அமைச்சரவையில் பாரிய மறுசீரமைப்புக்குக் கோட்டா திட்டம்; 60 வீத மாற்றம் இடம்பெறலாம்

82 Views

அமைச்சரவையில் பாரிய மறுசீரமைப்புஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசின் அமைச்சரவையில் பாரிய மறுசீரமைப்பு மேற்கொள்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச திட்டமிட்டுள்ளார் என்று சிங்கள இணைய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி அமைச்சரவையில் 60 வீதமான மாற்றங்கள் இடம்பெறக்கூடும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அமைச்சுகளின் விடயதானங்கள் கைமாற்றப்படவுள்ளன.

புதிதாக எவரும் அமைச்சரவைக்குள் உள்வாங்கப்பட மாட்டார்கள். அத்துடன், சுசில் பிரேமஜயந்தவின் பதவி நீக்கத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு புதிய இராஜாங்க அமைச் சர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார்.

Leave a Reply