்படி உலகத் தலைவர்கள் சிலர் கொரோனா பற்றிப் பேசிய சர்ச்சையான மற்றும் தவறான கருத்துகளின் தொகுப்பு இது.
”நாங்கள் வைரசை கட்டுக்குள் வைத்துள்ளோம்”
அமெரிக்காவில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதை உறுதி செய்து இரண்டு நாட்களுக்கு பிறகு ஜனவரி 22ம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கொரோனா வைரஸ் தொற்று குறித்து சி.என்.பி.சி செய்திக்கு அளித்த நேர்காணலில் இவ்வாறு கூறினார்.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இப்போது உலகிலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ள நாடாக அமெரிக்கா இருக்கிறது. ஏப்ரல் 7ம் தேதி நிலவரப்படி அமெரிக்காவில் மட்டும் 3,68,376 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவிக்கிறது.
இதுவரை இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுடன் ஒப்பிடுகையில் அமெரிக்காவில் மருத்துவ உபகரணங்களும் போதிய எண்ணிக்கையில் இல்லை. அங்கு மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. மேலும் கொரோனாவால் அமெரிக்காவில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 2,50,000ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளது என அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
”இது சாதாரண பறவைக்காய்ச்சல் போன்றது”
பிரேசில் பிரதமர் சயிர் போல்சனாரூ பல சர்ச்சைக்குரிய கருத்துகளை முன்வைத்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் இந்த தொற்று குறித்து அவர் கூறிய கருத்துகளால் பலர் சாலைகளுக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தனது உரையின்போது கொரோனா வைரசின் அபாயங்களை குறைத்துமதிப்பிட்டதோடு, சமூக இடைவெளி குறித்து அவர் கருத்துகளை மிகவும் தைரியமாக முன்வைப்பதுபோல காட்டிக்கொண்டார்.
பிரேசிலில் உள்ள மாகாண ஆளுநர்கள் தங்கள் மாகாணத்தை முடக்க முயற்சித்து வெளியிடும் அறிக்கைகளுக்கு எதிராகவும் இவர் அழுத்தம் கொடுக்கிறார். பிரேசில் சுகாதாரத்துறை அளித்த தகவலின் படி கடந்த வாரம் நான்கே நாட்களின் அந்த நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7000ஐக் கடந்துள்ளது.
”உங்களுக்கு தொல்லை கொடுப்பதற்கு பதிலாக உங்களை புதைத்து விடுகிறேன்”
ஃபிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டோ தனது நாட்டு மக்களிடம் இந்த மிரட்டலை விடுத்தார். கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து நாட்டை காப்பாற்றத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ரோட்ரிகோ டுடெர்டே மேற்கொண்டார். நாட்டை முடக்குதல், சமூக இடைவெளி குறித்த விழிப்புணர்வு என பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. ஆனால்உணவுப் பற்றாக்குறையால் அங்கு போராட்டம் நடைபெற்றது.
விதியை மீறி போராட்டத்தில் ஈடுபடுபவர்களை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்துவர் என்று அதிபர் அப்போது எச்சரித்தார்.
”அரசாங்கத்தை மிரட்ட வேண்டாம். அரசாங்கத்திற்கு சவால் விடாதீர்கள். நீங்கள் தோற்று விடுவீர்கள்,” என்று ஏப்ரல் 2ம் தேதி பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்தார் அவர்.
பிலிப்பைன்ஸில் 2,300 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெலாரஸ் அதிபர் அலெக்ஸாண்டர் லூக்காஷென்கோ மற்றவர்கள் புருவத்தை உயர்த்தும் அளவிற்கு கொரோனா பாதிப்பை வேடிக்கையாக கையாண்டார்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முயற்சிக்க வேண்டும் என்ற ஆலோசனையை கேட்டு சிரித்தபடியே ”வைரஸ் இங்கு சுற்றி திரிவதை என்னால் பார்க்க முடியவில்லை” என்றுகூறினார். உள்ளரங்கில் நடைபெற்ற ஹாக்கி போட்டியை கண்டவாறு தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், இந்த அரங்கில் உள்ள மக்கள் அனைவரும் குளுமையில் இருப்பதால் அவர்கள் நலமுடன் இருக்கிறார்கள், அவர்களை வைரஸ் தாக்காது என்று கூறினார்.
வைரஸ் குறித்த அச்சங்களைப் பற்றி குறிப்பிட்ட அவர், இது “ஒரு மனநோயைத் தவிர வேறொன்றுமில்லை” என்று விவரித்தார். ஓட்கா உள்ளிட்ட சில மதுபானங்கள் நம்மை வைரஸ் பாதிப்பில் இருந்து காப்பாற்றும் எனவும் அவர் கூறினார். பிறகு அவரே இந்த கருத்துகள் கேலியானவை என்று கூறி பின்வாங்கினார்.
ஐரோப்பாவில் ஒரு கோடி மக்கள் தொகை கொண்ட நாடு பெலாரஸ். இங்கு 150க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
‘உங்கள் குடும்பதினரை சாப்பிட வெளியே அழைத்துச் செல்லுங்கள்’
மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மானுவேல், கோவிட்-19 வைரஸ் பரவுவது குறித்து பொது சுகாதார துறை அதிகாரிகளின் ஆலோசனைகளுடன் தொடர்ந்து முரண்பட்டார்.
மேலும் பரவிவரும் வைரஸ் பாதிப்பை பொருட்படுத்தாமல் நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு, அவர் சந்தித்த சில குழந்தைகளுக்கு முத்தமும் தந்தார்.
அமெரிக்கா போல மெக்சிகோவில் இது வரை பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும் மெக்சிகோவில் 7,00,000 பேர் வைரசால் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. மார்ச் 30ம்தேதி மெக்சிகோவில் சுகாதார அவரச நிலை அறிவிக்கப்பட்டாலும், 50 பேர் வரை கூடும் பொதுக்கூட்டங்கள் இன்னும் நடைபெற்றுதான் வருகின்றன.
”தடைகள் விதித்த நாடுகளை தண்டிக்க இறைவன் கொரோனா வைரசை படைத்துள்ளார்”
ஜிம்பாப்வே அதிபர் எமர்சன் முனங்காக்வா சர்ச்சையான கருத்து எதையும் கூறவில்லை. ஆனால் தமது அமைச்சர் ஒருவர் கூறிய கருத்தை அவர் சமாளிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.
தங்கள் நாட்டின் மீது பொருளாதாரத் தடைகள் விதித்த மேற்கத்திய நாடுகளை கடவுள் கொரோனா வைரஸ் மூலம் பழிவாங்குவதாக ஜிம்பாப்வே பாதுகாப்பு அமைச்சர் ஒப்பா முச்சின்குரி கூறிய கருத்தை மறுத்து முனங்காக்வா கருத்துத் தெரிவித்தார்.
“இந்த மாதிரியான வைரஸ் தொற்றுக்கு விஞ்ஞான விளக்கங்கள் உள்ளன, வைரசுக்கு எல்லைகள் இல்லை, மற்ற இயற்கை நிகழ்வுகளைப் போல இதற்காகவும் யாரையும் குறை சொல்ல முடியாது” என்று எமர்சன் முனங்காக்வா கூறினார்.
போதிய மருத்தவ வசதிகள் இல்லாத வறுமை மிக்க நாடு இது என்பதால், கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்தால் இங்கே அதிகம் பாதிப்பு இருக்கும் என்று அச்சம் நிலவுகிறது.
”அமெரிக்காவிற்கு எதிரானவர்களையே இந்த வைரஸ் அதிகம் பாதித்துள்ளது”
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் எதிரிகளிடையே கொரோனா வைரஸை பரப்பியதாக செல்வாக்குமிக்க இராக்கின் ஷியா பிரிவு மதகுரு முக்தாதா அல் சதர் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தவிர இன்னும் நிறைய சர்ச்சைகளுக்கு முக்தாதா அல் சதர் காரணமாகிவிட்டார்.
சமீபத்தில் வாரங்களில், இராக் அதிகாரிகள் வைரஸைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை விட்டுவிட்டு, தொடர்ந்து பெரிய அளவில் பிரார்த்தனை கூட்டங்களை நடத்தும் படி இவர் அறிவுறுத்தினார்.
இது தவிர ஒரு பாலினத்தவர்கள் திருமணம் செய்யும் சட்டத்தை நடைமுறைப்படுத்த விரும்பிய நாடுகளே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் இவர் கூறினார். எடுத்துக்காட்டாக சீனா மற்றும் இத்தாலியை இவர் சுட்டிக்காட்டினார். எனவே இந்த சட்டத்தை நிராகரிக்க அனைவரும் முன்வரவேண்டும் என்றும் ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டிருந்தார்.
உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைப்படி இராக்கில் கொரோனா வைரசால் நிறைய உயிரிழப்புகள் ஏற்படும் என்று கருதப்படுகிறது.
நாட்டில் கோவிட் -19 பாதிப்புகள் குறித்த தகவல்களை வேண்டுமென்றே தடுத்து நிறுத்தியதாக இந்தோனீசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ, ஒப்புக்கொள்கிறார். மக்கள் பீதி அடைந்து உணவுப்பொருட்கள் மற்றும் தேவையான பொருட்களை வாங்க அதிகம் நடமாட ஆரம்பிப்பார்கள் என்பதால் அமைதி காத்ததாக கூறுகிறார்.
”வைரஸ் குறித்த சில தகவல்களை பொதுமக்களிடம் கூறி, அச்சத்தை அதிகரிக்க விரும்பவில்லை”
இந்தோனீசியாவில் மார்ச் 2ம் தேதி ஒருவர் கூட கோவிட் 19 வைரசால் பாதிக்கப்படவில்லை. ஆனால் தற்போது 1500ருக்கும் அதிகமானோருக்கு அங்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மார்ச் 31ம் தேதி அங்கு தேசிய அவசர நிலையும் அறிவிக்கப்பட்டது.
சில மூலிகை பானங்கள் இந்தோனீசிய மக்களுக்கு கொரோனா வைரசை எதிர்கொள்ளும் சக்தியை கொடுத்துள்ளது என அந்நாட்டு தேசியப் பேரிடர் அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
”நோயாளிகளுக்கு நான் கை கொடுத்தேன்” – பிரிட்டன் பிரதமர்
மார்ச் 3ம் தேதி பிரிட்டனில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், ”நேற்று இரவு மருத்துவமனையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, நான் கைகொடுத்தேன், கை குலுக்குவதால் தொற்று பரவும் என்ற கருத்தை பொருட்படுத்த வேண்டாம்” என்றார். ஆனால் உண்மையில் மருத்துவமனையில் இருந்த ஊழியர்கள் மற்றும் மருத்துவர்களிடம் மட்டுமே போரிஸ் ஜான்சன் கை குலுக்கியது தெரிய வந்தது.
மார்ச் 27ம் தேதி போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.