Home Blog Page 23

அகதிகளை வேறு நாட்டுக்கு நாடு கடத்த அவுஸ்திரேலியா திட்டம்

ஆஸ்திரேலியாவின் சர்ச்சைக் குரிய கடல்கடந்த தடுப்புக் கொள்கைகளின் சமீபத்திய மறு ஆய்வாக, “ஆஸ்திரேலியாவில் தங்குவதற்கு சட்டப்பூர்வ உரிமை இல்லாத” முன்னாள் கைதிகளை மீள்குடியேற்றுவதற்காக, மூன்று தசாப்தங்களாக சிறிய பசிபிக் தீவு நாடான நவ்ருவுக்கு சுமார் 1.6 பில்லியன் டாலர்களை வழங்க ஆஸ்திரேலிய அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.
இரு அரசாங்கங்களும் கடந்த வாரம் ஒரு ரகசிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன, இதன் கீழ் ஆஸ்திரேலியாவில் தங்குவதற்கு சட்டப்பூர்வ உரிமை இல்லாத 354 பேரை நவ்ரு குடியேற்றம் செய்யும், இதற்கு ஈடாக 408 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் ஆரம்ப கொடுப்பனவு ($267 மில்லியன்) மற்றும் அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 70 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களை ஆஸ்திரேலியா ($46 மில்லியன்) செலுத்த வேண்டும்.
புகலிடக் கோரிக்கையாளர்களை அங்கு புகலிடம் கோருபவர்களை அனுப்ப நவ்ருவுடன் செய்யப்பட்ட ஒப்பந்தம் ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு 30 ஆண்டுகளில் 2.5 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் ($1.6 பில்லியன்) வரை செலவாகும் என்று புதன்கிழமை(3) இரவு நடந்த “ஒரு உடனடி செனட் விசாரணை” வெளிப் படுத்தியதாக சுயாதீன செனட்டர் டேவிட் போக்காக் தெரிவித்துள்ளார்.
சுமார் 12,500 மக்கள்தொகை மற்றும் 21 சதுர கிலோமீட்டர் (8.1 சதுர மைல்) மட்டுமே கொண்ட ஒரு நிலப்பரப்புடன், நவ்ரு உலகின் மிகச்சிறிய நாடுகளில் ஒன்றாகும். ஆஸ்திரேலியாவுடனான ஒப்பந்தம் “நவ்ருவின் நீண்டகால பொருளாதார மீள்தன்மையை ஆதரிக்கும்” என்று நவ்ருவின் ஜனாதிபதி டேவிட் அடீங் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.
மெல்போர்னை தளமாகக் கொண்ட புகலிடக் கோரிக்கையாளர் வலைமையத்தின் துணை தலைமை நிர்வாக அதிகாரி ஜனா ஃபவேரோ, நவ்ருவுடனான ஒப்பந்தம் “பார பட்சமானது, அவமானகரமானது மற்றும் ஆபத் தானது” என்று தெரிவித்துள்ளார்.
விசாக்கள் ரத்து செய்யப்படும்போது வேறு எந்த நாடும் செல்ல முடியாத புலம்பெயர்ந்தோரை சமாளிக்க ஆஸ்திரேலிய அரசாங்கம் போராடி வருகிறது. நாடுகடத்தப்படுவது ஒரு விருப்பமாக இல்லாவிட்டால் காலவரையின்றி தடுத்து வைப் பது சட்டவிரோதமானது என்று அந்நாட்டு உயர் நீதிமன்றம் 2023 இல் தீர்ப்பளித்தது, இதன் விளை வாக 220 பேர் விடுவிக்கப்பட்டனர்.

திருகோணமலை முத்து நகரில் சூரிய சக்தி மின் திட்டத்தால் சூறையாடப்படும் விவசாய நிலம் – பா. அரியநேத்திரன்

1 31 திருகோணமலை முத்து நகரில் சூரிய சக்தி மின் திட்டத்தால் சூறையாடப்படும் விவசாய நிலம் - பா. அரியநேத்திரன்
கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட் டத்தில் திருகோணமலை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள
229 F இலக்கம் கொண்ட கிராமசேவையாளர் பிரிவாக கருதப்படும் ஒரு கிராமம் முத்துநகர் கிராமமாகும்.
திருகோணமலை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கீழ்நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். இங்கு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 282 குடும்பத்தைச் சேர்ந்த 1346 பேர் வசித்து வந்தனர் தற்போது 20, வருடம் கடந்த நிலையில் உத்தியோகபூர்வ கணக்கெடுப்பு கிடையாவிட்டாலும் 2025, ல் 350,க்கு மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த ஏறக்குறைய 2000, பேர் வரை அங்கு வசிப்பதாக அறியமுடிகிறது.
பெரும்பான்மையாக முஸ்லிம் மக்களும், குறைந்தளவான தமிழ் மக்களும் இணைந்து வாழும் இந்த ஊரின் பிரதான தொழிலான நெல் வேளாண்மையை நம்பி, மக்கள் இயற்கையுடன் வாழும் ஒரு பசுமை நிலம் கொண்ட பிரதேசமாகும்.
முத்துநகர் பகுதியில் விவசாயத்தில் ஈடு பட்டுவந்த விவசாய காணிகளில் இருந்து அங்குள்ள விவசாயிகளை வெளியேற்றி அவற்றை சூறையாடி சூரியசக்தி ( சோலார்) மின் திட்டத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர் இதன் காரணமாக சம்மந்தப்பட்ட பிரதேச செயலகத்துடன் தொடர்பு கொண்டு அதனை தடுக்க எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை தமது காணிகளை தமது விவசாயத்திற்கு மீள வழங்குமாறு கோரியும் கடந்த மாதம் (14/08/2025) ம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக முத்துநகர் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த போராட்டத்தின் பின்னர் கடந்த (30/08/2025)ஆம் திகதிக்கு முன்னர் அதற்கான தீர்வை வழங்குவதாக விவசாயிகளுடனான கலந்துரையாடலின்போது அரசு தரப்பில் இருந்து உறுதிமொழி வழங்கப்பட்டிருந்தது.
இதுவரை அதற்கான தீர்வு கிடைக்க வில்லை எனவும் கூறப்படுகிறது.திருகோண மலை முத்துநகர் விவசாய நிலங்களில் சூரியசக்தி (சோலாரை) மின்திட்டத்தை ஆரம்பித்தால் அதன் பாதிப்பானது  சுற்றியுள்ள வளமான நிலங்கள் பாதிப்படைந்து விவசாயம் செய்ய முடியாத மலட்டு நிலங்களாக மாறும்  என அந்த விவசாயி கள் அவர்களுடைய மொழிநடையில் கூறுவதை அவதானிக்க முடிந்தது.
சூரிய மின் உற்பத்தி திட்டத்திற்கோ அல்லது நாட்டின் அபிவிருத்திக்கோ தாம் எதிரா னவர்கள் அல்லர்.
மாறாக நெல் உற்பத்தி விளையும் பூமியில் சூரியசக்தி மின் திட்டத்திற்கான தள பாடங்களை பூட்டி அவற்றில் விவசாயத்தை மேற்கொள்ளவிடாது தடுப்பதால் அந்த பகுதி மக்களின் அன்றாட தொழில் இல்லாமல் போகின்றது. அவர்களுடைய வாழ்வாதாரம் இல்லாமல் போகும் நிலை ஏற்படும், இதைவிட அந்த கிராமம்  பாரம்பரியமாக மேற்கொண்டுவரும் விவசாயத்தொழில் அடியோடு இழக்க நேரிடும் இவைகள் எல்லாவற்றையும கருத்தில் கொண்டே அந்த பகுதி மக்கள் அந்த திட்டத்தை முற்றாக எதிர்கின்றனர்.
முத்து நகரில் சூரிய சக்தி மின்திட்டம் ஆரம்பிக்க வேண்டுமானால் விவசாய நிலங் களை விட்டு அருகில் உள்ள அண்டிய தரிசு நிலங்கள் உண்டு அந்த நிலங்களில் அத்திட்டத்தை ஆரம்பிக்கலாம். ஏன் விவசாயம் செய்யும் எமது நிலத்தை சீரழிக்கவேண்டும் அந்த நிலத்தை எம்மிடம் தாருங்கள் என்றே கேட்கின்றோம் எனவும் முத்துநகர் விவசாயிகள் மனவேதனையு டன் கூறுவது புரிகிறது.
இதேவேளை நீதிமன்ற உத்தரவுகள் சட்ட சிக்கல் இல்லாத காணிகளில் விவசாயம் மேற் கொள்ள முடியும் என்ற தீர்மானத்தினை 29/07/2025 அன்று மேற்கொண்டிருப்பதாக தேசிய மக்கள் சக்தி அரசின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா அறிக்கை மூலம் ஊடகவாயிலாக அறிவித்திருந்தார்.இருப்பினும் அது தொடர்பாக ஆவண ரீதியான எவ்வித உத்தரவாதமும் இதுவரை விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை.
முத்துநகர் கிராமத்தை அண்டிய பகுதி யில் ஆறு இடங்களில் சூரியசக்தி  (சோலார்) தனியார் கம்பனிகள் கால்பதிக்கவுள்ளதாக அறியப் படுகிறது.அதுமட்டுமல்லாமல் பாரம்பரியமாக விவசாயம் மேற்கொள்ளும் அண்ணளவாக 352 விவசாயிகளையும் வெளியேற்றுவதற்கான சட்ட நடவடிக்கை இலங்கை துறைமுக அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்வாறான நிலையில் ஏனைய காணிகளில் இருந்தும் விவசாயிகள் சட்டரீதியாக வெளியேற் றப்படலாம் என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் பீதியுடன் வாழ்கின்றனர்.
அங்கு  ஏறக்குறைய 800, ஏக்கரில் 352 விவ சாயிகள் காலாகாலமாக நெல் விவசாயம் செய்து வருகின்றனர்.
அந்த ஏழை விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்காவிட்டால் அந்த ஊர் மக்கள் தமது சொந்த தொழிலை இழந்து வறுமை நிலைக்கே தள்ளப்படுவார்கள்.
கடந்த கால மகிந்த, மைத்திரி, ரணில் அரசாங்ககளும் விவசாயிகளின் கோரிக்கைகளை கருத்தில் கொள்ளாது செயற்பட்டதனாலேயே பாரிய பின்னடைவை எதிர்கொண்டது என்பதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். எனினும் தற் போதைய அநுர அரசாங்கம் விவசாயிகளுக்கு வளமான எதிர்காலத்தை ஈட்டித்தருவதாக கூறியது தற்போது திருகோணமலை முத்துநகர் விவசாயி களை அப்புறப்படுத்துவதா வளமான நாடு இது என்ன நியாயம் என்பதே முத்துநகர் மக்களுடைய கேள்வி.
முத்துநகர் பகுதி விவசாய காணியில் தனி யார் நிறுவனத்தினர் கனரக வாகனம்(ஜே,சீ,வீ) இயந்திரம் மூலமாக (27/08/2025) சூரிய மின்சக்தி திட்டம் தொடர்பான வேலைத்திட்டத்தை ஆரம் பிக்க முற்பட்ட வேலையில் அங்கு குறித்த விவசாயிகள் சென்று தடுத்து நிறுத்த முற்பட்ட வேலையில் வாய்த் தகராறு பின்னர் கலவரமாகி தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் முத்துநகர் விவசாயிகளுக்கும் மோதல் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து சீனக்குடா பொலி ஸாரினால் ஐந்து விவசாயிகள் கைது செய்யப் பட்டு திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்ட நிலையில் கடந்த 04/09/2025,ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அவர்கள் ஐவரையும் விடுதலை செய்ய கோரி கவனயீர்ப்பு போராட்டம் இடம் பெற்றுள்ளது. குறித்த போராட்டம் கடந்த (30/08/2025) சீனக்குடா பொலிஸ் நிலையம் முன்பாக நடத்தப்பட்டுள்ளது. அவர்களை திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் கடந்த(04/09/2025)ம், திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
இதேவேளை திருகோணமலை  முத்துநகர் பகுதியில் இந்த நிலம் தொடர்பான பிரச்சினை 2025 ,யூலை,29 ஆம் திகதி தாம் அணுகி தீர்க்கப் பட்டிருந்த போதிலும், அண்மையில் ஜனாதிபதி செயலகத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டதாக பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திரா ஊடகத்தில் தெரிவித்திருந்தார்.
அவரின் அறிக்கையில், மொத்த நிலப்பரப் பில் சுமார் பத்துவீதம் (10% )சூரியகல மின்சக்தி நிறுவனங்களால் அபிவிருத்தி செய்யப்பட்டுள் ளதாகவும், நீதிமன்ற தடையுத்தரவு காரணமாக சில குறிப்பிட்ட பகுதிகள் மட்டுமே தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்படி, நீதிமன்றத் தடையில்லாத மற்றும் வழக்குகள் இல்லாத பிற நிலங்கள் அனைத்தும் விவசாயிகளின் பயன்பாட்டுக்காக பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆதரவு வழங்கி நிலங்களை திருப்பி வழங்கும் நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பிரச்சினை தீர்ந்திருந்த போதிலும் சில குழுக்கள் மக்களை தவறாக வழிநடத்த முயற்சிப்பதாகவும், அவர்களின் நோக்கம் நாட்டில் குழப்பம் ஏற்படுத்துவதே எனவும் அவர் தெரிவித் துள்ளார்.
எது எவ்வாறாயினும் ஒரு திட்டம் ஆரம்பிக்கும் முன்னர் அப்பகுதியில் உள்ள மக் களுடைய பூரண சம்மதம் இன்றி திட்டங்களை திணிக்கும் போதுதான் இவ்வாறான எதிர்ப்புகள் மக்கள் மத்தியில் இருந்து ஏற்படுகின்றன.
இது திருகோணமலை முத்துநகரில் சூரியசக்தி திட்டம் போன்றே வடமாகாணத்தில் மன்னாரில் காற்றாலை மூலம் மேற்கொள்ளும் மின்சாரத்திட்டமும் அப்பகுதி வளங்களை பாதிக் கும் என மன்னார் மாவட்ட மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருவது கண்கூடு.

தாயக மக்களின் விருப்பங்கள் தற்போது நிறைவேற்றப்படவில்லை என்று சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு தெரிவிப்பு

வடக்கு கிழக்கில் உள்ள மக்கள் விருப்பத்துடன் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த போதும், அவர்களின் விருப்பங்கள் தற்போது நிறைவேற்றப்படவில்லை என்று சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு தெரிவித்துள்ளது.

சர்வதேச நெருக்கடிகள் சபையின் இலங்கைக்கான ஆலோசகர் எலன் கீனன் (Alan Keenan) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு செப்டெம்பரில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் தெரிவு செய்யப்பட்டு ஆட்சிக்கு வந்த போது பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்தது.

இந்த வாக்குறுதிகள் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தன. ஆனால், தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்த நிலையில், மக்களிடையே தற்போது ஏமாற்றம் அதிகரித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் மனித புதைக்குழிகள் உள்ளமை தற்போது கண்டறியப்பட்டு வருகின்றன.
எனினும், வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி இதுவரையிலும் நிலைநாட்டப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

போரின் போது இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுக்கான நீதி இதுவரையிலும் பெற்றுத்தரப்படவிவல்லை.
அத்துடன், வடக்கு கிழக்கில் உள்ள காணிகளை சிங்களவர்கள் ஆக்கிரமித்தல், இதுவரையிலும் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்படாமை உள்ளிட்ட பல்வேறு தீர்க்கப்படாத பிரச்சினைகள் மக்கள் மத்தியில் நிலவுகின்றன. எனினும், இதுவரையிலும் அவர்களுக்கான பிரச்சினைகள் தீர்க்கப்படாமலேயே உள்ளதாக சர்வதேச நெருக்கடிகள் சபையின் இலங்கைக்கான ஆலோசகர் எலன் கீனன் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளின் கூட்டு முயற்சிகள் தொடர்கின்றன…

நாட்டின் தற்போதைய நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் அங்கம் வகிப்பாரானால், அது நாட்டுக்கு நல்லது என்று ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

எனினும், ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றம் செல்வது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்துக்கு செல்வதாக இருந்தால், சரியான நேரம், காலம் பார்த்து அறிவிப்பார்.
ஆனால், இதுதொடர்பில் எந்த கலந்துரையாடலும் தற்போதுவரை இடம்பெறவில்லை என்றும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கூட்டு எதிர்க் கட்சிகளின் நடவடிக்கைகள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் அவரது காரியாலயத்தில் இடம்பெற்று வருகின்றன. ஐக்கிய தேசிய கட்சியும் அதில் கலந்துகொண்டு, கூட்டாக செயற்படுவதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கி வருவதாகவும் ருவன் விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்வரும் காலங்களில் கூட்டு எதிர்க்கட்சி ஒன்றை அமைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியின் ஆண்டு நிறைவு விழாவை இந்த மாதம் 20ஆம் அல்லது 21ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஓரிரு தினங்களில் இறுதி முடிவு எட்டப்படும் என்றும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

சோமரத்ன ராஜபக்ஷவை காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் மீண்டும் சந்திப்பது குறித்து ஆராய்வு

கிருசாந்தி படுகொலை வழக்கின் மரண தண்டனைக் கைதியாக உள்ள சோமரத்ன ராஜபக்ஷவை காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் மீண்டும் சந்திப்பது குறித்து கலந்துரையாடப்படுகிறது.

ஏற்கனவே அவரை சந்தித்து கலந்துரையாடியுள்ள நிலையில் மீண்டும் அவரை சந்திப்பதற்கான தேவைகள் குறித்து ஆராயப்படுவதாக காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலத்தின் தலைவர் மகேஸ் கட்டுலந்த தெரிவித்துள்ளார்.

சோமரத்ன ராஜபக்ஷவை சிறைச்சாலைக்கு சென்று சந்தித்த காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தினர் பல்வேறு விடயங்களை கேட்டறிந்து கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும், குறித்த சாட்சியங்களுடன் அடுத்தக்கட்ட நடவடிக்கையை முன்னெடுப்பதா? அல்லது அவரை மீண்டும் சந்திப்பதா? என்பது குறித்து கலந்துரையாடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், அவரை மீண்டும் சந்திப்பதற்கான எவ்வித இறுதி தீர்வும் இதுவரை எடுக்கப்படவில்லை என்றும் காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலத்தின் தலைவல் மகேஸ் கட்டுலந்த கூறியுள்ளார்.

பணயக்கைதிகளின் நிலைமை குறித்து ஹமாஸுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்தார் டிரம்ப்

காசா பகுதியில் பணயக்கைதிகளின் நிலைமை குறித்து ஹமாஸுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தனது ட்ரூத் சோஷியல் கணக்கில் விடுத்துள்ள பதிவொன்றில், இந்த போர் முடிவுக்கு வருவதை அனைவரும் விரும்புவதாக டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இஸ்ரேல் தனது நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதன்படி, தனது நிபந்தனைகளை ஹமாஸும் ஏற்க வேண்டும் என்றும், ஏற்றுக்கொள்ளாததன் விளைவுகள் குறித்து ஹமாஸுக்கு முன்பே எச்சரித்துள்ளதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.

இந்த எச்சரிக்கை தனது கடைசி எச்சரிக்கை என்றும், எதிர்காலத்தில் இனி எந்த எச்சரிக்கைகளையும் வெளியிட மாட்டேன் என்றும் அமெரிக்க ஜனாதிபதி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல் மீது கடந்த 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இந்த திடீர் தாக்குதலில் நூற்றுக்கணக்காணவர்கள் கொல்லப்பட்டனர்.

இதனைதை தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் பதில் தாக்குதலை தொடுத்தது. சுமார் 21 மாதங்களாக நீடித்துள்ள போரில் காசா பகுதியில் 63 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இந்நிலையில், பயங்கரவாதிகளை இலக்காக வைத்தே தாக்குதல் நடத்தப்படுவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

மக்கள் அடர்த்தியான பகுதிகளில் ஹமாஸ் அமைப்பினர் செயல்படுகின்றனர் எனவும் அதனால், பொதுமக்களின் உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் இஸ்ரேல் கூறியுள்ளது.

எவ்வாறாயினும், இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு உலக நாடுகள் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் நியமனம் வழங்குமாறு கோரி மூதூரில் பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்

மூதூர் கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று திங்கட்கிழமை (8) காலை மூதூர் வலயக் கல்வி அலுவலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்கள் சுலோகங்கள் குறிப்பிடப்பட்ட பதாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த ஐந்து வருடங்களாக பாடசாலைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக கடமையாற்றி வருகின்ற தமக்கு ஆசிரியர் நியமனம் வழங்குமாறு கோரியே இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பாடசாலைகளில் சகல வேலைகளையும் தாம் செய்து வருகின்றோம். கடந்த அரசாங்கம் எமக்கான ஆசிரியர் நியமனத்தை வழங்குவதாக தெரிவித்திருந்த போதிலும் அவர்கள் நியமனம் வழங்கவில்லை. அதனையே இந்த அரசாங்கமும் செய்கிறது. எனவே பாடசாலைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக கடமையாற்றும் தங்களுக்கு இந்த அரசாங்கம் ஆசிரியர் நியமனம் வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

செம்மணி மனிதப்படுகொலை விவகாரம்:சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவி மீண்டும் ஜனாதிபதிக்கு கடிதம்

செம்மணி மனிதப்படுகொலை தொடர்பில் இதுவரையில் வெளிப்படுத்தாத விடயங்களை சகல ஊடகங்களுக்கும், சர்வதேச சமூகத்துக்கும், நீதித்துறைக்கும் வெளிப்படுத்துமாறு தனது கணவரான சோமரத்ன ராஜபக்ஷ வழங்கிய ஆலோசனைக்கு அமைவாக அவ்வெளிப்படுத்தல்களைச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவிருப்பதாகக் குறிப்பிட்டு கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவி எஸ்.சி.விஜேவிக்ரம ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு மீண்டும் ஒரு கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார்.

பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் நீதிமன்றத்தினால் பிரதான குற்றவாளியாகப் பெயரிடப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, அப்படுகொலை குறித்தும், செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் குறித்தும் தன்னிடம் கூறிய விடயங்களை உள்ளடக்கியும், இவ்விவகாரம் தொடர்பில் மீண்டும் சுயாதீன விசாரணையைக் கோரியும் அவரது மனைவி எஸ்.சி.விஜேவிக்ரம 10.07.2025 எனும் திகதியிடப்பட்ட கடிதமொன்றை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைத்தார்.. அவற்றின் பிரதிகள் பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டிருந்தன.

அக்கடிதத்தில் 7 ஆம் இராணுவக் காலாட்படைத் தலைமையகத்தில் படுகொலை செய்யப்பட்டு செம்மணி சோதனைச்சாவடிக்குக் கொண்டுவரப்பட்ட கிருஷாந்தி குமாரசுவாமியினதும், அவரது குடும்பத்தினரினதும் சடலங்களை கப்டன் லலித் ஹேவாகேயின் ஆணைக்கு அமைவாகப் புதைத்ததைத் தவிர தனது கணவர் வேறெந்தக் குற்றத்தையும் புரியவில்லை எனவும், செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப்படும் பட்சத்தில் அதில் சாட்சியமளிப்பதற்கு சோமரத்ன ராஜபக்ஷ தயாராக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதனைத்தொடர்ந்து சோமரத்ன ராஜபக்ஷ மேலும் பல வெளிப்படுத்தல்களைச் செய்திருந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த ஜுலை மாதம் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதம் தொடர்பில் இதுவரையில் எந்தவொரு பதிலும் கிட்டாததன் காரணமாக, சோமரத்ன ராஜபக்ஷ மீண்டும் தனது மனைவியின் ஊடாக கடந்த வாரம் ஜனாதிபதிக்கு மற்றுமொரு கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார்.

அக்கடிதத்தில் கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை விவகாரத்தில் தனது வகிபாகம், தான் உள்ளடங்கலாக மரண தண்டனை விதிக்கப்பட்ட ஏனைய 5 இராணுவத்தினரும் திட்டமிட்டு சிக்கவைக்கப்பட்டமை, இவ்விவகாரத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் வகிபாகம் என்பன உள்ளடங்கலாக சோமரத்ன ராஜபக்ஷவினால் ஏற்கனவே அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்திலும், முன்னைய வெளிப்படுத்தல்களிலும் குறிப்பிட்டிருந்த விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று செம்மணி மனிதப்படுகொலை தொடர்பில் இதுவரையில் வெளிப்படுத்தாத விடயங்களை சகல ஊடகங்களுக்கும், சர்வதேச சமூகத்துக்கும், நீதித்துறைக்கும் வெளிப்படுத்துமாறு தனது கணவரான சோமரத்ன ராஜபக்ஷ வழங்கிய ஆலோசனைக்கு அமைவாக அவ்வெளிப்படுத்தல்களைச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி 1996 ஆம் ஆண்டில் வடக்கில் இடம்பெற்ற செம்மணி மனிதப்படுகொலை, வடக்கில் சித்திரவதைக்கூடங்கள் நடாத்தப்பட்ட விதம், அவற்றுடன் தொடர்புடைய இராணுவ உயரதிகாரிகள் தொடக்கம் ஜனாதிபதி வரை அவற்றை செயற்படுத்திய சகல அதிகாரிகளினதும் பெயர் விபரங்கள் போன்றவற்றை இந்நாட்டு மக்கள் தெரிந்துகொள்ளக்கூடியவகையில் வெளிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இவ்விவகாரம் தொடர்பில் விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறும், சம்பந்தப்பட்ட சகல அதிகாரிகளையும் சட்டத்தின்முன் நிறுத்துமாறும், பாதிக்கப்பட்ட யாழ் மக்களுக்கான நீதியை நிலைநாட்டுமாறும் அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அநுரகுமாரவின் ‘கச்சதீவு விஜயம்’ இந்தியாவுக்கு சொல்லியுள்ள ‘செய்தி’ – விதுரன் 

சீனாவின் தியான்ஜினில் சீனாவின் ஷி ஜின் பிங், ரஷ்யாவின் விளாடிமிர் புட்டின் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உலக ஒழுங்கு மாற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் ஒருவர் மீது ஒருவர் சகோதர பாசத்தை காண்பித்து கட்டிணைத்துக் கொண்டிருக்கையில் இந்தியாவின் தென்பிராந்தியத்தில் மிக நெருக்க மாக இருக்கும் இலங்கை டில்லிக்கும், தமிழ் நாட்டுக்கும் மிக அமைதியாக ஒரு பெரும் செய்தியை அனுப்பியிருக்கின்றது.
நான்காவது தடவையாக செம்டெம்பர் மாதம் முதலாம் திகதி யாழ்ப்பாணத்துக்குச் சென்றிருந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தியோக பூர்வ அறிவிப்புக்களைச் செய்யாது முன்கூட்டிய திட்டமிடல்கள் ஏதுவுமின்றி கடற் படையின் படகில் கச்சதீவுக்கு மேற்கொண்ட பயணம், சில மணிநேரங்களில் நிகழ்ந்தேறிய நிகழ்வு என்பதற்கு அப்பால் புவிசார் அரசியலில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
கச்சதீவு பற்றிய வரலாற்றை ஒருதடவை பின்னோக்கிப் பார்த்தால்,  பாக் ஜலசந்தியில் அமைந்துள்ள ஒரு சிறிய தீவாகும். போருக்கு முன்னைய காலத்தில் தமிழகத்தின் இராமேஸ்வரம் மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களால் வலைகள் உலர்த்துவதற்கும், சிறு ஒய்வுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது.
இக்காலப்பகுதியில் இந்தத் தீவின் உரிமை குறித்து இருநாடுகளின் அரச மட்டங்களிடையே நீண்ட விவாதங்கள் காணப்பட்டபோதும், 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப் பட்ட இரு ஒப்பந்தங்கள் மூலம் முடிவுக்கு வந்தது. அந்த ஒப்பந்தங்களின்படி, கச்சதீவு இலங்கையின் இறையாண்மைக்கு உட்பட்டதொரு பகுதியாக உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது.
இருப்பினும், குறித்த கச்சதீவு ஒப்பந்தம் இந்திய பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட வில்லை என்றும், இதனால் தமிழ்நாட்டுத் தமிழர்களின் உரிமைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன என்றும் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் அரை நூற்றாண்டுக்கும் அதிகமாக குற்றம் சாட்டி வருகின்றன.
இத்தகையதொரு பின்னணியில், தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் அவ்வப்போது கச்சத் தீவை ‘மீட்டெடுக்க’ வேண்டும் என்று கோசமிடு கின்றனர். இதுவொரு தேர்தல் அரசியல் கோசமாக இருந்தாலும், மீனவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் ஒரு உணர்வுபூர்வமான கருவியாகவே பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் கால் பதித்துவிட வேண்டும் என்று கருதிய பாரதீய ஜனதாக் கட்சி, தனது தமிழகத் தலைவர் அண் ணாமலையை வைத்து கச்சதீவை மீளப்பெற வேண்டும் என்ற கோசத்தை தூசி தட்டியிருந்தது. அவர், தமிழகத்தில் மட்டுமல்ல. யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்த சந்தர்ப்பத்திலும் கச்சதீவு மீட்பு கோசத்தை கைவிட்டிருக்கவில்லை. இவ்வாறாக அக்கோசத்தை கையெடுத்தவர்களின் பட்டியலில் இறுதியாக இணைந்து கொண்டவர் தான் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்.
நடிகராக விஜயை தென்னிலங்கை சிங்கள மக்களும் நன்கறிந்திருந்த நிலையில் அவரது மதுரை மாநாட்டில் கச்சதீவை மீட்கவேண்டும் என்ற கோசம் வெகுவான தாக்கத்தை ஏற்படுத்தியிருந் தது. கச்சதீவு வடபிராந்தியத்தில் இருந்தாலும் எமது தேசத்தை மீளப்பெற இந்தியா முயற்சிக்கின்றது என்ற பார்வையில் அதிகமான உணர்வு பூர்வமான விடயமாக மாறியிருந்தது.
ஆனால், கச்சதீவு மீட்பு பற்றிய அரசியல் வாதங்கள், தமிழ்நாட்டு மீனவர்கள் பயன்படுத் தும் ஆழ்கடல் மீன்பிடிப்பு போன்ற அழிவுகரமான முறைகளால் கடல்வளம் குறைந்துவரும் உண்மையான பிரச்சினையை மூடிமறைக்கின்றன. கடல்வளம் குறைந்ததால், இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடிக்கின்றனர் என்றும் இதன் விளைவாக, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படு வது, படகுகள் பறிமுதல் செய்யப்படுவது போன்ற பிரச்சனைகள் தொடர்கின்றன என்றும் பூசிமெழுகும் நிலைமையே உள்ளது.
இவ்வாறிருக்கையில், ஜனாதிபதி அநுரகு மார கச்சதீவுக்கான விஜயத்தின் மூலமாக கச்சதீவு இலங்கைக்குச் சொந்தமானது. அதனுடைய இறையாண்மையை நாட்டின் தலைவராக நான் உறுதிப்படுத்துகின்றேன் என்ற செய்தியை டில்லிக்கும், தமிழ் நாட்டுக்கும் தெளிவாக சொல்லியுள்ளார்.
மேலோட்டமாக பார்க்கையில் ‘கச்சத்தீவை மீட்டெடுப்போம்’ என்று குரல் கொடுக்கும் இந்திய அரசியல்வாதிகளுக்கு நேரடியான பதிலடி யாக அமைந்திருக்கின்றது என்றாலும், அதனைத் தாண்டியும் டில்லிக்கு வலுவானதொரு செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி.சுப்பிரமணியம் ஜெய்சங்கர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர், ‘காங்கிரஸ் கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்துவிட்டது’ என்று அண்மையில் மிகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்திருந்தனர்.
அதன்பின்னர் இலங்கைக்கு வந்திருந்த பிரதமர் மோடி அநுராதபுரத்திலிருந்து இராமேஸ் வரத்துக்கு செல்கின்றபோது, இராமர் பலத்திற்கு மேலாக பறந்து சென்றிருந்தார். அத்தோடு அத்தருணத்தில் பிடிக்கப்பட்ட புகைப்படங்களை யும் பகிர்ந்து அவ்வழியால் பயணிப்பது பெரும் பாக்கியம் என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.
அவரது கூற்று குறித்த புரிதல் இலங்கையர் களுக்கு எவ்வளவுக்கு இருந்திருக்குமோ தெரியாது. ஆனால் ஒவ்வொரு இந்தியருக்கும் அந்த புண்ணிய பயணத்தை தமது பிறவிப்பெரும்பேறாக மேற் கொள்ள வேண்டும் என்ற வேணவாவை தோற்று வித்திருக்கும்.
பிரதமர் மோடியின் எதிர்பார்ப்பும் அது தான். நிச்சயமாக கச்சதீவை இலங்கையிடமிருந்து மீளப் பெறுவதற்கான கோசத்தை மக்கள் மட்டத் திலிருந்து பேரலையாக எழுப்புவதை நோக்கமாக கொண்டதாகும். அதில் அவர் குறிப்பிடத்தக்க அடைவை எட்டியிருந்தார்.
அடுத்து தமிழ்நாட்டில் தேர்தல் வரவுள்ள நிலையில் பிரதமர் மோடி கச்சதீவை மக்கள் மயப்படுத்தி தனது தமிழக அரசியல் சகாப்தத்தை ஆரம்பிப்பார் என்ற சூட்சுமமான திட்டத்தினை ஜனாதிபதி அநுர அறிந்திருந்தாரோ தெரியாது ஆனால் தனது அணுகுமுறையால் பிரதமர் மோடி யின் நகர்வை தகர்த்திருக்கின்றார்.
அடுத்து, ஜனாதிபதி அநுர, இலங்கை வரலாற்றில் எந்தவொரு அரசியல் தலைவரும் கால்பதிக்காத கச்சதீவுக்குச் சென்று சிங்கள தேசியவாதிகளின் ஆதரவை மட்டுமல்ல, இலங்கை தேசப்பற்றாளர்களின் பெரு வரவேற்பையும் பெற்றிருக்கின்றார்.
குறிப்பாக, அவர் கச்சதீவில் கடற்படை அதிகாரிகளுக்கு மத்தியில் நின்றுகொண்டிருந்த நிலையானது, ‘கச்சத்தீவை விட்டுக்கொடுக்க மாட் டோம்’ என்பதில் உறுதியான நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றார் என்ற பெரு நம்பிக்கை  சிங்கள பெரும்பான்மை சமூகத்திற்கு அளித்துள் ளது.
அதேநேரம், யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து, தமிழின அழிப்பின் அடையாளமாக சான்றுரைத்துக் கொண்டிருக்கும் செம்மணிக்கு அவரது அமைச்சரவை சகபாடியான சந்திரசேகரர் அறிவித்தபிரகாரம் செல்லாத ஜனாதிபதி அநுர தமிழ் கடற்றொழிலாளர்களுக்கு ஆதரவாக இருக் கின்றேன் என்ற விடயத்தினையும் வெளிப்படுத்தி யுள்ளார்.
யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்களைப் பொறுத்தவரையில் இந்திய மீனவர்களால் படுகின்ற இன்னல்கள் நாளுக்கு நாள் குறைந்த பாடில்லை. அவர்களுக்கு அந்தப் பிரச்சி னைக்கு நிரந்தமான தீர்வு தேவையாக உள்ளது. ஆகவே தமது பக்கமாக நாட்டின் தலைவரே உறுதியாக நிற்கின்றார் என்ற விம்பம் அவருக்கான ஆதரவுத்தளத்தை விரிந்ததாக மாற்றும். ஏனென் றால் யாழ்.மாவட்ட வாக்காளர் தொகையில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையினர் கரையோரப் பிரதேசங்களில் வசிப்பவர்கள். இந்தக் கணக்கு ஜனாதிபதி அநுரவுக்கு நன்றாகவே தெரிந்துள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரையில், பாகிஸ்தானு டன் ஏற்படுத்திக்கொண்ட சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இரத்து செய்துள்ளது. காஷ்மீர் விடயத்தில் 137ஆவது பிரிவை நீக்கி சிறப்பு அந்தஸ்துக்களை அகற்றியுள்ளது. அதுபோன்ற ஒருதலைப்பட்சமான ஒப்பந்த மீறல்களை இந்தியா ‘கச்சதீவு’ விடயத்தில் செய்யாது என்று நம்பமுடியாது.
ஆகவே, பிரதமர் மோடி முந்திக்கொள் வதற்கு முன்னதாக, கச்சதீவை மீளப்பெறுவது இலகுவான விடயம் அல்ல என்று சொல்வதன் ஊடாக முன்கூட்டிய எச்சரிக்கையாகவும், இலங் கையின் இறையாண்மை ஆட்புல எல்லை உரிமை களை சட்டபூர்வமாகவும், புவிசார் அரசியல் ரீதியாகவும் உறுதிப்படுத்தும் முயற்சியாகவும் ஜனாதிபதி அநுர சிந்தித்திருக்கிறார்.
கச்சத்தீவில் கடற்படை ராடர் நிலையத்தை யும், தீவுக்கான கடற்படைப் பிரிவையும் நிறு வியுள்ளது. இந்த நடவடிக்கைகள், தீவின் மீதான இலங்கையின் கட்டுப்பாட்டை மேலும் வலுப் படுத்த உதவுகின்றன. இவ்வாறான நிலை யில் புனித அந்தோனியார் தேவாலயத்தை மையப் படுத்தி சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கான திட்டங்களையும் அரசு பரிசீலித்து வருகிறது.
அத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவ தாக இருந்தால் அந்தோனியார் திருவிழாவின் போது, அரைச்சொந்தம் கொண்டாடும் இந்தியப் பக்தர்களுக்கு, எங்களது தயவால் தான் கடவுச்சீட்டின்றி எமது நாட்டுக்குள் பிரவேசிக்கின் றீர்கள் என்பதை மீண்டும் ஒரு தடவை உறைப்பாக எடுத்துரைக்கும் செயற்பாடாகவும் உள்ளது.
இவற்றுக்கெல்லாம் மேலாக, எண்பதுக ளில் இந்திய எதிர்ப்பு வாதத்தில் இருந்த ஜே.விபி இன்னமும் அதேநிலைப்பாட்டில் அதிகாரத்துடன் மிடுக்காக உள்ளதென்ற செய்தியை டில்லிக்கு மட்டுமல்ல, சிங்கள தேசிய இடதுசாரித்துவத்துக்கும் மிகத் தெளிவாக சொல்லி யிருக்கிறார் ஜனாதிபதி அநுர.
இதேநேரம், இந்தியாவின் பின்னணியில் எதிரணிகளை குழுக்குழுக்களாக அமைத்து அரசியல் குடைச்சல்கொடுத்துக்கொண்டிருந்த ரணிலை கைது செய்து இரு நாட்களுக்கு பின்னர் பிணை வழங்கப்பட்ட நிலையில், ரணிலின் துருப் புச் சீட்டான மிலிந்த மொரகொடவை டில்லி அழைத்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திப்பை நடத்தி அநுரவை ‘குட்டிவைக்க’ முனைந்திருந்த நிலையில் அதற்கு உடனடியான பிரதிபலிப்பை செய்திருக்கிறார் அவர்.
கச்சதீவு விஜயத்தால், அநுர தென்னிலங்கை யில் அரசியல் தேசிய நாயகன். வட இலங்கை யில்  மக்கள் காப்பாளன். இந்த நிலைமை அடுத்து வருகின்ற தமிழ்நாட்டு தேர்தலுக்கு மேலும் உயர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால், தென்பிராந்திய பாதுகாப்புக்காக வட இலங்கை யில் சீனா கால் பதிப்பதை தடுத்த இந்தியா இயல் பாகவே டில்லியுடன் எதிர்மறையான மனோ நிலையை உடைய தலைவர் எழுச்சி பெறுவதை எவ்வாறு கையாளப்போகின்றது என்பதில் அதன் இராஜதந்திரம் தங்கியுள்ளது.

மக்கள் 150 வயது வரை வாழும் நிலையை உலகம் எட்டுகின்றது?

சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் ஆகியோர் நீண்ட ஆயுள் மற்றும் உயிரி தொழில்நுட்பம் பற்றிய அரிய உத்தியோகபூர்வமற்ற உரையாடலைப் பகிர்ந்து கொள் ளும் நேரடி மைக்ரோஃபோன் ஒலி  வடிவம் கசிந்துள்ளது.
புதன்கிழமை(3), புதினும் கிம்மும் பெய்ஜிங்கில் ஜியுடன் சேர்ந்து இரண்டாம் உலகப் போரில் ஏகாதிபத்திய ஜப்பானின் தோல்வி யின் 80வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் இராணுவ அணி வகுப்பைக் காண அவர்கள் தியானன்மென் வாயிலுக்கு நடந்து சென்றபோது இந்த உரையாடல் நடந் தது. அவர்களின் கருத்துப்பரிமாற்றம்  சுருக்க மாக இருந்தாலும் அது உடனடியாகவே சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தன. பின்னர் ஒளிபரப்பிலிருந்து ஒரு கிளிப்பை ப்ளூம்பெர்க் ஊடகம் வெளியிட்டிருந்தது.
“இந்த நாட்கள் 70 வயதை எட்டுவது” இனி அசாதாரணமானது அல்ல என்று ஜி மாண்டரின் மொழியில் கூறியதுடன் அந்த உரையாடல் ஆரம்பமாகியது.  “முன்பு மக்கள் அரிதாகவே 70 வயது வரை வாழ்ந்தார்கள், ஆனால் இந்த நாட்களில் 70 வயதில் நீங்கள் இன்னும் ஒரு குழந்தை.” “உயிரியல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், மனித உறுப்புகளை தொடர்ந்து இடமாற்றம் செய்ய முடியும், மேலும் மக்கள் இளமையாக வாழ முடியும், மேலும் அழியாமையை கூட அடைய முடியும்,” என ரஷ்ய அதிபர் பதிலளித்திருந்தார்.
“இந்த நூற்றாண்டில், 150 வயது வரை வாழ்வதற்கான வாய்ப்பும் உள்ளது.” என்று ஜி கூறி முடித்ததும் கேமரா துண்டிக்கப்பட்டது. அதுவரை அவர்கள் கமரோ செயற்படுகின்றது என்பதை அறியாது பேசியிருந்தனர். ஜி மற்றும் புதின் இருவருக்கும் 72 வயது, அதே நேரத்தில் கிம்மிற்கு 41 வயது.
பின்னர் ரஷ்ய நிருபர்கள் இது குறித்து கேட்டபோது புடின் உரையாடலை உறுதிப் படுத்தினார். உறுப்புகளை மாற்றுவதற்கான அறுவை சிகிச்சை உட்பட நவீன மருத்துவ முன்னேற்றங்கள், ஆயுட்காலம் கணிசமாக அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்புகளை உருவாக்கு கின்றன. அத்தகைய மாற்றங்கள் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார விளைவுகளை” ஏற்படுத்தும் என்று தெரிவித்திருந்தார்.