Home Blog Page 2334

விவசாயிகளின் விளை பொருட்களை கொள்வனவு செய்வதற்கான பொருளாதார மத்திய நிலையம் திறந்துவைப்பு

கொரோனா பீதியின் காரணமாக மட்டக்களப்பு மாவட்டமும் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தின் கீழ் முடங்கியிருக்கின்ற இந்நிலையில மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் விவசாய விளைபொருட்களை விற்பனை செய்ய முடியதா நிலைக்கு மாவட்ட விவாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் களுதாவளையில் நிருமாணிக்கப்பட்டுள்ள விசேட பொருளாதார மத்திய நிலையம் இதுவரையில் திறக்கப்படாமல் இருந்து வந்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, மாவட்ட விவசாயிகளின் விளைபொருட்களை தகுந்த முறையில் தற்போதைய காலகட்டத்தில் சந்தைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்குடன் குறித்த விசேட பொருளாதார மத்திய நிலையத்தை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவின் தலைமையில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம், மற்றும் விவசாய அமைப்புக்கள், விவசாயிகளின் ஒத்துழைப்புடன் செவ்வாய்கிழமை (14) காலை 07.00 மணியளவில் திறந்து வைக்ககப்பட்டு அப்பகுதி விவசாயிகளின் விளைபொருட்களை அரசாங்கம் கொள்வனவு செய்துள்ளது.IMG 0835 விவசாயிகளின் விளை பொருட்களை கொள்வனவு செய்வதற்கான பொருளாதார மத்திய நிலையம் திறந்துவைப்பு

இதனால் அப்பகுதி விவசாயிகளுக்கு பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் தமது விளை பொருட்களை விற்பனை செய்யவும், வேறு இடங்களுக்கு ஏற்றுமதி செய்யவும் முடியாதிருந்த இந்த இக்கட்டான காலகட்டத்தில் தமது கிராமத்தில் அமைந்தள்ள விசேட பொருளாதார நிலையத்தை திறந்து வைத்து தமது விளைபொருட்களை அரசாங்கம் கொள்வனது செய்வதானது தமக்கு மிகுந்த சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இச்செயற்பாடு தொடர்ந்து இடம்பெற வேண்டும் எனவும் அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதன்போது கத்தரிக்காய் (ஊதா) ஒருகிலோ 90 ரூபாவுக்கும், கத்தரிக்காய் (வெள்ளை) ஒரு கிலோ 75 ரூபாவுக்கும், வெண்டி ஒரு கிலோ 30 ரூபாவுக்கும், மிளகாய் பி.சி 1 ஒருகிலோ 120 ரூபாவுக்கும், பயற்றை ஒருகிலோ 30 ரூபாவுக்கும், பாகற்காய் ஒருகிலோ 70 ரூபாவுக்கும், நாடங்காய் ஒரு கிலோ 30 ரூபாவுக்கும், பீற்றூட் ஒரு கிலோ 80 ரூபாவுக்கும், இதன்போது அரசாங்கம் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்துள்ளது.

இப்பிரதேசத்தில் மரக்கறிகளை உற்பத்தி செய்யும் விவசாயிகள் அதிகமாகவுள்ளனர். இதன் காரணமாக அவர்களின் விளை பொருட்களை மட்டக்களப்பு மாவட்ட செயலகம், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தினூடாக அவற்றைக் கொள்வனவு செய்துள்ளோம். இது ஏற்கனவே பொருளாதார மத்திய நிலையமாக நிறுவப்பட்டு அது நடைமுறைப் படுத்தப்படாமல் இருந்து வந்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில இந்த இடத்தில் நாங்கள் இச்செயற்பாட்டை ஆரம்பித்துள்ளோம்.IMG 0837 விவசாயிகளின் விளை பொருட்களை கொள்வனவு செய்வதற்கான பொருளாதார மத்திய நிலையம் திறந்துவைப்பு

இம்மத்திய நிலையம் எந்த நோக்கத்திற்கு அமைக்கப்பட்டதோ அது தற்போது நிறைவேறியுள்ளது. இப்பிரதேச விவசாயிகள், மிளகாய், பயற்றை, வெண்டி, கத்தரி, பீர்க்கு, நாடை, பாகல், பீற்றூட், உள்ளிட்ட பல பொருட்களை நாளாந்தம் அதிகளவு உற்பத்தி செய்து வருகின்றார்கள். இப்பொருட்களை நாங்கள் கொள்வனவு செய்து மட்டக்களப்பு மாவட்டத்திலிருக்கின்ற 14 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும்,  இதனை நாங்கள் அனுப்பி அங்குள்ள நடமாடும் வியாபாரிகளுடாக மக்களுக்கு நியாய விலையில் விற்பனை செய்யப்படவுள்ளன. இச்செயற்பாடு இன்றிலிருந்து தொடர்ந்து மேற்கொள்ளப்டும். என  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா இதன்போது தெரிவித்தார்.

இவ்விசேட பொருளாதார மத்திய நிலையம் மத்திய அரசினால் 300 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நிருமாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!

புதுவருட தினமான இன்று கோவில்கள், பொது இடங்களில் கூடுவதை தவிா்க்குமாறு பொலிஸாா் ஒலிபெருக்கி மூலமாக அறிவித்து வரும் நிலையில், யாழ்.நகா் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளில் கோவில்கள் பூட்டப் பட்டிருப்பதை அவதானிக்க கூடியதாகவுள்ளது.

இன்றைய தினம் காலை நல்லுாா் கந்தசுவாமி ஆலயம் உள்ளிட்ட பல ஆலயங்களில் மக்கள் வழிபாடுகளை நடாத்த முயற்சித்தனா். எனினும் கோவில் வளாகத்திற்குள் நுழைய நிா்வாகம் தடைவித்திருந்தமையால் வீதிகளில் நின்று மக்கள் வழிபாடுகளை நடாத்தியிருந்தனா்.

இதேவேளை யாழ்.நகா் பகுதி மற்றும் நகரை அண்டிய பகுதிகளில் முச்சக்கர வண்டிகளில் பொலிஸாா் ஒலிபெரு க்கிகளை பொருத்தி புதுவருடத்தை அமைதியானமுறையில் வீடுகளில் இருந்து கொண்டாடுமாறு கேட்டு வருகின்றனா்.

சேமிப்புப் பண்பாடும் அதன் செயலிழப்பும் – து.கௌரீஸ்வரன்

கொரொனா பேரனர்த்தம் நம்மை ஆக்கிரமித்துள்ள இன்றைய சூழலில் சில வாரங்கள் ஊரடங்குச்சட்டத்திற்குள் வாழ வேண்டிய நிலைமைகளின் பின்னர் நம்மிடையே இல்லாமை பற்றிய செய்திகளும், கையேந்தி நிற்கும் மனிதர்களின் காட்சிகளும் ஊடகங்களில் பிரதானம் பெறுவதாகியுள்ளன.

இந்நிலையில் பரிதவிப்போருக்கு கருணையுள்ளங்காட்டுமாறு கோருதலும் அத்தகைய நடவடிக்கைகளில் கணிசமானவை தெரிந்தும் தெரியாமலும் விளம்பரங்களாக விரிவாக்கம் பெறுதலும் நடந்தேறுவதைக் காண்கின்றோம். தற்போதைய நிலையில் இல்லாதோருக்கு உதவுதல் உடனடியான தேவை என்பதை மறுக்க முடியாது. இருந்தாலும் சவால்களை எதிர்கொண்டு மீண்டெழுவதற்கான தூரநோக்குடன் இத்தகைய நிலைமைகள் வலுப்பெற்றதற்கான காரணங்களை ஆராய வேண்டியது அவசியமாக உணரப்படுகின்றது.

இந்தவகையில் நமது பலமாக இருந்துவந்த சேமிப்புப் பண்பாடு தொடர்பாகவும் அது பலவீனமடைந்தமைக்கான காரணங்கள் குறித்தும் ஆழமாகச் சிந்திக்க வேண்டியது அவசியமான தேவையாகியுள்ளது. சேமிப்புப்பண்பாட்டிற்குரிய பொறிமுறைமைகளின் செயலிழப்பே நமது சமூகங்களை பேரனர்த்தக் காலங்களில் கையேந்தும் நிலைமைகளுக்கு இட்டுச் சென்றுள்ளது என்பதை மறுக்க முடியாது.92240809 2964383746961380 1253514642316066816 o சேமிப்புப் பண்பாடும் அதன் செயலிழப்பும் - து.கௌரீஸ்வரன்

நமது நாளாந்த உணவு தயாரிப்பின் போது அன்றைய நாளுக்காக ஒதுக்கப்படும் உணவுப்பொருட்களிலிருந்து சிறிதளவை எடுத்து அடுத்த நாளுக்காகச் சேமித்து வைக்கும் பண்பாட்டுக்குச் சொந்தக்காரராக நாம் வாழ்ந்து வந்தவர்கள். ஆனால் இந்தப் பண்பாடும் பழக்கவழக்கமும் எவ்வாறு நம்மிடமிருந்து விலகிச் சென்றன என்ற கேள்வியை நாம் கேட்க வேண்டியுள்ளது.

கையில் பணமிருந்தால் எதையும் எந்த நேரத்திலும் எங்கேயும் பெற்றுக்கொள்ள முடியும் என்ற நுகர்வு மனப்பாங்கினை வலுப்படுத்திய திறந்த பொருளாதாரமும் நகரமயமாக்கமும் நம்முடைய சேமிப்புப் பழக்கத்தை மெல்ல மெல்லச் சாகடிக்கச் செய்துள்ளன. இதன்காரணமாக நம்முடைய பாரம்பரியமான தொழில் முறைகளும் விளைச்சலில்,உற்பத்தியில் பங்கு வழங்குதலிலிருந்து விடுபட்டு பங்கிற்குப் பதிலாக பணத்தை வழங்குதலாக பரிமாணமடையும் நிலைமைக்குச் சென்றுள்ளது.

உதாரணமாக விவசாயத்தில் பங்குபற்றும் வேலையாட்களுக்கு வழங்கப்படும் வேதனத்தின் ஒரு பகுதியான தானியப்பங்கீடு குறைவடைந்து அதற்குப்பதிலாக பணத்தைப் பெற்றுக்கொள்ளுதலாக மாற்றமடைந்தது. இதனால் நமது வீடுகளில் தானியம் மற்றும் உணவுப் பொருட்களின் சேமிப்பு இல்லாமலே ஆகிவிட்டது.

துரித நகரயமாக்கமும் அந்நகரங்களுக்கு என்று அளவுக்கு மீறி அதிகமடைந்த மதுபான விற்பனை அனுமதிகளும் பாரம்பரியமான விவசாயத்தின் சேமிப்பிற்குரிய தானியங்கள் பணமாக மாற்றப்பட்டு பானமாக சமிபாடடையச்செய்வதற்கான மனப்பாங்கை மேலும் மேலும் வலுப்படுத்தின.1 1 சேமிப்புப் பண்பாடும் அதன் செயலிழப்பும் - து.கௌரீஸ்வரன்

நமது பாரம்பரியத் தொழில் முறைகளில் உபரி உற்பத்தி ஏற்படும் சந்தர்ப்பங்களில் அவற்றை வைத்து உப உற்பத்திகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. உதாரணமாக கரைவலைப் பருவ காலத்தில் அதிகளவான மீன்கள் கிடைக்கும் போது மேலதிகமானவற்றை கருவாடாக ஆக்கி அதற்கான தேவை வரும் போது பயன்படுத்தும் பண்பாடு மீனவ சமூகங்களின் பாரம்பரிய சேமிப்புப் பண்பாடாக இருந்து வந்தது.

ஆனால் திறந்த பொருளாதாரமும் தரகு வணிகமும் நிபந்தனைகளுடன் உற்பத்திகளை ஒரேயடியாக பணங்கொடுத்து மிச்சம்மீதியில்லாமல் வாரியள்ளிச்சுருட்டி குளிரூட்டிகளில் கொண்டு செல்லும் நிலைமைகளையே வலுப்படுத்தியுள்ளமையால் மீனவ சமூகங்களின் சேமிப்புப் பண்பாடு சீர்குலைந்தது.

இத்தோடு கடலுக்குப் போக முடியாத இயற்கை அனர்த்த காலத்தில் மீனவ சமூகத்தினரே கடைகளில் கருவாடு வாங்கும் நிலைமைகளுக்கும் இட்டுச்சென்றுள்ளது. இச்சந்தர்ப்பத்தில் கடந்த தசாப்தங்களில் போர்மேகம் சூழ்ந்திருந்த இருண்ட நாட்களில் ஒரு வேளை உணவுக்காக தம்மிடமிருந்த இறால்கருவாடுகளையும், கீரிக்கருவாடுகளையும் வயல்சார்ந்த பகுதிகளிலிருந்த விவசாயிகளிடம் கொடுத்து அதற்குப் பதிலாக நெல்லைப்பெற்று வந்து வயிராறச் சாப்பிட்ட கதைகள் ஞாபகத்திற்கு வருகின்றன.

மேலும் மரபணுமாற்றம் செய்யப்பட்டு குறுகிய காலத்தில் கூடிய விளைச்சல் தருபவை எனும் கவர்ச்சிகரமான விளம்பரங்களுடன் நமது விவசாயத்தில் ஆக்கிரமிப்புச் செய்துள்ள விதையினங்களின் வருகையும் நம்மிடமிருந்த தானியச் சேகரிப்பினை செயலிழக்கச் செய்து விட்டன. உதாரணமாக வருடாந்தம் சோளன் செய்த பின்னர் அதன் அறுவடையில் ஒரு பகுதியை அடுத்த விளைச்சலுக்காகச் சேமித்து வைக்கும் நடைமுறை பெரும்பாலும் இல்லாமலே ஆகிவிட்டது. அதாவது சோளனை முற்ற விடுவதில்லை. முற்றிய சோளனில் மேலதிகமானவை அனர்த்தக் காலங்களில் மாவாக்கப்பட்டு பசிதீர்த்த கதைகள் இப்போது நினைவு கூரப்படுகின்றன.odiyal சேமிப்புப் பண்பாடும் அதன் செயலிழப்பும் - து.கௌரீஸ்வரன்

இவ்விதமாக பல்வேறு பொறிமுறைகளுடன் நம்மிடம் இருந்து வந்த உணவுப் பொருட்களின் சேமிப்புப் பண்பாடு திடீரென உருவாகும் அனர்த்த காலத்தில் ஏற்படும் உணவுத்தட்டுப்பாட்டைத் தாக்குப்பிடிக்கும் நிலைமைகளை வலுப்படுத்தி வந்தன. இதனால் நமது சமூகத்தினர் எப்பேர்ப்பட்ட அனர்த்தங்களின் போதும் பெரும்பாலும் பிறரிடம் கையேந்தாமல் வலிமையானவர்களாக வாழ்ந்தனர் என்கிறார்கள் ஆய்வாளர்.

எனவே! கொரொனா பேரனர்த்தம் நம்மிடமிருந்த சேமிப்புப்பண்பாட்டின் வலிமைகளை நமக்கு இடித்துரைத்து நிற்பதுடன் அது சீர்குலைந்தமைக்கான காரணங்களையும் தேடி ஆராய வைத்துள்ளது. முடிவாக கொரொனாவிலிருந்து மீண்டெழுதல் என்பது நமது சேமிப்புப் பண்பாட்டின் பொறிமுறைகளையும் மீளுருவாக்கிக் கொண்டு வருதலாக இருக்க வேண்டும்

இரண்டு தடுப்பு மருந்துகளுக்கு சீனா அனுமதி வழங்கியது

கோவிட்-19 வைரசுக்கு எதிரான இரண்டு தடுப்பு மருந்துகளின் பரிசோதனை-களுக்கு சீனா அரசு அனுமதி வழங்கியுள்ளதாக அரச ஊடகமான சிங்குவா இன்று (14) தெரிவித்துள்ளது.

சினோவக் உயிர் தொழில்நுட்ப நிறுவனமும், வுகானைத் தளமாகக் கொண்ட வுகான் உயிர்தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து இந்த தடுப்பு மருந்துகளை தயாரித்துள்ளன.

கடந்த மார்ச் மாதமும் சீனா மேலும் ஒரு தடுப்பு மருந்தின் பரிசோதனைக்கு அனுமதி வழங்கியிருந்தது. இதனை கொங் கொங்கை தளமாகக் கொண்ட கன்சினோ உயிரியல் நிறுவனம் தயாரித்திருந்தது.

கொரோனாவை சூழலில் மற்றொரு ஆபத்து: செயல்படாத அணு உலையை நெருங்கும் காட்டுத்தீ

கடந்த சில தினங்களாக வடக்கு உக்ரைனில் பற்றி எரியும் காட்டுத்தீ மெல்ல செர்னோபில் அணு உலையை நெருங்கிக் கொண்டிருக்கிறது. காட்டுத்தீக்கும் செர்னோபில் அணு உலைக்கும் 2 கி,மீ தொலைவே இருப்பதாக அதனை நேரில் பார்த்தவர்கள் சொல்கிறார்கள்.

அதிகாரிகள் நினைப்பதைவிட அங்கு பெருந்தீ எரிந்து கொண்டிருப்பதாக க்ரீன் பீஸ் அமைப்பு கூறுகிறது. 1986 ஆம் ஆண்டு அங்கு ஏற்பட்ட அணு உலை விபத்தை அடுத்து மக்கள் யாரும் அங்கு வசிக்கவில்லை. செயல்படாத அணு உலையிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில்தான் மக்கள் வசிக்கிறார்கள். காட்டுத்தீயை அடுத்து ஏப்ரல் 5ஆம் தேதி உக்ரைன் சூழலியல் கண்காணிப்பு சேவை அமைப்பு ரேடியேசன் அளவு அதிகரித்து இருப்பதாகத் தெரிவித்தது.

300 தீயணைப்பு படை வீரர்கள் பகலிரவு பாராமல் தீயை அணைக்க பணியாற்றி வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வினோதமான தண்டணை வழங்கிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடை நீக்கம்.

நடைமுறையில் உள்ள ஊரடங்குச்சட்டத்தை மீறி வீதியில் நடமாடிய நால்வருக்கு தண்டணை வழங்கிய இரண்டு பொலிஸ் உத்யோகத்தர்கள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவத்துள்ளது.

ஊரடங்குச்சட்டம் அமுல் இருந்த காலப்பகுதியில் குறித்த இருவரும் மருதானை டார்லி வீதியில் நால்வருக்கு அங்கு கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் இருவர் தண்டணை வழங்கி எச்சரித்தமை தொடர்பான காட்சிகள் அததெரண தொலைக்காட்சியில் நேற்று (12) ஒளிபரப்பானது.

கொழும்பு நகரத்திற்கு உட்பட்டு சேவையாற்றிய இரண்டு போக்குவரத்து பொலிஸாரே பணி இடைநீக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

கட்டளையை மீறியமை, அபகீர்த்தி ஏற்படும் வகையில் நடந்துக்கொண்டமை போன்ற குற்றச்சாட்டுக்கள் இவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன.

அதற்கமைய குறித்த பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை ஊரடங்கு சட்டத்தை மீறுவோரை கண்டுபிடிப்பதற்கான விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை இன்று மாலை 6 மணி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

கொவிட் 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் பொலிஸ் ஊரடங்குச்சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டு வருகின்றது.

அன்று முதல் இதுவரையான காலப்பகுதியில் ஊரடங்குச்சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இருபதாயிரத்திற்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதற்கமையவே 24 மணித்தியால விசேட நடவடிக்கையை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

புத்தாண்டு கொண்டாட்ட கைகலப்பின்போது ஒருவர் பலி.!

கெப்பற்றிப் கொலவ பகுதியில் புத்தாண்டு தினமான நேற்று இரவு ஏற்பட்ட இளைஞர்களுக்கிடையிலான மோதல் சம்பவம் ஒன்றின் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், அவரது சகோதரனான அண்ணன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புத்தண்டு தினமான நேற்று மாலை அனுராதபுரம், கெப்பற்றிபொலவா பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மது விருந்து கொண்டாட்டம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது அதிக சத்தம் காரணமாக அயல் வீட்டுக்காரர் மது விருந்தில் ஈடுபட்டவர்களை அமைதியாக இருக்குமாறு கோரியுள்ளார். இதன்போது ஏற்பட்ட வாய்தர்க்கம் கைகலப்பாக மாறியுள்ளது.

இதில் அயல் வீட்டைச் சேர்ந்த 24 வயதுடைய ஜெ.செலிட்டர் என்பவர் வாள்வெட்டுக்கு இலக்காகி மரணமடைந்துள்ளதுடன், கைகலப்கை தடுக்கச் சென்ற மரணித்த இளைஞனின் அண்ணனான 34 வயதுடைய ஜெ.விஜயசுந்தரம் என்பவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த கைகலப்பு சம்பவம் தொடர்பில் கெப்பற்றிபொலவ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இரு பிள்ளைகளை கிணற்றில் வீசி கொன்ற கொடிய தந்தை

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மாவடிச்சேனை பகுதியில் தனது இரண்டு பிள்ளைகளை தந்தை ஒருவர் கிணற்றினுள் வீசி கொலை செய்த பரிதாப சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

மாவடிச்சேனை பாடசாலை வீதியில் வசிக்கும் அஸிமுல் ஹக் (வயது 10), அஸிமுல் தாஹியா (வயது 07) ஆகிய இரண்டு குழந்தைகளின் தந்தை இன்று நள்ளிரவு இரண்டு மணியளவில் தனது வீட்டு கிணற்றில் தூக்கி எறிந்ததில் பிள்ளைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பிள்ளைகளின் தாய் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் மரணமடைந்த நிலையில் பிள்ளைகளை கொழும்பு பிரதேசத்திலுள்ள காப்பகத்தில் சேர்த்து கல்வி கற்று வந்த நிலையில் கடந்த ஓரிரு மாதத்திற்கு முன்னர் பிள்ளைகளை வேறு பாடசாலைகளில் சேர்ப்பதற்காக இடைவிலகல் மேற்கொண்டு அழைத்து வந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று நள்ளிரவு இரண்டு மணியளவில் பிள்ளைகளின் அழுகுரல் கேட்டு அயலவர்கள் ஓடி வந்து கிணற்றில் இருந்து பிள்ளைகளை மீட்கும் போது பிள்ளைகள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டு பின்னர் இரண்டு பிள்ளைகளின் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் இரண்டு பிள்ளைகளை கொலை செய்த நாற்பது வயதுடை தந்தை கைது செய்யப்பட்டுள்ளதுடன், வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.

இரண்டு பிள்ளைகள் பரிதாபமான முறையில் மரணமடைந்துள்ளமையால் ஒட்டுமொத்தமாக மாவடிச்சேனை பகுதி பெரும் சோதகத்தில் ஆழ்ந்து காணப்படுவதைக் காணக் கூடியதாக உள்ளது.

ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்படவுள்ளார்.

காவல் துறையினரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமைக்காக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்படவுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மிரிஹான காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

அரசாங்கத்துக்கு, வெள்ளை அடிக்காமல் உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும் – மனோ

அரசாங்கம் அறிவித்த முதற்கட்ட வாழ்வாதார நிவாரண கொடுப்பனவு ரூ. 5,000 வழங்கப்படுவதில் கொழும்பு, கம்பஹா மாவட்ட மாநகர பிரதேசங்களில் வாழும் ஏழைகளும், வருமானம் இழந்த நடுத்தர வர்க்க மக்களும், அதேபோல் மலையக தோட்டப்புறங்களில் வாழும் மக்களும், கணிசமாக புறக்கணிக்கப்படுவதாக தகவல்கள், முறைபாடுகள், கண்டணங்கள் மக்கள் மத்தியில் இருந்து கிடைத்த வண்ணம் உள்ளன என முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

சமுர்தி பெறுவோர் மற்றும் சமுர்தி காத்திருப்போர் பட்டியல்களில் இருப்போர்-இல்லாதோர், வாடகை வீடுகளில், சொந்த வீடுகளில் இருப்போர்-இல்லாதோர் என்ற வேறுபாடுகளின்றி அனைவருக்கும் இந்த தொகை வழங்கப்படும் என்ற அரசாங்கத்தின் கூற்று இன்று பொய்யாகி போயிருக்கிறது.

ஜனாதிபதியும், பிரதமரும் ஊடகங்களில் பேசுபவை நடைமுறையில் இல்லை. இது தொடர்பில் எதிர்க்கட்சி என்ற முறையில் எமது கண்டனத்தை தெரிவித்து, இதை நிவர்த்திக்க எம்மால் இயன்ற அனைத்தையும் செய்வோம்.

அதேவேளை, “எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கிறது” என அரசாங்கத்துக்கு, வெள்ளை அடிக்காமல், வாழ்வாதார நிவாரண கொடுப்பனவு வழங்குவதில் இடம்பெறும் பாரபட்ச உண்மையை ஒப்புக்கொண்டு, அரசாங்கத்துடன் பேசி நமது மக்களுக்கு நியாயமான நிவாரணங்களை பெற்றுக்கொடுக்குமாறு, அரசாங்கத்தில் இருக்கின்ற தமிழ் அமைச்சர்களுக்கு கூறி வைக்க விரும்புகிறோம். இதற்கு நாமும் முழு ஒத்துழைப்பு வழங்கவும் தயாராக இருக்கிறோம்.

இந்நிலையில், இன்று எம்முன் இருக்கும் முக்கிய பிரச்சினைகள் மூன்று என அடையாளம் கண்டுள்ளோம்.

முதலாவது;
கொரோனாவினால் அமுல்படுத்தப்படும், தொடர் ஊரடங்கினால், பெரிதும் பாதிக்கப்பட்டு, வாழ்வாதார நிவாரணம் வழங்குவதில் புறக்கணிக்கப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் வாழும், நகர ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் தொடர்பில் குரல் எழுப்பி அவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுப்பது,

அடுத்தது;
தொழில் காரணமாக வெளிமாவட்டங்களில் இருந்து, கொழும்பு, கம்பஹா மாவட்டங்களுக்கு வந்து, இப்போது தமது சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு முடியாமல் சிக்கி நிற்கும் மக்களுக்கு உதவுவது, இப்போது 20ம் திகதிக்கு பின் அவர்கள் சொந்த ஊர் செல்ல மருத்துவ, போக்குவரத்து ஏற்பாடுகளை செய்வது,

மூன்றாவது;
அரசாங்க வாழ்வாதார நிவாரணம் கொடுப்பனவில் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ள, மலையக தோட்டப்புற மக்கள் தொடர்பாக குரல் எழுப்பி அவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுப்பது,