இந்தியாவுடன் இணைந்து திருகோணமலை எண்ணெய் களஞ்சிய நிலையத்தை அபிவிருத்தி செய்வது மற்றும் இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொள்ளும் எரிபொருள் கடன் என்பவற்றுக்கான பேச்சை நானே முன்னெடுத்தேன். மாறாக நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவால் முன்னெடுக்கப்படவில்லை என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிக்கின்றார்.
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச இந்தியாவுடன் முன்னெடுத்த பேச்சுகள் மூலமாக எரிபொருளுக்கான கடன் மற்றும் திருகோணமலை எண்ணெய் களஞ்சிய சாலை அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகின்ற நிலையில் அது தொடர்பாக வலுசக்தி அமைச்சரின் நிலைப்பாட்டைத் தெரிவிக்கும் போதே அவர் இந்தியாவுடன் நானே பேச்சு நடத்தினேன் என்று கூறினார். அவர் மேலும் கூறியவை வருமாறு;
இந்தியாவுடன் நிதி அமைச்சர் முன்னெடுத்த பேச்சு கள் மூலமாகவே எமக்கு எரிபொருள் நிவாரண கடன் மற்றும் திருகோணமலை எண்ணெய் குதங்கள் அபி விருத்தி தொடர்பாகப் பேசப்பட்டதாக கூறுகின்றமை பொய்யான பிரசாரமாகும். ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் உணவு மற்றும் மருந்து இறக்குமதிக்கும், 50கோடி அமெரிக்க டொலர்கள் எரிபொருள் பெற்றுக்கொள்ளவும், 40 கோடி கைம்மாற்றல் கடனாக பெற்றுக்கொள்ளவும், நான்காவ தாக எரிபொருள் களஞ்சிய நிலைய அபிவிருத்தி தொடர்பாகப் பேசுவதாகக் கூறப்படுகின்றது.
ஆனால், நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவின் பேச்சின் போது 100 கோடி அமெரிக்க டொலர்களைப் பெற்றுக்கொள்ளும் பேச்சு மட்டுமே முன்னெடுக்கப்பட் டது. அதாவது உணவு மற்றும் மருந்து இறக்குமதிக் கான கடன் சலுகையையே அவர் பெற்றுக்கொண்டுள்ளார். எனினும் எமது நாட்டில் எரிபொருள் தேவைக்காகக் கடன் தருமாறு 2021 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 24 ஆம் திகதியே இந்திய உயர் ஸ்தானிகருக்குக் கடிதம் மூலம் அறிவித்தேன்.
அதேபோல் திருகோணமலை எண்ணெய் களஞ்சிய நிலைய அபிவிருத்தி குறித்த பேச்சு 2020 ஓகஸ்ட் 15 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டது. ஆகவே, இந்த இரண்டு செயற்பாடுகளையும் நானே முன்னெடுத்தேன். அதேபோல் 40கோடிக்கான கைம் மாற்று கடன் பெறுவது குறித்த பேச்சை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்றாலே ஆரம்பித்தார். எனி னும் நிதியமைச்சர் இந்தியாவில் இவற்றை பேசியதால் நான்கு காரணிகளையும் அவர் முன்னெடுத்தார் என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
திருகோணமலை எண்ணெய் குதங்களை அபிவிருத்தி செய்வது தொடர்பாக நிதி அமைச்சர் என்னிடம் எப்போதும் பேசியதில்லை. திருகோணமலை எண் ணெய் குதங்களை அபிவிருத்தி செய்வதற்கான பொறுப்பு முழுமையாக எனக்கே வழங்கப்பட்டுள்ளது. அதற்க மையவே இந்தியாவுடன் நான் பேச்சுகளை முன்னெடுத்து வருகின்றேன்” என்றார்.